Wednesday, 4 July 2012

மனதின் ஆட்டம்!


உரிக்க உரிக்க வெங்காயத்தில்
இறுதியில் ஒன்றுமே இல்லை!
கண்ணீர்தான் வந்தது!

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
வாழ்க்கை நிலையாமையில் முடிந்தது!

ரசித்து ரசித்துப் பார்த்தேன்
வாழ்க்கை தேனாய் இனித்தது!

குடிசையில் வாழ்ந்தாலும்
கோபுரத்தில் இருந்தாலும்
மனதின் ஆட்டம் ஒன்றே!

14 comments:

  1. நல்லாச் சொன்னீங்க.ஆடி அடங்கும் வாழ்க்கை இது.

    ReplyDelete
  2. உண்மையை சொன்னீர்கள்...

    இது தான் வாழ்க்கை...

    ReplyDelete
  3. //ரசித்து ரசித்துப் பார்த்தேன்
    வாழ்க்கை தேனாய் இனித்தது!

    குடிசையில் வாழ்ந்தாலும்
    கோபுரத்தில் இருந்தாலும்//

    மிகவும் அழகான வரிகள். ;)

    [மண் குடிசை வாசலென்றால் .....
    தென்றல் வர .........மறுத்திடுமா?

    என்ற வாத்யார் படப்பாட்டு நினைவுக்கு வந்தது]

    ReplyDelete
  4. வரிக்கு வரி வாழ்வின் உண்மையை உணர்த்துகிறது கவி அருமை.

    ReplyDelete
  5. வாழ்க்கைய ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  6. REPLY TO ….// Kalidoss Murugaiya said..//.

    ஆடி அடங்குவதற்குள் ஆட்டத்தை ரசித்துவிட வேண்டும். தங்கள் வருகைக்கும், என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்தும் தங்கள் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. REPLY TO … // கவிதை வீதி... // சௌந்தர் // said...//

    இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது தெரிவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. REPLY TO ….// வலைஞன் said...//
    மீண்டும் ஒருமுறை எனது வலைத் தளத்திற்கு வந்த, உங்கள் வருகைக்கும் யோசனைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. REPLY TO …// வை.கோபாலகிருஷ்ணன் said...//

    VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எம்ஜிஆர் படப் பாடல்கள் என்றாலே தனி மவுசுதான்.

    ReplyDelete
  10. REPLY TO …. // Sasi Kala said... //

    கவிஞர் “ தென்றல்” சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. REPLY TO…. // கோவி said... //

    முதன் முறையாக வந்த, கோவை விரிவுரையாளர் கோவியின் அன்பான வருகைக்கு நன்றி! விரைவில் உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்!

    ReplyDelete
  12. REPLY TO ... // வரலாற்று சுவடுகள் said...//

    தங்கள் பெயர் தெரியாததால் விளிக்க முடியவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. நல்ல வரிகள் சார் !
    வாழ்த்துக்கள் !
    நன்றி ! (TM 2)

    ReplyDelete
  14. REPLY TO ……..// திண்டுக்கல் தனபாலன் said... // 1 & 2

    // சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். //

    முதன் முதலாக ஒரு பெயரில் நான், ஒரு வலைப் பதிவு தொடங்கிய நேரம். வலைப் பதிவுகள் பற்ற அதிக விவரமும் எனக்கு தெரியாது. அப்போது தமிழ் மணம் ஓட்டிற்காக அதன் ஓட்டுப் பட்டையை எனது வலைப் பதிவில் இணைத்தேன். Technical Error காரணமாக எனது முதல் பதிவு இயங்காமலே போய்விட்டது. இதனால் எனது வலைப் பதிவை மறுபடியும் வேறு ஒரு பெயரில் தொடங்க நேரிட்டது. அதிலிருந்து புதிய சமாச்சாரங்களை எனது வலைப் பதிவில் இணைக்க யோசித்துதான் செய்ய வேண்டியுள்ளது. அதிலும் தற்போது Blogger – இல் .com என்பதனை .in என மாறுதல் செய்துள்ளனர். தங்கள் வருகைக்கும் யோசனைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete