Saturday, 14 January 2012

பொங்கலோ பொங்கல் !


எட்டுத் தொகையிலும்
பத்துப் பாட்டிலும்
காப்பியங்கள் ஐந்திலும்
இலக்கியப் பொங்கல்!

கம்பனின் கவிதைகளில்
காவியப் பொங்கல்!

கலைஞரின் கடிதங்களில்
தமிழ்ப் பொங்கல்!

கண்ணதாசன் பாடல்களில்
கவிதைப் பொங்கல்!

வாலியின் நாடாக்களில்
வாலிபப் பொங்கல்!

புரட்சி நடிகரின் முகத்தினில்
புன்னகைப் பொங்கல்!

அம்மாவின் அரசியலில்
அதிரடிப் பொங்கல்!

தோழர்களின் கைகளில்
அறிக்கைப் பொங்கல்!

நண்பர்களின் இதயங்களில்
வாழ்த்துப் பொங்கல்!

அனைவருக்கும் சொல்லுகின்றேன்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
என்று உள்ளக் களிப்போடு!

(Photo: thanks to Peter Koellikers (Google)

9 comments:

  1. வித்தியாசமான அழகான அருமையான
    பொங்கல் வாழ்த்துச் சிறப்புக்கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    மனம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. //Ramani said..//
    கவிஞர் ரமணி அவர்களுக்கு வணக்கம். எளியேன் கவிதைக்கு கருத்துரையும், பொங்கல் வாழ்த்து செய்தியும் சொன்ன தங்களுக்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பொங்கல் பற்றிய புதுவகையான கற்பனைப்
    பொங்கல்!
    நன்று! நன்றி!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. தி.த.இளங்கோ,

    எல்லாருக்கும் ஏதோ பொங்குது ,உங்களுக்கு தமிழ் பொங்குது :-))

    தமிழ் புத்தாண்டு,பொங்கல் மற்றும் உழவர் திருநாள்,திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.

    தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை

    ReplyDelete
  5. புலவர் சா இராமாநுசம் said...//பொங்கல் பற்றிய புதுவகையான கற்பனைப் பொங்கல்!//
    புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! தங்கள் ஆசியில் மீண்டும் மரபுக் கவிதைகளை எழுத (கல்லூரி நாட்களில மரபுக் கவிதைகள் எழுதியதுண்டு ) முயற்சி செய்கிறேன்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. //வவ்வால் said... தி.த.இளங்கோ,எல்லாருக்கும் ஏதோ பொங்குது ,உங்களுக்கு தமிழ் பொங்குது :-))//

    வணக்கம் வவ்வால் சார்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! உங்கள் பதிவைப் படித்த பின்னர் அதில் எழுதுகிறேன்!

    ReplyDelete
  7. சென்னை பித்தன் said...//இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.//

    வணக்கம்! சென்னை பித்தன் அவர்களே, தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். வலைச்சரத்தில் தங்களது பொங்கி வரும் புதுப்புனலில் (நாள்-6) எனது வலைப்பதிவு பற்றி எழுதியமைக்கு மகிழ்ச்சியால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. அருமை.. பொங்கலில் இத்தனை வகைகள் இருக்கா :-)

    தாங்கள் வைத்த தமிழ்ப்பொங்கலும் இனிமை..

    ReplyDelete
  9. // அமைதிச்சாரல் said...//

    ”குயில்களின் கீதங்கள்” இசைபாடும் அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete