எத்தனை ஆண்டுகள் வந்தாலும் போனாலும்
அத்தனை மாந்தரும் அகமகிழச் சொல்வது
புத்தாண்டு வாழ்த்தே!
சித்திரையில் பஞ்சாங்கம் படித்தாலும்
தைதையென்று தரையினில் குதித்தாலும்
முத்திரை பதிப்பது இந்த புத்தாண்டு வாழ்த்தே!
அனைவருக்கும் பொதுவாகிப் போனது!
இண்டர் நெட்டில், ஈமெயிலில், பேஸ் புக்கில்
எழுதும் கடிதத்தில், சிணுங்கும் செல்போனில்,
சிரித்த முகமாய் நேருக்கு நேராய் – அனைவரும்
சொல்வது புத்தாண்டு வாழ்த்தே!
ஆங்கில வார்த்தை என்றாலும் அனைவரையும்
உற்சாகமாக்கும் “ஹேப்பி நியூ இயர் “
சொல்வதில் தவறில்லை!
மரபுக் கவிதை நானறிந்தாலும் -
வார்த்தைகளை மடக்கியும் நீட்டியும்
சொன்னேன்! - இது கவிதை இல்லை!
வசன கவிதைகளால் ஆகிப்போனது காலம்!
(Photo Thanks to Free-Press-Release)
(Photo Thanks to Free-Press-Release)
அருமையான புத்தாண்டு சிறப்புப் பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ரைட்டு...
ReplyDeleteமற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .
ReplyDelete//Ramani said...//
ReplyDeleteஎனது ஆக்கங்களுக்கு முதல் ஆளாய் எப்பொழுதும் ஊக்கம் கொடுக்கும் ரமணி அவர்களின் வருகைக்கு நன்றி!
//கவிதை வீதி... // சௌந்தர் // said...ரைட்டு...//
ReplyDeleteவெயிட்டான ரைட்டு கொடுத்த கவிதை வீதி செளந்தருக்கு நன்றி! நானும் உங்களை தொடர்கின்றேன்!
//sasikala said..அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் //
ReplyDeleteவணக்கம்! தென்றலாய் கவிதை வீசும் சசிகலா அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
த ம ஓ 3
புலவர் சா இராமாநுசம்
இனிய புத்தாண்டுவாழ்த்துகள்! தாங்கள் கூறியபடி என் புத்தாண்டு கவிதை இடுகையில் படங்களை நீக்கிவிட்டேன்.... கவிதையின் கவனத்தை படங்கள் சற்று விலக்குகிறது என்பதையும் உணர்ந்தேன் நன்றி.
ReplyDelete//ஷைலஜா said..//
ReplyDeleteவணக்கம்! வருகைக்கு நன்றி! எளியேன் யோசனைக்கும் மதிப்பு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!
//புலவர் சா இராமாநுசம் said... //
ReplyDeleteவணக்கம்! புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி!