Thursday 5 January 2017

ஃபேஸ்புக்கில் சின்னம்மா என்றதும் எனக்கு வந்த எச்சரிக்கை மணி



பெரும்பாலும் என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரது பதிவுகளையும், செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பார்த்து விட்டு லைக் கொடுத்துவிடுவது எனது வழக்கம். சிலசமயம் கருத்துரைகளையும் எழுதுவேன். வலைப்பதிவர், நண்பர் எங்கள் ப்ளாக்  (http://engalblog.blogspot.com ) ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் அவர்கள் ஃபேஸ்புக்கிலும் எனக்கு நண்பர். அன்றும் (27 டிசம்பர் 2016) அப்படித்தான். அவர் ஒரு பதிவை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அதற்கு மற்றவர்களும் நானும் கருத்து தெரிவித்து இருந்தோம். அந்த பதிவு கீழே.

xxxxx
Sriram Balasubramaniam
இன்னுமா அந்த டிவி சேனல் பெயரை மாற்ற யாருமே முன்மொழியவில்லை!
LikeShow more reactions
Comments
Sridhar Ponneri Sasi TV?
Srinivasagopalan Madhavan That name is the 'TRUMP'(not US Presi) cardSee Translation
Bhanumathy Venkateswaran அதானே..!!!
Thamizh Elango T சின்னம்மா டி.வி
xxxx

மேற்படி சின்னம்மா டி.வி” என்ற எனது கருத்துரையை சாதாரணமாகத்தான் எழுதினேன். பின்னர் அதனை மறந்தும் விட்டேன். ஆனால் அடுத்தநாள் எனக்கு ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு செய்தி வந்து இருந்தது. இதற்கு முன்னர் இதுமாதிரி எனக்கு எந்த அறிவிப்பும் வந்தது கிடையாது. அந்த அறிவிப்பு இங்கே 

Privacy tip: who can see when you like or comment on a post
Thamizh Elango, you recently commented on a post by Sriram Balasubramaniam. We want to make sure you know who can see when you interact with posts. To learn more, check out Privacy Basics.
—The Facebook Privacy Team

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு பரிசோதனை முயற்சியாக எனது கருத்துரையை நண்பரின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து நீக்கினேன்; உடனே இந்த அறிவிப்பு மறைந்து விட்டது. நான் மறுபடியும் ”சின்னம்மா டி.வி” என்று அதே கருத்துரையை அதே பதிவினில் எழுதியுள்ளேன். இம்முறை எந்த அறிவிப்பும் எனக்கு வரவில்லை. 

இந்த அறிவிப்பு, சாதாரணமான ஒன்றா அல்லது எச்சரிக்கை மணியா அல்லது இதே போன்று எல்லோருக்கும் ஃபேஸ் புக்கிலிருந்து சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.  


36 comments:

  1. சாதாரணமானதே.... ஃபேஸ்புக் நமக்கு ஒரு பாதுகாவலனாகச் செயல்படவில்லை!! நாமாக அப்படி எடுத்துக் கொள்வது நாம் எழுதியதைப் பொறுத்து நம் மனம் நினைப்பதே!! இந்த ஃபேஸ்புக் அறிவிப்பை வேறு ஒரு சாதரண போஸ்டில் நான் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தங்கள் கருத்தின்படி நான் இதனை ஒரு சாதாரண அறிவிப்பாகவே எடுத்துக் கொள்கிறேன். இதுநாள் வரை இந்த அறிவிப்பு வராமல், இப்போது வந்ததால் இதுபற்றி எழுத வேண்டியதாயிற்று.

      Delete
  2. அப்படியென்றால் நாம் இடும் கருத்துகளை யாரோ ரகசியமாகக் கண்காணிக்கின்றார்கள் என்பதுதானே இதற்குப் பொருள் இல்லையா நண்பரே/சகோ...

    ஃபேஸ்புக் என்பது எல்லோரும் பார்க்க முடிந்த ஒன்றுதான் என்றாலும் அதையும் மீறி ஏதோ ஒரு மூன்றாவது கண் என்பது போல் உள்ள ஒருவர் அல்லது குழு பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. .

    துளசி: நான் ரொம்ப ஆக்டிவாக இல்லாததால் எனக்கு இதைப் பற்றித் தெரியவில்லை. சரி ஸ்ரீராமுக்கு வந்ததா தெரியவில்லை...

    ஃபேஸ்புக்கில் பலரும் பலவிதாம இன்னும் கீழ்த்தரமாகக் கூட எழுதுகிறார்களே. அதாவது அரசியல் தொடர்பாகப் பலரும் ஒவ்வொருவரையும் கண்டபடித் திட்டி எல்லாம் கூட வெளியிடுகிறார்களே அப்போது அவர்களுக்கும் இது போன்ற செய்திகள் வர வேண்டுமே...யாராவது சொல்லுகின்றார்களா பார்ப்போம்....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் இருவரின் கருத்துரைக்கும் நன்றி. நண்பர் துளசிதரன் சொல்வதைப் போல “ஒரு மூன்றாவது கண் என்பது போல் உள்ள ஒருவர் அல்லது குழு பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.” இதுபோல் அறிவிப்பு கிடைத்த மற்றவர்களும் இதனைச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரிய வரும்.

      Delete
  3. பொதுவாக ஃபேஸ்புக் பக்கம் நான் அதிகமாகச் செல்வது இல்லை.

    அப்படியே அங்கு நான் செல்ல நேர்ந்தாலும், குறிப்பாக அரசியல் பற்றிய பதிவுகளுக்கு ’லைக்’கோ அல்லது ‘கமெண்ட்ஸ்’ஸோ போடுவது இல்லை.

    அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் முழுமையாகவும் சரியாகவும் தெரியவில்லை.

    எனினும் தங்களின் இந்தத் தகவலுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வலையுலகில் சில சமயம் அரசியல் பற்றியும் பேச வேண்டி உள்ளது. ஆனாலும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

      Delete
  4. நீங்கள் ஒருவர்தான் இல்லாத ஒரு சானலைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் அதனால்தானோ என்னவோ இந்த செய்தி எனக்கு ஃபேஸ்புக் அனுபவம் மிகவும் குறைவு தகவல் அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. முகநூல் மட்டுமில்லை. எல்லா சமூக வலைத்தளங்களும் ப்ளாகர் உட்பட கண்காணிக்கப் படுகின்றன. நீங்கள் உங்களைப்பற்றி கூகிள் செய்து பாருங்கள். உங்களுக்கே தெரியாத உங்களுடைய விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். இணையம் என்பது பொது வழி. பொது வழியில் இறங்கி விட்டால் யாராவது கவனிக்கத்தான் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜே.கே அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கூகிளில் என்னையே ஆங்கிலத்திலும், தமிழிலும் தேடிய அனுபவம் எனக்குண்டு.

      // இணையம் என்பது பொது வழி. பொது வழியில் இறங்கி விட்டால் யாராவது கவனிக்கத்தான் செய்வார்கள்.//

      என்ற தங்கள் சொல்லாடலை மிகவும் ரசித்தேன்.

      Delete
  6. இவையெல்லாம் ஒரு பொருட்டில்லை ஐயா... நீங்கள் சில Privacy settings-ல் மாற்றங்கள் கூட செய்யலாம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. நான் பெற்ற ஒரு அனுபவத்தை, ஒரு அறிவிப்பை பகிர வேண்டும் என்பதே எனது நோக்கம். நானும் Privacy settings-ல் நிறையவே மாற்றங்கள் செய்துள்ளேன்.

      Delete
  7. பொருட்படுத்த வேண்டாம் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி. நீங்கள் சொன்னது போலவே நான் பொருட்படுத்தவில்லை.

      Delete
  8. ஹாஹா! சின்னம்மா இங்கேயும் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்களோ? எனக்கு இது சாதாரண அறிவிப்பாகத்தான் தோன்றுகிறது சார்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் நகைச்சுவையை ரசித்தேன். நன்றி.

      Delete
  9. தமிழ் படித்த தங்களுக்கு ‘அச்சம் தவிர்’ என்ற சொல்லாடலை நினைவு படுத்த தேவையில்லை என எண்ணுகிறேன். எனவே நண்பர் திரு KILLERGEE அவர்கள் கூறியதுபோல் இதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் பெரிதாக ஒன்றும் எழுதாத படியினால் பயம் ஏதும் இல்லை. சமூக வலைத்தளத்தில் எப்படி எப்படி எல்லாம், அறிவிப்பு செய்கிறார்கள் என்பதனை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பகிர்வின் நோக்கம்.

      Delete
  10. பொருட்படுத்த வேண்டியதில்லை ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஆசிரியருக்கு நன்றி.

      Delete
  11. இது ஆட்டோமெட்டிக்காக வரும் தகவல் இதற்க்காக கவலை கொள்ள தேவையில்லை ப்ரைவைஸி பற்றி நமக்கு கற்றுக் கொடுத்து கொண்டே நமது ப்ரைவேஸியை திருடி அதன் மூலம் விளம்பரங்களை செய்வதன் மூலம் வருவாயை பெருக்குவதுதான் மார்க்கின் வேலை ..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரைத் தமிழன் அவர்களின் அன்பான கருத்துரைக்கும், தங்களின் கூடுதலான தகவலுக்கும் நன்றி.

      Delete
  12. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தனியார் நிறுவனத்தின் சேவை மோசமாக இருந்ததால், பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் பயனில்லாததால், சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று பயமுறுத்திய பிறகு, "அவர்களின் சேவை absolutely unsatisfactory" என்று எழுதத் தொடங்கினேன். வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே facebook sent an alert saying: :you appear to use abusive language against somebody or something. Please discontinue, otherwise your account shall be closed.." என்ற மாதிரியான வார்த்தைகள் திரையில் தோன்றின.

    ஆம், மூன்றாவது கண் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது....
    -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
    (http://chellappaTamilDiary.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. // ஆம், மூன்றாவது கண் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.... //

      என்ற முத்தாய்ப்பான கருத்தோடு, தன்னுடைய அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்ட, மூத்த வலைப்பதிவர், அய்யா Y.செல்லப்பா அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  14. Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி. அரசியல் இல்லை என்றே நினைக்கிறேன். மேலே நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல ‘மூன்றாவது கண்’ வேலைதான் என்று நினைக்கிறேன்.

      Delete
  15. ஃபேஸ்புக்கில் இப்படி வருவது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. புதிய தகவல்
    நன்றி

    ReplyDelete
  17. Replies
    1. ஆசிரியர் எஸ்.மது அவர்களின் தகவலுக்கு நன்றி.

      Delete
  18. சின்னம்மா என்பது அவ்வளவு மோசமான சொல்லா ,எச்சரிக்கை செய்யும் அளவுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. தோழரே அப்படி எல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன். ஃபேஸ்புக் நிர்வாகத்தில் ஒருவேளை சிலரது பெயரை சொன்ன மாத்திரத்திலேயே, மேற்படி அறிவிப்பு செய்யுமாறு அங்கே கட்டுப்பாடு இருக்கலாம்.

      Delete