Monday 18 July 2016

வலைப்பதிவர்களை எவ்வாறு அழைப்பது?



அண்மையில் எல்லோரும் ஒரு செய்தியைப் படித்து இருக்கலாம். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை, பீகார் கல்வித்துறை அமைச்சர் சவுத்ரி,  ட்விட்டரில், டியர் ஸ்மிரிதி இரானி என்று விளித்து எழுதிய விவகாரம்தான் அது. இவ்வாறு எழுதியது தப்பு என்று ஸ்மிரிதி அவர்கள் சொல்ல, இமெயில் போன்றவற்றில் இவ்வாறு அழைப்பது வழக்கம் என்று சவுத்ரி சொல்ல, இதுவே பிரச்சினையாகி, இப்போது அந்த பிரச்சினை அப்படியே முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்.

அலுவலகங்களில்:

பொதுவாக அலுவலக கடிதங்களில், Dear Sir / Madam என்று தொடங்கும் வழக்கம் உண்டு. சில அலுவலகங்களில் உடனடி உபயோகத்திற்கு என்று அச்சடித்த கடிதங்களை வைத்து இருப்பார்கள். இவற்றை பூர்த்தி செய்தோ அல்லது டிக் செய்தோ அனுப்புவது வழக்கம். நான் வேலை பார்த்த இடத்திலும் Dear Sir / Madam என்று அச்சடித்த கடிதங்களைப் பயன்படுத்தி இருக்கிறேன். இது இண்டர்நெட், இமெயில் காலம். இந்த காலத்தில் இமெயில் எப்படி தொடங்குவது, எப்படி அனுப்புவது, என்று கூட சொல்லித் தருகிறார்கள்.

மரியாதை சொற்கள்:

சிறு வயதில் பெரியவர்களை, உறவினர்களை எப்படி மரியாதை கொடுத்து அழைக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். மக்கள் மன்றத்தில் அமைச்சர்களை ‘மாண்புமிகு’ என்று அழைக்கிறார்கள். நீதிமன்றங்களில் நீதிபதியை ‘மை லார்ட்’ என்று அழைக்கிறார்கள். சில துறவிகளை ‘தவத்திரு’ என்று அழைக்கிறார்கள்.

பழைய ராஜாராணி நாடகங்களில், கட்டியங்காரன் ராஜாவை அழைக்கும் விதமே தனி. ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ என்ற படத்தில் இதனைக் கிண்டல் செய்து, நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சி ஒன்று வரும். ‘ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்” என்பது அந்த வசனம்.

இவ்வாறு சொல்லப்படும் மரியாதைச் சொற்களை ஆங்கிலத்தில் “English honorifics” என்று அழைப்பார்கள். நிற்க. 

ஒரு ஆங்கில இணையதளத்தில், மனிதர்களை மரியாதைச் சொற்களுடன் ஆங்கிலத்தில் எவ்வாறெல்லாம் அழைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். 

Sir (adult male of any age)
Ma'am (adult female - North American)
Madam (adult female)
Mr + last name (any man)
Mrs + last name (married woman who uses her husband's last name)
Ms + last name (married or unmarried woman; common in business)
Miss + last name (unmarried woman)
Dr + last name (some doctors go by Dr + first name)
Professor + last name (in a university setting)

(மேலும் விவரங்களுக்கு ‘How to Address People in English’ https://www.englishclub.com/speaking/titles.htm என்ற இணையதளம் செல்லவும்.) 

எனக்கு ஏற்பட்ட குழப்பம்:

வலைப்பக்கம் முதன்முதல் அடி எடுத்து வைத்த போது யாரை எப்படி அழைப்பதில் ஒரே குழப்பம்தான். காரணம் எப்போதுமே கடிதம் எழுதும்போது, அன்புள்ள அல்லது அன்புடையீர் என்று தொடங்குவதுதான் எனது பழக்கம். வலைப் பக்கங்களில் முதலில் கருத்துரைப் பெட்டியில் எழுதத் தொடங்கிய போது கூட இந்த பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு முழு வலைப்பதிவாளனாக (Blogger) எழுதத் தொடங்கிய பிறகு, வலைப்பக்கம் ஒரு வலைப்பதிவர் தந்து இருக்கும் விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு  அவர் சரி சம வயதுக்காரரா, மூத்தவரா அல்லது இளையவரா என்று அறியாது, அய்யா என்றோ, அம்மா என்றோ, அன்புடன் என்றோ அழைப்பதில் பெருத்த யோசனைதான்.

எனது அழைப்புகள்:

ஆரம்பத்தில் கருத்துரையோ மறுமொழியோ எழுதும்போது, அன்புள்ள என்று பொதுவாகவோ அல்லது சகோதரர் என்றோ , சகோதரி என்றோ அழைத்தேன். ஒருமுறை திருச்சியில் மூத்த வலைப்பதிவர் அன்பின் சீனா அய்யா அவர்களச் சந்தித்தபோது மற்றவர்களை அன்பின் என்று அழைப்பதனையும், அன்பின் சீனா என்று தன்பெயரோடு சொல்லிக் கொள்வதையும் சொன்னார்.

வலைப்பதிவர்களின் வலைத்தளங்கள், வலைப்பதிவர் சந்திப்பு என்று அடிக்கடி செல்வதால் ஓரளவுக்கு அவர்களது வயதினையும், அவர்களைப் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.. எனவே இப்போது பொதுவாக வலைப்பதிவர்களை நண்பர்களே என்றும், பெண் வலைப் பதிவர்களை ‘மேடம்’ என்றும் விளித்து எழுதுகிறேன். என்னில் மூத்தவர்களை அய்யா என்றோ அல்லது மூத்த வலைப்பதிவர் என்றோ குறிக்கின்றேன். சிலசமயம் ‘சகோதரர்’ என்றே அழைக்கின்றேன். பெரும்பாலும் ஆசிரியர்களை ஆசிரியர் என்றோ, முனைவர் என்றோ அல்லது பேராசிரியர் என்றோ மரியாதை தருகிறேன். கவிஞர்களைக் கவிஞர் என்றும், பொதுவுடமைக் கொள்கையாளர்களை தோழரே என்றும் அழைக்கின்றேன்.


43 comments:

  1. என்னை "முனைவர் பெரும்கிறுக்கன்" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் நகைச்சுவையுடன் கூடிய பெருந்தன்மையான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. பல சமயங்களில் குழப்பம் தான்.....

    ஒரு பெண்மணிக்கு Ms. என்று விளித்து அலுவலகக் கடிதம் எழுத, அதன் பயன்பாடு தெரியாத அவர் சண்டைக்கு வந்தது நடந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அந்த பெண்மணி Ms என்றவுடன் Mrs என்று தன்னை அழைப்பதாக நினைத்து விட்டார் போலிருக்கிறது.

      Delete
  3. நான் கூட என்னை விட 30 வயது குறைந்த ஓர் பையன் எனக்கு Hi என்று அட்ரஸ் பண்ணியதை விரும்பாமல் அவனிடம் சண்டை போட்டேன் . ஓர் 10 வருடம் முன்பு

    ReplyDelete
  4. நல்ல பல குறிப்புகளுடன் பயனுள்ள பதிவு..

    அன்பின், அன்புடையீர், அண்ணா, ஐயா - என்னும் பதங்களுடன் பதிலளிப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்..

    அன்பு!.. அது ஒன்று தானே காலகாலத்திற்கும் தழைத்திருப்பது..

    மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. அன்பினாலே உண்டாகும் இந்த வலை

      Delete
  5. பல பதிவர்கள் வலைப்பதிவர்களுக்கு கடிதம் எழுதும்போது அன்பின் என்று பெயரோடு எழுதுகிறார்கள். அது நன்றாகவே இருக்கிறது. அதையே வலைப்பதிவர்கள் அனைவரும் பின்பற்றலாம் என்பது என் கருத்து.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. பத்திரிகை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தமிழ் வலையுலகில் 'அன்பின்' என்று எழுதுவதை தொடங்கி வைத்தவர் அன்பின் சீனா அவர்கள்.

      Delete

  6. முன்பு எல்லாம் அய்யா,சார்,மேடம் என அழைத்து வந்தேன் ஆனால் இப்பவெல்லாம் அவர்களின் பெயரை சொல்லிதான் அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் அவர்களே நீங்கள் யாரை எப்படி விளித்தாலும் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். காரணம், தமிழ் வலையுலகின் செல்லப்பிள்ளை நீங்கள்.

      எனவே ‘வலையுலகின் செல்லப்பிள்ளை’ என்ற பட்டத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.

      Delete
  7. அன்புடையீர் என்பது எல்லோருக்கும் பொருந்தும் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. கடிதம் எனில் யாருக்காயினும் “அன்பினியீர்!” என்று விளித்துத் தொடங்குவதே என் வழக்கம். அன்பும் இனிமையும் கலந்தவரே என்று... என்றாலும் இதுபற்றிய உங்கள் இனிய அலசலை அன்புடன் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களது ’அன்பினியீர்’ என்ற தொடக்கம் தனித்துவமான சொல்தான்.

      Delete
  9. அலுவலகங்களில் எவ்வாறு அஞ்சல் எழுதும்போது எப்படி தொடங்குவது என்பது பற்றி ஆசையில் ஒரு கடிதம் 3 என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவு எழுதியுள்ளேன். முடிந்தால் அதை பார்க்கவும்.
    வலையுலக நண்பர்களை அவர்கள் பெயருக்கு முன் திரு அல்லது திருமதி என எழுதி தொடர்புக்கொள்வது சிறந்தது. நெருங்கிய நண்பராக இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் திரு –--- அவர்களே என சொல்வதுதான் சரி என்பது எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S.அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய உங்களது பதிவை ஏற்கனவே படித்து கருத்துரையும் தந்துள்ளேன். இன்று, இப்போது மீண்டும் படித்தேன்; ரசித்தேன். அதில் மீண்டும் எழுதிய எனது இன்றைய கருத்துரை இது.

      // இந்த பதிவை மீண்டும் படித்தேன். சுவாரஸ்யம் மிக்க இந்த தொடரை, மறுபடியும் முதலில் இருந்து படிக்கப் போகிறேன்.//

      Delete
  10. சுவாரயமான அலசல்!
    Dear என்று மிக நெருங்கிய பிரியத்திற்கும் மேலான உறவை மட்டும் தான் அழைக்க வேண்டும் என்று ஒரு நெருங்கிய நண்பர் முன்பு வாதிட்டிருக்கிறார். அப்படிப்பார்த்தால் ஸ்மிதி இரானியின் கருத்தும் கிட்டத்தட்ட அது மாதிரி தான். ஆனால் பொதுப்படையான 90 சதவிகிதம் கருத்து என்னவோ மரியாதைகுரியவர்கள், பிரியத்துக்குகந்தவர்கள், மேலதிகாரிகள் என்று அனைவருக்கும் எழுத்து மூலத்தொடர்பிற்கு Dear என்றழைப்பது சரியே என்பது தான்! இதைப்பற்றி ஒரு பெரிய பதிவே எழுதலாம்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் மனோசாமிநாதன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சில விஷயங்களில் நாம் நமது இந்திய மரபுகளை, ஆங்கிலேயர் மரபுகளோடு இணைத்துக் கொண்டு குழப்பிக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் வந்ததுதான் ‘Dear’ என்ற சொல்லால் வந்த பிரச்சினையும் என்று நினைக்கிறேன்.

      Delete
  11. அன்புடையீர், அன்பு, மதிப்பிற்குரியீர் என்றெல்லாம் அவரவரின் தகுதிக்கும் வயதிற்கும் ஏற்ப அழைப்பதுதான் சிறந்தது. இல்லாவிட்டால் இங்கே ஒரு பெண்மணி குறித்திருப்பதுபோல் hi என்று அழைத்தால் பிரச்சினைதான். மேலை நாட்டினரிடம் இருந்து எதுஎதைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றையெல்லாம் சவுகரியமாக மறந்துவிடும் நம்மவர்கள் இம்மாதிரி ஹை என்பது, எத்தனைப் பெரியவர்களாயிருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பது என்பதை மட்டும் தவறாமல் இறக்குமதி செய்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. "அவர்கள் "பிரச்சனையில் விளைந்த்
    தொடர் சிந்தனையின் விளைவாக
    பலர் குழப்பம் தீர்க்கச் செய்த பதிவு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் கருத்தினுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  13. எனக்கு வயது 73. என்னை விட வயதாகி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். மூத்த ஆண் பதிவர்களை ஐயா என்று அழைப்பேன். மூத்த பெண் பதிவர்களை அவர் பெயருடன் சேர்த்து அம்மா என்று அழைப்பேன். நடுத்தர வயது ஆண்களை சார் என்று அழைப்பது வழக்கம். ந.வ.பெண்களை மேடம் என்றோ, (சிலர் மேடம் அழைப்பை விரும்ப மாட்டார்கள்) சகோதரி என்றோ. பல நேரங்களில் தெரிந்தவர்களை நண்பரே என்றும் அழைப்பது உண்டு.

    எப்படி அழைப்பது என்பதெல்லாம் பெரிதில்லை. என் பதிவுகளில் ஒரு விஷயத்தை உறுதியாக கடைபிடிக்கிறேன். பின்னூட்டங்களில் ஒரு பதிவரை இன்னொரு பதிவர் மரியாதை இல்லாமல் விளித்தாலோ பேசினாலோ அந்த பின்னூட்டத்தை அனுமதிக்க மாட்டேன். என் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களின் மரியாதை காப்பாற்றபபடுவது எனக்கு மிக முக்கியமான ஒன்று.
    என் பதிவகளுக்கு பின்னூட்டம் போடுபவர்கள் எனக்கு மிக மிக முக்கியமானவர்கள்
    அவர்கள் மிகவும் கெளரவமாக மரியாதையுடன் என் பதிவுகளில் உலா வர வேண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறென். பின்னூட்டம் போடுபவர்களுடம் மிகவும் அன்பாகப் பழகுவதும் அந்த அன்புக்கு பங்கம் இல்லாமல் விவாதிப்பதும் என் வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. மேலே சொன்ன கருத்துரையில் தாங்கள் சொன்ன,

      // எப்படி அழைப்பது என்பதெல்லாம் பெரிதில்லை. என் பதிவுகளில் ஒரு விஷயத்தை உறுதியாக கடைபிடிக்கிறேன். பின்னூட்டங்களில் ஒரு பதிவரை இன்னொரு பதிவர் மரியாதை இல்லாமல் விளித்தாலோ பேசினாலோ அந்த பின்னூட்டத்தை அனுமதிக்க மாட்டேன். என் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களின் மரியாதை காப்பாற்றபபடுவது எனக்கு மிக முக்கியமான ஒன்று. //

      என்ற வரிகளை மனதில் இருத்திக் கொண்டேன். மீண்டும் நன்றி.

      Delete
  14. நல்ல அலசல் ஐயா! அலுவலகத்தில் எனக்கும் பல முறை இதுபோன்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆண்களை அழைக்கும் போது அதிக குழப்பங்கள் வருவதில்லை, ஆனால் பெண்களை அழைக்கும் போது சிறிது தயக்கமும் குழப்பமும் சேர்ந்து கொள்வதுண்டு. பொதுவாக அலுவலகத்தில் வயதில் மூத்த ஆண்களை அவரது பெயரைச் சொல்லி அழைப்பதுவே வழக்கம். ஆனால் பெண் வலைப்பதிவர்களைக் குறிப்பிடும் போது குழப்பமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தம்பி அருள்மொழிவர்மன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அலுவலகத்தில் யாராயினும் மரியாதையோடும் அன்போடும் பழகுவதுதான் முக்கியம்.

      Delete
    2. மேற்கூறிய கருத்தைத் தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தோன்றுகிறது. எங்கள் துறையில் யாரும் சார் என்று குறிப்பிடுவதை விரும்பமாட்டார்கள், எனவே பெயரைச் சொல்லி அழைப்பதே வழக்கம். ஐயா கூறியது போல் அனைவருடனும் மரியாதையுடன் பழகுவதே சிறந்தது.

      Delete
    3. தம்பி அருள்மொழிவர்மனின் மறு வருகைக்கு நன்றி. தவறாக இருப்பின்,மன்னிக்கவும்.தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் எங்கு பணி புரிகிறீர்கள் என்று தெரியாததால், பொதுவாக இந்திய அரசு அலுவலக நடப்பை எண்ணி உங்களுக்கு அவ்வாறு மறுமொழி தந்தேன்.

      Delete
  15. வலை ஒரு மாய உலகம்...
    எல்லாமே டைம் பாஸ்...
    நீங்கள், கந்தசாமி, அமுதவன், முத்துநிலவன், வெங்கட் நடராஜ்..இப்படி சிலரைத் தவிர எல்லாமே மாயை! நான் உள்பட.

    எனக்கு மொட்டையா கடிதத்தை எழுதவே பிடிக்கும். அதே மாதிரி என்னை நம்பள்கி என்று அழைப்பதே ஒரு தமாஷ்! நீங்களும் எனக்கு மொட்டையா பெயர் சொல்லாமல் அழையுங்கள்...எழுதுங்கள்.
    நான் சேட்டு அல்ல..அல்லவே அல்ல!

    நான் இந்த பெயரை வைத்தான் காரணம் many fold...
    எனக்கு கல்லூரியில் படிக்கும் போது சென்னை கல்லூரியில் படித்த சேட்டு, ஹிந்திக்காரிகள் நட்பு வட்டம் கொஞ்சம் அதிகம்! சகவாசத்தால் என்னை சேட்டு என்று என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். அவ்வளவு ஏன் என்னுடைய ஒரு சேட்டு நண்பன் தான் PUC என்னுடன் படிக்கும் போது தமிழ் வேற கற்றுக்கொடுத்தான்..! அவன் தமிழில் அறிவாளி! பெண்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாகவே பேசுவார்கள். அறிவிலி சேட்டான்கள் தான் நம்பள்கி நிம்பள்கி என்று பேசி கொல்லுவார்கள்! அந்த நம்பள்கி பெயரை வைத்தேன். மற்ற படி நான் சேட்டு அல்ல!

    Late ராஜ நடராஜன் கிட்டே சேட்டு என்று கூப்பிடவேண்டாம் என்று சொன்ன போதிலும்...அவர் என்னை சேட்டு சேட்டு என்று விளித்து என்னை கிண்டல் செய்தார். வெறுப்பு ஏத்தினார்! அவர் மறைந்து விட்டார்...அவரை வீட்டு விடுவோம்!

    என்னை இனிமேல் சேட்டு என்றும் நம்பள்கி என்றும் அழைக்கவேண்டாம். சும்மா தாமாஷுக்கு வைத்த பெயர் அது! நண்பர்கள்/நண்பிகள் அமைவது சந்தர்ப்ப சூழ்நிலை---அதனால், இன்றும் சென்னை சென்றால், என் அந்த கால நண்ப/நண்பிகள் சேட்டு என்று தான் கூப்பிடுவார்கள். That is OK! But, நீங்கள் இனிமேல் என்னை சேட்டு என்றும் நம்பள்கி என்றும் கூப்பிடவேண்டாம்!
    நன்றி!

    சுருக்கி எழுத மேலே உள்ள இரண்டு மறுமொழிகளை எடுத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கு என்று இருக்கும் ஒரு அடையாளத்தையும் நீங்கள் விரும்பாதபோது , அதே பெயரில் வலைத்தளம் அமைத்து எழுதுவது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

      Delete
    2. கிண்டல் அரசியல் அப்படி இப்படி ஜோக்குக்கு இந்த பேர் ஓகே! மற்றபடி மீதிக்கு...

      Delete
  16. ”அலுவலக நடைமுறையில் ”டியர்” என்பது நேர்முக கடிதங்களில் உபயோகித்து...ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி அத்தகு விவரங்களை சுலபமாக முடிக்க செய்கின்ற செயலாகும். தேவையில்லாமல் சிறு விஷயத்துக்காக பெரிது படுத்தி விட்டார். பிடிக்கவில்லை என்றால் சபை நாகரிகம் கருதி தனிப்பட்ட முறையில் சந்தித்து அவ்வாறு பேசியவரிடம் தெரிவித்து நாகரிகத்தை கடைப்பிடித்திருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. புதிதாக எனக்கு அறிமுகம் ஆகும், கருத்துரை தந்த திரு. அசோகன் குப்புசாமி அவர்களுக்கு நன்றி.

      Delete
  17. //வலைப்பதிவர்களை எவ்வாறு அழைப்பது?//

    ஒருசில பதிவர்களை மட்டும், நான் எப்படி அழைத்தாலும் அதில் சிக்கல்கள் தான் எனக்கு ஏற்பட்டு வந்துள்ளன.

    எனக்கு இதில் நிறைய அனுபவங்கள் உண்டு. அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம்போல, நான் தனியே குறித்து வைத்துக்கொண்டு, பின்னூட்டங்களுக்கு பதில் அளித்த நாட்களும் உண்டு.

    உதாரணமாக நம் ஸ்ரீராம் அவர்களை நான் ’திரு. ஸ்ரீராம் அவர்கள்’ என்றோ, ’ஸ்ரீராம் சார்’ என்றோ அழைப்பதை அவர் விரும்புவது இல்லை.

    அதுபோல நிறைய பெண்மணிகள் தங்களை ’திருமதி. x x x x மேடம் அவர்கள்’ என்று நான் குறிப்பிடுவதை விரும்புவது இல்லை. ஜஸ்ட் தங்கள் பெயரை மட்டுமே சொல்லி எழுத வேண்டும் என பலரும் என்னிடம் மெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    ஓரளவு நன்கு பழகி பரிச்சயம் ஆகும்வரை, இதுபோன்ற இவர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளை நம் நினைவில் வைத்துக்கொண்டு நாம் செயல்படுவதும், மிகவும் கஷ்டமே.

    சில வலைப்பதிவர்களின் வலைப்பதிவின் பெயரை மட்டும் வைத்து நாம் அவர்கள் ஆணா, பெண்ணா, திருமதியா, செல்வியா என கண்டே பிடிக்கவும் முடியாது.

    உதாரணமாக : (1) ஸ்ரத்தா, ஸபுரி (2) ஆல் இஸ் வெல், போன்றவர்கள்.

    தங்கள் பாணியில் நல்லதொரு அலசல் பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K. அவர்களின் நீண்ட விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. சக ஹ்ருதயரென்று ஜேகே போல நாம் ஒருவரை ஒருவர் சொல்லிக் கொண்டால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களது அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. நல்ல விரிவான அலசல் பதிவு ஐயா. நாங்களும் சிலரைப் பேர் சொல்லியும், சிலரை ஐயா என்றும், சிலரை சகோ, சகா என்றும், சிலரை சகோதரி/தோழி என்றும் சொல்லி கருத்திடுவதுண்டு.


    மதுரைத் தமிழன், ஸ்ரீராம்,செந்தில், கில்லர்ஜி, மது/கஸ்தூரிரங்கன் , மலர்வண்ணன், செல்வா போன்றவர்களைப் பேர் சொல்லியே கருத்திடுவதுண்டு.. மணவையார், குடந்தையார், கரந்தையார் என்றும் குறிப்பிடுவதுண்டு.

    மின் அஞ்சல் என்றால் அன்பின் என்று இட்டுப் பெயரோ இல்லை ஐயா என்றோ சொல்வது வழக்கம்..

    ReplyDelete
  20. ஸார், என்றோ, மேடம் என்றோ அழைத்தால் நமக்கும் அவர்களுக்கும் இடைவெளி அதிகம் என்று பொருள் - என்னைப் பொறுத்தவரையில். பெண் பதிவாளர்கள் எல்லோரையும் நான் பெயரிட்டு அழைப்பேன். திருமதி, திருமிகு இதெல்லாம் சேர்க்க மாட்டேன். ஆண் பதிவாளர்கள் பலரையும் அவர்களது பெயரை இட்டே அழைப்பேன். பெயர் வைப்பதே கூப்பிடத்தானே? அதுவே நம் தனி அடையாளம், இல்லையா? பெயர் சொல்லி அழைக்கும்போது ஒரு அண்மை வந்துவிடுகிறது. திரு, திருமதி எல்லாம் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.
    ஒரு பெண் வலைப்பதிவாளரை நான் அம்மா (அவரது பெயருடன் சேர்த்து) என்று எழுத அவர் நான் உங்களுக்கு அம்மாவா என்று சற்று கோவத்துடன் கேட்டார். மேடம் என்ற ஆங்கிலச் சொல்லைவிட அம்மா பலமடங்கு உயர்ந்தது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை!

    ReplyDelete