Wednesday, 27 July 2016

வைசாலி செல்வம் - கேள்வி – பதில் பதிவுசகோதரி வைசாலி செல்வம் அவர்கள் சிறந்த வலைப்பதிவர் மற்றும் கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ( திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்) மாணவியும் ஆவார். இந்த கல்லூரியின் கணித்தமிழ் பேரவை உருவாகிட முக்கிய பணி ஆற்றிய, பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இவரது வழிகாட்டி ஆவார்.
அண்மையில் வைசாலி செல்வம் அவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதில் சில கேள்விகள் கேட்டு பதில் அனுப்பும்படி சொல்லி இருந்தார். நானும், ” அன்புள்ள சகோதரி செ.வைசாலி அவர்களுக்கு வணக்கம். நலம். தாங்கள் கேட்டுக் கொண்டபடி, மேலே சொல்லப்பட்ட கேள்விகளுக்கான எனது பதில்களை, எனது அனுபவத்தில், எனக்குத் தெரிந்தவரை எழுதியுள்ளேன்” – என்று எனது பதில்களை அனுப்பி வைத்தேன். அந்த கேள்வி – பதில் பகுதியை ”எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!! - என்ற தலைப்பினில்,  http://ksrcasw.blogspot.in/2016/06/blog-post_10.html தனது கல்லூரி வலைத்தளத்தில்(07.06.2016),பதிவாக வெளியிட்டார். அந்த பதிவினில் வந்த கேள்வி – பதில் பகுதியை இங்கு மீண்டும் வெளியிட்டுள்ளேன். 

                                                 +++++++++++++++++++++++ 


1.வங்கி பணிக்கான தேர்வுக்கு எப்படி  தயாராவது..?

எங்களது காலத்தில் அரசாங்க வேலைக்குமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (District Employment Exchange Office)” பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அலுவலகத்திலிருந்துதான் வங்கித் தேர்வுக்கான அழைப்பு எனக்கு வந்து எழுதினேன். அப்போதெல்லாம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மட்டுமே. தேர்வு முறைகளும் பொதுவானவை. அப்புறம் BSRB எனப்படும் Banking Service Recruitment Board நடத்திய தேர்வுகள் மூலம் ஊழியர்களைத் தேர்வு செய்தார்கள். இப்போது கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஆன்லைன் என்று தேர்வு முறையே மாறிவிட்டது. மேலும் எல்லா வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கும் இப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பொதுத்துறை வங்கிகளும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இலவசமாகவே பயிற்சிகள் தருகின்றன.   
இது சம்பந்தமாக நான் எனது வலைத்தளத்தில் எழுதிய பதிவு இது:

வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும் http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_5.html
நமது வலைப்பதிவர் சகோதரி அபயா அருணா (நினைவுகள்) அவர்கள் வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி  சில இணையதள இணைப்புகள் உள்ள வலைப்பதிவு ஒன்றை தனது வலைத்தளத்தில் http://abayaaruna.blogspot.in/2015/09/blog-post_19.html  எழுதியுள்ளார்.. சென்று பார்க்கவும்.

2.விவசாயத்திற்கும்,கல்விக்கும் பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்வதால் வங்கிக்கு எவ்வித நட்டம் ஏற்படும்..?

கடன் தள்ளுபடி என்பது, அரசு கொள்கை சார்ந்த முடிவு என்பதால், இந்த தொகை அரசாங்கக் கணக்கிலிருந்து வங்கிகளுக்கு ஒரு Paper Transaction மூலம் வரவு வைக்கப்பட்டு விடும். வங்கிகளுக்கு இதனால் பெரும் நட்டமில்லை. ஆனாலும் லாப விழுக்காடு குறையும்.

3.வங்கியில் எதனை அடிப்படையாகக் கொண்டு வட்டி நிர்ணயிக்கப்படுகிறது..?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மைய வங்கி உண்டு. நமது நாட்டிற்கு ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, நாட்டின் பொருளாதார நிலைமை, குறிப்பாக பணவீக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சில  வழிகாட்டுதல்களைச் செய்கிறது. இதில் வட்டி நிர்ணயமும் அடங்கும். கீழே உள்ள இணையதளத்தில் இன்னும் தகவல்கள் உண்டு.

Who sets the fixed deposit rate in India?                    http://www.keralabanking.com/who-sets-the-fixed-deposit-rate-in-india
4.ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகளுக்கும்,தனியார்
வங்கிகளுக்கும் என்ன வேறுபாடுகள்..??

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று எல்லா வங்கிகளும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றன.

பொதுத்துறை வங்கிகளின் லாப நஷ்டம் என்பது அரசாங்கத்தின் (பொது மக்களின்) பணம் ஆகும். அரசாங்கம் செயல்படுத்தும் நலத் திட்டங்கள் யாவும் பொதுத்துறை வங்கிகளின் மூலம்தான் செயல்படுத்தப் படுகின்றன

5.
இன்றைய இளைய சமுதாயத்தின் முன்னேற்றங்கள் குறித்த தங்களின் கருத்து என்ன..?

முதலில் தன்னலம்; அப்புறம் குடும்ப நலன்; அப்புறம் ஊர் நலன். அப்புறம் நாட்டு நலன், உலக நலன் என்று விரிகின்றது. இதனைத்தான் வீடு, வாசல், உலகம் என்றார்கள். எனவே நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். மனிதனை மனிதனாக நினைப்போம்.

எனது ஐயங்களுக்கு விடையளித்த தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்

(நன்றி: சகோதரி வைசாலி செல்வம் மற்றும் கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி ( திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

எனது ஐயங்களுடன் முத்து நிலவன் ஐயா..!!

எனது ஐயங்களுடன் மீரா.செல்வக்குமார் ஐயா..!!

32 comments:

 1. கேள்விகளும் அதற்கான தங்களின் பதில்களும் வெகு அருமை + இனிமை + எளிமை.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

   Delete
 2. கேள்வியும் பதிலும்!..

  பயனுள்ளவை.. மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

   Delete
 3. வணக்கம் ஐயா.தங்களின் வலையில் மீண்டும் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா.தங்களின் பதில்கள் எனக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது ஐயா.

  மீண்டும் நன்றிகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கும், இந்த பதிவினை மீள் பதிவாக வெளியிட ஒப்புதல் தந்தமைக்கும் நன்றி.

   Delete
 4. வணக்கம்
  ஐயா
  சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 5. எழுப்பப்பட்ட கேள்விகளும் அருமை
  அதற்கான விளக்கமான பதில்களும் அருமை
  அனைவருக்கும் பயன்படும்
  அற்புதமான பகிர்வு
  இருவருக்கும் என்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரமணி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தற்சமயம் அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ் வலையுலகம் மறக்காத உங்களுக்கு இன்னொருமுறை நன்றி.

   Delete
 6. பயனுள்ள கேள்வி பதில்கள் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

   Delete
 7. அனைவரும் பயன் பெறும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

   Delete
 8. அருமையான கேள்வி பதில் பதிவு. கல்லூரி மாணவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கு மிக பயனுள்ள பதிவு. இருவருக்கும் நன்றிகள்!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. பத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. இளைய தலைமுறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் உங்கள் பதிவு!

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களுக்கு நன்றி.

   Delete

 10. வைசாலியின் முயற்சிகள் பாராட்டக் கூடிய ஒன்று. இது போல பல துறைகளில் உள்ளவர்களிடம் இப்படி கேள்வி கேட்டு பதிவு எழுதினால் அது பலருக்கும் பயன்படும் இதை அவர் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்

  ReplyDelete
  Replies
  1. நண்பர் மதுரைத்தமிழன் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தினை அப்படியே வழிமொழிகின்றேன்.

   Delete
 11. ஆஹா இது கூட நல்ல முயற்சியாக இருக்கிறதே பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 12. வழிகாட்டலுக்கு வாழ்த்துகள் :)

  ReplyDelete
 13. வைசாலியின் முயற்சிகள் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டியவை. அவர்கள் பலரையும் தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று நினைக்கின்றோம்...

  வாழ்த்துகள் பாராட்டுகள்

  ReplyDelete
 14. நல்லதொரு முயற்சி. அங்கேயும் படித்தேன்.

  சில வாரங்களாக அங்கே பதிவுகள் வருவதில்லை..... இல்லை என்றால் எனது Dashboard-ல் Update ஆவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனது டேஷ் போர்டிலும் பிரச்சினைதான். தமிழ்மணம் ஓட்டுப்பட்டை பிரச்சினை இப்போதைக்கு தீராது போலிருக்கிறது.

   Delete
 15. தங்கள் பதில்கள் கறாராக இருந்தன. கூட்டல்- குறைச்சல் இல்லை. நீங்களும் உங்கள் சார்பில் அவர்களிடம் கேள்விகள் வைத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 16. சகோதரி வைசாலி செல்வம் அவர்களின் கேள்விகளுக்கு சுருக்கமாகவும், புரியும்படி எளிமையாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்! உங்களிடமிருந்த பதிலைப்பெற்ற சகோதரி வைசாலி செல்வம் அவர்களுக்கு பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

   Delete