Wednesday, 20 April 2016

தமிழ் சுவர் சித்திரங்கள் ( THAMIZH WALLPAPERS) - 1போட்டோ ஸ்கேப் (PhotoScape) உதவியுடன் தமிழ் இலக்கியம் - பாடல் வரிகள், பொன்மொழிகள் எழுதப்பட்ட படங்கள் அவ்வப்போது இங்கு வெளியிடப்படும். (வலையுலகில் என்னால் முடிந்த தமிழ்ப் பணி.)
பிற்சேர்க்கை (21.04.2016):

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மேலே உள்ள புறநானூற்றுப் பாடலுக்கான தெளிவுரை இங்கே தந்துள்ளேன்.

தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி
 ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.          -  புறநானூறு 189


( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )

இதன் எளிமையான பொருள்: - 
ஒரு குடைக்கீழ் அமர்ந்து இந்த உலகம் முழுவதும் ஆளும் மன்னனும், இரவு பகல் என்றும் பாராது அலைந்து திரிந்து வேட்டையாடும் கல்லாத வறியவனும், உண்பது நாழி  அளவுதான்( நாழி என்பது ஒரு முகத்தல் அளவு); உடுப்பது மேலாடை, கீழாடை என்ற இரண்டுதான். இவை போன்றே மற்ற எல்லாத் தேவைகளும். எனவே செல்வத்துப் பயன் என்பது (தன் தேவைக்குப் போக மீதி உள்ளதை) இல்லாதவருக்கு வழங்குதல் ஆகும். நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம் என்று வைத்துக் கொண்டாலும், கிடைக்காமல் போவது பல ஆகும் ( அனுபவிப்பது சிலதான்) 

( இந்த பாடலை மையமாக வைத்து துய்ப்பேம் எனினே தப்புன பலவே http://tthamizhelango.blogspot.com/2014/06/blog-post_28.html - என்ற பதிவு ஒன்றையும் எழுதி இருக்கிறேன் )38 comments:

 1. தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமால் பெருமை வரிகளை டி எம் எஸ் குரலில் ராகத்துடன் மனதுக்குள் வாசித்தேன்! கவிஞர் கண்ணதாசன் வரிகளையும் அப்படியே பணக்காரக் குடும்பமாக இல்லாவிடினும் நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டி மனதுக்குள் பாடினேன்!!

  தம +1

  ReplyDelete
  Replies
  1. ’எங்கள் Blog’ - ஸ்ரீராம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 2. அருமையான புதுமையான முயற்சி இது. தொடரட்டும் தங்களின் இதுபோன்ற தமிழ்ச் சேவைகள். பதிவு மிகவும் அருமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

   Delete
 3. அருமையான கருத்தாழம் மிக்க வரிகளை, அழகான பின்னணிப் படங்களுடன் வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்! தொடரட்டும் தங்களின் தமிழ்த் தொண்டு!

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

   Delete
 4. 'ஒன்று எங்கள் ஜாதியே', 'எங்கே வாழ்க்கை தொடங்கும்' 'தெண்கடல் வளாகம்' எல்லாம் வெகு பொருத்தம்!

  'வெள்ளத்தனையது மலர் நீட்டம்'-- இதற்கு தாமரை தான் பொருத்தம். தண்டு நீள இருப்பதால் படத்தில் காணப்படுவது அல்லியோ".. தாமரை தான் எனில், 'அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்' படத்தை, 'வெள்ளத்தனையது மலர் நீட்டத்திற்கு மாற்றியிருக்கலாம். தண்டு நீரில் தழைய, இலைகளில் மலர் தவழ்ந்து.. வெள்ளத்தனையதுக்கு வெகு பொருத்தமாக இருந்திருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி! தாங்கள் சொன்னபடி இரண்டு படங்களிலும் மாற்றம் செய்து விட்டேன்.

   Delete
 5. நண்பரே படங்கள் அருமை
  படங்களின் வரிகள் அருமை....
  எழுத்துரு மாற்றி மாற்றி எழுதுங்களேன்
  பார்க்கவும் படிக்கவும் கவர்ச்சிகரமாக
  இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. நண்பர் அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. பல்வேறு எழுத்துருக்களில் எழுத முயற்சி செய்கிறேன்.

   Delete
 6. Replies
  1. கவிஞரும், பத்திரிக்கைத் துறையைச் சார்ந்தவருமான நண்பர் நாகேந்திர பாரதி அவர்களுக்கு நன்றி.

   Delete
 7. படங்களும், பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன. கூடவே ஒன்றிரண்டு வரிகளில் சட்டென்று புரியாத பாடல்களுக்கு) பொருளும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. குறிப்பாக புறநானூறு பாடலுக்கு.

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் கருத்துரைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி. உங்கள் கருத்தின்படி, மேலே உள்ள புறநானூற்றுப் பாடலுக்கான விளக்கத்தை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

   Delete
  2. நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க உடனடியாக விளக்கத்தைக் கொடுத்ததற்கு நன்றி! 'உண்பது நாழி உடுப்பது இரண்டு முழம்' என்று சொலவடை கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பாடலிலிருந்து வந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

   Delete
  3. மேடம் அவர்களுக்கு நன்றி. 'உண்பது நாழி உடுப்பது இரண்டு முழம்' என்று சொல்வது இல்லை. 'உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்' என்பதுதான் வழக்கு. கீழே ஔவை வாக்கு.

   உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
   எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
   மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
   சாந்துணையும் சஞ்சலமே தான். – ஔவையார் (நல்வழி)

   Delete
 8. அருமையான பாடல்கள்
  கண்ணுக்கினியப் படங்கள்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் கரந்தையாரின் பாராட்டினுக்கு நன்றி.

   Delete
 9. பிரமாதம்! நல்ல முயற்சி!
  எல்லா படங்களையும் முடிந்தவரை ஒரே அளவில் போட்டால் பின்னாளில் சேர்த்து புத்தகம் மாதிரி compile செய்ய வசதியாக இருக்கும். படத்திற்கு கீழே அர்த்தமும் சொன்னால் நலம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் நம்பள்கி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   இந்த பதிவினில் இருக்கும் பல படங்கள் கூகிள் செய்த உதவி; மேலும் கருத்துரைகளும் அந்தந்த சிந்தனையாளர்களுடையவை. பொதுவுடமையானவை. இதில் என்னுடைய பணி சிறியதுதான். எனவே புத்தகமாக தொகுத்து வெளியிடும் எண்ணம் இல்லை.

   இனி வரும் பதிவுகளில், சங்க இலக்கியம் போன்ற தமிழ்ப் பாடல்களுக்கு மட்டும் விளக்கம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

   Delete
 10. படமும் பாடலும் மிகவும் பொருத்தம்!முயற்சி தொடர வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   Delete
 11. வித்தியாசமான முயற்சி. அழகாக தெரிவு செய்யப்பட்ட படங்கள். அதற்கேற்ற அற்புதமான வரிகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

   Delete
 12. Replies
  1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. இனி மற்ற மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துக்களுடன் - பாரதியார், பாரதிதாசன், பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோரது சிந்தனைத் துளிகளும் வெளிவரும்.

   Delete
 13. மிக மிக நல்ல முயற்சி ஐயா! அருமையான பாடல்கள், வரிகள் என்று.....தொடரலாம்...

  கீதா: இப்படி நிறைய வால் பேப்பர்ஸ் வீட்டில் நிறைய இருந்தன...ஆனால் சுவரில் ஒட்ட வழியில்லாமல் கொடுத்துவிட்டோம்...

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் / சகோதரி இருவருக்கும் நன்றி.

   Delete
 14. அருமையான எண்ணங்களின் பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 15. தொழில் நுட்பம் தெரியாத எனக்கு இது பிரமிப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இதில் பிரமிக்கத் தக்க விஷயம் ஏதும் இல்லை. இங்கு நான் செய்து இருப்பது சாதாரண Copy / Paste சமாச்சாரம்தான். போட்டோஸ்கேப் (PhotoScape) மற்றும் போட்டோஷாப் (Photoshop) போன்ற விஷயங்கள் மிகவும் எளிமையானவை. நீங்களும் உங்கள் கம்ப்யூட்டரில் செய்யலாம். இதற்கான செய்முறைப் பயிற்சிகளை YOUTUBE இல் தெரிந்து கொள்ளலாம்.

   Delete
 16. இனி ,தமிழ் அரங்கு சுவர்களில் இந்த சுவர் ஓட்டிகள் இடம் பெறுமென்று நினைக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் அன்பான ஆசைக்கு நன்றி. எனது விருப்பமும் அதுவே. இந்த படங்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ள யாதொரு அட்டியுமில்லை.

   Delete
 17. படங்கள் வடிவில் சிந்தனைகள் அருமை.பாடலுக்கு விளக்கவுரை அருமை ஐயா.

  ReplyDelete
 18. வரவேற்க வேண்டிய முயற்சி. வெள்ளத்தனையது மலர்நீட்டம், ஒன்று எங்கள் ஜாதியே இரண்டு படங்களும் வெகு பொருத்தம்! புறநானூற்றுப் பாடல் கருத்தையும் சொன்னமைக்கு மிகவும் நன்றி!பாராட்டுக்கள் இளங்கோ சார்!

  ReplyDelete
 19. அருமையான முயற்சி! இன்னும் போகப் போக தெளிவான வால்பேப்பர்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். அழகான படங்களை பகிர்ந்த தங்களுக்கு நன்றி நண்பரே!
  த ம 9

  ReplyDelete
 20. சிறப்பான முயற்சி . வாழ்த்துக்கள். பயனுள்ளவை. நன்றி. மேலு சிறந்து தொடர வேண்டுகிறேன் - பொன்மலை பாபு

  ReplyDelete