Sunday 6 March 2016

கண்ணீர் அஞ்சலி! - பதிவர் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள் மறைவு!



      
                             (திருமதி. இராஜ ராஜேஸ்வரி மறைவு: 09.02.2016)
         (PICTURE COURTESY: http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html)

வெளியூர் சென்றிருந்த நான், நேற்று மாலை வீடு திரும்பியதும் தமிழ்மணம் திரட்டியை பார்த்துக் கொண்டு இருந்தபோது, தில்லைக்கது V துளசிதரன் அவர்களது (thillaiakathuchronicle) பதிவினில், ‘பதிவர் சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரிக்கு அஞ்சலி’ என்ற அதிர்ச்சியான செய்தியைக் காண நேர்ந்தது,. மேலும் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது பதிவினில்,”அம்மா துணை!!’ என்ற தலைப்பினில், அவரது மகள் மற்றும் மகன்கள் ”எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடி தன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்” என்று செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். ( http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html )

வலைச்சரத்தில் நான்:

ஒருமுறை வலைச்சரத்தில் ( http://blogintamil.blogspot.in/2013/02/2.html ) நான் எழுதிய வரிகள் இவை “ மணிராஜ் என்ற பெயரில் எழுதி வருபவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள். கோயில் குளங்கள் என்று போவோருக்கு இந்த வலைப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். கோயில்களைப் பற்றியும் அங்குள்ள தெய்வங்களைப் பற்றியும் அழகான வண்ணப் படங்களுடன் தருகிறார். இடையிடையே அருமையான நாம் எப்போதும் கேட்கும் இன்னிசைப் பாடல்களின் வரிகள்.”

ஆன்மீகப் பதிவர்:

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஒரு வலைப்பதிவராக (BLOGGER) ஜனவரி 2011 இலிருந்து தமிழ் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். கோயமுத்தூர் வாசியான இவர் ’மணிராஜ்’ என்ற தனது வலைத்தளத்தில் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தமான பதிவுகளையே, அழகிய வண்ணப்படங்களுடன் அதி பக்தியோடு சிறப்பாக வெளியிடுவார். இதனாலேயே இவர் ‘ஆன்மீகப் பதிவர்’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஒரு பதிவின் வழியாகவே, நான் இருக்கும் திருச்சியில், உறையூர் சாலைரோட்டில் இருக்கும் ’ஸ்ரீ குங்கும்வல்லி அம்பிகை’ கோயில் இருப்பதும், அம்மனுக்கு வளையல்களால் ஆன அலங்காரம் விசேஷம் என்றும் தெரிந்து கொண்டேன். (http://jaghamani.blogspot.com/2011/07/blog-post.html )


எனது வலைப்பதிவுகளை நான் எழுதத் தொடங்கிய புதிதில், ஒருமுறை ‘தமிழ் வண்ணம் திரட்டி’ ( http://tamilvannamthiratti.blogspot.in ) என்ற வலைத்தளத்தில், எனது வலைத்தளத்தினை இணைக்கச் சொல்லி எழுதி இருந்தார். அன்று முதல் இவரது வலைத்தளம் எனக்கு அறிமுகம்.  

இந்து மதம் சம்பந்தமாக மட்டுமன்றி, ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு பதிவுகளை வெளியிடும் மத நல்லிணக்கம் கொண்டவர். ‘என்னைக் கவர்ந்த கிறிஸ்தவ கீதங்கள்என்ற எனது பதிவினில், அவர் எழுதிய கருத்துரை இது.

கல்லூரி விடுதியில் பல கிறிஸ்துவ தோழியர் உண்டு.. கிறிஸ்துமஸ் சமயங்களில் பாட்டு ஆசிரியையை பல கிறிஸ்து பாடல்களை பாட பயிற்சி தருவார்... , ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்கும் சென்று பாடிய இனிய நினைவுகளை தங்கள் பதிவு மீட்டெடுத்தது ..பாராட்டுக்கள்..! ///
 
ஆன்மீகப் பதிவுகள் மட்டுமன்றி தனது குடும்பத்தினருடன் சென்ற சுற்றுலா மற்றும் பேரப்பிள்ளைகள் மற்றும் பொங்கல், தீபாவளி , புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியும் அழகிய வண்ணப்படங்களுடன் பதிவுகள் தந்தவர்.

கண்ணீர் அஞ்சலி:

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது மறைவுச் செய்தியைக் கேட்டதும் நமது தமிழ் வலைப்பதிவர்கள், தில்லைக்கது V துளசிதரன், வை.கோபாலகிருஷ்ணன், சூரி சிவா என்கிற சுப்பு தாத்தா, தஞ்சையம்பதி துரை செல்வராஜூ ஆகியோர் தங்களது வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மறைந்த ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது மறைவு என்பது, தமிழ் வலையுலகில் நமக்கெல்லாம் வருத்தமான செய்தி என்பதோடு ஆன்மீக நண்பர்களுக்கு பெரும் இழப்பும் ஆகும். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மணிராஜ் இராஜேஸ்வரி (சில படங்கள்):

அவருடைய பதிவிலிருந்து சில படங்கள் (நன்றி: Google Plus)

                                  ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்

                                                             Shanmuka Temple, Bangaluru

                                    மங்களங்கள் மலரும் தட்சிணாமூர்த்தி வழிபாடு

                                                      பிருந்தாவன துளசி பூஜை


பிற்சேர்க்கை (10.03.16) – தேனம்மைக்கு நன்றி!

ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கென்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில், தமிழ்மணம் படிக்கத் தொடங்கியதிலிருந்து வலைப்பதிவர்களின் புகைப்படங்களை அவ்வப்போது ஒரு போல்டரில் சேமித்து வைத்து இருந்தேன். ஒருமுறை கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறில் எல்லாமே அழிந்து விட்டன; இப்போது மறுபடியும் அதே தவறு நேராதிருக்க, அவ்வப்போது பென்டிரைவிலும் சேமித்து விடுகிறேன். 

மேலே உள்ள திருமதி இராஜராஜேஸ்வரி படத்தை , சகோதரி தேனம்மை லட்சுமணன்  அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். மேலே எனது பதிவினிலும், பதிவை வெளியிட்ட அன்றே  இதனை குறிப்பிட்டு இருக்கிறேன். (PICTURE COURTESY: http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html) ஆனாலும் சில நண்பர்கள், முதன்முதல் நான்தான் இந்த படத்தை வெளியிட்டது போலவும், சிலர் நான் இதுபற்றி எதுவும் குறிப்பிடாதது போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். எனவே மேற்கொண்டு விவரம் வேண்டுவோர்  ”சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்’ என்ற மேலே சொன்ன தேனம்மை பதிவினுக்கு சென்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது பேட்டியினை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

33 comments:

  1. திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவின் ஆன்மா சாத்தியடைய பிராத்திப்போம்.. தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஈடு செய்ய இயலாத இழப்பு
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  4. அம்மா துணை என்னும் தலைப்பில் திருமதி இராஜராஜேஸ்வரியின் மக்கள் எழுதிய பதிவினைப் பார்த்ததும் அவரது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு என் இரங்கலைத் தெரிவித்தேன் ஒரு முறை சுடோகு என்னும் ஒரு கணக்குப் புதிருக்கு விடை அளித்த அவருக்கு ஜீனியஸ் என்னும் பட்டம் கொடுத்து மகிழ்ந்தேன் அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது

    ReplyDelete
  5. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் மறைவால் ஆன்மிக தகவல்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  6. தமிழ் வலைபதிவர்கள் அனைவரும் அறிந்த அன்பு இராஜராஜேஸ்வரி அக்கா அவர்களின் மறைவு மிகவும் துக்கமான அதிர்ச்சியான செய்தி .அக்கா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம் ..

    ReplyDelete
  7. எங்கள் இதயபூர்வமான அஞ்சலி.

    ReplyDelete
  8. அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.. அவர் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய ராஜேஸ்வரி அம்மா அவர்களின் பதிவுகளை அவர்கள் தொகுத்தளிக்கும் அழகிய படங்கள் மறறும் விவரங்களுக்காகப் பார்த்துவந்தேன்.
    அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியாகவும் மிகவருத்தமாகவும் உள்ளது.
    அவர்களது மறைவுகுறித்துஎழுதிய தங்களுக்கு நன்றியும் வணக்கமும்.
    அவர்களின் நினைவு நம் பதிவுலகில் என்றென்றும் நினைவுகூரப்படும்.

    ReplyDelete
  10. ஈடு செய்ய இயலாத இழப்பு
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  11. ஆத்மா சாந்தி அடையட்டும்!ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  12. கவலையான செய்தி.
    மிகவும் வருந்துகிறேன்.

    ReplyDelete
  13. ஈடு செய்ய முடியாத இழப்பு
    துயர் பகிருவோம்

    ReplyDelete
  14. அவருடைய எழுத்துக்கள் மூலமாக நம்முடன் என்றும் இருப்பார். உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

    ReplyDelete

  15. திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து உங்களைப்போலவே பலரும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களில் நானும் ஒருவன். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  16. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புகைப்படம் கண்டு நெகிழ்ந்தேன்..
    ஆன்மீக விஷயங்களை அழகு தமிழில் தருவதில் வல்லவர்.. அவருக்கு நிகர் அவரே..

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆத்மா இறைநிழலில் சாந்தியடையட்டும்.
    எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  17. எனது அஞ்சலிகளும்....

    அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  18. அவர்களது வலைப்பூ ஒரு அகராதி போல்; ஸர்ச் ஆப்ஷன் வைத்துக் கொள்ளுமாறு நான் சில முறை குறிப்பிட்டுச் சொன்ன பிறகு அதை வைத்தார்கள்!!
    எப்போதும் பாசிடிவான கருத்துரைகளையே இடுவார்கள்!! அவர்கள் மறைவை இன்னும் நம்ப முடியவில்லை!!

    ReplyDelete
  19. அவர்களது வலைப்பூ ஒரு அகராதி போல்; ஸர்ச் ஆப்ஷன் வைத்துக் கொள்ளுமாறு நான் சில முறை குறிப்பிட்டுச் சொன்ன பிறகு அதை வைத்தார்கள்!!
    எப்போதும் பாசிடிவான கருத்துரைகளையே இடுவார்கள்!! அவர்கள் மறைவை இன்னும் நம்ப முடியவில்லை!!

    ReplyDelete
  20. மனமார்ந்த அஞ்சலி!

    ReplyDelete
  21. மிக மிக வருந்துகிறேன். இரங்கல்கள்.

    ReplyDelete
  22. வருந்துகிறேன்
    என் வலையுலகிலும் மிக நட்பாகப் பழகியவர் எனக்கும் வலையுலகிற்கும் இடைவெளி விழுந்ததால் வலையுலகில் என்ன நடக்கிற என்று அறியத் தவறிவிட்ட

    அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்
    அவருடைய குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையைக் கொடுக்கட்டும்

    ReplyDelete
  23. எம் ஆழ்ந்த இரங்கல்,, வருந்துகிறோம்.

    ReplyDelete
  24. செய்தி அறிந்தது முதல் அதிர்ச்சியாகவே உள்ளது. பலருடைய பதிவுகளைப் பார்த்தபிறகும்கூட மனம் நம்பமறுக்கிறது. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  25. இன்றைக்குத்தான், இப்போது தான் நீண்ட நாட்க‌ளுக்குப்பிறகு என் வலைப்பக்கத்திற்கு வந்தேன். வந்ததுமே திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
    அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!

    ReplyDelete
  26. தேனம்மையின் சாட்டர்டே ஜாலி கார்னரில் தான் முதன் முதலில் அவர்களை பார்த்தது.
    அவர்கள் கனிவான சிரித்தமுகம் மனதில் பதிந்து விட்டது.
    அவர்கள் எப்படி ஆன்மீக பதிவே எழுதுகிறார்கள் என்பதற்கான அவர்களின் பேட்டி மிக அருமையாக இருந்தது.
    அவர்களுக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.
    அவர்களைப் பற்றி வியந்து போவேன்.எப்படி இவர்களால் தினம் பதிவும் போட்டு எல்லோர் தளத்திற்கும் போய் கருத்தும் சொல்ல முடிகிறது என்று. ஆன்மீக பதிவுஎன்றால் இராஜராஜேஸ்வரி என்பதை யாராலும் மறக்க முடியாது. அவர்கள் இருந்தால் இன்று சிவராத்திரிபதிவு வந்து இருக்கும்
    அவர்கள் பதிவிலிருந்து படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. அவர்கள் பதிவை மீண்டும் பார்த்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  27. இன்றுதான் திருமுகம் காண்கின்றேன்.மனம் பாரமாகின்றது.

    ReplyDelete
  28. இன்றுதான் திருமுகம் காண்கின்றேன்.மனம் பாரமாகின்றது.

    ReplyDelete
  29. வா.கோபு சார் பதிவின் மூலமாகத் தான் திருமதி ராஜராஜேஸ்வரி அம்மையார் மறைந்த செய்தியறிந்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  30. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

    ReplyDelete
  31. மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...

    ReplyDelete
  32. நாங்கல் தொடரும் பதிவர்கள் வலைப்பதிவு எழுதியதில் இளைஞர்கள் எழுதும் தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் எழுதி வரும் வேளையில் அம்மா துணை என்ற தலைப்பில் மணிராஜ் தளத்தில் பதிவு வெளியாவது தெரிய உடனே சகோ அவர்கள் உடல் நலம் தேறி வந்துவிட்டார்கள் போலும் என்று நினைத்து வாசிக்கச் செல்ல இந்த அதிர்ச்சிச் செய்தியை அவர்கள் பிள்ளைகள் கொடுத்திருக்க மனம் அப்படியே எழுதுவதைத் தொடர இயலாமல் அப்படியே நின்றுவிட பதிவை அச் செய்தியைச் சொல்லி அஞ்சலியுடன் வெளியிட்டுவிட்டோம்.

    மனம் மிகவும் வேதனை அடைந்தது. தங்களின் விரிவான பதிவிலிருந்து இன்னும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. அவரது புகைப்படமும் உங்கள் தளத்தில்தான் பார்க்கின்றோம். (நன்றி எங்கள் ப்ளாக்)

    நம்பவும் முடியவில்லை....நம் மனதிலிருந்து நீங்கா இடம் பெற்றவர். அவரது அன்பு ததும்பும் பின்னூட்டங்களினாலும் அவரது பதிவுகளினாலும்...

    எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  33. திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.!

    ReplyDelete