Wednesday, 9 March 2016

திருச்சி – புத்தகத் திருவிழா 2016ஒவ்வொரு வருடமும், திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்போதும், “போகாமல் இருந்தால்தான் என்ன?” என்று தோன்றும். ஆனால், புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளை படித்ததும் அங்கு போகாமலோ அல்லது ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்காமலோ இருக்க முடிவதில்லை. இந்த வருடமும் அப்படித்தான். அதிலும் பாபாஸி (BAPASI) திருச்சியில் நடத்தும் முதல் புத்தகத் திருவிழா என்பதால் போகாமல் இருக்க இயலவில்லை.

மக்கள் வெள்ளம்:

எனவே நேற்று மாலை, ( 08.03.2016 – செவ்வாய்), நாங்கள் இருக்கும் கே.கே.நகரிலிருந்து பஸ்ஸில் தில்லைநகர் வந்து, அங்கிருந்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில்  உக்கிரகாளியம்மன் கோயில் எதிரில் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற, திருச்சி புத்தகக் கண்காட்சிக்கு (TRICHY BOOK FAIR) நடந்து சென்றேன். அதற்கு முன்னால் வீட்டில் ’தி இந்து தமிழ்’ பத்திரிகையில் புத்தக கண்காட்சி பற்றி வந்த செய்திகளை மீண்டும் படித்தேன். திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களும் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதில், 

/// அன்புள்ள தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு, வணக்கம். நம்பூவனம்வலைப்பதிவர் திரு. ‘ஜீவிஐயா அவர்கள் சமீபத்தில் சந்தியா பதிப்பகம் மூலம் ஒரு மிகச்சிறந்த நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்புமறக்க முடியாத தமிழ் எழுத்துலகம் .பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா.வரைஜீவி 264+4=268 பக்கங்கள் - விலை ரூ. 225 மேற்படி நூலின் மேல் அட்டைப்படத்தை இத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.  

ஸ்டால் நெ.   86 & 87 திருச்சிதென்னூர் மாநகராட்சி மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகக்கண்காட்சியில் இந்த நூல் கிடைக்கும்புத்தகக் கண்காட்சி  இந்த மாதம் 13ம் தேதி வரை மட்டும் நடைபெறும் என்று தெரிகிறதுஇது, புத்தகப்பிரியரான தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அதில் அவரால் எழுதப்பட்டுள்ள தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. இதைப்பற்றி என் பதிவினில் விரைவில் எழுதலாம் எனவும் நான் நினைத்துள்ளேன்அன்புடன் VGK ///

என்று குறிப்பிட்டு இருந்தார். எப்படியோ திரு V.G.K மீண்டும் வலைப்பக்கம் எழுத வருகிறார். மகிழ்ச்சியான தகவல்.

எப்போதுமே திருச்சியில் எந்த புத்தகக் கண்காட்சி நடந்தாலும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இப்போதும் மக்கள் வெள்ளம் அதிகம் இருந்தது. நிறைய தெரிந்த முகங்களைக் காண முடிந்ததது. 

திருமதி ஜெயலக்ஷ்மி ( கல்வி அதிகாரி; ’நிற்க அதற்குத் தக’ – வலைப்பதிவர்) அவர்கள் தனது மகன் வினோத்துடன் வந்து இருந்தார். (இந்த வினோத் சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி, திருச்சி மருத்துவமனை ஒன்றில் ICU வில் இருந்தார்; அப்போது அவரைப் பார்க்க அங்கு சென்றபோது, பார்க்க அனுமதி இல்லாததால் திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களிடம் மட்டும் விசாரித்து விட்டு வந்து விட்டேன். நேற்று அவர்கள் இருவரையும் சந்தித்து நலம் விசாரித்ததில் மிக்க மகிழ்ச்சி) மேலும் சில நண்பர்களையும் சந்தித்தேன்.

அங்கு இருந்த ஒவ்வொரு புத்தகக் கடைக்கும் சென்று வந்தேன். சில நூல்களை மட்டுமே வாங்கினேன். வலைப்பதிவர் பேராசிரியர் மதுரை ‘தருமி’ அவர்கள்  மொழி பெயர்த்த ’பேரரசன் அசோகன் ’ என்ற நூல் திருச்சியிலேயே இங்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரு V.G.K அவர்கள் குறிப்பிட்ட 87 ஆம் எண் ஸ்டாலில் (சந்தியா பதிப்பகம்). ஜீவி அவர்களது நூலை வாங்கினேன். அங்கேயே நமது வலைப்பதிவர் துளசி டீச்சரின் (துளசி கோபால்) எழுதிய ‘அக்கா’ என்ற நூலும் கிடைத்தது. கடைசியாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

புகைப்படங்கள்:

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

(படம் – மேலே) திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்

(படம் – மேலே) NCBH அரங்கத்தில் நான்.

(படம் – மேலே) பேராசிரியர் அ.நல்லுசாமி அவர்களுடன் நான்.

 
வாங்கிய நூல்கள்:

பேரரசன் அசோகன் – சார்ல்ஸ் ஆலன் (தமிழில்: தருமி) – எதிர் வெளியீடு
பெண் ஏன் அடிமை ஆனாள்? – பெரியார் ஈ.வெ.ரா – திராவிடன் புத்தக நிலையம்
தமிழ்நாடு – நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் – ஏ.கே.செட்டியார் - (சந்தியா பதிப்பகம்)
ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை – ஜீவி (சந்தியா பதிப்பகம்)
அக்கா – துளசி கோபால் (சந்தியா பதிப்பகம்)
நாட்டார் வழக்காற்றியலும் வெகுசன ஊடகமும் – சண்முகம் (புதுப்புனல்)
வங்கியில் போட்ட பணம் – சி.பி.கிருஷ்ணன் (பாரதி புத்தகாலயம்)
நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு சுப.தனபாலன் (பிராம்ப்ட் பதிப்பகம்)
ரியல் எஸ்டேட் வழிகாட்டி - சுப.தனபாலன் (பிராம்ப்ட் பதிப்பகம்)
கவர்மெண்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தீ (காலச்சுவடு)

ஒரு ஆலோசனை:

திருச்சி புத்தகக் கண்காட்சி நடந்த இடம், நகரின் மையப் பகுதியில் என்றாலும், பஸ் போக்குவரத்து வசதி இல்லாத இடம். மழை பெய்தால், அந்த இடம் அவ்வளவுதான். அந்த ஏரியாவின் எல்லா தண்ணீரும் அங்கு வந்து விடும். எனவே அடுத்த முறை கண்காட்சி நடத்தும் போது, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அல்லது சிந்தாமணி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடத்த வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன். (அண்மையில் பெரம்பலூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் அமைந்த இடம், அரங்க அமைப்பு, அடிப்படை வசதிகள் யாவுமே பாராட்டும்படி சிறப்பாக அமைந்து இருந்தன)  


குறிப்பு:புத்தகக் கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை ( 04.03.2016 முதல் 13.03.2016 முடிய)


49 comments:

 1. ’நினைத்ததை ... நடத்தியே ... முடிப்பவன் ... நான் ... நான் ... நான்’
  என நீங்கள் பாட்டே பாடலாம் !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஒரு நல்ல நூலை அறிமுகம் செய்து வைத்த திரு V.G.K அவர்களுக்கு நன்றி.

   Delete
 2. நேற்று நானும் வருவதாக இருந்தது..தவிர்க்க முடியாத காரணத்தால்...போக முடியவில்லை போகனும் சார்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பொதுவாகவே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இது போன்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கும். பாபாஸி (BAPASI) நடத்துவதால் அவசியம் வந்து பாருங்கள். புதுக்கோட்டையில் நடத்துவதற்கும் வேண்டுகோள் வைக்கவும்.

   Delete
 3. //திரு V.G.K அவர்கள் குறிப்பிட்ட 87 ஆம் எண் ஸ்டாலில் (சந்தியா பதிப்பகம்). ஜீவி அவர்களது நூலை வாங்கினேன். அங்கேயே நமது வலைப்பதிவர் துளசி டீச்சரின் (துளசி கோபால்) எழுதிய ‘அக்கா’ என்ற நூலும் கிடைத்தது. கடைசியாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.//

  ’ஆஹா, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்’ போல ஒரே ஸ்டாலில் நம் இரு பதிவர்களின் நூல்களையும் வாங்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா. ஒரே கல்தான். சந்தியா பதிப்பகம் என்றவுடன், அங்கிருந்த விற்பனையாளரிடம் துளசி டீச்சர் எழுதிய புத்தகம் என்றவுடன் உடனே எடுத்துக் கொடுத்தார். டீச்சர் எழுதிய மற்ற புத்தகங்களை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

   Delete
 4. புகைப்படங்கள் அழகு விரைவில் தங்களது விமர்சனங்கள் வரும் என்ற ஆவலில் நானும்.....
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றீ.

   Delete
 5. கண்காட்சிக்கு நாங்களும் வந்ததைப் போன்று
  படத்துடன் கூடியப் பதிவு
  விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  (பதிவின் இடையில் தந்த ஒரு மகிழ்வு தரும் செய்திக்கும் )

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரமணி அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 6. //அதில் அவரால் எழுதப்பட்டுள்ள தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. இதைப்பற்றி என் பதிவினில் விரைவில் எழுதலாம் எனவும் நான் நினைத்துள்ளேன். அன்புடன் VGK //

  என்று குறிப்பிட்டு இருந்தார். எப்படியோ திரு V.G.K மீண்டும் வலைப்பக்கம் எழுத வருகிறார். மகிழ்ச்சியான தகவல்.//

  அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா, வணக்கம்.

  நான் நம் திரு. ஜீவி ஐயாவின் அந்த நூலை முற்றிலுமாக மனதில் வாங்கிக்கொண்டு, ரஸித்து ருசித்துப் படித்து முடித்துவிட்டேன்.

  அதைப்பற்றி என் பதிவினில் ‘நூல் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுத ஆரம்பித்தும் விட்டேன். பெரும்பாலான பகுதிகளை COMPOSE செய்து DRAFT ஆகவும் தயாரித்து விட்டேன்.

  அந்த நேரத்தில்தான் நமக்கு அந்த சோக நிகழ்ச்சி தெரிய வந்தது. அதனால் என் மனமும் வேலைகளும் அப்படி அப்படியே ஸ்தம்பித்துப்போய் விட்டன. நினைக்க நினைக்க என்னால் என் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் நான் அந்த சோகத்திலிருந்து விடுபட்டு சகஜநிலைக்கு வரமுடியாமல் உள்ளேன். 4-5 நாட்களாக எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

  இருப்பினும் கொஞ்ச நாட்களுக்குப்பின், மனதை சமாதானம் செய்துகொண்டு, எப்படியும் ஏற்கனவே தயாரித்துவிட்ட இந்தத் தொடரினை மட்டுமாவது வெளியிட்டு விடலாம் என்றுதான் மனதில் நினைத்துள்ளேன்.

  தங்களின் ஊக்கமூட்டும் + உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மனித வாழ்வின் இயற்கை நிகழ்வுகள் நடந்தே தீரும். அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மனமுதிர்ச்சியாகும். மனதை நாம் இவ்வாறு துன்புறுத்திக்கொள்வது சரியல்ல.

   Delete
  2. அன்புள்ள V.G.K. அவர்களின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எழுத்தாளர் ஜீவி அவர்களைப் பற்றிய அறிமுகம். உங்கள் வலைத்தளம் மூலம்தான் கிடைத்தது. அதிலும் நீங்கள் நடத்திய ’V.G.K சிறுகதை போட்டி’களுக்கு நடுவராக இருந்து அவர் செய்த பணி மகத்தானது. மேலும் உங்கள் வலைத்தளத்தில் அவர் எழுதும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. இப்போதுதான் அவரது வலைத்தளத்தில் கூகிள் நண்பர்கள் வட்டத்தில் இணைந்துள்ளேன்.

   சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது மறைவு என்பது வலையுலகில் நமக்கெல்லாம் பெரிய இழப்புதான். அவரது மறைவு செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அன்றைக்கு முழுக்க மனம் ஒருவித பாரத்தில் இருந்தது. அதிலும் அவர் எனது வயதை ஒத்தவராகத்தான் இருப்பார் என்பதில் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. வேறு என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

   Delete
  3. முனைவர் பழனி கந்தசாமி அவர்களின் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 7. சமீபத்தில் பெரம்பலூர், பிறகு காரைக்குடி, இப்போது திருச்சி என்று நெடுக அலைந்து திரிந்து பல்வேறு நூல்களாக வாங்கிக்குவித்து வருகிறீர்கள் !!!. இவற்றையெல்லாம் லைப்ரரி போல பாதுகாத்து வைக்கவே தனியாக ஒரு வீடு தேவைப்படும்போலத் தோன்றுகிறதே :)

  தங்களின் இந்த ஆர்வம் எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.

  படங்களும் பதிவும் மிகவும் அருமையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அன்பு VGK அவர்களின் மீள் வருகைக்கு நன்றி. சின்ன வயதில் இருந்தே புத்தகங்கள் மீதும், அவற்றை வாசிப்பதிலும் நிறைய ஆர்வம். அப்பா அவர் படிக்கும் காலத்தில் இருந்தே சேர்த்து வைத்து இருந்த இலக்கிய நூல்களே இதற்கு காரணம். திருச்சியில் 1977 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் நிறைய புத்தகங்கள் சேதமாகி விட்டன. இரவல் கொடுத்தும் பல புத்தகஙகள் வராமல் போய்விட்டன.

   Delete
 8. ஒவ்வொரு புத்தகத்தின் விமர்சனமும் தாங்கள் பதிவு செய்வீர்களா...?

  படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கேள்விக்கும் பாராட்டிற்கும் நன்றி. பெரும்பாலும் வாங்கிய எல்லா புத்தகங்களையும் படித்து விடுவேன். வலைப்பதிவினில் எல்லாவற்றையும் விமர்சனம் செய்து எழுத முடியாது என்று நினைக்கிறேன்.

   Delete

 9. நீங்கள் எல்லா புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்து அது பற்றி பதிவிடுவதால் இந்த பதிவுகளின் தலைப்பை அனுபவம் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வராமல் ‘புத்தகத் திருவிழா’ என்ற தலைப்பின் கீழ் கொண்டு வரலாமே. எங்களுக்கும் தேவைப்படும்போது அந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து தேவையான புத்தகங்களின் பெயரை அறிந்து கொள்ள உதவும். இது எனது ஆலோசனை மட்டுமே.

  படங்கள் அருமை. நேரில் பார்ப்பது போல் உள்ளது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. உங்கள் ஆலோசனையின் படி நேரம் கிடைக்கும்போது, புத்தகத் திருவிழா சம்பந்தப்பட்ட எல்லா பதிவுகளிலும் குறிச்சொல்லை மாற்றி விடுகிறேன்.

   Delete
 10. ஆவல் தூண்டிய பதிவும்..படங்களும்..நல்ல யோசனை...விரைவில் புத்தகங்களுக்கான விமர்சனம் எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
 11. ஆவல் தூண்டிய பதிவும்..படங்களும்..நல்ல யோசனை...விரைவில் புத்தகங்களுக்கான விமர்சனம் எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. புதுகை கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

   Delete
 12. அன்புள்ள தமிழ் இளங்கோ ஐயாவுக்கு,

  திருச்சி புத்தகத் திருவிழாவில் நான் எழுதிய 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்ற நூலை தாங்கள் வாங்கியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களுக்கும் ஆற்றுபடுத்திய வை.கோ. ஐயாவுக்கும் மிகவும் நன்றி.

  தங்கள் புத்தக ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. என் நூலை வாசித்து முடித்ததும் உங்கள் பார்வையில் நூல் பற்றிய விமரிசனத்தினை உங்கள் வலைத்தளத்தில் பதிய கேட்டுக் கொள்கிறேன்., அது மேலும் எனக்கு உற்சாகத்தை அளிக்கும்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
  Replies
  1. எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். இத்தனை நாட்கள் உங்கள் எழுத்துக்களை எப்படி தவற விட்டேன் என்றே தெரியவில்லை. உங்களது ‘ ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூலைப் படிக்கத் தொடங்கி விட்டேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களில் நிறையபேருடைய வாசகன் நான். ஒரு நல்ல நூலை அறிமுகம் செய்து வைத்த திரு V.G.K அவர்களுக்கு நன்றி.

   Delete
 13. படங்கள்அருமை ஐயா
  திருச்சிக்குப் புறப்பட்டே ஆகவேண்டும் என மனம் துடிக்கிறது
  தேர்வு காலம்
  வாய்ப்பு கிடைக்குமானால் அவசியம் புத்தகக் கண்காட்சியைக் காண்பேன் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. அவசியம் வாருங்கள். பாபாஸி (BAPASI) நடத்தும் , இந்த புத்தகத் திருவிழாவை, தஞ்சையில் நடத்துவதற்கும் வேண்டுகோள் வைக்கவும்.

   Delete
 14. புத்தகப் பிரியருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B அவர்களுக்கு நன்றி.

   Delete
 15. எங்களை திருச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் தங்கள் பதிவு மூலமாக. பகிர்ந்த விதம் அருமை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

   Delete
 16. புத்தகத் திருவிழா செய்திகள் அறிய, மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி.

   Delete
 17. புத்தகத்திருவிழா பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

   Delete
 18. அருமை. உங்கள் புத்தக பட்டியலில் எல்லாமும் நான் பிக்சன் வகையைச் சார்ந்ததாக இருக்கிறது. சமீபத்தில் பதிப்பகம் நடத்துபவரும் அதற்குதான் பெரும் வரவேற்பு என்று சொன்னார்.

  ReplyDelete
  Replies
  1. எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று நிறைய நூல்கள் வாங்கி படித்து விட்டேன். இப்போது பெரும்பாலும் நீங்கள் சொல்லும் Non Fiction வகையறா நூல்கள்தாம் எனக்கு இப்போதைய வாசிப்பாக உள்ளன.

   Delete
 19. இரண்டாவது படத்துக்கு "செக்யூரிட்டியின் செல்ஃபி" என்று தலைப்பு கொடுக்கலாம் போல!

  ஏ கே செட்டியார் புத்தகம் ஏற்கெனவே நீங்கள் வாங்கியிருந்தீர்கள் போலவே..

  புகைப்படங்கள் அருமை.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி. ஏ.கே.செட்டியார் அவர்களது அந்தநூல் வேறு, இந்த நூல் வேறு.

   Delete
  2. நண்பரே அந்த செக்யூரிட்டி ‘செல்ஃபி’ எடுத்துக் கொள்ளவில்லை; எதிரே வரும் வாகனம் ஒன்றிற்கு எப்படி வரவேண்டும் என்று சைகை செய்கிறார்.

   Delete
 20. அருமையான பகிர்வு....படங்களும் அழகு ...நாங்களே சென்றது போன்ற நிறைவு ...

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

   Delete
 21. விரைவில் வாங்கிய நூல்களின் விமர்சனம் வரும் என காத்து இருக்கின்றேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 22. நூல்களை படிக்கும் உங்கள் ஆர்வம் வாழ்க வளர்க!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவுக்கு நன்றி.

   Delete
 23. நல்ல விரிவான தகவல்கள். தங்களது நூல் ஆர்வம் வாசிப்பு எல்லாமே பாராட்டிற்குரியது ஐயா. புத்தகவிமர்சனம் வந்துவிடும் தங்களிடமிருந்து. புகைப்படங்கள் வழக்கம் போல் மிக மிக அழகு..

  ReplyDelete
 24. சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete