Friday 11 March 2016

தேனம்மை அவர்களுக்கு நன்றி.



நான் எனது வலைத்தளத்தில் பிறரது படைப்புகளை மேற்கோள்களாக எடுத்துக் கையாளும்போது , அவர்களுடைய பெயரையோ அல்லது அவர்களது இணையதள முகவரியையோ சுட்டுவது வழக்கம். யாருடைய முழு படைப்பையும் எனது படைப்பாக போட்டுக் கொண்டதில்லை. படங்களை வெளியிடும்போது எடுத்தவர் விவரம் சரியாகத் தெரியாவிடின், பொதுவாக கூகிளுக்கு நன்றி என்று சொல்லி விடுவேன்.

திருமதி இராஜராஜேஸ்வரி மறைவு:

அண்மையில் கண்ணீர் அஞ்சலி! - பதிவர் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள் மறைவு! http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_6.html என்று ஒரு பதிவு ஒன்றினை எனது வலைத்தளத்தில் எழுதி இருந்தேன். அவரது புகைப்படத்தை பதிவினில் இணைப்பதற்கு அவரது வலைத்தளதில் , அவரது தன்விவரத்தில் (PROFILE) அவருக்கே உரிய தாமரை படம் மட்டுமே இருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் அவரது தளத்தில் அவரது படங்களை பார்த்ததாக நினைவு; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனவே எங்கள் கம்ப்யூட்டரில்  ஒரு போல்டரில் சேமித்து  வைத்து இருந்த அவரது படத்தினை இணைத்து வெளியிட்டேன். எனினும் அது அவரது படம்தானா அல்லது வேறு ஒருவருடைய படமாக இருந்தால் பிரச்சினையாகி விடுமே என்பதால், எனக்கு நன்கு பழக்கமான மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடம் இதுபற்றி போனில் பேசியபோது,, இராஜராஜேஸ்வரி மறைவுச் செய்தியைக் கேட்டதும் தான் ரொம்பவும் அதிர்ச்சியாகி விட்டதாகவும், தான் கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்தவுடன், வீட்டில் உள்ளவர்களும் ரொம்பவும் வருத்தம் அடைந்ததாகவும் சொன்னார். மேலும் எனது பதிவினில் உள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் மின்னஞ்சல் செய்வதாகவும் தெரிவித்தார்.

மின்னஞ்சல் செய்தி:

அவ்வாறே திரு V.G.K. அவர்களும் எனக்கு கீழ்க்கண்டவாறு , உடனேயே மின்னஞ்சல் செய்தார்.

/// Dear Sir, தாங்கள் இன்று வெளியிட்டுள்ள படமே இதோ இந்தப்பதிவினில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.  http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்.              அன்புடன் VGK ///

நானும் உடனே எனது பதிவினில் அன்றே புகைப்படத்தின் கீழ் courtesy என்று தேனம்மையின் வலைத்தளம் பெயரை சுட்டி இருந்தேன். இதனை மற்ற வலைப்பதிவர்களின் அஞ்சலி கட்டுரைகளில் கருத்துரை தெரிவித்த பலர் சரியாக கவனிக்கவில்லை என்பது அவர்களது கருத்துக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே, அதன் பிறகு எனது பதிவினில் கீழே உள்ள பிற்சேர்க்கையை இப்போது இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை (10.03.16) – தேனம்மைக்கு நன்றி!

ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கென்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில், தமிழ்மணம் படிக்கத் தொடங்கியதிலிருந்து வலைப்பதிவர்களின் புகைப்படங்களை அவ்வப்போது ஒரு போல்டரில் சேமித்து வைத்து இருந்தேன். ஒருமுறை கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறில் எல்லாமே அழிந்து விட்டன; இப்போது மறுபடியும் அதே தவறு நேராதிருக்க, அவ்வப்போது பென்டிரைவிலும் சேமித்து விடுகிறேன். 

மேலே உள்ள திருமதி இராஜராஜேஸ்வரி படத்தை , சகோதரி தேனம்மை லட்சுமணன்  அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். மேலே எனது பதிவினிலும், பதிவை வெளியிட்ட அன்றே  இதனை குறிப்பிட்டு இருக்கிறேன். (PICTURE COURTESY: http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html) ஆனாலும் சில நண்பர்கள், முதன்முதல் நான்தான் இந்த படத்தை வெளியிட்டது போலவும், சிலர் நான் இதுபற்றி எதுவும் குறிப்பிடாதது போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். எனவே மேற்கொண்டு விவரம் வேண்டுவோர்  ”சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்’ என்ற மேலே சொன்ன தேனம்மை பதிவினுக்கு சென்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது பேட்டியினை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் ’சாட்டர்டே ஜாலி கார்னர்’ என்ற தலைப்பின் கீழ், பல வலைப்பதிவர்களின் பேட்டிகளை , அவர்களது படங்களோடு வெளியிட்டு வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் மறைந்த ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புகைப்படத்தையும் பேட்டியையும் வெளியிட்டு இருந்த தேனம்மை அவர்களுக்கு நன்றி! 



24 comments:

  1. நீங்கள் சேமிக்கும் அல்லது சேமிக்க நினைக்கும் எந்த ஒரு டாகுமெண்ட் அல்லது படம், நிழற்படம் எல்லாவற்றையும் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஒரு போல்டர் லிலோ பென் டிரைவில் சேமிப்பதற்கு பதிலாக, உங்கள் ஜி மையில் உள்ள டிரைவில் சேமியுங்கள்.

    உங்கள் டெஸ்க் டாப் கம்புட்டர், லாப் டாப், பென் டிரைவோ பழுது படலாம். அல்லது கெட்டுப்போகலாம். ஆனால் ஜி மெயிலில் இருக்கும் டிரைவ் ல் 3016 வரை கூட அப்படியே இருக்கும்.

    இன்னொரு சௌகர்யம் . நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அதை பிரிண்ட் பண்ணிக்கொள்ளலாம்.

    இது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. என்றே நினைக்கிறேன். ஜி மெயிலின் டிரைவின் சேப்டி (பாதுகாப்புத்தன்மை) பற்றி சிலர் ஐயப் பட்டாலும் நமது பாஸ் வர்டு தெரியாதவரை யாருமே ஒன்றும் செய்ய முடியாது.

    எப்பொழுதாவது சென்னை வந்தால், தெரிவிக்கவும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்புத் தாத்தா அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும், ஒரு நல்ல ஆலோசனைக்கும் நன்றி. என்னுடைய வலைத்தளத்தில் (Blogger ) மற்றும் ஆண்ராய்ட் போனில் இருக்கும் படங்கள் மற்றும் தகவல்கள் யாவும் தானாகவே எனது ஜிமெயில் கணக்கு வழியாக கூகிளுக்கு சென்று சேர்ந்து விடுகின்றன. எனவே இதுபற்றி நான் ஏதும் சொல்வதற்கு இல்லை. எனினும் என்னதான் ஜிமெயில் பாதுகாப்பு என்று சொன்னாலும், நமது ஆவணங்கள் நம்மிடம் தனியே இருப்பதுதான் பாதுகாப்பானது.

      Delete
    2. தாத்தா சொன்னது சரி தான் ஐயா...

      சகோதரி தேனம்மை அவர்களுக்கும் நன்றி...

      Delete
    3. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. இதுவரை திருமதி. ராஜேஸ்வரிஅவர்களை
    நேரடியாகவோபுகைப்படமாகவோ கூடப்பார்த்ததில்லை
    அவர்களது தொடர் பதிவுகளைப் பார்த்துப்
    பார்க்கவேண்டும் பார்த்துப்பேசவேண்டும்
    என்கிற ஆர்வம் அதிகம் இருந்தது

    இன்று அவர்கள் இல்லையென்று ஆன பிறகு
    அவர்களது புகைப்படத்தைப் பார்த்தது
    மனதிற்கு மிகவும் வருத்தமாகவும்
    நெருடலாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரமணி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டிற்கு எப்படியும் வருவார்கள் என்றே எதிர்பார்த்தேன்.

      Delete
  3. தேனம்மை லக்ஷ்மணனின் பதிவுகளை அண்மைக்காலம் தொட்டுத்தான் படித்து வருகிறேன். இராராவின் நினைவுகளில் இன்னும் பல இருக்கிறதுஒரு முறை ஒரு அகவலை வெளியிட்டு யார் எழுதியது தெரியுமா என்று கேட்டிருந்தேன் பாரதி எழுதியது மணக்குள் விநாயகர் பற்றியது என்று டாண் என்று பின்னூட்டமிட்டார் ஏனோ தன்னைப் பற்றிய செய்திகளை மிகவும் குறைவாகவே பகிர்ந்து கொண்டார் ஒரு சமயம் யாரோ கிராமத்திலிருந்து வந்து ராமர் பட்டாபிஷேகப் படம் கேட்டார்களாம் என் முகவரியைகொடுத்து என்னிடம் கேட்கச் சொல்லி இருக்கிறார்/ என்னிடம் அவர்கள் வேண்டிய மாதிரிப் படம் இருக்கவில்லை. நான் சந்திக்க விரும்பி முடியாமல் போன பதிவர் அவர்

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B.அவர்களின் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் சொன்ன கூடுதல் தகவல்களுக்கும் நன்றி.

      Delete
  4. இராஜேஸ்வரி மேடம் அவர்கள் மறைவு மிக்க வேதனை அளிக்கிறது. நேரில் பார்த்ததில்லை எனினும், வானவில் மனிதன் பதிவுகளுக்கு வலுவான கருத்துக்களை சேர்ப்பார். அவருடைய பதிவுகளுக்காக அவர் தரும் உழைப்பை வியந்து பலமுறை பாராட்டி இருக்கிறேன். பதிவுகள்,படங்கள் இணைத்தல், புகைப்படம் எடுத்தல் என பல நுட்பங்களை கற்றுக்கொண்டு வலைப்பூவுக்கு வந்தார் என படித்திருக்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மோகன்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. அன்பின் அண்ணா..

    தங்களது பதிவிலிருந்து தான் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுடைய படத்தை - அவர்களுக்கான அஞ்சலி பதிவில் இணைத்தேன்..

    அந்த இடத்தில் - நன்றி எனக் குறிப்பிடுவதற்கு சங்கடமாக தயக்கமாக இருந்தது..

    தொடரும் பதிவில் அது பற்றி எழுதலாம் என இருந்தேன்..

    எனினும் - இச்சமயத்தில் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுடைய படத்தை வெளியிட்டதற்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  6. வணக்கம்
    ஐயா

    இராஜராஜேஸ்வரி அவர்களுடைய படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை தங்களின் வலைப்பூ வழிதான் பார்த்தேன் ஐயா.. நானும் பேச பல தடவை முயற்சி செய்தேன் தொடர்பு கிடைக்க வில்லை.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. உங்கள் பதிவில் தேனம்மை பதிவிலிருந்து அந்தப் படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததை முதலிலேயே பார்த்தேன். உங்கள் தளத்திலிருந்து நான் எடுத்ததால் உங்கள் பெயரை மட்டுமே குறிப்பிட்டன். தேனம்மை அதைத் தவறாக எண்ணாமல் பின்னூட்டத்தில் சாதாரணமாகத்தான் பதிலளித்திருந்தார். நானும் பின்னூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன்.

    :)))

    ReplyDelete
    Replies
    1. இதில் பிரச்சினை ஏதும் இல்லை. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுடைய இந்த படத்தினை முதன் முதல் வெளியிட்டது தேனம்மைதான். ஆனால் எனது வலைப்பூவில் மட்டுமே பார்த்தவர்களின் குழப்பம் தீரவே இந்த பதிவு. நண்பர் ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. நாங்கள் செய்தி பார்த்ததும் உடனே நாங்கள் எழுதிக் கொண்டிருந்த பதிவினை நிறுத்தி செய்தி பகிர்ந்ததாலும் உடன் படம் கிடைக்கவில்லை ஆதலாலும் படம் இல்லாமலேயே செய்தி மட்டும் வெளியிட்டோம். பின்னர் எங்கள் ப்ளாக் வாசித்தபோதுதான் தாங்களும் படத்துடன் பதிவிட்டிருப்பதை அறிந்தோம். அதன் பின்னர்தான் தேனம்மை அவர்களின் சாட்டர்டே கார்னரிலிருந்து என்பதும் தெரிந்து கொண்டோம். நேரில் சந்திக்க நினைத்து முடியாமல் போன பதிவர்.

    பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. வேதனை அளிக்கும் மறைவு அவருடையது...

    சாட்டர்டே ஜாலி கார்னரில் தான் நான் முதன் முதலில் அவருடைய புகைப்படம் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. அம்மையாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. புதுக்கோட்டைக்கு வருவார் என எதிர்பார்த்திருந்தோம் வராமலே விடைபெற்றது வருத்தத்தை மிகுவிக்கிறது. நிற்க.
    சகோதரி தேனம்மை மிகுந்த தன்னடக்கமும் பெருந்தன்மையும் உடையவர். இதை அவர்களைக் காரைக்குடி நிகழ்வின் நிறைவில் பார்த்ததும் உணர்ந்தேன். எனவே அவர் தங்களைத் தவறாக எண்ணமாட்டார் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  12. தேனம்மை அவர்களின் பதிவினை தற்போது மேற்கோள் காட்டி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete