Saturday 24 October 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும்


இப்போது புதுக்கோட்டையிலும், சென்ற ஆண்டு (2014) மதுரையிலும் நடந்த வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு சென்று வந்துள்ளேன். இவைகளுக்கு முன்னர் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற இந்த சந்திப்பு விழாக்களுக்கு நான் சென்றதில்லை. ஒவ்வொரு விழா முடிவிலும், விழா பற்றிய பதிவு எழுதிய நண்பர்களும், அவற்றிற்கு பின்னூட்டம் எழுதிய அன்பர்களும், சொல்லும் ஒரு பொதுக் கருத்து என்னவெனில், “நிறைய பேரோடு பேச வேண்டும் என்று வந்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது” என்பதுதான்.

நானும் புதுக்கோட்டை சந்திப்பிற்குப்பின் எழுதிய, எனது பதிவினில்,

“ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், அய்யா கவிஞர்  ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது மேற்பார்வையில் , நல்ல ஒருங்கிணைப்பில், நல்ல திட்டமிடலின் அடிப்படையில் சிறப்பாக எந்தவித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற்றன.”  

என்று பாராட்டி எழுதினேன். அந்த பதிவினில்,  ஜோதிஜி (திருப்பூர்) அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியில், 

”உங்கள் வாசகர் வட்டம் பெரியது. அவர்களில் நானும் ஒருவன். உங்களோடு நேற்று புதுக்கோட்டையில், நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் பேச முடியாமல் செய்து விட்டது. வேறு எந்த நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல், வெறும் வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் மட்டுமே வைத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும் போலிருக்கிறது”

என்று எழுதினேன். இதனைப் படித்த நமது நா. முத்துநிலவன் அய்யா அவர்கள்.

“எப்போது வைப்போம் சொல்லுங்கள் - எனக்கும் இப்படி ஒரு கருத்து உண்டு(ஏதாவது சுற்றுலாத் தளத்தில் எல்லாரும் சந்தித்தால்தான் உண்டு, நாள் இடம் பற்றிப் பேசுவோமா? சென்னை? புத்தகத் திருவிழாவுக்கும் வருவது மாதிரி ஒரு தேதியாக இருந்தால் நல்லது? புத்தகத்திருவிழாவின் முதல் ஞாயிறு?) அல்லது ஊட்டியில் மேமாதம்...? இதுபற்றி நீங்கள் ஒரு பதிவிடலாம் அய்யா”

என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் எதிரொலியே இந்த ஆதங்கப் பதிவு.

பொதுவாகவே ஆங்காங்கே நடைபெறும் வலைப்பதிவர்களின் சிறிய சந்திப்புகள் இந்த ஆதங்கம் இல்லாமல் செய்து விடுகின்றன. இதில் உள்ள மனநிறைவு, கலந்துரையாடல் (Discussion) குறித்து அவரவர் பதிவுகளில் எதிரொலிக்கக் காண்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பல உறவினர்களைச் சந்திக்கிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவர்களோடு நீண்ட நேரம் அளவளாவுகிறோம். யாரும் கட்டுப் படுத்துவதில்லை. ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால்  யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. இதுவே இந்த ஆதங்கத்திற்கு காரணம். இதை நீக்க ஒரே வழி, இனி வரும் நிகழ்ச்சிகளில், ”வலைப்பதிவர்கள் சந்திப்பு” என்ற தலைப்பிற்கேற்ப கலந்துரையாடல் மட்டுமே நிகழ்த்துவது. அல்லது மேனாட்டுப் பதிவர்கள் நடத்துவது போன்று இரண்டு நாள் நிகழ்ச்சிகள்; அல்லது காலையில் கலந்துரையாடல், உணவு இடைவேளைக்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம்.

அண்மையில் புதுக்கோட்டையில் (11.10.2015 ஞாயிறு அன்று) நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை யூடியூப்பில் கண்டு களிக்க கீழே உள்ள, இணைய முகவரிகளைச் சொடுக்குங்கள் (CLICK)

46 comments:

  1. இந்த யோசனைகளும் நன்றாகத் தான் உள்ளது ஐயா... இரண்டு நாள் நிகழ்ச்சிகள் என்றால் இது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள் (கீழே பின்னூட்டத்தில்) சொல்வது போல
      ”இரண்டு நாள் நிகழ்வு என்றால் பலர் வருவதற்கு யோசிக்கலாம். ஒரு நாள் நடந்த நிகழ்விலே பலர் வரவில்லை.” என்ற கருத்தினையும் யோசனை செய்ய வேண்டி இருக்கிறது.

      Delete
  2. தங்களின் இப்பதிவு நமது பொதுவான தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா! நடந்து முடிந்த விழாவினைப் பற்றி , நான் குறை சொல்லுவதாக யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதால், இந்த கட்டுரையை வெளியிடுவதில் தயக்கமாவே இருந்தேன். அய்யா முத்துநிலவன் அவர்களே ஒரு பதிவை எழுதுங்கள் என்றபடியினால், மற்றவர்கள் மனதிலும் மறைந்து கிடக்கும் மனக் கருத்துக்களை வெளிக் கொணரவே இதை எழுதினேன். அன்பர்கள் மன்னிக்கவும்.

      Delete
  3. >>> ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால் யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. <<<

    இதைத்தான் நானும் நினத்திருந்தேன்..

    ஆனால் - இதுவரை எந்த பதிவர் சந்திப்பு விழாவிலும் கலந்து கொண்டதில்லை.. ஆதலால் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாமல் போயிற்று..

    இதுவும் கூட, நடந்து முடிந்து விட்ட - (!) விழாவின் - தொடர்பான கருத்துரை எனக் கொள்ள வேண்டாம்..

    அண்ணா தமிழ் இளங்கோ அவர்களின் மீதுள்ள பற்றுதலின் காரணமாகத் தான்!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை. செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இங்கே நான் சொன்ன கருத்து, பொதுவானது என்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே யோசனைகள் என்ற பெயரில் பலரும் சொன்ன கருத்துதான். யாருக்கும் வருத்தம் இருக்காது என்று நினைக்கிறேன்.

      Delete
  4. இரண்டு நாள் விழா என்பது நல்ல யோசனைதான். நானும் எனது பதிவில் இதைப் பற்றி எழுதியிருந்தேன். அடுத்தமுறை முதல் நாளே போய்விட்டால் ஓரளவு பேசமுடியும் என்று நினைக்கிறேன். பார்ப்போம். நேரம் எப்படி வைக்கிறது என்று..?
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. இதுவுமொரு நல்ல யோசனைதான் ஐயா...!!!

    ReplyDelete
    Replies
    1. ‘நிஜாம் பக்கம்’ மயிலாடுதுறை முகம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. அன்புள்ள அய்யா,

    தாங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இரண்டு நாள் நிகழ்வு என்றால் பலர் வருவதற்கு யோசிக்கலாம். ஒரு நாள் நடந்த நிகழ்விலே பலர் வரவில்லை. மதியம் உணவு இடைவேளை இரண்டு மணி நேரமாக ஒதுக்கினால் பலரை சந்தித்துப் பேசுவதற்குரிய நேரம் கிடைக்கும்.

    நன்றி.
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. மணவை ஆசிரியர் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

      Delete
    2. தமிழ் இளங்கோ சார்... எதேச்சையாக இந்தப் பதிவுக்கு வர நேரிட்டது. 1 நாள் சந்தித்தாலும், (உதாரணமா 30 பேர் இருக்காங்கன்னா), அதில் 6-7 குழுவாக தனித்துப் பேசிக்கொண்டிருப்பது தவிர்க்க இயலாது (இதுவே 100-200 பேர்னா இதனைக் கட்டுப்படுத்த இயலாது). இதற்கு என்ன தீர்வு என்றால்,

      கணிணி கான்ஃபரன்ஸ்லாம் நடக்கும்போது, 2 மணி நேரம் Network Lunch என்று விட்டுவிடுவார்கள் (1 மணி நேரம் லஞ்ச் நேரத்துக்குப் பதிலாக). இங்கு 3 மணி நேரம் நெட்வர்க் உணவு இடைவேளை என்று விட்டால், சாப்பிட்டுக்கொண்டே ஒவ்வொருவரிடமும் (அல்லது தாங்கள் சந்திக்கவேண்டியவரிடம்) அறிமுகப்படுத்திக்கொள்ள முடியும். இதையே மாலையில் வைத்தால், நிறையபேர் கிளம்பிவிடுவார்கள்.

      நிகழ்ச்சியே இல்லாமல், வெறும்ன சந்தித்துப் பேசுவது என்றால், அது முழுத் திட்டத்தையும் பாழ்படுத்திவிடும். குழுக் குழுவா பேசிக்கிட்டிருப்பாங்க. சும்மா அறிமுகம் செஞ்சுக்கலாம்னு நினைக்கறவங்க, அம்போன்னு பாத்துக்கிட்டிருப்பாங்க.

      Delete
    3. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இப்போது கூட - 2018 இல் - புதுக்கோட்டையில் மீண்டும் வலைப்பதிவர் சந்திப்பு நடத்துவதற்கான கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

      Delete
  7. இதற்காக முதல் நாளே நான் சென்றேன் ,பத்து பேருடன் பேசி மகிழ முடிந்தது ,நீங்களும் வந்திருக்கலாமே :)

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜீ அவர்களே நீங்கள் குறிப்பிட்டது போல், நான், முதல்நாள் காலையில் இருந்து மாலை வரை புதுக்கோட்டையில் இருந்து விட்டு மறுநாள் புதுக்கோட்டைக்கு வருவதாகத்தான் எனது திட்டம் இருந்தது. ஆனால், முதல்நாள் மாலை ஒரு சிறிய வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, தான் தங்கியிருந்த ஹோட்டலில் அய்யா ஜீ.எம்.பி அவர்கள் செய்து இருந்தார். அங்கு செல்ல வேண்டி இருந்த படியினால், நான் முதல்நாள் வரவில்லை.

      Delete
  8. சிறந்த எண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்
    நல்ல தகவல்
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. விழாக்களை விட ஒருவடோருவர் கலந்துரையாடுவதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. தங்களின் கருத்து உண்மைதான் ஐயா
    எனக்கும் அந்த ஆதங்கம் இருக்கிறது
    திருப்பூர் ஜோதிஜி அவர்களைக் குறிப்பிட்டீர்கள்
    அவரை வலைப் பதிவர் சந்திப்பில் நேராக பார்க்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது
    அன்பின் சீனா அவர்களுக்கு எனது நூலினை வழங்க இயலாமல் போய்விட்டது
    ஒவ்வொருவரும் சந்தித்து மகிழ காலைப் பொழுதினையும்
    நிகழ்ச்சிகளுக்காக பிற்பகலையும்ஒதுக்கினால் நல்லதுதான்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. நல்ல யோசனை. பலரைப் பார்த்தோம் என்ற மகிழ்ச்சி. ஆனால் அனைவரிடமும் பேச முடிந்ததா? இல்லையே. அது ஒரு குறையாகவே எனக்குத் தோன்றியது. அதனை நிறைவு செய்ய உங்களின் கருத்து மிகவும் உதவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களே, அரங்கத்தில் நான் உங்கள் அருகில் இருந்தும் நிறையவே பேச இயலாமல் போய் விட்டது.

      Delete
  12. நல்ல ஐடியா. கவிஞர்கள் சந்திப்பு என்று செப்டம்பரில் நடக்கும். ஒவ்வொரு வருட மாநாட்டிலும் பதிவர்கள் சந்திப்பு என மதியம் முழுவதும் கலந்துரையாடல் வைக்கலாம். :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. வணக்கம் நண்பரே தாமத வருகைக்கு மன்னிக்க நல்லதொரு கோரிக்கை நான் கடந்த வருட மதுரை பதிவர் சந்திப்பு பற்றிய எனது பதிவில் இதையே முதலில் வலியுருத்தினேன் இதற்கான ஆயத்த பணிகளை உடனே செயலாக்குங்கள் நண்பரே..
    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் பழைய பதிவை சென்று பார்க்கிறேன்.

      Delete
  14. வலைப்பதிவர் சந்திப்புக்கு வருகைக் கட்டணம் வசூலிக்க வேண்டும் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா. சென்னையில் என்றால் எனக்கு சௌகர்யமாக இருக்கும். எனக்கும் எல்லா பதிவர்களையும் சந்தித்து உரையாட ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் கவிப்ரியன் வேலூர் அவர்களது கருத்தை நானும் அப்படியே வழி மொழிகின்றேன். அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு எங்கு, எப்பொழுது, யார் பொறுப்பேற்று நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

      Delete
  16. அய்யா வணக்கம்.வலைப் பதிவர் சந்திப்பை மட்டும் தனியாக ஒரு சுற்றுலாத் தலத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ஆசிரியர் மகாசுந்தர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ஆகா என் மனதில் இருந்ததை நீங்கள் முன்மொழிந்து விட்டீர்கள் ...
    நிகழ்வு இப்படி இருந்தால் நலம்
    சுய அறிமுகம்...
    நான் மதிக்கும் பின்னூட்டக் காரார் (ஒவ்வொரு பதிவரும் சொன்னால் நல்லது)
    என அந்த சந்திப்பையும் ஒரு வரையறைக்குள்ளே வைக்க வேண்டும்..

    பொதுவாக எல்லாரும் இருக்கும் இடத்தில் பெரியார் குறித்து பேச முடிவதில்லை
    தலையின் பெயரை சொன்னாலே அனல் பறக்கிறது ..
    சில பக்குவமான பேச்சாளர்களும் இருக்கிறார்கள்தான்
    இதில் அம்பேத்கார் குறித்து ஜோதி ராவ் புலே குறித்தெல்லாம் எழுதியிருக்கும் கரந்தை அண்ணா பக்குவமாய் பேசுவார்தான் ... என்போன்றோர்?
    தடாலடி பேச்சு ...என் பாணி ...
    எனவே பதிவர் குழுக்களை அவர்களின் பதிவுப் பொருள் வகையில் ஒன்றிணைத்து அவர்களுக்கான கூட்டங்களை ஏற்படுத்தவது நிறைவாகவும் வீச்சுடனும் இருக்கும்..
    யார் மனமும் புண்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையும் எனக்கு உண்டு...
    ராஜாஜி நீட்டிய திருநீரை பெற்றுக் கொண்டவர் பெரியார் ...
    ஆனால் மதவாதிகளிடம் அவருடைய ஆண்மையை பெருந்தன்மையை எதிர்பார்ப்பது தவறு..
    இப்போ சொல்லுங்க ...
    இவனைக் கூப்பிட்டால் என்ன ஆகும் என்ற மைன்ட் வாய்ஸ் கேட்குதே...
    மெய்தானா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் மனதின் குரல் (Mind Voice) எப்படி இருந்த போதிலும் வலைப்பதிவர்கள் என்ற முறையில் சந்தித்துக் கொள்வோம்; கலந்துரையாடல் செய்வோம். கருத்துப் பிணக்குகளைத் தவிர்க்க குழு கலந்துரையாடல் (Group Discussion) நன்றே.

      Delete
  19. இது அருமையான யோசனை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  20. அருமையான கருத்து. வலைப்பதிவர் சந்திப்பை இரண்டு நாட்கள் வைத்தால் எல்லோராலும் பல பணிகளுக்கிடையில் இரண்டு நாட்கள் செலவிட முடியுமா என்பது ஐயமே. எனவே இதை வலைப்பதிவர் கலந்துரையாடல் என பெயரிட்டு தனியாக ஒரு நாளில் ஒரு சுற்றுலா தலத்திலோ அல்லது திருச்சி போன்ற இதுவரை வலைப்பதிவர் சந்திப்பு நடக்காத இடத்திலோ நடத்தலாம்.

    ReplyDelete
  21. உங்கள் ஆலோசனை வரவேற்கத் தக்கதே!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  22. நல்ல யோசனை. இரண்டு நாள் என்பதில் பலருக்கும் கலந்து கொள்ள தயக்கம் இருக்கும். ஒரு நாள் விழாவிலேயே மதிய உணவிற்குப் பிறகு வந்திருந்தவர்கள் சிலர் சென்றுவிட்டதையும் நாம் பார்க்க வேண்டும். பெரிய அளவில் நடத்தும்போது இப்படி மேடைப் பேச்சை மட்டுமே கேட்டு, ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்வது இயலாமல் போய் விடுகிறது. சிறு சிறு குழுக்களாக கூடி பேசி மகிழ்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் நடுவே, நானும், சுப்பு தாத்தா, ரமணி ஜி மற்றும் கடல் பயணங்கள் சுரேஷ் ஆகிய நால்வரும், சந்திப்பின் போதே வெளியே வந்து பக்கத்து உணவகத்தில் காப்பி குடித்தபடியே அளவளாவியது இன்னமும் மனதில் பசுமையாய்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மற்றும் அவரது அனுபவ பகிர்வுக்கும் நன்றி.

      Delete