Sunday 27 September 2015

வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும்



இப்போது பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களிலும், சனி அல்லது ஞாயிறு பத்திரிகைகளின் இடையில் வைக்கப்படும் விளம்பர நோட்டீசுகளிலும் மற்றும் சுவரொட்டிகளிலும் IBPS என்ற பெயர் அடிக்கடி வருவதைக் காணலாம்

IBPS என்றால்?

மத்திய அரசு, மத்திய அரசு சார்ந்த மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியில் சேருவதற்கு இந்த IBPS நடத்தும் CWE எனப்படும் COMMON WRITTEN EXAMINATION இல் தேர்வு ஆகி இருக்க வேண்டும். INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION என்பதன் சுருக்கமே IBPS என்பது. இது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாட்களைத் தேர்வுசெய்யும் தேர்வுகளை நடத்தும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, மத்திய நிதி அமைச்சகம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க் மேனேஜ்மெண்ட், பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதன் ஆட்சிக்குழுவில் இருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் பொது நிறுவனம் ஆகும்.

பயிற்சி வகுப்புகள்:

இப்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் IBPS தேர்வு சம்பந்தமாக மட்டுமல்லாது, I.A.S., U.P.S.C, மற்றும் T.N.P.S.C போன்ற தேர்வுகளுக்காவும் பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. பயிற்சிக் கட்டணமாக ஆயிரக் கணக்கில் வசூலிக்கின்றனர். வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே அவற்றில் சேர முடியும் . சில தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை அமைப்புகளும் இலவச பயிற்சி வகுப்புகள் தருகின்றன.

நான் இணைந்து  இருக்கும்  ஒரு அறக்கட்டளை சார்பாக . இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளை 12.09.2015 சனிக்கிழமை முதல் நடத்தி வருகின்றனர். பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிகுந்த வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் நலன் கருதி பயிற்சிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.

எனது பணி:

இந்த அறக்கட்டளைக்கான சில இணையதள (INTERNET) ஒருங்கிணைப்பு பணிகளை நான் செய்து தருவதாலும், வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் என்பதாலும்,  என்னையும் வகுப்புகள் எடுக்கச் சொன்னார்கள். ஆனால் இது மாதிரியான பயிற்சி வகுப்புகள் எடுத்து எனக்கு பழக்கம் இல்லாததால் ஒத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும்  அவ்வப்போது இணையதளத்திருந்து  (INTERNET) இலவச தரவிறக்கம் ( FREE DOWNLOAD) செய்யப்பட்ட கையேடுகளை (Materials) எடுத்து தருவதாக ஒத்துக் கொண்டேன். நேற்று மாணவர்களுக்கு தரப்பட்ட, என்னால் தொகுக்கப்பட்ட தகவல் தொகுப்பு கீழே (எல்லோருக்கும் பயன்படும்)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 
                                    அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு .1

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளைத் தெரிந்து கொள்ள, கீழே உள்ள இணையதளங்கள் சென்று பார்க்கவும்.

EMPLOYMENT NEWS
இந்த இணையதளங்கள் வழியாக அரசு மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பயனுள்ள கட்டுரைகளையும், அரசு மற்றும் பொதுத்துறை சார்ந்த  போட்டித் தேர்வு முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

E GOVT JOBS:
http://egovtjobs.in  இந்த இணையதளம் வழியாக அரசு, பொதுத்துறை மட்டுமன்றி TCS, MAHINDRA போன்ற தனியார் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். Jobs By State, Jobs By Qualification, Jobs By Types மற்றும் IT Jobs என்பது இந்த இணையதளத்தின் சிறப்பம்சம் ஆகும்.

NAUKRI1234 & IBPS EXAM GURU  
இந்த இணையதளங்கள் வழியாகவும் அரசு, பொதுத்துறை மட்டுமன்றி, தனியார் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் IBPS CLERK, IBPS PO, SBI CLERK, SBI PO போன்ற போட்டித் தேர்வுகளுக்கான Model papers, Practice Set Papers மற்றும் Current Affairs போன்றவற்றை உங்களது கணினியில் தரவிறக்கம் (Download) செய்து கொண்டு உங்கள் வீட்டிலேயே பயிற்சிகள் செய்து கொண்டு தயாராகலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு இணையதளங்கள்:

NATIONAL PORTAL OF INDIA

UNION PUBLIC SERVICE COMMISSION

ALL INDIA CIVIL SERVICE COACHING CENTRE, CHENNAI.28

STAFF SELECTION COMMISSION, SOUTHERN REGION, CHENNAI

INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION

RAILWAY RECRUITMENT BOARD, CHENNAI

TAMILNADU GOVERNMENT PORTAL

TAMILNADU PUBLIC SERVICE COMMISSION, CHENNAI

அன்புடன் தி.தமிழ் இளங்கோ
வலைப்பதிவு - எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL 
http://tthamizhelango.blogspot.com Cell:  

                                                                      xxxxxxxxxxxxxxx
 
நமது வலைப்பதிவர் சகோதரி அபயா அருணா (நினைவுகள்) அவர்கள் வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி  சில இணையதள இணைப்புகள் உள்ள வலைப்பதிவு ஒன்றை தனது வலைத்தளத்தில் http://abayaaruna.blogspot.in/2015/09/blog-post_19.html  எழுதியுள்ளார் என்பதனையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


                          

27 comments:

  1. Replies
    1. அய்யா G.M.B அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  2. நல்லதொரு சேவை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. என் பிளாக் பற்றி மாணவர்களுக்கு சொன்னது பற்றி நன்றி.

    ஃ பேஸ்புக்கில் ibps exam guideஎன்ற தலைப்பிலும் ஏராளமான மெடீரியல் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. என் மகளும் வங்கித்தேர்வுக்காக படித்து வருகிறார். அவருக்கு இந்த இணைப்புகளும் நூல்களும் மிகவும் உதவிகரமாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு. பலருக்கும் இந்த தகவல்கள் பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களுக்கு நன்றி..

      Delete
  6. உபயோகமான தகவல்களை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும்...
    இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் தங்கள் பணி இருக்கிறது...தொடரட்டும்... பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.

    ‘வேலையில் இருப்பவர்களுக்கு
    சும்மா இருப்பதே சுகம்...
    வேலையில் இல்லாதவர்களுக்கு
    சும்மா இருப்பதே சோகம்’
    கவிஞர் மு.மேத்தா.

    நன்றி.
    த.ம.2.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி!

      Delete
  8. ஐயா தாங்கள் இந்த பயிற்சி வகுப்பின் முகவரி தர இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி! அறக்கட்டளையின் பெயர் “சித்தார்த்தா அறக்கட்டளை”. இது திருச்சி - திண்டுக்கல் சாலையில் தீரன் நகரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை பின்புறம், (கருமண்டபம் அருகே) அமைந்துள்ளது. திருச்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமே சென்று வர சவுகரியமானது. விலாசம் : மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009.
      பயிற்சி ஒருங்கிணப்பாளர் சி.இராஜாமணி M.Sc.,CAIIB.,
      Indian Overseas Bank, Chief Manager (Retd) - Cell - 9751666600

      Delete
  9. அருமை அருமை! ஐயா! எல்லோருக்கும் மிகவும் பயன்படும்! நல்லதொரு தொகுப்புப் பதிவு...!!

    ReplyDelete
    Replies
    1. தில்லைக்கது V. துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி!

      Delete
  10. Replies
    1. சகோதரர் ’எங்கள் Blog’ ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. அருமையான சேவை! சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்னை கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. வீட்டில் மகளின் பார்வைக்குப் பயன்படும் முக்கியமான பதிவு இது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்த சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. பயன்மிகு பதிவு!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  14. I have read your article, it is very informative and helpful for me.I admire the valuable information you offer in your articles. Thanks for posting it..

    Amazon Cashback offers
    Flipkart Cashback Offers

    ReplyDelete