இப்போது அடிக்கடி ஏதாவது ஒரு விண்ணப்பத்தை (APPLICATION
FORM)
பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. நமக்காக இல்லாவிட்டாலும் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ உதவி செய்யும்போதும் நாம் இதை செய்ய வேண்டியுள்ளது. வாக்காளர் அட்டை, ஆதர் அட்டை, ஏடிஎம் அட்டை, கிரெடிட் அட்டை, வருமானவரி அட்டை என்று ஏகப்பட்ட
அட்டைகள். எல்லாவற்றிற்கும் நமது பிறந்த தேதியைக் கேட்பார்கள். அதில் ஒன்றும்
பிரச்சினையில்லை. எழுதிவிடலாம். ஆனால் சில இடங்களில் ” உங்கள் வயது ( AGE )” என்று கேட்டு
வைப்பார்கள். அப்போது சிலருக்கு முடிந்த ஆண்டுகளை கணக்கு எடுத்துக் கொள்வதா அல்லது
நடப்பு ஆண்டா என்று சந்தேகம் வந்துவிடும். (சட்டப்படி நமக்கு முழுமை பெற்ற
ஆண்டுகளைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும
ஓட்டு போடும் வயது: 18 - நிரம்பியவர்
திருமண வயது: ஆண் – 21 வயது நிரம்பியவர் /பெண் – 18 வயது நிரம்பியவர்
மூத்த குடிமகன் (SENIOR CITIZEN) என்றால் 60 வயது – நிரம்பியவர்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்னோடு பணிபுரிந்த நண்பர்
ஒருவர், யாராவது அவரது வய்தைக் கேட்டால் எப்போதும் நாற்பது என்றுதான் சொல்வார்.
அவருக்கு அப்போது வயது ஐம்பது. ஒல்லியாக இருப்பதால் தலைக்கு சாயம் பூசிக் கொண்டு சின்ன
பையன் போன்று இருப்பார்.
நான் அடிக்கடி செல்லும் சலூன்காரர். வங்கியில் ஒரு கணக்கு
தொடங்க
வேண்டும் என்றும் என்னை அறிமுகம் செய்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
வழக்கம் போல விண்ணப்ப பாரத்தில் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து விட்டு அவருடைய
பிறந்த தேதியைக் கேட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டு வாக்காளர் அட்டையைக்
காட்டினார். அதில் 2006 ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று அவரது வயது என்ன என்று
இருந்தது. பிறந்த தேதியையும் வயதையும் கணக்கிட்டு வந்த வேலையை நிறைவு செய்தோம்.
பேப்பர் பென்சிலை வைத்துக் கொண்டு கணக்கு போடுவதை விட
, மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள, இப்போது இண்டர்நெட்டில் குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று ந்மது பிறந்த தேதியைத்
தந்தால் போதும், நமது எத்தனை வயது, மாதம், வாரம், நாள், நிமிஷம் என்ற விவரம் வந்துவிடும்.
கீழே உள்ள இணைய தளம் சென்று பார்க்கவும்.
<iframe
src="http://easycalculation.com/date-day/embedded_age-calculator.php"
width="400" height="500"
frameborder="0"></iframe>
மேலும் அவர்கள் தந்துள்ள CODE – இனை நமது
இணைய தளத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
Age calculator
கொசுறு செய்தி:
இந்த தளத்தின் முதற்பக்கத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய விவரங்கள் ( CAR PARKING - உட்பட) உள்ளன.
( PHOTOS THANKS
TO “ GOOGLE ” )
உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteOne may also go to
ReplyDeletewww.deathclock.com
for approximately finding out
how long one is expected to live.
subbu thatha.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.com
i have written as desired by u.
in the latter blog
The tamil font is not working on and off.
நல்ல தகவல் ! எனக்கு, இதில் அடிக்கடி குழப்பம் வரும்!
ReplyDeleteநன்றி
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteவங்கி மூத்த அதிகாரி அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > sury Siva said...
ReplyDeleteசுப்பு தாத்தாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்கள் பதிவில் எனது கருத்துரையை எழுதி இருக்கிறேன்.
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteஉங்களுக்கு ஏற்பட்டது போன்றே, எனக்கு 59 வயது முடிந்து 60 தொடங்கி விட்டதாக சென்றமாதம் எனது பிறந்த நாளன்று (பிறந்த தேதி: 01-03-1955) ஒரு குழப்ப்ம் வந்தது. இந்த இணையதளம் சென்று எனது வயதின் குழப்பத்தை ( 58 முடிந்து 59 தொடங்கி உள்ளது) தெளிந்து கொண்டேன். புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!
சரியான தகவலாய் இருக்க முடியாது காரணம் பஞ்சாங்கம் பலதுண்டே?
ReplyDelete
ReplyDeleteவயது குறித்து அறிந்து கொள்ள சரியான தளம்.ராசி நட்சத்திரம் என்று எதிலுமே நான் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. பகிர்வுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள். இணைப்புகளுக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteமறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete// சரியான தகவலாய் இருக்க முடியாது காரணம் பஞ்சாங்கம் பலதுண்டே? //
பஞ்சாங்கம் பற்றிய செய்திகள் எப்படி இருந்தாலும், வயதைக் கணக்கிட்டுச் சொன்ன வலைத்தளம் தகவல் துல்லியமானதுதான்.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// வயது குறித்து அறிந்து கொள்ள சரியான தளம்.ராசி நட்சத்திரம் என்று எதிலுமே நான் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. பகிர்வுக்கு நன்றி. //
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்பு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பயனுள்ள தகவல்களுக்கும் இணைப்புகளுக்கும்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
நல்லதொரு தகவல்.... நன்றி....
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் அய்யா. நன்றி
ReplyDeleteமறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரரின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteகரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteமறுமொழி > கோவை2தில்லி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
உங்கள் வயது என்ன? தலைப்பைப் பார்த்தவுடன் அப்படியே போய்விடலாம் என்று பார்த்தேன். ஹி...ஹி...!
ReplyDeleteபடித்த பின் தான் பயனுள்ள தகவல் என்று தெரிந்தது.
தகவலுக்கு நன்றி!
மறுமொழி> Ranjani Narayanan said...
ReplyDelete// உங்கள் வயது என்ன? தலைப்பைப் பார்த்தவுடன் அப்படியே போய்விடலாம் என்று பார்த்தேன். ஹி...ஹி...!//
இதுவும் நல்லதுக்குத்தான்! இனிமேல் பதிவுகளுக்கு தலைப்பை வைக்கும்போது கவனமாக இருப்பேன்.
மறுமொழி> மாதேவி said..
ReplyDelete.
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!