Wednesday 27 February 2013

திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்.



திருச்சியிலுள்ள மூத்த வலைப்பதிவாளர் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு ஆண்டுக்கு முன் எனக்கு வலைப்பதிவின் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அன்று முதல் அவரை நேரில்  பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் அவர் தனக்கு கிடைத்த வலைப்பதிவு விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது  எனக்கும் தருவார். அவர் அவ்வாறு தந்த விருதுகளை ஒரு கௌரவமாகவே நான் நினைக்கிறேன். மேலும் நான் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்துக்களை தந்து உற்சாகமூட்டுவார். நானும் அவர் பதிவுகள் சென்று கருத்துரை எழுதுவேன்.

அவரும் திருச்சியில்தான் (வடக்கு ஆண்டார் தெரு) இருக்கிறார். நானும் திருச்சியில்தான் (கருணாநிதி நகர்) இருக்கிறேன். இப்படியாக நாங்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தும், என்ன காரணமோ ஒரு ஆண்டு காலமாக அவரை சந்திக்க சந்தர்ப்பமே அமையவில்லை. கோப்பெருஞ்சோழன் பிராந்தையார் நட்பு போல ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே நட்பு. ஆனாலும் இணையத்தின் வழியே மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவுகள் மூலமாகவே தொடர்பு இழைகள் சென்றன. இடையிடையே ஓரிருமுறைதான் செல் போனில் பேசிக் கொண்டோம்.

ஒருமுறை சென்ற ஆண்டு (2012) டிசம்பர் மாதம் VGK அவர்கள் குடியிருக்கும் வடக்கு ஆண்டார் தெருவில் இருக்கும் எனது ஆசிரியர் ஒருவரைப் பார்க்க மாலை வேளை சென்றேன். அவர்களிடம் இவரைப் பற்றி சொன்னதும் கோபால கிருஷ்ணனா? BHEL – இல் பணிபுரிந்தவர்தானே? நன்றாகத் தெரியுமே? எங்கள் வீட்டிற்கு எதிரில்தான் முன்பு இருந்தார்கள். இப்போது புதிதாக உள்ள அபார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள் என்று அவர் இருக்கும் குடியிருப்பைச் சொன்னார்கள். ஆனால் எனக்கு ஆசிரியர் வீட்டிலேயே நேரம் ஆகி விட்டபடியினால், அன்றும் VGK அவர்களை என்னால் சந்திக்க இயலவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல் நலமில்லை என்று அவரது பதிவு ஒன்றில் ஒருவர் எழுதிய தகவல் அறிந்து இன்று எப்படிம் சந்தித்தே ஆக வேண்டும் “ என்ற வேகத்துடன் நேற்று முன்தினம் (25.02.2013 திங்கள்) மாலை அவர் இல்லம் சென்றேன். நான் சென்ற நேரம் மின்வெட்டு நேரம், எனவே தெப்பக்குளம் கடைவீதி பக்கம் ஒரு அரைமணி நேரம் சென்றுவிட்டு மின்சாரம் வந்ததும் சென்றேன்.

சிவசக்தி டவர்ஸ்என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அவரது “பவித்ராலயா இருந்தது.. என்னை வரவேற்க ரொம்பவும் சந்தோஷத்துடன் கீழே வந்து கொண்டிருந்தார். அதற்குள் நானே அவரது இல்லம் சென்றுவிட்டேன். ( நான் முடிந்தவரை லிப்டில் செல்வதை தவிர்த்து விடுவேன்) அப்போதுதான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக பார்க்கிறோம். வீட்டின் உள்ளே இருந்த அவரது மனைவியும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். நான் அவரது நலனையும் குடும்பத்தார் நலனையும் விசாரித்தேன். அதன் பின்னர் நானும் VGK அவர்களும் பொதுவாகப் பேசினோம். வறுத்த முந்திரியும் காபியும் தந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டிற்கு அவரது விருந்தாளிகள் வந்தனர். என்வே நானே அவரிடம் இன்னொருநாள் சந்திப்போம் என்று விடைபெற்றுக் கொண்டேன். இன்னொருநாள் சந்திக்கும் போது அவருடன் படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

( யோவ் இதெல்லாம் யார் கேட்டது? என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. யார் யாரோ என்னவெல்லாமோ எழுதுகிறார்கள். அதற்கு இது தேவலாம் என்று நினைக்கிறேன். )

அவரது குடியிருப்பை விட்டு வெளியில் வந்தபோது நந்திகோயில் தெருவில் உற்சவர்களின் ஊர்வலம். அப்போது என்னிடம் கைவசம் கேமரா இல்லை. எனவே செல்போனில் படம் எடுத்துக் கொண்டேன். செல்போன் கேமராவில் படம் தெளிவாக கிடைக்கவில்லை.








39 comments:

  1. அருமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்...

    .பகிர்வுக்ளுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. தெப்பக்குளம் திருவிழா நேரத்தில் அழகாக இருந்திருக்கும்.

    ஐயாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது. நல்ல சந்திப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நண்பர் ஜன்னல் வழியாகவே திருச்சியை பற்றிய அனைத்துப் பகுதிகளையும் காட்டி இருப்பாரே

    ReplyDelete
  4. இதுவும் பதிவர்கள் சந்திப்புதான். உங்களது வர்ணனை திரு VGK அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்றது போல் இருந்தது.

    ReplyDelete
  5. இனிமையான சந்திப்பு...

    ஜன்னலைப் பற்றி எந்த தகவலும் இல்லையே...

    ஐயாவிடம் நிறைய இருந்ததே... வறுத்த முந்திரி மட்டும் தானா...? ஹிஹி...

    ReplyDelete
  6. நல்லதொரு பதிவு. சிலேகித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
    எங்க பாட்டி வீடும் திருச்சி காஜா பேட்டையில் தான் இருந்தது. எனது பால்ய காலத்தில் திருச்சிதான் எனது சொர்க்க வாசல்.

    ReplyDelete
  7. கோபு ஸாரின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று எழுதவில்லையே!

    அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும்.

    இன்னொரு விஷயம்:
    நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது நாங்கள் வெளியூர் போயிருந்தோம். அதனால் தொடர்ந்து எல்லா நாட்களும் படிக்க முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // அருமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்...
    .பகிர்வுக்ளுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள் //

    சகோதரியின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > Sasi Kala said..
    .
    // தெப்பக்குளம் திருவிழா நேரத்தில் அழகாக இருந்திருக்கும்.
    ஐயாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது. நல்ல சந்திப்பு வாழ்த்துக்கள். //

    திருச்சி தெப்பக்குளம் சுற்றி உள்ள கடைவீதிகளில் எப்போதும் திருவிழா சூழல்தான். VGK அவர்கள் நலமே! அவரை சாதாரணமாகத்தான் போய்ப் பார்த்தேன். சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    // நண்பர் ஜன்னல் வழியாகவே திருச்சியை பற்றிய அனைத்துப் பகுதிகளையும் காட்டி இருப்பாரே //

    ஆமாம் கவிஞரே! அந்த மாலை இருட்டிலும் ஜன்னல் வழியே தெரிந்த திருச்சி மலைக்கோட்டையையும் தனது பதிவில் சொன்ன பஜ்ஜி கடையையும் ( அப்போது கடை மூடி இருந்தது) ஒரு குழந்தையின் குதூகலத்தோடு காண்பித்தார். நான் எனது பதிவில் சொல்லவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  11. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // இதுவும் பதிவர்கள் சந்திப்புதான். உங்களது வர்ணனை திரு VGK அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்றது போல் இருந்தது. //

    திருச்சியிலும் ஒரு பதிவர்கள் சந்திப்பை நடத்த வேண்டியதுதான். தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  12. அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,

    வணக்கம் ஐயா,

    தங்களை25.02.2013 இரவு 8 மணி சுமாருக்கு திடீரென்று சந்திப்பேன் என நானே நினைக்கவில்லை ஐயா.

    தங்களின் அன்பான வருகை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது ஐயா.

    அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் என் வீட்டில் இன்வெட்டர் மூலம் ஒரு சில விளக்குகளும் மின்விசிறிகளும் இயங்கி வந்தன.

    நீங்கள் வருகை தந்திருப்பதாகவும், எங்கள் கட்டட வாசலில் நிற்பதாகவும் எனக்கு போன் செய்தபோது சரியாக இரவு மணி எட்டு.

    அதே நேரம் மின்சார சப்ளையும் வந்து விட்டது.

    ஒளியுடன் கூடவே ஞான ஒளியாக வந்த தங்களை என்னால் வரவேற்க முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  13. மறுமொழி >திண்டுக்கல் தனபாலன் said...

    // இனிமையான சந்திப்பு... ஜன்னலைப் பற்றி எந்த தகவலும் இல்லையே...ஐயாவிடம் நிறைய இருந்ததே... வறுத்த முந்திரி மட்டும் தானா...? ஹிஹி... //

    ஆம்! இனிமையான சந்திப்புதான்!

    ஜன்னலைப் பற்றிய கேள்விக்கு மேலே உள்ள கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு தந்த மறுமொழியைக் காணவும்.

    தின்பதற்கு நிறைய கொணர்ந்தார்கள்! நான்தான் நம்மால் அவ்வளவு சாப்பிட இயலாது என்று மறுத்து விட்டேன். தங்களின் சுவையான வருகைக்கு நன்றி!



    ReplyDelete
  14. [2]

    தங்கள் பதிவினைப்பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், நீங்கள் மின்சார வெளிச்சம் வரட்டும் என அதனைத் தேடி இங்குமங்கும் தெப்பக்குளம் பகுதியில் சற்றுநேரம் சுற்றியுள்ளீர்கள் என. ;(

    ’பாலும், தெளிந்த தேனும், சர்க்கரைப் பாகும், முந்திரிப்பருப்பும்’ ஆகிய நான்கையும் கலந்து ஒளவை மூதாட்டி விநாயகருக்குக் கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக ’இயல் இசை நாடகம்’ என்ற சங்கத்தமிழாகிய மூன்றை மட்டும் எனக்குத்தா, என விநாயகரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டாளாம்.

    அதுபோல தாங்கள் என்னை சந்தித்தபோது முக்கனிகளுடன் அன்பைக்கலந்து நான்காக அளித்தீர்கள்.

    நான் ஏதேதோ தங்களுக்குக்கொடுக்கக் கொண்டு வந்த போது, நீங்கள் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு ‘பால்+டிகாக்‌ஷன்+ஜீனி” ஆகிய மூன்றை மட்டுமே விரும்பிக் கலந்து காஃபியாக மாற்றித் தருமாறு என்னிடம் வேண்டினீர்கள்.

    >>>>>>>>

    ReplyDelete
  15. மறுமொழி >-தோழன் மபா, தமிழன் வீதி said...

    // நல்லதொரு பதிவு. சிலேகித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். எங்க பாட்டி வீடும் திருச்சி காஜா பேட்டையில் தான் இருந்தது. எனது பால்ய காலத்தில் திருச்சிதான் எனது சொர்க்க வாசல். //

    தங்களது பாட்டி வீடும், பால்ய பருவமும் திருச்சி காஜா பேட்டையில்தான் என்று அறிய மிக்க மகிழ்ச்சி! தோழரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. [3]

    இன்னொரு நாள் பகல் வேளையில் வாருங்கள் ஐயா. நிறைய பேச வேண்டிய விஷயங்கள் உள்ளன.

    புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

    என்னுடைய சிறுகதைத்தொகுப்பு நூல்கள் தங்களுக்கு அன்பளிப்பாகத் தர வேண்டியது உள்ளது.

    மொட்டை மாடிக்கு உங்களைக் கூட்டிச்சென்று, காட்ட வேண்டிய காட்சிகளும் நிறைய உள்ளன.

    தங்களின் திடீர் வருகையாலும், அதே நேரம் என் வீட்டுக்கு வருகை தந்த வேறு இரு விருந்தினர்களாலும், தங்களிடம் மனம் விட்டு பேசமுடியாமல் போய் விட்டது, ஐயா.

    தாங்களும் அவசரமாக பஸ்ஸைப்பிடித்து வீடு செல்ல வேண்டும் எனக்கூறி விடை பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டீர்கள் ஐயா.

    அடுத்த முறை கொஞ்ச நேரம் கூடுதலாக இருப்பது போல பகல் நேரத்தில் முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள் ஐயா.

    >>>>>>>

    ReplyDelete
  17. மறுமொழி > Ranjani Narayanan said...

    // கோபு ஸாரின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று எழுதவில்லையே! //

    கோபு சார் நலமே! நாம் எதையாவது எழுதி வைக்கக் கூடாது என்பதனால், எனது பதிவில் நான் “” சிவசக்தி டவர்ஸ்” என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அவரது “பவித்ராலயா” இருந்தது.. என்னை வரவேற்க ரொம்பவும் சந்தோஷத்துடன் கீழே வந்து கொண்டிருந்தார். “ என்று எழுதினேன்.

    // அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும். //

    சகோதரியின் அன்புக்கு நன்றி! சந்திப்போம்!

    நேரம் கிடைக்கும்போது முடிந்தால் எனது வலைச்சர பதிவுகளை படியுங்கள்.

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!




    ReplyDelete
  18. 4]

    தாங்கள் சென்றபின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து என் வீட்டுக் கட்டட வாசலுக்கு வந்த, ரிஷப வாகனங்களில் ஸ்வாமியை நாங்களும் நன்றாக தரிஸித்தோம் ஐயா.

    அவற்றில் வெள்ளி ரிஷபங்கள் இரண்டும் மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா.

    வெள்ளி அல்லாத ரிஷபங்கள் ஸ்ரீ நாகநாதர் + ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா.

    தாங்கள் தங்கள் அலைபேசி மூலம் எடுத்த படங்களையே இவ்வளவு ஜோராகக் காட்டியுள்ளீர்களே, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.

    >>>>>>>

    ReplyDelete
  19. சிந்திக்கவைத்த சந்திப்பு
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  20. [5]

    என் சென்ற பதிவினில், செளதி அரேபியாவில் தற்சமயம் உள்ள திரு. அஜீம்பாஷா என்பவர், என் வழக்கமான பதிலில் ஏன் தாமதம் என உரிமையுடன் என்னைக் கோபித்துக் கொண்டு கேள்வி கேட்டிருந்தார்.

    அவருக்கு நான் கடைசியாகக் கொடுத்துள்ள பதிலில், என் உடல்நிலை சற்று சரியில்லை என சொல்லும்படியாக ஆனது.

    அதனைப்படித்துப் பதறிப்போய் தாங்கள் உடனடியாக என்னை நேரில் சந்திக்கப்புறப்பட்டு வந்துள்ளீர்கள்.

    தாங்கள் என் மீது கொண்டுள்ள பேரன்புக்கு நன்றி ஐயா.

    ஓரிரு நாட்கள் உண்மையிலேயே எனக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தது.

    பிறகு வைத்தியர் உதவியாலும், மருந்து மாத்திரைகளாலும், எனக்காகவே பிரத்யேகப் பிரார்த்தனைகள் செய்துகொண்ட மற்றொரு பதிவராலும், என் குலதெய்வங்களின் அருளாலும் என் உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பி வந்து விட்டது, ஐயா.

    உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள், ஐயா.

    ooooooo

    ReplyDelete
  21. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1. 2, 3 )

    // தங்களை25.02.2013 இரவு 8 மணி சுமாருக்கு திடீரென்று சந்திப்பேன் என நானே நினைக்கவில்லை ஐயா. //

    வருவதற்கு முன்னர் போன் செய்தால், எங்கே இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்லிவிடுவீர்களோ என்று திடுமென வந்துவிட்டேன்.

    // நான் ஏதேதோ தங்களுக்குக்கொடுக்கக் கொண்டு வந்த போது, நீங்கள் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு‘பால்+டிகாக்‌ஷன்+ஜீனி” ஆகிய மூன்றை மட்டுமே விரும்பிக் கலந்து காஃபியாக மாற்றித் தருமாறு என்னிடம் வேண்டினீர்கள். //

    உங்கள் வீட்டு காபி சூடாகவும் சுவையாகவும் இருந்தது. நன்றி!

    // அடுத்த முறை கொஞ்ச நேரம் கூடுதலாக இருப்பது போல பகல் நேரத்தில் முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள் ஐயா. //

    நிச்சயம் வருகிறேன்.




    ReplyDelete
  22. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4)

    // அவற்றில் வெள்ளி ரிஷபங்கள் இரண்டும் மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா.

    வெள்ளி அல்லாத ரிஷபங்கள் ஸ்ரீ நாகநாதர் + ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா.//

    தங்களின் விரிவான தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > வர்மா said...

    // சிந்திக்கவைத்த சந்திப்பு //

    அன்பு வர்மா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (5)

    // என் சென்ற பதிவினில், செளதி அரேபியாவில் தற்சமயம் உள்ள திரு. அஜீம்பாஷா என்பவர், என் வழக்கமான பதிலில் ஏன் தாமதம் என உரிமையுடன் என்னைக் கோபித்துக் கொண்டு கேள்வி கேட்டிருந்தார்.

    அவருக்கு நான் கடைசியாகக் கொடுத்துள்ள பதிலில், என் உடல்நிலை சற்று சரியில்லை என சொல்லும்படியாக ஆனது.
    அதனைப் படித்துப் பதறிப்போய் தாங்கள் உடனடியாக என்னை நேரில் சந்திக்கப்புறப்பட்டு வந்துள்ளீர்கள். //

    உங்கள் பதிவில் திரு. அஜீம்பாஷா அவர்களுக்கு தாங்கள் கொடுத்த பதில் கண்டுதான் வந்தேன்.

    // பிறகு வைத்தியர் உதவியாலும், மருந்து மாத்திரைகளாலும், எனக்காகவே பிரத்யேகப் பிரார்த்தனைகள் செய்துகொண்ட மற்றொரு பதிவராலும், என் குலதெய்வங்களின் அருளாலும் என் உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பி வந்து விட்டது, ஐயா.

    உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள், ஐயா. //

    உங்கள் நல்ல மனதிற்கு தெய்வம் துணை நிற்கும். நான் வணங்கும் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன்.


    ReplyDelete
  25. இனிய சந்திப்பு. எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்கின்றோம்.

    ReplyDelete
  26. அப்போ நான்தான் குட்டி கலாட்டா பண்ணிவிட்டேனா , சிரமத்திற்கு யாவரும் மன்னிக்கவும் .

    ReplyDelete
  27. பதிவர் சந்திப்பு - இனிய விஷயம். நான் இதுவரை இரண்டு மூன்று முறை வை.கோ. சாரை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அழைத்து பேசுவார்.

    அடுத்த முறை திருச்சி வரும்போது திருச்சி பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்க முயற்சிப்போம்!

    ReplyDelete
  28. அருமையான சந்திப்பு. நானும் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். நன்றாக உபசாரம் செய்வார்...

    கணவர் சொன்னது போல் திருச்சி பதிவர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் சந்திக்கலாம்.

    //அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும்.// ரஞ்சனிம்மா நானும் இருக்கிறேன்...:)

    ReplyDelete
  29. மறுமொழி > மாதேவி said...

    // இனிய சந்திப்பு. எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்கின்றோம். //

    சகோதரியின் ரம்யமான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > அஜீம்பாஷா said...

    // அப்போ நான்தான் குட்டி கலாட்டா பண்ணிவிட்டேனா , சிரமத்திற்கு யாவரும் மன்னிக்கவும் .//

    எல்லாம் நன்மைக்கே! உங்கள் வழியாக இறைவன் எங்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறான். உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // அடுத்த முறை திருச்சி வரும்போது திருச்சி பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்க முயற்சிப்போம்! //

    அந்த இனிய நாளும் வரட்டும்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > கோவை2தில்லி said...

    //அருமையான சந்திப்பு. நானும் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். நன்றாக உபசாரம் செய்வார்... //

    // கணவர் சொன்னது போல் திருச்சி பதிவர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் சந்திக்கலாம்.//

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரை சொன்னமைக்கும் நன்றி!

    ReplyDelete
  33. இனிய சந்திப்பு!மகிழ்ச்சி எங்களுக்கும்!

    ReplyDelete
  34. மறுமொழி > கே. பி. ஜனா... said...

    எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் மகிழ்ச்சியில் நனைவோம்!

    ReplyDelete
  35. ஒரே ஊரில் இருந்தாலும் நேரம் வந்தால்தான் சந்திக்க முடியும்;உங்கள் சந்திப்பை இறைவனே எதிரில் வந்து வாழ்த்தி விட்டான்!

    ReplyDelete
  36. படங்களை சற்று சிறிதாக்கினால் -
    லார்ஜ் சைசுக்கு கொணர்ந்தால் ஷார்ப்னஸ் கிடைக்கிறதா என முயன்று பாருங்கள் ஐயா..

    ReplyDelete

  37. மறுமொழி > சென்னை பித்தன் said...

    // ஒரே ஊரில் இருந்தாலும் நேரம் வந்தால்தான் சந்திக்க முடியும்;உங்கள் சந்திப்பை இறைவனே எதிரில் வந்து வாழ்த்தி விட்டான்! //

    எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. இறைவன் வாழ்த்தோடு வ்ந்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // படங்களை சற்று சிறிதாக்கினால் - லார்ஜ் சைசுக்கு கொணர்ந்தால் ஷார்ப்னஸ் கிடைக்கிறதா என முயன்று பாருங்கள் ஐயா.. //

    நான் படத்தை எல்லா வகையிலும் எடிட் செய்து பார்த்து விட்டேன். அதிக வெளிச்சம் ( Over Light ), செல்போன் கேமரா போன்ற காரணங்களினால் இதற்குமேல் எதுவும் செய்ய இயலவில்லை. சகோதரியின் ஆலோசனைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  39. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/3.html
    திருச்சி திருமழபாடி திரு
    தி. தமிழ் இளங்கோ
    அவர்கள்
    வலைத்தளம்: எனது எண்ணங்கள்
    http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

    எங்கெங்கும் எப்போதும் என்னோடு
    - வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)

    http://tthamizhelango.blogspot.com/2013/02/vgk.htm
    திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்

    http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html
    வலைச்சரம் - ஓர் வேண்டுகோள்

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete