Thursday 1 November 2012

யாரிடம் கோளாறு?



சிவனே என்று இருந்தேன்                 
சிவனை பார்த்த துண்டா
என்றே வினவு கிறார்கள்.!

சீர்திருத்தம் பேசி நின்றால்
உன்வீட்டில் செய்து விட்டாயா
என்றே எட்டிப் பார்க்கிறார்கள்.!

சாலையிலே கொட்டும் குப்பையை
அமைதியாக தடுத்துச் சொன்னாலும்
உன்வேலையைப் பார் என்கிறார்கள்!

வீதியிலே ஜோடியாய் இரண்டுபேர்
யார் வீட்டுப் பிள்ளைகள் என்று பார்த்தால்
கொள்ளிக்கண் என்றே குமுறுகிறார்கள்!

எதிர்திசையில் வண்டியில் வருபவரை
சரியான பாதையில் வரச்சொன்னால்
நீஒழுங்காய் பார்த்துப் போ என்கிறார்கள்!

ஓட்டு கேட்டுவரும் கவுன்சிலரிடம்
கோரிக்கைகள்  சிலவற்றை வைத்தால்
தெருக்காரரே என்னை முறைக்கிறார்!

மளிகை கடைக்குச் சென்று
அரிசியில் ஒரே கல் என்றேன்
இனி வேறுகடை பாருங்கள் என்றார்!

வலையுலகில் பதிவை திருடுகிறார்கள்
என்செய்வது என்றே புலம்பினேன்
கவலைப் படாதே என்றார்கள்!


யாரிடம் கோளாறு என்றே
என்னுள் கேட்டேன் - அதுவோ
உன்னிடம்தான் என்றே சொன்னது.



( PICTURE :  THANKS TO  “ GOOGLE ” )




48 comments:

  1. //கவலைப் படாதே என்றார்கள்!//

    பதிவு திருடர்கள்தான் நாம் அவர்களுக்கு எதிராக என்ன செய்தாலும் கவலைப்படுவதில்லை.

    ReplyDelete
  2. அனைத்தையும் வெகு அழகாகச் சொல்லி

    //யாரிடம் கோளாறு என்றே
    என்னுள் கேட்டேன் - அதுவோ
    உன்னிடம்தான் என்றே சொன்னது.//

    என அருமையாக முடித்து விட்டீர்கள்.

    பாராட்டுக்கள், ஐயா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  3. நன்றாகச் சொன்னீர்கள்.

    ஏமாற்றும் உலகில் நியாயம் எங்கே?

    ReplyDelete
  4. அருமையாக உள்ளது கவிதை
    இதையும் திருடிவிடப் போகிறார்கள்

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் பதிவு ...அருமை

    ReplyDelete
  6. கவிதையில் கேட்ட கேள்விகள் அனைத்தும் நிதர்சனம்...

    முடிவும் அருமை!

    த.ம. 3

    ReplyDelete
  7. நல்ல கவிதை. ஒழுங்கை வலியுறுத்தும் பதிவு.
    மிக்க நன்றி.

    Tamil Breaking News

    ReplyDelete
  8. மறுமொழி>வே.சுப்ரமணியன். said...
    கவிஞர் வே.சுப்ரமணியன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. சார் ,

    இது எதாவது செலிபிரிட்டி பத்திய கவிதையா?

    நாம ஒன்ன சொன்னா அதுக்கு இன்னொரு அர்த்தம் எடுத்துக்கிடு டின் கட்டிறுவாங்க போல இருக்கு.

    திருஞானசம்பந்தர் என நினைக்கிறேன் கோளறு பதிகம்னு பாடினார், நீங்க கோளாறு பதிகம் பாடியிருக்கிங்க, நல்லது நடந்தால் சரிதேன்!

    ReplyDelete
  10. ஒவ்வொரு கேள்வியும் அதற்கு இறுதியாய் அளித்த பதிலும் அருமை.
    நம்மை நாமே நொந்துகொள்வதைவிட வேறு வழியில்லை.

    ReplyDelete
  11. மறுமொழி>வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ளம் கொண்ட திரு VGK அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> மாதேவி said...
    சகோதரியின் கேள்விக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> Ramani said...( 1, 2 )
    கவிஞர் ரமணியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. கேள்வியும் பதிலும் நன்று! முடிவு மிகமிக நன்று!

    ReplyDelete
  15. மறுமொழி> PARITHI MUTHURASAN said...
    புதியவராய் வந்து இருக்கும் பரிதி முத்துராசன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said..

    // முடிவும் அருமை!//

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  17. மறுமொழி> M. Shanmugam said...

    புதியவரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  18. மறுமொழி> வவ்வால் said..
    //இது எதாவது செலிபிரிட்டி பத்திய கவிதையா? //

    வவ்வால் சாரின் வருகைக்கு நன்றி! இது celebrity பற்றிய கவிதை இல்லை. எனது உள்ளத்தே குமுறலாய் கிடந்தது.

    // கோளறு பதிகம்னு பாடினார் //

    சம்பந்தர் பாடிய தேவாரம் போல் நம்மால் முடியாது.
    .



    ReplyDelete
  19. மறுமொழி> Sasi Kala said...
    சகோதரி கவிஞர் தென்றல் சசிகலாவின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி> புலவர் சா இராமாநுசம் said...
    புலவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நன்றி!

    ReplyDelete
  21. முடிவு வரிகள்... உண்மை வரிகள்...

    நன்றி...
    tm6

    ReplyDelete
  22. ஆம். போக்குவரத்தில் இப்படிப் பேசி நானும் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு. உங்களின் கேள்விகளும் அதற்குக் கிடைத்த பதில்களும் மிக உண்மை.

    ReplyDelete
  23. ரொம்பச் சரியாச் சொன்னீங்க!

    ஏதாவது சொன்னால்..'வயசுக் கோளாறு' என்கிறார்கள்.
    சொல்லாமல் இருந்தால் அதுவும் 'வயசாயிடுச்சி... கோளாறு' தான்!

    ReplyDelete
  24. நடைமுறை போக்கை கவிதையின் விதையாக கொண்ட அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  25. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி> பால கணேஷ் said...

    // ஆம். போக்குவரத்தில் இப்படிப் பேசி நானும் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு //

    அவர்களைத் திருத்தவே முடியாது. மின்னல்வரிகள் கணேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி> Ranjani Narayanan said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  28. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...

    பதிவை பாராட்டிய சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி> குட்டன் said...

    ஆம்! இதுதான் உலகம்!

    ReplyDelete
  30. கோளாறுகளை சுட்டிக்காட்டி அழாகான முடிவும் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  31. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  32. நான் பெற்ற செல்வம் என்ற திரைப்படத்தில் திரு TMS அவர்கள் பாடிய ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது தங்கள் பதிவை படித்ததும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. Nice poem. Rasiththup padiththen. Mudhal varugai. Pls visit my site : http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  34. அன்புள்ள திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
    உங்களது ஆலோசனை படியே ப்ளாக்ஸ்பாட்டில் வலைபதிவு ஆரம்பித்துள்ளேன்.

    தற்சமயம் wordpress இல் எழுதுவதையே இங்கும் போடுகிறேன்.

    இதோ இணைப்பு:
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ரஞ்ஜனி

    ReplyDelete
  35. அன்புள்ள வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்! கடுமையான காய்ச்சல் மற்றும் முதுகுவலி காரணமாக வலைப் பதிவுகள் பக்கம் ஒரு வார காலத்திற்கும் மேலாக என்னால் வர இயலவில்லை இந்த சமயம் எனது வலைத்தளத்திற்கு வந்து
    கருத்துரை தந்த

    T.N.MURALIDHARAN
    வே.நடனசபாபதி
    சிகரம் பாரதி
    Ranjani Narayanan

    ஆகிய சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றி!
    அனைவருக்கும், எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!



    ReplyDelete
  36. மறுமொழி > Avargal Unmaigal said...

    என்னையும் தேடிவந்து எனது வலைத்தளத்தில் தீபாவளி நல்வாழ்த்துச் சொன்ன அன்பு இதயத்திற்கு நன்றி!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    மங்களம் நிறைய,
    மகிழ்வொடு வாழ்த்துவம்!

    ReplyDelete
  38. குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள் ..

    ReplyDelete
  39. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... ( 1, 2 )

    சகோதரியின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  40. தமிழ் இளங்கோ ஐயா ,உலகமே தன்னலமாக சுற்றும்போது பொது நலமாக யோசிப்பவரின் நிலை இதுதான். இன்றைய சமூக நடைமுறையை அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

    ReplyDelete
  41. மறுமொழி > ezhil said...
    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  42. அன்பின் தமிழ் இளங்கோ - வலைச்சரம் மூலமாக வந்தேன் - கவிதை அருமை - இதெல்லால்ம் இயல்பாக நடக்கும் செயல்கள் - கோளாறு எப்பொழுதும் நம்மிடம் இருப்பதாகத் தான் கூறப்படும். நாமும் அப்படித்தான் கூறுவோம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  43. யாரிடம் கோளாறு என்றே
    என்னுள் கேட்டேன் - அதுவோ
    உன்னிடம்தான் என்றே சொன்னது.

    வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  44. மறுமொழி> cheena (சீனா) said...
    //அன்பின் தமிழ் இளங்கோ - வலைச்சரம் மூலமாக வந்தேன் - கவிதை அருமை - இதெல்லால்ம் இயல்பாக நடக்கும் செயல்கள் - கோளாறு எப்பொழுதும் நம்மிடம் இருப்பதாகத் தான் கூறப்படும். நாமும் அப்படித்தான் கூறுவோம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா //
    அன்பின் சீனா அவர்களது பாராட்டிற்கு நன்றி! இப்போதெல்லாம் நான் முடிந்தவரை வெளியில் யாரிடமும் எதனையும் சுட்டிக் காட்டுவதில்லை. குறைத்துக் கொண்டேன்,

    ReplyDelete
  45. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
    // வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்.. //

    சகோதரிக்கு நன்றி

    ReplyDelete
  46. அருமையான பதிவு...தங்கள் பாணியில் நகைச்சுவையாக நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள்!

    கொள்ளிக்கண்...மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete