நடந்து முடிந்த 2011- சட்ட மன்ற தேர்தலில் பலருடைய ஓட்டு தி.மு.க.விற்கு விழாமல் போனதற்கு, மின்சார வெட்டிற்கு அடுத்தபடியாக, இந்த சட்டமும் ஒரு காரணம்.. பெரும்பாலும் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஹெல்மெட் அணிவதையும் போகும் இடமெல்லாம் ஹெல்மெட்டை சுமந்து செல்வதையும் விரும்பவில்லை.வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் சொல்லவே வேண்டாம்.ஆனால் தேர்தல் சமயத்தில் போலீசார் இந்த சட்டத்தை ரொம்பவும் கடுமையாக கையாண்டனர்.சிலர் இந்த சட்டத்தை வைத்து காசு பார்க்கவும் செய்தனர்.
பெரும்பாலான நடுத்தர மக்கள் சொந்த உபயோகத்திற்கு வைத்து இருப்பது இரு சக்கர வாகனங்களைத்தான்.கடைக்குச் செல்ல,காய்கறிகள் வாங்க,பிள்ளைகளை பள்ளிகளில் கொண்டு விட,அலுவலகம் செல்ல என்று அனைத்து அவசரமான மற்றும் முக்கிய வேலைகளுக்கும் சாதாரண நடுத்தர மக்கள்
மொபட்,ஸ்கூட்டர்,பைக் என்று இரு சக்கர வாகனங்களைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. காவல் துறையினர் எப்போது ஹெல்மெட் போடாதவர்களைப் பிடிப்பார்கள் அல்லது விடுவார்கள் என்று தெரியவில்லை. சிலபேரை அபராதம் செய்கின்றனர்.சிலபேரை விட்டு விடுகின்றனர்.ஹெல்மெட் அணிவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன கட்டாய ஹெல்மெட் சட்டம் உண்மையில் மக்களை அரசின் மீது வெறுப்பு கொள்ளவே செய்கிறது. முன்பும் இதே போல் சைக்கிளில் செல்பவர்களிடம் இருவர் செல்லக்கூடாது என்றும் விளக்கு, பிரேக் உள்ளதா என்றும் தொந்தரவுகள் செய்தனர். எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஆட்சியில் இந்த விதிமுறைகளை நீக்கி நடுத்தர மக்கள் குறிப்பாக கிராம மக்கள், போலீஸ் பயமின்றி சைக்கிள்களை ஓட்ட வழி வகுத்தார்.
இந்த பதிவிற்காக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் என் மீது பாயலாம்.
No comments:
Post a Comment