Friday, 11 April 2014

சித்திரைப் பெண்ணே!



                
                    சித்திரைப் பெண்ணே!
                    சித்திரைப் பெண்ணே!
                    பயந்து விடாதே!
                    முத்திரை பெற்ற உன்
                    வசந்தத்தை அள்ளித்தர
                    மறந்து விடாதே!

                    பன்னிரு மாதங்களில்
                    முதன்மையும் நீயே!
                    தொடக்கமும் நீயே!
                    எத்தனையோ மரபுகள்
                    எத்தனையோ பெயர்கள்
                    தெற்கு வடக்காயின!
                    உன்னையும் அப்படித்தான்
                    முடக்கி வைத்தார்கள்!

                    சித்திரைப் பெண்ணே!
                    சித்திரைப் பெண்ணே!
                    பயந்து விடாதே!
                    புத்தாண்டு வாழ்த்துக்கள்
                    சொல்ல மறந்து விடாதே!