ஆரம்பத்தில் முதன் முதலாக வலைப் பக்கங்களை நான் எட்டிப் பார்த்த போது
எழுதிக் கொண்டு இருந்த பல பதிவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வலைப்
பக்கங்களை எழுத ஆரம்பித்தவுடன் ஒரு உத்வேகம் காரணமாக எழுதுவதில் ஒரு விருப்பம் எல்லோருக்கும்
இருக்கும். முதன் முதல் வலைப் பதிவை எழுதி அதனை தமிழ் மணம் போன்ற திரட்டிகளில்
இணைத்து வெளிவந்தவுடன் ஏற்பட்ட, அந்த பரவசம் நாளடைவில் குறைந்து விடுகிறது. ஒரு பத்திரிகைக்கு
நமது படைப்புகளை (புனை பெயரில் எழுதினால் கூட) கிடைக்கும் அங்கீகாரம் அல்லது எழுத்தாளன்
என்ற பெயர் வலைப் பதிவுகளைப் போடுவதால் கிடைப்பதில்லை..
இருக்கின்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத் தான்
எழுதிக் கொண்டே இருப்பது என்று சிலர் சலிப்படைந்து இருக்கலாம் சிலர் அவர்கள்
வீட்டில் ஏச்சுக்கு கூட ஆளாகி இருக்கலாம். அதிலும் முகமூடி அணிந்த பதிவர்களுக்கு
இதைவிட சலிப்பு அதிகமாக இருக்கலாம்.
சொல்லாமல் சென்றவர்கள்:
இணைய குசும்பன், இந்துராணி கருணாகரன் (கமகம), இராதா
கிருஷ்ணன் (நினைவோடை), உதயகுமார் (பாலக்கரை பாலனின் பால்ய பார்வை), அலெக்ஸ்
பாண்டியன் (காவிரிக் கரையோரம்), கண்ணன் (அரட்டைக் கச்சேரி), குமரிமைந்தன் (குமரிமைந்தன்
படைப்புக்கள்), தேசிகன் (தேசிகன் பக்கம்), பாலாஜி-பாரி (உருமி மேளம்), மாயவரத்தான்
(ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது) என்று அப்போது பலர் பதிவுகளை எழுதி வந்தனர். எல்லோருடைய பெயர்களும் நினைவில் இல்லை. இதில்
குமரி மைந்தன் என்பவர் 1984 – இல் பொதுப்பணித் துறையில் இளநிலைப்
பொறியாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.(See Profile) இப்போது அவருக்கு
நிச்சயம் வயது எண்பதை நெருங்கியிருக்கும். எனவே இவர் இப்போது எழுதவில்லை என்று
நினைக்கிறேன். மற்றவர்கள் facebook, twiter என்று பிற தளங்கள்
பக்கம் போய்விட்டார்களா அல்லது சொல்லாமல்
எழுதுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனரா என்று தெரியவில்லை.
விடை பெற்றுச் சென்றவர்கள்:
இன்னும் சிலர் விடை பெற்றுச் செல்கிறேன் என்று, ” குட் பை” சொல்லி விட்டே சென்று விட்டனர். அப்படி சென்ற
சிலர் மீண்டும் வந்து எழுதுகிறார்கள். இன்னும் சிலர் அப்போதைக்கு அப்போது
எழுதுகின்றனர். நானும் இப்போதுதான் கடந்த ஓராண்டாக வலைப் பதிவை எழுதி வருகின்றேன். விடை சொல்லி
விட்டு சென்றவர்களில் சிலர் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்.
அல்வா சிட்டி (போட்டுத் தாக்கு) என்ற பதிவில் விஜயகுமார் அவர்கள்
//ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.//

என்று சொல்லுகிறார்.
ஆச்சி ஆச்சி ( http://aatchi.blogspot.in ) என்ற பதிவர் 2012
மார்ச்சு 14 ஆம் தேதி ஒரு பெரிய பதிவையே இதற்காகப் போட்டு விட்டார்..
// எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன். யோசித்து கொள்ளம்மா என்று மட்டும் சொன்னார். சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன். //

இதில் அவர் வலைப் பதிவு எழுதுவதில் ஒரு பெண் என்ற முறையில்
தனக்கிருந்த சூழ்நிலையை விளக்கி விட்டார்.
அண்மையில் திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன்)
அவர்கள் ஒரு கருத்தினை (மே மாதம்,2012 ) வெளியிட்டு இருந்தார். http://gopu1949.blogspot.in/2012
05 01 archive.html
தற்பொழுது, பதிவுகள் எழுதா விட்டாலும் மற்ற பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக VGK அவர்கள் கருத்துரைகள் தந்து கொண்டு இருக்கிறார்.
தமிழ்வாசி பிரகாஷ் ( www.tamilvasi.com
) என்ற பதிவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அவர் அண்மையில் விடை பெற்றார். ஜூன் 2012
இல் அவர் சொன்ன காரணம்.... ...
// நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்... //
திரும்பவும் வந்தவர்கள்:
சில பதிவர்கள் சில காரணங்களை முன்னிட்டு விடை பெற்றுச்
சென்றாலும் மீண்டும் வந்து எழுதுகிறார்கள்.
எம்.ஏ. சுசீலா என்ற பதிவர் ( www.masusila.com
) மதுரை
பாத்திமா கல்லூரியில் பேராசிரியை பணி புரிந்தவர்.அவர் நல்ல பதிவுகளை தந்துள்ளார்.
அவர்
//என் பயணம் முடிந்து 25.08.09 புது தில்லி திரும்பிய பின்னர் வலைப் பதிவுகளைத் தொடர்கிறேன். அதுவரை வலை வாசக அன்பர்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன். //
என்று சொன்னார். சொன்னது போலவே இப்போது மீண்டும் வந்து எழுதுகிறார். பரிசல்காரன், உண்மைத் தமிழன், சேட்டைக்காரன் முதலானவ்ர்களும் மீண்டும் பதிவுலகம் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் இதில் சேட்டைக்காரன் ( http://settaikkaran.blogspot.in ) முன்பு சொன்ன வாசகங்கள் இவை. (. Sunday, June 13, 2010 )

// இப்போதைக்கு விடைபெறுகிறேன் வலையுலகம் சலித்து விட்டது! இறைவன் சித்தமும் எனக்கு விருப்பமுமிருந்தால் திரும்ப வருவேன் ஆதரித்த அனைவருக்கும் நன்றி! //
உதாரணத்திற்காக இங்கு ஒரு சிலரை மட்டுமே குறிப்பிட்டேன். தமிழ் வலைப் பதிவாளர்கள்( TAMIL BLOGGERS LIST ) கணக்கைப் பார்த்தால் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பேரும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதாகத் தெரியவில்லை. ஆக சொந்தக் காரணங்களை முன்னிட்டே வலைப் பதிவு எழுதுவதிலிருந்து பெரும்பாலோனோர் நின்று விடுகின்றனர். யாரும் வலைப் பதிவை வெறுக்கவில்லை.
எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
வாரத்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
வாரத்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
- கவிஞர் உமர் கய்யாம்
நண்பர்களே உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலிப்பு
வரும் அளவுக்கு வலைப் பதிவிலேயே மூழ்கி அடிமை (addict) ஆகி விடாதீர்கள சொந்த வேலைகளையும் பாருங்கள்.
நண்பர்களோடும், மற்றவர்களோடும் உரையாட நேரம் ஒதுக்குங்கள். தினம் எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். தங்களுக்கு வரும் விமர்சனங்களை
எதிர் கொள்ளுங்கள். தாங்கள் படித்து முடித்த பதிவுகளுக்கு மட்டுமே கருத்துரை
தாருங்கள். படிக்காமலேயே ” ஆகா! ஓகோ! பேஷ்! பேஷ்! “ என்ற பாணியில் விமர்சனம்
செய்யாதீர்கள். இப்போது ஆங்காங்கே வலைப் பதிவர்கள் சந்திப்பை நட்பு மனம்
கொண்டவர்கள் நடத்துகிறார்கள். இந்த சந்திப்பினால் வலைப் பதிவர்கள் இன்னும்
உற்சாகம் அடையலாம். எனவே எழுதுங்கள். எழுதிக் கொண்டே
இருங்கள்.