Saturday, 24 November 2018

புத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018


நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சு மைய  வளாகம் - Harshamitra Oncology Pvt Ltd - A Radiation Unit ) புத்த பௌர்ணமி விழா நடைபெற்றது. எனக்கும் WhatsApp இல் அழைப்பு தந்து இருந்தார்கள். ஒரு பார்வையாளனாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில. 
 


நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டாக்டர் ராஜ்வர்தனன் &  டாக்டர் சசிப்பிரியா குடும்பத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.


15 comments:

 1. படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  நண்பரே மிகவும் தளர்ந்து, மெலிந்து காணப்படுகின்றீர்களே... ?

  ReplyDelete
 2. படங்கள் அனைத்தும் அழகு...

  வலைப்பூவை மறைத்து வீடாதீர்கள் ஐயா...

  ReplyDelete
 3. அது பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நம்மில் இருக்கும் பல பண்டிகைகளைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாமே

  ReplyDelete
 4. விழா நிகழ்வுப் பகிர்வு அருமை.

  ReplyDelete
 5. ஒரு காலத்தில் இங்கு கோலோச்சிய சமூகத்தின் (புத்த சமணர்கள்) எச்சங்கள் இன்னமும் தமிழகத்தில் விடாமல் பாரம்பர்யத்தைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

  நிறைய சமண, புத்த விஹாரங்கள் சைவ சமயத்தால் எடுதுக்கொள்ளப்பட்டன என்று முனைவர் ஜம்புலிங்கம் சார் அவர்களின் பதிவுகளில் படித்திருக்கிறேன்.

  ஏன் அடிக்கடி எழுதுவதில்லை. பெரிய இடைவெளி கொடுக்கிறீர்களே...

  ReplyDelete
  Replies
  1. கடந்த ஒரு வருடமாகவே எழுதுவதை மிகவும் குறைத்துக்கொண்டுவிட்டீர்கள்.

   முதலும் கடைசியுமாக டிசம்பரில்தான் உங்களுடன் பேசினேன். உடல் நிலையைப் பற்றிக் கவலையோடு இருந்தீர்கள், ஆனாலும் இதய நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்தீர்கள்.

   நான், நீங்கள் உடல் நிலையை திடீரென்று மாறிவிட்ட அதிர்ச்சியால்தான் வலைப்பக்கம் வரவே இல்லையோ என்று நினைத்தேன்.

   இன்று கோபு சார் சொல்லி உங்கள் மறைவைக் கேட்டபோது மனது வருத்தப்பட்டது. ஓய்வு காலத்தை நிறைவாக அனுபவித்திருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு சீக்கிரமாகவா மறையவேண்டும்? கோபு சாருக்கு உங்கள் மறைவுச் செய்தியை என்னிடம் சொல்வதற்குள் அவ்வளவு கண்ணீர், குரல் தழுதழுப்பு.

   சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலேயே உங்கள் பயணத்தை முடித்துக் கொண்டுவிட்டீர்கள்.

   போய்வாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களை நினைவில் இருத்தியிருப்பார்கள்.

   Delete
 6. நிகழ்வும் புகைப்படங்களும் வெகு அழகு.

  ReplyDelete
 7. நேர்த்தியான படங்கள்
  செய்தியும் அருமை
  நலம்தானே ஐயா

  ReplyDelete
 8. கோபு சார் செய்தி சொன்னார், மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
  ஜனவரி மாதம் கோபு சாரை பார்த்து காலண்டர், டைரி கொடுத்ததை பதிவாக பகிர்ந்து இருந்தார்கள் கோபு சார்.

  படமும் அனுப்பி இருந்தார்கள்.

  நன்றாகதானே இருந்தீர்கள்?

  உங்கள் இழப்பு குடுமபத்தினர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும்.
  உங்கள் குடும்பத்தினர்களுக்கு எங்கள் ஆழந்த இரங்கல்கள்.
  இறைவன் அவர்களுக்கு மன ஆறுதலை தர வேண்டும்.

  ReplyDelete
 9. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். கடந்த ஓராண்டாக வலைப்பக்கம் வராததால் தங்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. திருச்சி வந்தால் சொல்லுங்கள். அவசியம் சந்திப்போம் என்றீர்கள். அதற்கு வாய்ப்பு தராமலே இயற்கை உங்களை இவ்வுலகிலிருந்து பிரித்துவிட்டது. தங்களை சந்திக்க இயலாமால் போனது அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தங்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தங்களின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 10. http://gopu1949.blogspot.com/2019/02/blog-post.html

  வலைப்பதிவர் தி. தமிழ் இளங்கோ .... நினைவலைகள்

  :(

  ReplyDelete
 11. Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

  ReplyDelete