Thursday 16 July 2015

அமல அன்னை சர்ச் - அமலாஸ்ரமம் (ஸ்ரீரங்கம்)



சென்ற மாதத்தில் ஒருநாள். எனக்கு தெரிந்த கிறிஸ்தவ நண்பரிடமிருந்து போன். தனது மகனுக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள அமலாஸ்ரமம் சர்ச்சில் திருமணம் என்றும் காலையிலேயே வந்து விடும்படியும் அழைப்பு. நானும் சீக்கிரமே, அங்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அன்றைக்கு காலையிலேயே எங்கள் பகுதியில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் என்று அழைப்பு வந்தது. அதற்கும் போக வேண்டும். இதற்கும் போக வேண்டும். எனவே சர்ச்சில் நடைபெற்ற நண்பரின் மகன் திருமணத்திற்கு தாமதமாக சாப்பாட்டு வேளையில்தான் செல்ல முடிந்தது.

திருச்சி – ஸ்ரீரங்கம் சாலையில், மாம்பழச் சாலையிலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது அமலாஸ்ரமம் எனப்படும் அமல அன்னை சர்ச். இங்கு “AMALA ANNAI CAPUCHIN PROVINCE’ எனப்படும் கிறிஸ்தவ சமயத்துறவிகளின் பயிற்சி மையமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

நான்காவதோ அல்லது ஐந்தாவதோ படித்தபோது, நான் படித்த ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் (பட்டர் ஒர்த் ரோடு,திருச்சி.2) இருந்து, ஆசிரியைகள் எங்களை இந்த சர்ச்சிற்கு அழைத்து வந்தபோதுதான்  எனது முதல் வருகை. அப்போது இவ்வளவு வாகன வசதி கிடையாது. எனவே பழைய காவிரி பாலம் வழியாக நடந்துதான் வந்தோம். அப்புறம் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்த கிறிஸ்தவ நண்பர்களோடு சில தடவை வந்து இருக்கிறேன். எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த உற்சாகத்தில், மதியநேரம் என்றபோதும்,  நான் சில படங்களை எனது கேமராவில் எடுத்துக் கொண்டேன்.

 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு நான்


 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு எனது மகன் 



சிறிய தேவாலயமாக இருந்தாலும் காவிரிக் கரையில் அமைந்து இருக்கின்ற படியினால், மரங்கள் மற்றும் நந்தவனம் சூழ்ந்து மிகவும் அழகான அமைதியான  சூழ்நிலையில் இருக்கிறது. நான் சிறுவனாக (சுமார் 50 வருடங்களுக்கு முன்னர்) இருந்து இந்த தேவாலயம் வந்தபோது சுற்றிப்பார்க்க அவ்வளவு கட்டுப்பாடு இல்லை. இப்போது சூழ்நிலையின் காரணமாக வழிபாடு நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆலயத்தைப் பார்க்க கட்டுப்பாடுகள்.

அவர்கள் இணையதளத்திலிலிருந்து சில புகைப் படங்கள் இங்கே:















 













அமலாஸ்ரமம் பற்றிய மேல் அதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரியை “க்ளிக்” செய்யவும்.




25 comments:

  1. வணக்கம் அய்யா,
    எனக்கும் பழய நினைவுகள், நானும் கிறித்தவ அமைப்பு நடத்தும் பள்ளியில் தான் படித்தேன்,
    அதன் கட்டுப்பாடும், அமைதியும் எனக்கு அதிகம் பிடிக்கும்,
    என் உயர்வு அவர்களால் தான்,
    புகைப்படங்கள் அழகு,
    பதிவுக்கு வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரியே. கிறிஸ்தவ மிஷனரி நடத்திய கட்டுப்பாடு மிக்க ஆரம்பக் கல்விதான் என்னுடைய மதநல்லிணக்க உணர்வுகளுக்கும் காரணம் சகோதரி.

      Delete
  2. அமைதியான சூழ்நிலை யாரையும் மகிழ்விக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. தேவாலயம் அழைத்துச் சென்றமைக்கு நன்றி. பதிவைப் படித்தபோது மனதிற்கு இதமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் அமலாஸ்ரமம் மற்றும் தேவலாயம் படங்களைப் பார்த்ததும் அந்த அழகான இடத்தை பார்க்க விருப்பம் வருகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. என்னவொரு அழகான இடம் ஐயா.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அமைதியும் அழகும் நிறைந்த இடம். தங்களது கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. Replies
    1. ஆசிரியர் எஸ்.மது அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி

      Delete
  7. சில ஆண்டுகளுக்கு முன் - ஸ்ரீரங்கம் வந்தபோது - அமல அன்னை ஆஸ்ரமத்தின் அழகைக் கண்டு வியந்திருக்கின்றேன்.. ரம்யமான இயற்கைச் சூழல்!..

    தங்கள் மகனுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்தவர்களில் நீங்கள் ஒருவர்தான் இந்த அமலாஸ்ரமம் சர்ச்சை பார்த்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      Delete
  8. அமல அன்னை சர்ச் - அமலாஸ்ரமம் அழகான இயற்கை சூழலில் அமைந்து இருக்கிறது.
    படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. அமலாஸ்ரம தரிசனம் தங்களின் அழகிய புகைப்படங்கள் மூலம் பெற்றேன்! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  10. அமல அன்னை சர்ச் - அமலாஸ்ரமம் பற்றி அழகுற எழுதியுள்ளீர்கள். ஆர்வமுடன் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு நன்றி

      Delete
  11. படங்களுடன் பதிவு அருமை
    திருமண நிகழ்வு குறித்தும் சில புகைப்படங்களை
    வெளியிட்டு இருக்கலாமோ ?
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  12. Replies
    1. கவிஞர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மற்றும் தமிழ்மணம் வாக்களிப்பிற்கும் நன்றி.

      Delete
  13. சிறந்த பக்திப் பதிவு
    படங்களும் பகிர்வும் நன்று
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி

      Delete