Sunday 2 March 2014

செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா?



மனிதனுக்கு மட்டுமே இறப்பிற்குப் பின்பு நியாயத் தீர்ப்பு உண்டு என்றும், அதன் பின்னர் அவனது ஆன்மா சொர்க்கம் அல்லது நரகம் சென்றடைகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் நாம் செல்லமாக வளர்த்த செல்லப் பிராணிகளின் ஆன்மாக்கள் என்ன ஆகின்றன? சரியான விடை இல்லை. ஆனாலும் அவை எல்லா பிறப்பும் எடுத்து இறுதியில் மனித பிறவியை அடைகின்றன என்ற ஒரு சமய நம்பிக்கை உண்டு

புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் ங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்று பாடுகிறார் மாணிக்கவாசகர் (திருவாசகம்)

மகாபாரதத்தில்:

மகாபாரதத்தின் இறுதி கட்டத்தில் ( மகாபிரஸ்தானிக பருவம்) ஒரு காட்சி. தருமர் துறவு பூண்டு தனது சகோதரர்களோடும் துரோபதையுடனும் இமயமலைச் சாரலை அடைகிறார் கைலாசமலை நோக்கி முதலில் தருமர் , பின்னர் மற்ற ஐவர் என்று வரிசையாக மேலே செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களைத் தொடர்ந்து ஒரு நாயும் வருகிறது. வழியில் அந்த நாயும் தருமரும் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இறுதியில் இந்திரன் தனது தேரில் வந்து தருமரை சொர்க்கத்திற்கு அழைக்கிறான். “ என்னோடு வந்தவர்கள் இல்லாது சொர்க்கத்திற்கு வர விருப்பமில்லை என்று தருமர் மறுக்கிறார். “ அவர்கள் ஐவரும் ஏற்கனவே சொர்க்கம் அடைந்து விட்டார்கள்“ என்று இந்திரன் சொல்ல, தருமர் தன்னோடு வந்த நாயுடன் தேரில் ஏற முற்படுகிறார். “நீர் மட்டும் வரலாம். நாய்க்கு இடம் இல்லைஎன்று இந்திரன் தடுக்கிறான். அப்படியானால் நானும் வரவில்லைஎன்று மறுக்கிறார் தருமர். இந்த பதிலைக் கேட்டதும் நாய் வடிவில் வந்த தருமதேவதை தனது சுயரூபத்தைக் காட்டி தருமரைப் பாராட்டுகிறாள். பின்னர் மூவரும் சொர்க்கலோகம் அடைந்தனர் என்பது மகாபாரதம் சொல்லும் கதை.   

வானவில் பாலம் ( RAINBOW BRIDGE)

செல்லப் பிராணிகளை இழந்து வருந்தும் நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்ல  www.petloss.com என்று ஒரு இணையதளம் உள்ளது. இங்கு தங்களது செல்லப் பிராணியை இழந்தவர்கள் ஆன் லைன் வழியே, இறந்துபோன  தங்களது செல்லப் பிராணியின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அங்கு வானவில் பாலம் ( RAINBOW BRIDGE)என்ற தலைப்பில் ஒரு கதைப்பாடல். சொல்லப்பட்டுள்ளது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. கதைச் சுருக்கம் வருமாறு.

  
சொர்க்கத்திற்கு (HEAVEN) செல்லும் வழியில் ஒரு பச்சைப் புல்வெளி. அந்த புல்வெளிக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு பாலம். அதன் பெயர்  வானவில் பாலம் ( RAINBOW BRIDGE). செல்லப் பிராணி இறந்ததும் புல்வெளிகளும் சிறு குன்றுகளும் நிரம்பிய அந்த இடத்தை அடைகின்றது. அந்த இடத்தில் இந்த செல்ல பிராணி போன்று நிறைய செல்லப் பிராணிகள் இறந்தவுடன் அங்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கு அவைகளுக்குத் தேவையான உணவும், தண்ணீரும், விளையாட இடமும், சூரிய ஒளியும் கிடைக்கின்றன. இந்த செல்லப் பிராணிகள் அங்கு சென்றதும் நல்ல உடல்நலம் பெற்று வலிமையுள்ளதாக மாறி மற்ற செல்லப் பிராணிகளோடு விளையாடுகின்றன ஆனாலும் அவைகளுக்கு தங்களை நேசித்த அந்த அன்பு எஜமானர்கள் இல்லையே என்ற வருத்தமும் ஏக்கமும் ரொம்பவே உண்டு. எனவே அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் வழியில் உள்ள இந்த பாலத்திற்கு, எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்தபடியே உள்ளன. அவைகளின் எஜமானர்கள் பூமியில் இறந்ததும் இந்த வானவில் பாலம் வழியே சொர்க்கத்திற்கு செல்ல வருகிறார்கள். அவ்வாறு வரும்போது தமது எஜமானர்களைக் கண்டவுடன்  இந்த செல்லப் பிராணிகள் ஒரே ஓட்டமாக தாவிச் செல்கின்றன. எஜமானர் மீது சந்தோஷத்தால் தாவி குதிக்கின்றன. நாவால் நக்குகின்றன. அதன்பின் அவைகளும் தமது எஜமானர்களோடு வானவில் பாலம் வழியாக சொர்க்கத்திற்கு செல்லுகின்றன.

காணொளி காட்சிக்கு கீழே உள்ள இணைய முகவரியை ‘க்ளிக்செய்யுங்கள்.


செல்லப்பிராணிகள் கல்லறை (  PET CEMETERY)

மேலை நாடுகளில் செல்லப் பிராணிகள் இறந்ததும் அவற்றின் எஜமானர்கள் , மனிதர்களை அடக்கம் செய்வது போலவே பிரார்த்தனையுடன் அவற்றை அடக்கம் செய்கிறார்கள். நியூமெக்சிகோவில் , வில்லியம்ஸ்பர்க் என்ற இடத்தில் செல்லப் பிராணிகளுக்கென்று கல்லறைத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கே அவற்றைப் புதைக்க கட்டணம் வாங்குகிறார்கள். வாரம் ஒருமுறை செல்லப் பிராணிகள் அடக்கம் செய்யப்படுகின்றன.. புதைக்கும் வரை (பத்து நாட்களுக்கு மிகாமல்) குளிர்பெட்டியில் வைத்திருக்கும் வசதியும் உண்டு. அங்கு The Sierra County Humane Society “ என்ற சமூக தொண்டு நிறுவனம் இதனை ஏற்றுச் செய்து வருகிறது.. இவை போன்று பல இடங்களில் மேலை நாடுகளில், செல்லப் பிராணிகளுக்கென்று தனி கல்லறைத் தோட்டங்கள் உள்ளன. நமது நாட்டில் கிராமப்புற மக்களும் வசதியானவர்களும் தங்கள வளர்ப்பு பிராணிகள் இறந்ததும் அவற்றை வீட்டு தோட்டங்களில் புதைக்கின்றனர்.

டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் விலங்குகளுக்கென்று ஒரு பிரார்த்தனைப் பாடல் எழுதியுள்ளார்.

A Prayer For The Animals

Hear our humble prayer, oh, God,
Especially for animals who are suffering;
For any that are haunted or lost or deserted
Or frightened or hungry;
For all that must be put to death.
We entreat for them all Thy mercy and pity,
And for those who deal with them
We ask a heart of compassion
And gentle hands and kindly words.
Make us, ourselves
To be true friends to animals
And so to share the blessings
Of the merciful.

Dr Albert Schweitzer


கட்டுரை எழுத உதவியவை

மகாபாரதம் - (மகாபிரஸ்தானிக பருவம்)

(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)


53 comments:

  1. நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு!..

    சாலை ஓரங்களில் கிடக்கும் மாண்டு கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் எடுத்து அடக்கம் செய்வதும் நல்லறம் என்று படித்திருக்கின்றேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நானும் நண்பர்களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.

    வீட்டில் வளரும் பிராணிகள் - நமக்கு நேரக்கூடிய பெருந்துன்பங்களைத் தம் நுண்ணுணர்வினால் அறிந்து அவைகளைத் தாமே தாங்கிக் கொள்வதாக ஒரு ஐதீகம் அந்த மாதிரியான பல நிகழ்வுகளைக் கண்டதும் உண்டு.

    அவ்வாறு தன்னை வளர்த்தவர்களின் அவஸ்தைகளைத் தாங்கிக் கொள்ளும் ஏனைய உயிரினங்களுக்குக் கிடைப்பது நல் முக்தியே அன்றி வேறெதுவாக இருக்க முடியும்!..

    ReplyDelete
  2. வானவில் பாலம் வித்தியாசமான சிந்தனை..!

    ReplyDelete
  3. மிகவும் அருமையான அழகான பதிவு தந்துள்ளீர்கள். காணொளியும் கண்டு ரஸித்தேன். மஹாபாரதத்தில் வரும் தருமர் பற்றிய கதையும் கொடுத்துள்ளது மேலும் சிறப்பு தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இன்றும் தங்களுக்கு நான் ஒரு மெயில் கொடுத்து அதுவும் திரும்ப வந்து விட்டது [As Undelivered]

    தாங்கள் எனக்கு ஒரு [TEST MAIL]மெயில் கொடுக்கவும். அதுவாவது எனக்கு வருகிறதா என நான் பார்க்கிறேன். அன்புடன் VGK

    ReplyDelete
  4. மனிதர்கள், மற்ற உயிரனங்கள் என்று பாரபட்சம் இல்லாமல், நாம் வாழும் பொழுதே சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்க முடியும். நாம் நடந்து கொள்ளும் விதங்களில், நாம் மற்றவர்களை நடத்தும் விதங்களில்.

    ReplyDelete
  5. சந்தோசமோ, துயரமோ செல்லப் பிராணிகள் கூட நம்மிடத்தில் பங்கு கொள்கின்றன என்பதும், அவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது பல உள்ளன என்பதும் உண்மை...

    வானவில் பாலம், செல்லப்பிராணிகள் கல்லறை தகவல்கள் சுவாரஸ்யம்...

    ReplyDelete
  6. அறுபதாம் அகவையை எட்டியதும் ஆரம்பமாகி இருக்கும் இந்த ஆன்மீக ஆராய்ச்சி தொடரட்டும்!
    த ம 3

    ReplyDelete
  7. வானவில் பாலம் கதை அற்புதம்.
    நம் செல்லங்களைப்பற்றிய புத்தகம் ஒன்று 2010 வது வருடம் வெளிவந்தது.
    http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/blog-post_23.html

    புத்தகம் வெளிவருமுன் புதியபார்வை என்ற பத்திரிகையில் ஆறு பக்கங்களுக்கு ஒரு கட்டுரை வந்ததையும் சொல்லத்தான் வேணும்.
    http://thulasidhalam.blogspot.co.nz/2009/12/blog-post_22.html

    இங்கே நம்ம நாட்டிலும்(நியூஸி) செல்லங்களைப் புதைக்கவோ எரிக்கவோ செய்யலாம்.கல்லறைத் தோட்டமும் க்ரெமடேரியம் வசதிகளும் உண்டு. எரியூட்டி முடிச்சதும் அழகான பெட்டியில் அஸ்தியை வைத்து, கூடவே செல்லத்தைப்பற்றிய எல்லா விவரங்களுடன் டெத் சர்ட்டிஃபிகேட், இரங்கல் கடிதம் வைத்து நம்ம வெட்னரி டாக்டருக்கு அனுப்பி வைப்பார்கள். நம்ம வெட்னரி ப்ராக்டீஸிலும் அழகான இரங்கல் அட்டையில் அங்கு வேலை செய்யும் அனைவரும் கையெழுத்துப்போட்டு நமக்கு ஒரு ஆறுதல் கடிதம் வைத்து நம்மிடம் தருவார்கள். வீட்டில் மனிதர்களின் மரணத்துக்குச் சமம் இது என்பதால் அதைப்பற்றிய புரிந்துணர்வோடு இவை நடக்கும்.

    நம் வீட்டுச்செல்லங்களின் அஸ்தியை ரிஷிகேஷ் கங்கையில் கரைத்தோம்.
    பின்னூட்டம் நீண்டு போச்சு. மன்னிக்கணும். செல்லம் என்றதும் மனசில் வந்தவைகளைச் சொல்லாமல் இருக்க முடியலை:(

    ReplyDelete
  8. வாழும் பொழுது மனிதனாகவே வாழ்ந்தால், சொர்க்கத்தினைப் பூமியிலும் காணலாம்.
    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றாரே இராமலிங்கஅடிகள்.
    விலங்குகளுக்கு மட்டுமல்ல தாவரங்களான புல், பூண்டு, செடிகளையும் போற்றிய இனம்தான் நம் இனம்.
    நன்றி ஐயா

    ReplyDelete
  9. நன்றியில்லா மனிதனே சொர்க்கத்தில் இடம் தேடும்போது, நன்றியும் விசுவாசமும் உள்ள செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் உண்டு என்பதை சொல்லாமால் சொல்கிறது உங்கள் பதிவு. தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. உங்கள் மேலான வலையின் கருத்துக்கள்
    இங்கு பிரகாசமாக இருக்கின்றன.
    www.wallposterwallposter.blogspot.in
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  11. இங்கு பிள்ளையில்லாதவர்கள், தனிமையில் வாடுவோர்
    செல்லப் பிராணியால் மனம் ஆறுதல் அடைகின்றனர் .
    மிக நல்ல ஆக்கம். மகிழ்வாக இருந்தது. வாசிக்க. இனிய நன்றி.
    நீண்ட காலமாக தங்களைக் காணோமே என் வலைப்பக்கம்.
    இனி பங்குனி இறுதியில் அல்லது சித்திரையில் தங்களிடம் வருவேன்.
    இனிய வாழ்த்துடன் வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // சாலை ஓரங்களில் கிடக்கும் மாண்டு கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் எடுத்து அடக்கம் செய்வதும் நல்லறம் என்று படித்திருக்கின்றேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நானும் நண்பர்களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.//

    நீங்கள் செய்த சேவைக்கு தலை வணங்குகிறேன்!

    // வீட்டில் வளரும் பிராணிகள் - நமக்கு நேரக்கூடிய பெருந்துன்பங்களைத் தம் நுண்ணுணர்வினால் அறிந்து அவைகளைத் தாமே தாங்கிக் கொள்வதாக ஒரு ஐதீகம் அந்த மாதிரியான பல நிகழ்வுகளைக் கண்டதும் உண்டு. அவ்வாறு தன்னை வளர்த்தவர்களின் அவஸ்தைகளைத் தாங்கிக் கொள்ளும் ஏனைய உயிரினங்களுக்குக் கிடைப்பது நல் முக்தியே அன்றி வேறெதுவாக இருக்க முடியும்!.. //

    நீங்கள் சொல்வது சரிதான்! இதனை எங்கள் வீட்டு செல்ல நாய் “ஜாக்கி” சில மாதங்களுக்கு முன்பு இறந்தபோது உணர்ந்து இருக்கிறேன்! மேலும் தனது மரணம் பற்றிய முன் அறிவிப்பை எப்படியோ தெரிந்து கொண்டு அதன் நடவடிக்கைளிலும் மாறுதல் தெரிந்தது என்பது சிலிர்க்க வைக்கும் விஷயம்..


    ReplyDelete
  13. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // வானவில் பாலம் வித்தியாசமான சிந்தனை..! //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said..

    .// மிகவும் அருமையான அழகான பதிவு தந்துள்ளீர்கள். காணொளியும் கண்டு ரஸித்தேன். மஹாபாரதத்தில் வரும் தருமர் பற்றிய கதையும் கொடுத்துள்ளது மேலும் சிறப்பு தான்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். //

    அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    //இன்றும் தங்களுக்கு நான் ஒரு மெயில் கொடுத்து அதுவும் திரும்ப வந்து விட்டது [As Undelivered]
    தாங்கள் எனக்கு ஒரு [TEST MAIL]மெயில் கொடுக்கவும். அதுவாவது எனக்கு வருகிறதா என நான் பார்க்கிறேன். //

    நான் உங்களுக்கு நேற்று ஒரு TEST MAIL அனுப்பி வைத்துள்ளேன். இன்ருகாலை சிறுகமணியில் உள்ள உறவினர் வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இப்போதுதான் வந்தேன். தாங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் மறுபடியும் பிரச்சினையா என்று தெரியவில்லை. ஓய்வாக இருக்கும்போது எனது மின்னஞ்சல் சம்பந்தப்பட்ட SETTINGS – ஐ பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // மனிதர்கள், மற்ற உயிரனங்கள் என்று பாரபட்சம் இல்லாமல், நாம் வாழும் பொழுதே சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்க முடியும். நாம் நடந்து கொள்ளும் விதங்களில், நாம் மற்றவர்களை நடத்தும் விதங்களில். //

    நன்றாகவே சொன்னீர்கள்! இருந்தாலும் சொர்க்கம் – நரகம், ஆன்மா என்று பேசும்போதும் எழுதும்போதும் அதிலும் ஒருவித லயிப்பு இருக்கத்தான் செய்கிறது. சின்ன வயதில் தேவதைக் கதைகளை ரசித்தது போல என்று வைத்துக் கொள்ளுங்கள். சகோதரர் ஜோதிஜி திருப்பூர் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // சந்தோசமோ, துயரமோ செல்லப் பிராணிகள் கூட நம்மிடத்தில் பங்கு கொள்கின்றன என்பதும், அவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது பல உள்ளன என்பதும் உண்மை... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் சொல்வதைப் பார்க்கும்போது அவரும் ஒரு செல்லப் பிராணியை மிகவும் நேசித்தது தெரிய வருகிறது. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > Bagawanjee KA said...

    // அறுபதாம் அகவையை எட்டியதும் ஆரம்பமாகி இருக்கும் இந்த ஆன்மீக ஆராய்ச்சி தொடரட்டும்! // த ம 3 //

    வயது இருபதாக இருந்தாலும் அறுபதாக இருந்தாலும் தத்துவம் பேசுவதற்கு வயது வரம்பு இல்லை! இந்த கட்டுரைக்கான குறிப்புகள், தமிழாக்கம் யாவும் எங்கள் வீட்டு செல்ல நாய் ஜாக்கி இறந்தபோது (ஐந்து மாதங்களுக்கு முன்பு ) செய்தது. இப்போதுதான் எடிட் செய்து வெளியிட நேரம் வந்தது.

    சகோதரர் K A பகவான்ஜீ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > துளசி கோபால் said...

    சகோதரி துளசி கோபால் அவர்களின் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி! ( ஐந்து மாதங்களுக்கு முன் எங்களை விட்டு மறைந்த செல்லநாய் ஜாக்கியின் நினைவாக எழுதும் இரண்டாவது பதிவு இது )

    // வானவில் பாலம் கதை அற்புதம்.
    நம் செல்லங்களைப்பற்றிய புத்தகம் ஒன்று 2010 வது வருடம் வெளிவந்தது.
    http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/blog-post_23.html

    புத்தகம் வெளிவருமுன் புதியபார்வை என்ற பத்திரிகையில் ஆறு பக்கங்களுக்கு ஒரு கட்டுரை வந்ததையும் சொல்லத்தான் வேணும்.
    http://thulasidhalam.blogspot.co.nz/2009/12/blog-post_22.html //

    நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பதிவுகளையும் அவசியம் சென்று பார்க்கிறேன்! தகவலுக்கு நன்றி!

    // இங்கே நம்ம நாட்டிலும்(நியூஸி) செல்லங்களைப் புதைக்கவோ எரிக்கவோ செய்யலாம்.கல்லறைத் தோட்டமும் க்ரெமடேரியம் வசதிகளும் உண்டு. எரியூட்டி முடிச்சதும் அழகான பெட்டியில் அஸ்தியை வைத்து, கூடவே செல்லத்தைப்பற்றிய எல்லா விவரங்களுடன் டெத் சர்ட்டிஃபிகேட், இரங்கல் கடிதம் வைத்து நம்ம வெட்னரி டாக்டருக்கு அனுப்பி வைப்பார்கள். நம்ம வெட்னரி ப்ராக்டீஸிலும் அழகான இரங்கல் அட்டையில் அங்கு வேலை செய்யும் அனைவரும் கையெழுத்துப்போட்டு நமக்கு ஒரு ஆறுதல் கடிதம் வைத்து நம்மிடம் தருவார்கள். வீட்டில் மனிதர்களின் மரணத்துக்குச் சமம் இது என்பதால் அதைப்பற்றிய புரிந்துணர்வோடு இவை நடக்கும். நம் வீட்டுச்செல்லங்களின் அஸ்தியை ரிஷிகேஷ் கங்கையில் கரைத்தோம்.//

    உங்கள் ஊர் செய்தியை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பதிவில் சொன்னதற்கு நன்றி!

    // பின்னூட்டம் நீண்டு போச்சு. மன்னிக்கணும். செல்லம் என்றதும் மனசில் வந்தவைகளைச் சொல்லாமல் இருக்க முடியலை //

    உங்கள் பின்னூட்டம் நீண்டதாக நான் நினைக்கவில்லை! ந்ல்லதோர் கருத்துரையாகவே எனக்கு ஆறுதல் தரும் ஒன்றாகவே நினைக்கிறேன்!

    ReplyDelete
  19. அண்ணா ..இங்கும் நிறைய பிராணிகளுக்கான கல்லறைகள் அவற்றில் வைக்க நினைவு சின்ன கற்கள் என்று நிறைய இருக்கு .பிராணிகள் வளர்ப்பது மனதுக்கு ஆறுதல் தான் ,இங்கே குழந்தைகளைபோலவே அவற்றை பராமரிக்கிறாங்க .
    எங்க பூனைகுட்டிக்கு தனி வாக்சிநேஷன் புக் கொடுக்கப்பட்டிருக்கு .அதில் அதன் பெயருடன் எங்க குடும்பபெயரை இணைத்துள்ளார்கள் :).

    Angelin.

    ReplyDelete
  20. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

    // வாழும் பொழுது மனிதனாகவே வாழ்ந்தால், சொர்க்கத்தினைப் பூமியிலும் காணலாம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றாரே இராமலிங்க அடிகள்.
    விலங்குகளுக்கு மட்டுமல்ல தாவரங்களான புல், பூண்டு, செடிகளையும் போற்றிய இனம்தான் நம் இனம்.
    நன்றி ஐயா // த.ம.4 //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // நன்றியில்லா மனிதனே சொர்க்கத்தில் இடம் தேடும்போது, நன்றியும் விசுவாசமும் உள்ள செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் உண்டு என்பதை சொல்லாமால் சொல்கிறது உங்கள் பதிவு. தகவல்களுக்கு நன்றி! //

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > sury Siva said...

    // உங்கள் மேலான வலையின் கருத்துக்கள்
    இங்கு பிரகாசமாக இருக்கின்றன.
    www.wallposterwallposter.blogspot.in //

    சுப்பு தாத்தா அவர்களின் அன்பான தகவலுக்கு நன்றி! அந்த வலைத்தளம் சென்று பார்க்கிறேன்!

    ReplyDelete
  23. மறுமொழி > kovaikkavi said...

    // இங்கு பிள்ளையில்லாதவர்கள், தனிமையில் வாடுவோர்
    செல்லப் பிராணியால் மனம் ஆறுதல் அடைகின்றனர் .
    மிக நல்ல ஆக்கம். மகிழ்வாக இருந்தது. வாசிக்க. இனிய நன்றி. //
    சகோதரி கவிஞரின் வேதா. இலங்காதிலகம் அவர்களின் தகவலுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // நீண்ட காலமாக தங்களைக் காணோமே என் வலைப்பக்கம்.
    இனி பங்குனி இறுதியில் அல்லது சித்திரையில் தங்களிடம் வருவேன். இனிய வாழ்த்துடன் வேதா. இலங்காதிலகம். //

    தமிழ்மணத்தில் உங்கள் கவிதைகள், கவிஞர் ரூபன் கவிதைகள், சகோதரி ரஞ்சனி நாராயணன் கட்டுரைகளை முதலிலேயே படித்து விடுவது வழக்கம். உங்கள் மூவரின் பதிவுகளும் மற்ற சிலரின் பதிவுகளும் WORD PRESS – இல் இருப்பதால் (கருத்துரை இடும்போது அதிக நேரம் ஆகும்) அப்புறம் எழுதுவது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு சிறு விபத்து. எனக்கு வலது கால், வலது கையில் அடி. எனவே சில நாட்களாகவே பதிவுகளைப் படிப்பதோடு சரி. நிறையபேருக்கு கருத்துரை எழுதவில்லை! இந்த பதிவு கூட ஐந்து மாதங்களுக்கு முன்பு தயார் செய்த குறிப்புகள்தான். எனவே மன்னிக்கவும்! மீண்டும் வருவேன்!



    ReplyDelete
  24. வித்தியாசமான ஆய்வு! சொர்க்கம், நரகம் என்பதே உண்டா என்பதே என் ஐயமாகும்!

    ReplyDelete
  25. மறுமொழி > Angelin. ( Cherub Crafts ) said...

    // அண்ணா ..இங்கும் நிறைய பிராணிகளுக்கான கல்லறைகள் அவற்றில் வைக்க நினைவு சின்ன கற்கள் என்று நிறைய இருக்கு .பிராணிகள் வளர்ப்பது மனதுக்கு ஆறுதல் தான் ,இங்கே குழந்தைகளைபோலவே அவற்றை பராமரிக்கிறாங்க .
    எங்க பூனைகுட்டிக்கு தனி வாக்சிநேஷன் புக் கொடுக்கப்பட்டிருக்கு .அதில் அதன் பெயருடன் எங்க குடும்பபெயரை இணைத்துள்ளார்கள் :).//

    சகோதரி ஏஞ்சலின் அவர்களின் தகவலுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // வித்தியாசமான ஆய்வு! சொர்க்கம், நரகம் என்பதே உண்டா என்பதே என் ஐயமாகும்! //

    புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி! சொர்க்கம், நரகம் பற்றிய ஆய்வு இல்லை! செல்லப் பிராணிகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான நம்பிக்கைகள்! அவ்வளவுதான்.

    ReplyDelete
  27. இந்த உலகில் இல்லாத சொர்கமும் நரகமுமா. இறந்தபின் என்னாவோமென்பதெல்லாம் கற்பனைகளே. அன்பு செய்வோம் மக்களுக்கும் மாக்களுக்கும்.

    ReplyDelete
  28. இந்த உலகத்தில் மனிதர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அன்பைப் பொழிவது இந்த செல்லப் பிராணிகள்தான். மனிதர்களுக்கு சொர்க்கம் அல்லது நரகம் இவற்றில் ஒன்றுதான். அது அவர்களுடைய இவ்வுலக வாழ்க்கையைப் பொருத்தது. ஆனால் செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் மட்டும்தான். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // இந்த உலகில் இல்லாத சொர்கமும் நரகமுமா. இறந்தபின் என்னாவோமென்பதெல்லாம் கற்பனைகளே. அன்பு செய்வோம் மக்களுக்கும் மாக்களுக்கும். //

    ஆம் அய்யா! எல்லாமே ஒரு நம்பிக்கைதான். கருத்துரை தந்த அய்யா GMB அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // இந்த உலகத்தில் மனிதர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அன்பைப் பொழிவது இந்த செல்லப் பிராணிகள்தான். மனிதர்களுக்கு சொர்க்கம் அல்லது நரகம் இவற்றில் ஒன்றுதான். அது அவர்களுடைய இவ்வுலக வாழ்க்கையைப் பொருத்தது. ஆனால் செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் மட்டும்தான். அருமையான பதிவு. வாழ்த்துக்கள். //

    அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > கே. பி. ஜனா... said... & வெங்கட் நாகராஜ் said...

    கருத்துரை தந்த சகோதரர்கள் இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  32. There are new studies that say otherwise
    on coffee consumption. Like I had mentioned earlier, turmeric is a powerful anti-inflammatory.
    If this has happened, then it is a good idea to
    set an example and find a way to stop.

    Also visit my site: What Causes High Blood Pressure

    ReplyDelete
  33. Great article, exactly what I was looking for.

    Also visit my blog: heroes of dragon age hack

    ReplyDelete
  34. பிறப்பு தொடர்பான மாணிக்கவாசகரின் பாடலை மேற்கோள் காட்டியமை மிகவும் பொருத்தமாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  35. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  36. தருமரும் தர்ம தேவதையுமான கதை எனக்கு புதியது.
    அந்த வானவில் பாதை எங்கோ முடிவற்று சென்றாலும் மிக அழகான ஓவியமாக‌ மனதைத் தொடுகிறது!

    தாமதமாகி விட்டாலும் வாழ்த்துக்கள் சொல்லாமல் இருக்க முடியவில்லை! மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  37. செல்லங்களைப்பற்றிய நல்ல ஆய்வு.

    ReplyDelete
  38. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரி மனோசாமிநாதன் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > மாதேவி said..

    நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்து கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி! தாங்கள் மீண்டும் வலைப் பதிவுகளில் எழுதவேண்டும்.

    ReplyDelete
  40. VGK சாரின் வலைப்பூவில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். முன்பு வலைச்சரத்தில் என்னைப் பற்றி எழுதியதையும் குறிப்பிட்டீர்கள்.
    மிக்க நன்றி ஐயா!

    vgk சாரின் வலைப்பூவின் இணைப்பு:
    http://www.gopu1949.blogspot.com/2014/03/vgk-06-02-03-second-prize-winners.html

    ReplyDelete
  41. செல்லப் பிராணிகள் தொடர்பான கதைகள் மிக அருமை.விலங்குகளுக்கு உற்ற நண்பர்களாக விளங்குவோம் என்ற ஆங்கிலக் கவிதை மிக அற்புதம் ஏற்கனவே தாங்கள் வளர்த்த செல்ல பிராணியைப் பற்றி உருக்கமான பதிவு எழுதி இருந்தீர்கள்

    ReplyDelete
  42. I always spent my half an hour to read this weblog's posts
    everyday along with a cup of coffee.

    My blog - colon cleanse weight loss

    ReplyDelete
  43. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    சகோதரரின் கருத்துரைக்கும், நன்றி தெரிவித்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  44. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // செல்லப் பிராணிகள் தொடர்பான கதைகள் மிக அருமை.விலங்குகளுக்கு உற்ற நண்பர்களாக விளங்குவோம் என்ற ஆங்கிலக் கவிதை மிக அற்புதம் //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    // ஏற்கனவே தாங்கள் வளர்த்த செல்ல பிராணியைப் பற்றி உருக்கமான பதிவு எழுதி இருந்தீர்கள் //

    எங்கள் வீட்டு ஜாக்கியைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! அப்போதே எழுதி வைத்த கட்டுரைதான் இது. இப்போதுதான் எடிட் செய்து இதனை வெளியிட நேரம் வந்தது. கருத்துரை தந்த சகோதரர் மூங்கிற் காற்று முரளிதரன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > Anonymous said... ( 1 )
    // I always spent my half an hour to read this weblog's posts
    everyday along with a cup of coffee.
    My blog - colon cleanse weight loss //

    அனானிமஸ் அவர்களுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தள முகவரியை க்ளிக் செய்தால்

    Site Not Published
    The site you are looking for has not been published

    – என்று திரையில் வருகிறது. சரியான முகவரியைத் தரவும்.

    ReplyDelete
  46. எஜமானர்கள் பூமியில் இறந்ததும் இந்த வானவில் பாலம் வழியே சொர்க்கத்திற்கு செல்ல வருகிறார்கள். அவ்வாறு வரும்போது தமது எஜமானர்களைக் கண்டவுடன் இந்த செல்லப் பிராணிகள் ஒரே ஓட்டமாக தாவிச் செல்கின்றன. எஜமானர் மீது சந்தோஷத்தால் தாவி குதிக்கின்றன. நாவால் நக்குகின்றன. அதன்பின் அவைகளும் தமது எஜமானர்களோடு வானவில் பாலம் வழியாக சொர்க்கத்திற்கு செல்லுகின்றன.//

    மிக அருமை. வானவில் பாலத்தில் காத்து இருக்கும் செல்லபிராணிகளைப்பற்றி படிக்கும் போது கண்களின் ஓரம் கண்ணீர்துளி.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  47. மறுமொழி > கோமதி அரசு said...

    //மிக அருமை. வானவில் பாலத்தில் காத்து இருக்கும் செல்லபிராணிகளைப்பற்றி படிக்கும் போது கண்களின் ஓரம் கண்ணீர்துளி. பகிர்வுக்கு நன்றி.//

    சகோதரி கோமதி அரசு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  48. வணக்கம் நலம் நலமறிய ஆவல். தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நேரம்இருப்பின் தென்றலுக்கு வருகை தரவும்.

    ReplyDelete
  49. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... &
    மறுமொழி > Sasi Kala said...

    தொடர்பதிவு எழுத அழைத்திட்ட சகோதரிக்கு நன்றி! தொடருகிறேன்.

    எனது வலைத்தளத்தில் முதல் தகவலைத் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மற்றும் சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  50. அருமை. என் மனது மகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  51. மறுமொழி > N.H.பிரசாத் said...

    // அருமை. என் மனது மகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி சார். //

    கருத்துரை தந்த சகோதரர் N.H.பிரசாத் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete