Saturday 1 March 2014

ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்!



எல்லாமே நேற்று நடந்தது போலவே இருக்கிறது! பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலைக்கு சேர்ந்தது, திருமணம் செய்தது, பிள்ளைகளைப் பெற்றது, அவர்களை வளர்த்தது,ஆளாக்கியது -  எல்லாமே இன்றுவரை ஒரு கனவாகவே தோன்றுகிறது! இத்தனை வருடங்கள் ஓடியது தெரியவில்லை. இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! எனது  பிறந்த தேதி 01.மார்ச்.1955

பிறப்பதற்கு முன் என்னவாக இருந்தோம்? இறந்து போனால் நமக்கு என்ன நடக்கும்? இப்போது நம்முடன் இருப்பவர்கள் நாளை நமது மரணத்திற்குப் பின் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்களா? நானும் முன்னோர் இடத்திற்குச் செல்வேனா? விடுபடாத பாசவலை! விடை தெரியாத கேள்விகள் ஓராயிரம்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றார்கள். நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான் என்றார்கள். ஆனால் நல்லவனும் வாழ்கின்றான். கெட்டவனும் வாழ்கின்றான். நல்லது இது, கெட்டது இது என்பதும், பாவம் என்பதும் புண்ணியம் என்பதும் மனிதர்களால் மனிதர்களுக்காக செய்யப்பட்ட கட்டுமானங்கள் போலவே உள்ளன. வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்கள் யாவும் வந்து போகும் காட்சிகளாகவே தோன்றுகின்றன.

இறைவன் இருக்கின்றானா? சில நிகழ்வுகள் யோசிக்க வைக்கின்றன. ஆனாலும் நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனது நிலைமை ஒன்றும் மோசமாகவும் இல்லை. அடுத்தவர்கள் துணை தேவைப்படாத உடல் நலத்துடன், போதும் என்ற மனத்துடனேயே இருக்கிறது. எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கின்றது. இறைவனுக்கு நன்றி! இனி வரக் கூடிய காலமும் இப்படியே ஓடி விட வேண்டும்  என்றே  இறைவனிடம் வேண்டுகின்றேன்!

நேற்றுதான் பிறந்தேன் வளர்ந்தேன்
படித்தேன் பணியமர்ந்தேன்

நேற்றுதான் திருமணம் செய்தேன்
பிள்ளைகள் பெற்றேன்
படிக்க வைத்தேன் ஆளாக்கினேன்

எல்லாமே நேற்றைய நிகழ்ச்சிகள்
ஆகி விட்டன! கனவே வாழ்க்கை!

நல்லது செய்தால்
நல்லது நடக்கும் எனறே
நானும் நம்பினேன

வந்த துன்பங்கள் வதைத்தபோது
எனக்கு மட்டுமே ஏனென்று
எண்ணி எண்ணி மாய்ந்தேன்

வெளியில் வந்தே பார்த்தேன்
எல்லோர் மனதிலும் இதேதான்

அவரவர் மனதினில் இங்கு
தான்தான் நல்லவன் என்றால்
கெட்டவர் எவருமே இல்லை!


வாழ்க்கை என்றால்? வலைச்சரத்தில்
நான் எழுதிய வரிகளை கீழே நினைவு கூர்கின்றேன்!    

நான் கல்லூரி படித்த நாட்களில் கிராமத்திற்கு சென்ற போது ரொம்பவும் வயதான பெரியவர்கள் பலரைப் பார்த்து இத்தனை நாள் இருந்ததில் நீங்கள் கண்டது என்ன?”  கேட்பேன். அவர்கள் சிரிப்பார்கள். சிரித்துக் கொண்டே என்னத்தைச் சொல்றது. ஒன்னும் இல்லை என்பார்கள்.

இப்போது அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன?” என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் தெரிகிறது. இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. இனிமையான நினைவுகளை நாம்தான் அசை போட்டு கொண்டு வர வேண்டியுள்ளது. ஒரு சங்க இலக்கியப் புலவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

இன்னாது அம்ம,
இவ் உலகம்;
இனிய காண்க,
இதன் இயல்பு உணர்ந்தோரே
                     - பக்குடுக்கை நன்கணியார்  ( புறநானூறு 194 )


                                                 ( Picture above thanks to http://kaninitamilan.in )




(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)

56 comments:

  1. இனிய நினைவுகளை அசை போட அசை போட... மற்றனைத்தும் மறைந்து மறந்து போக வேண்டும்...

    கவியரசரின் வரிகளே போதும் ஐயா...

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    (இன்று எனது மூத்த அண்ணனுக்கும் பிறந்தநாள்)

    ReplyDelete
  2. அறுபது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்பார்கள். நாம் இதுவரை செய்ய நினைத்து செய்ய முடியாதவைகள் பலவற்றையும் செய்து முடிக்கவும் அனுபவிக்க முடியாமல் போனவைகளை அனுபவிக்கவும் ஏற்ற வயது இதுதானாம். ஆகவே அனுபவியுங்கள். Welcome to 60+ club!!

    ReplyDelete
  3. தி.தமிழ் இளங்கோ சார்,

    சிக்ஸ்டீ(ன்) நீங்க!,வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. அகவை அறுபதில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்! பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுகிறேன். முத்தாய்ப்பாக பக்குடுக்கை நன்கணியார் மற்றும் கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளை தந்து பதிவை முடித்திருப்பது அருமை.

    ReplyDelete
  6. மறுமொழி .> ( 1 )

    மேலே வாழ்த்துரையும்,கருத்துரையும் சொன்ன

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன்.
    அய்யா டி.பி.ஆர்.ஜோசப்,
    வவ்வால் சார்,
    சகோதரர் என் பக்கிரிசாமி,
    அய்யா வே நடனசபாபதி

    ஆகிய அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு
    என்றும் துணையிருந்து
    நல்லன எல்லாம் அருள்வனாக!..

    இனிமையான நினைவுகள் தங்களின்
    உள்ளமெங்கும் இல்லமெங்கும் நிறைவதாக!..

    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  9. 60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    மிகவும் சரியான வழியில் உங்கள் சிந்தனை இருக்கிறது, மகிழ்ச்சி. ஏன் என்றால் எத்தனை வயது ஆனாலும் யாரை ஏமாற்றி பொருள் சேர்க்கலாம் என்று குறுக்கு வழி பற்றியே சிந்திக்கும் எண்ணற்றோர் மத்தியில், "வாழ்ந்து என்ன சாதித்தேன், வாழ்க்கை வெறுமையாகத் தோன்றுகிறதே" என்ற சிந்தனை அபூர்வம், அது தங்களுக்கு வந்திருப்பது நல்லதே.

    நாம் சாதிப்பது அத்தனையும் பூஜ்ஜியங்கள், அதாவது கல்வி ஒரு "0", நல்ல வேலை, இன்னொரு "0", பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு ஆளாக்குவது மற்றொரு "0" என்று பூஜ்ஜியங்கள் சேருகின்றன. இவற்றோடு, இறைவனை அறிந்து கொள்வதில் வெற்றில் கொண்டால் அது 1, அந்த ஒன்றோடு இந்த பூஜ்ஜியங்கள் சேர்ந்தால் 10, 100, 1000 என மதிப்பளிக்கும். அது இல்லாத பட்சத்தில் 0, 00, 000 என பூஜ்ஜியங்களாகவே நின்று போகும்.

    இறைவனைப் பற்றி அறிய முற்படுபவர் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும், அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது. இதை சிலர் விரைந்து உணர்கிறார்கள், சிலர் கால தாமதமாக தெரிந்துகொள்கிறார்கள், பலர் 89 வயதானாலும் இன்னமும் கொள்ளையடிக்க வழி ஏதாவது இருக்கிறதா என்று தேடிக்கொண்டே இருப்பார்கள்.

    தாங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்!!

    ReplyDelete
  10. வணங்குகிறேன் ஐயா!

    ReplyDelete
  11. //எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கின்றது. //

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகாதம

    பொருள் சொன்ன பரிமேலழகர்
    நமக்கு ஊழல்லாத பொருள்கள் வருத்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம். ஊழால் தமவாகிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்ச்சொரித்தாலும் தம்மை விட்டு போகா

    என்று விளக்கம் அளித்து,
    நமக்கு எது கிடைக்குமோ அது கிடைக்கும் என சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது.

    60 வது ஆண்டு துவக்கமா ? நிறைவா ?

    இந்த 72 வயதனாவனின் வாழ்த்துக்கள்.

    மகிழ்ச்சி நம் வயத்தில் தான் கைகளில் தான் இருக்கிறது.

    வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்னும் வள்ளுவன் குரல் படி,

    வகுத்தவன் வகுத்த வாழ்வினை
    மன அமைதியுடன் மகிழ்வுடன்
    வாழ்ந்திட,
    திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும்
    உச்சி பிள்ளையார் எல்லாம் உங்களுக்கு அருள் புரிவார்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    (உங்கள் லேன்ட் லைனுக்கு பல முறை முயர்ச்சித்தும் யாரும் தொலை பேசியை எடுக்கவில்லையே ?? )

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா....இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. மறுமொழி .> ( 2 )

    மேலே வாழ்த்துரையும்,கருத்துரையும் தந்த

    சகோதரர் துரை செல்வராஜூ,
    சகோதரர் ஜெயதேவ் தாஸ்,
    சகோதரி ராஜி,
    சுப்பு தாத்தா,
    சகோதரி ஆதி வெங்கட்

    ஆகிய அனைவருக்கும் நன்றி!

    சுப்பு தாத்தா அவர்களுக்கு, எனது மனைவி BSNL ஊழியர். எனவே உங்களுக்கு மட்டுமல்ல வலைப்பதிவர் யாருக்கும் நான் எங்கள் வீட்டு போன் நம்பரைத் தந்ததாக ஞாபகம் இல்லை.

    ReplyDelete
  14. மறுமொழி .> ( 3 )

    கூகிள் கணக்கில் கடவுச் சொல் கொடுத்து, உள் நுழைந்தவுடன் அவர்கள் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கான படத்தை வெளியிட்டு இருந்தார்கள். கூகிள் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இதுபோல் வாழ்த்துக்களைத் தருகிறது. புதுமை புரியும் கூகிளுக்கு நன்றி! இன்று என்னோடு பிறந்தநாள் காணும் அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!







    ReplyDelete
  15. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  16. இளமையில் கடமை தடுக்கும்
    இன்னல்கள் பலவும் இருக்கும்
    சுயநலம் பார்க்கா மனதின்
    சுமைகளும் ஓரம் கட்ட

    அறுபதில் இன்பம் பிறக்கும்
    அனைத்தையும் அறியத் துடிக்கும்
    குழந்தையின் அடுத்த பருவம் இதில்
    குறைவிலா தின்பம் சூழ்க !....

    அம்பாளடியாளின் அன்பு நிறைந்த நல்
    வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  17. நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா, மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இன்று அறுபதை எட்டிய இளைஞர் என்று நினைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் வாழ்த்துகள்.

    மேலும் பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்யத்துடன் மிகச்சிறப்பாக வாழ்க !

    அன்புடன் VGK

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.... நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர் என்பதை தங்களது பல பதிவுகளில் படித்து அறிந்துள்ளேன்... தங்களது நல்ல மனதுக்கு பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்.... நன்றி ஐயா..

    ReplyDelete
  20. திண்டுக்கல் தனபாலன் said...
    இனிய நினைவுகளை அசை போட அசை போட... மற்றனைத்தும் மறைந்து மறந்து போக வேண்டும்...

    கவியரசரின் வரிகளே போதும் ஐயா...

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    (இன்று எனது மூத்த அண்ணனுக்கும் பிறந்தநாள்)
    1 March 2014 10:29///

    இன்று எனது பீத்த அண்ணனுக்கும் பிறந்தநாள்.

    ReplyDelete
  21. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. மேலே வாழ்த்துரையும்,கருத்துரையும் தந்த

    சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி,
    சகோதரி கவிஞர் அம்பாளடியாள்,
    வேகநரி அவர்கள்,
    மரியாதைக்குரிய VGK அவர்கள்,
    சகோதரர் ஸ்கூல் பையன்,
    Anonymous.1 அவர்கள்,
    சகோதரர் வியாசன் அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  23. வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் !
    படிக்கும் பதிவுகள் அனைத்திற்கும் வோட்டளிப்பது உங்களிடம் நான் கற்ற பாலபாடம் அய்யா !
    த ம 6

    ReplyDelete
  24. வாழ்க்கை வாழ்வதற்கே! அறுபது என்பது ஒரு எண் என்பதை தவிர வேறு ஏதும் இல்லை!
    ஒரு முறை பிறக்கிறோம் ஒரு முறை இறக்கிறோம்---அதை நினைவில் கொள்ளுங்கள்; enjoy your life.

    ReplyDelete
  25. ஏழாவது ஒட்டு போட்டு தமிழ்மணம் வாசகர் பகுதில் ஏற்றியுள்ளேன்.

    கோவிலுக்கு போகணும் என்றால் போங்கள்--உண்டியலில் காசு போடாதீர்கள்; அதே சமயம் அறுபது வயது ஆனால், பண்டாரமா ஆகனும் என்ற நியதி ஒன்றும் கிடையாது!

    ReplyDelete
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் பல உயரமடைய வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு அவயடக்கம் அதிகம்- நீங்களே எதையும் சாதிக்வில்லையெனில், என் நிலையை எண்ணிச் சிரித்தேன்.
    உங்களுக்கு 59+,

    ReplyDelete
  27. மறுமொழி .> ( 5 )
    மேலே வாழ்த்துரையும்,கருத்துரையும் தந்த,

    சகோதரர் பகவான்ஜீ K.A,
    சகோதரர் நம்பள்கி,
    சகோதரர் யோகன் பாரிஸ்

    ஆகிய அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  28. 60 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  29. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    என்னுடைய 60 ஆவது பிறந்த நாளில்
    எனக்கேற்பட்ட சிந்தனைகளை நினைவுறுத்திப் போனது
    தங்கள் அற்புதமான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. மன்னிக்க வேண்டும் அய்யா, இன்றுதான் பார்த்தேன் தங்களின் நேற்றைய பதிவை. அருகில் (திருச்சி-புதுக்கோட்டை) இருப்பதால் நாம் விரைவில் நேரில் சந்திப்போம். இப்போது பிடியுங்கள் எனது -தாமதமானாலும், அன்பில் குறையாத- வாழ்த்துகளையும் வணக்கங்களையும். நீங்கள் எழுதிய ”எனது நிலைமை ஒன்றும் மோசமாகவும் இல்லை. அடுத்தவர்கள் துணை தேவைப்படாத உடல் நலத்துடன், போதும் என்ற மனத்துடனேயே இருக்கிறது. எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கின்றது”- என்னும் வரிகள் சாதாரணமானவை அல்ல. பெரிய பெரிய கோடீஸ்வரர்களும் தேடிக் கிடைக்காத திருப்திஉணர்வு இது! அய்யா நீங்கள் தான் உண்மையில் கோடீஸ்வரர். நன்றாக இருப்பீர்கள். என் வணக்கம். நன்றி. (தங்கள் தொலைபேசி எண் தந்தால் தொடர்பு கொள்வேன் - எனது எண்-94431 93293)

    ReplyDelete
  31. எங்க ஊரு கணக்குக்கு உங்களுக்கு 59 வயசுதான் இப்போ. அது வரும் ஃபிப்ரவரி 28 நாள்வரையும் அம்பத்தியொன்பதேதான்:-)))))

    அடுத்த வருசம் மார்ச் ஒன்னாம்தேதிதான் அறுபதுக்கு அறுபது! இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  32. அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கடந்துபோன கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து, இனிமையானவற்றை மட்டுமே நினைக்க முயலுங்கள். கசப்பான நிகழ்வுகளால்/ நினைவுகளால் உங்களுக்கும் பயனில்லை. இவைகளைப்பற்றி பேசுவது பிறருக்கும் பிடிப்பதில்லை. உங்கள் மனமும் கசந்து மற்றவர்களையும் வருத்தப்படும்படி செய்யாமல், முடிந்தவரை இனிமையாக மனதை வைத்திருங்கள். இனிமையானவற்றை மட்டுமே பேசுங்கள்.
    நான் கடைபிடித்துவரும் இதனை உங்களுக்குச் சொல்லுவதில் எனது மனதுக்கு திருப்தி. நம்முடைய கசப்பு அனுபவங்கள் நம்முடனே போகட்டும்.
    மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வயதில் மன ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம்.

    நான் சொல்லியிருப்பதை சரியான விதத்தில் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,'
    ரஞ்சனி

    ReplyDelete
  33. மறுமொழி .> ( 6 )
    மேலே வாழ்த்துரையும்,கருத்துரையும் தந்த,

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்.
    கவிஞர் எஸ் ரமணி,
    சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம்,
    ஆசிரியர் ரா முத்துநிலவன்,
    சகோதரி துளசி கோபால்,
    சகோதரி ரஞ்சனி நாராயணன்

    ஆகிய அனைவருக்கும் நன்றி!



    ReplyDelete
  34. சகோதரி ரஞ்சனி நாராயணன் சொன்ன

    // கடந்துபோன கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து, இனிமையானவற்றை மட்டுமே நினைக்க முயலுங்கள். கசப்பான நிகழ்வுகளால்/ நினைவுகளால் உங்களுக்கும் பயனில்லை. இவைகளைப்பற்றி பேசுவது பிறருக்கும் பிடிப்பதில்லை. உங்கள் மனமும் கசந்து மற்றவர்களையும் வருத்தப்படும்படி செய்யாமல், முடிந்தவரை இனிமையாக மனதை வைத்திருங்கள். இனிமையானவற்றை மட்டுமே பேசுங்கள்.//

    //நான் கடைபிடித்துவரும் இதனை உங்களுக்குச் சொல்லுவதில் எனது மனதுக்கு திருப்தி. நம்முடைய கசப்பு அனுபவங்கள் நம்முடனே போகட்டும். //

    //மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வயதில் மன ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம்.//

    - என்ற அறிவுரைகளை என்றும் மறவேன். சகோதரிக்கு நன்றி!






    ReplyDelete
  35. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. I SEARCHED IN THE DIRECTORY OF BSNL and FOUND THE NUMBER FOR TAMIL ILANGO. I DO NOT KNOW WHETHER THE NUMBER BELONGS TO YOU OR YOUR FAMILY MEMBERS. TODAY I RE TRIED THIS AND GOT NO ANSWER.
    THERE IS NO RESPONSE.
    PERHAPS THAT NO TO WHICH I RANG UP DOES NOT BELONG TO YOU.
    SUBBU THATHA

    ReplyDelete
  37. அன்பின் இளங்கோ ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது. INTROSPECTION அவசியம் வாழ்த்துக்கள். நானும் முதுமையின் பரிசு என்று எழுதி இருக்கிறேன். அட்வாண்டேஜெஸ் தெரிகிற மாதிரி. படித்துப் பாருங்களேன்.
    gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html

    ReplyDelete
  38. மறுமொழி > sury Siva said... (2)
    சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கம்! லேண்ட் லைனில் எனது பெயரில் போன் கிடையாது. சந்தர்ப்பம் வரும்போது நானே உங்களிடம் பேசுகிறேன்!

    ReplyDelete
  39. மறுமொழி > G.M Balasubramaniam said...

    //அன்பின் இளங்கோ ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது. INTROSPECTION அவசியம் வாழ்த்துக்கள். நானும் முதுமையின் பரிசு என்று எழுதி இருக்கிறேன். அட்வாண்டேஜெஸ் தெரிகிற மாதிரி. படித்துப் பாருங்களேன்.
    gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html //

    அய்யா GMB அவர்களின் ஆசீர்வாதத்திற்கு நன்றி! உங்கள் பதிவிற்கு சென்று பார்க்கிறேன்!


    ReplyDelete
  40. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

    ReplyDelete
  41. ***இறைவனைப் பற்றி அறிய முற்படுபவர் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும், அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது. ***

    வந்தா, பொறந்த நாள் வாழ்த்து வாழ்த்திட்டு போகாமல், கடவுள் பக்தர் ஆரம்பிச்சுட்டாரு.. நான் யோக்கியன்! கடவுளை வணங்காதவன் எல்லாம் அயோக்கியன்னு! இதென்ன புதுமாதிரியான வியாதியா என்ன? அவனுக வாழ்க்கை எல்லாம் வெறுமை! பக்தன் என் வாழ்க்கைதான் புதுமை. பதுமைனு சொல்லிக்கிட்டு..வெட்கமே இல்லாமல் உங்களுக்கே நீங்க எப்படிப்பா சான்றிதழ் வழங்கிக்கிறீங்க?


    ***நாம் சாதிப்பது அத்தனையும் பூஜ்ஜியங்கள், அதாவது கல்வி ஒரு "0", நல்ல வேலை, இன்னொரு "0", பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு ஆளாக்குவது மற்றொரு "0" என்று பூஜ்ஜியங்கள் சேருகின்றன. இவற்றோடு, இறைவனை அறிந்து கொள்வதில் வெற்றில் கொண்டால் அது 1, அந்த ஒன்றோடு இந்த பூஜ்ஜியங்கள் சேர்ந்தால் 10, 100, 1000 என மதிப்பளிக்கும். அது இல்லாத பட்சத்தில் 0, 00, 000 என பூஜ்ஜியங்களாகவே நின்று போகும்.***

    செம காமடி!!! நான் சாதித்ததுனு உங்களைப் பத்தி சொல்லிட்டுப் போங்கப்பா! "நாம்"னு எதுக்கு எல்லாரையும் சேர்த்துக்கிட்டு??

    தி தமிழ் இளங்கோ அவர்களே!

    உங்களுக்கு 59 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன ஒரு வயதை கூட்டிச் சொல்றீங்க?!

    நீங்க ஆத்திகரோ, நாத்திகரோ, அது எனக்கு முக்கியமில்லை! ஏன் இப்படி ஜெயதேவ் போன்ற ஆட்களை இஷ்டத்துக்கு பேச விடுறீங்கனு தெரியலை! :(

    ஆமா, உங்க தப்புதான் இது!


    ReplyDelete
  42. மறுமொழி > வருண் said...

    சகோதரர் வருண் அவர்களது நீண்ட கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றி!

    ஜெயதேவ் X வருண் – உரையாடல்களை அடிக்கடி பதிவுகளில் படிக்கும்போது இருவரிடமிருந்தும், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    // தி தமிழ் இளங்கோ அவர்களே! உங்களுக்கு 59 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன ஒரு வயதை கூட்டிச் சொல்றீங்க?! //

    வருண் அவர்களே! அவசரப்பட வேண்டாம்! இந்த பதிவின் தலைப்பை நன்றாகப் படியுங்கள். ” ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! ” – இதுதான் தலைப்பு. எனக்கு வயது அறுபது என்றோ அல்லது அறுபதாவது பிறந்தநாள் என்றோ எனது பதிவில் குறிப்பிடவில்லை. பதிவில் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தபோது வந்த தலைப்புதான் இது.

    // நீங்க ஆத்திகரோ, நாத்திகரோ, அது எனக்கு முக்கியமில்லை! ஏன் இப்படி ஜெயதேவ் போன்ற ஆட்களை இஷ்டத்துக்கு பேச விடுறீங்கனு தெரியலை! ஆமா, உங்க தப்புதான் இது! //

    நான் இறை நம்பிக்கை உள்ளவன்தான், உங்களைப் போலவே அவரும் எனக்கு வலைப் பதிவில் அறிமுகமான ஒரு பதிவர்தான். எனது பதிவினில் அவருடைய வாழ்த்தையும் கருத்தையும் சொன்னார். இதில் தப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.



    ReplyDelete
  43. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...... //

    சகோதரரின் வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  44. ***அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது****

    So, according to him, my life (who is not a BELIEVER) is just like "animals life"? That's what Mr. Jeyadev is implying here.

    Mr. Ilango seems to agree with that statement!

    I wonder who is Jeyadev, to talk about MY LIFE? And compare that with ANIMALS" life?

    Thank you very much, Mr. thamizh Ilango avargaLe!

    BTW, I know you are much older than me, sometimes I need to explain things even to my mom and dad and grandparents too! Take it easy, Mr. Ilango!

    ps: My tamil fonts had a small glitch and so I had to write in English. My apologies for that.

    ReplyDelete
  45. மறுமொழி > வருண் said...

    // ***அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது****

    So, according to him, my life (who is not a BELIEVER) is just like "animals life"? That's what Mr. Jeyadev is implying here.

    Mr. Ilango seems to agree with that statement! //

    அன்புள்ள வருண் அவர்களுக்கு! சகோதரர் ஜெயதேவ் தாஸ் என்னுடைய பதிவில் வந்து பொதுவாகச் சொன்னதெல்லாம் உங்களுக்காக சொன்னது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்.?

    // I wonder who is Jeyadev, to talk about MY LIFE? And compare that with ANIMALS" life? Thank you very much, Mr. thamizh Ilango avargaLe!
    BTW, I know you are much older than me, sometimes I need to explain things even to my mom and dad and grandparents too! Take it easy, Mr. Ilango!
    ps: My tamil fonts had a small glitch and so I had to write in English. My apologies for that. //

    ஆத்த மானார் அயலவர் கூடி
    நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

    என்று பாடுகிறார் மாணிக்க வாசகர் (திருவாசகம் - போற்றித் திருஅகவல் ) இதனால் இவர் என்னைப் பற்றித்தான் சொல்கிறார் என்று யாரேனும் சண்டைக்கு செல்ல முடியுமா?

    வலைப்பதிவில் அவரவர் எண்ணங்களைச் சொல்கிறார்கள். நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். மற்றவர் சொல்வதெல்லாம் நமக்குத்தான் என்று நாம் எடுத்துக் கொளவது என்பது சரியாகத் தெரியவில்லை.













    ReplyDelete
  46. மாணிக்கவாசகர்னா என்ன சார், இல்லைனா இறையனார்னா என்ன சார்? தான் ஆத்திகனாக இருக்கும்போது நாத்திகர்களை தேவையே இல்லாமல் இகழ்வது தவறு. மாணிக்கவாசகர், இல்லைனா பகவான் கிருஷ்ண பரமாத்மாவே வந்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லி பின்னூட்டுமிட்டுவிட்டு போவதைவிட்டுவிட்டு இதுபோல் நாத்திகர்களை ஆடு மாடுகளுக்கு சமம்னு சொல்லி இருந்தால், ஜெயதேவை விமர்சித்ததுபோல அவர்களை விமர்சித்துத்தான் இருப்பேன்.

    யாருனா என்ன சார்? அடுத்துவர்களை இறக்கி தன்னை உயர்வாக சொல்லிக்கொள்பவன் அனாகரிகமானவன். அவர்களை எனக்குப் பிடிக்காது.

    நீங்க சொல்றதைப் பார்த்தால்

    தமிழனை திட்டினால் உனக்கென்ன?

    இந்தியனை திட்டினால் உனக்கென்ன?

    தமிழைத் இகழ்ந்தால் உனக்கென்ன?

    னு உங்களையும், தமிழனையும் பிரித்து, உங்களையும் இந்தியனையும் பிரித்து, உங்களையும் தமிழையும் பிரித்து, நீங்க பாட்டுக்குப் போயிடுவீங்க போல. :)

    எல்லாருக்கும் உங்களைப் போல் பக்குவமோ, வயதோ, அனுபவமோ அடைய வில்லை பாருங்க. அதான் ...

    சரி விடுங்க. நீங்க தொடர்ந்து என்னை முட்டாள் னு சொல்லாமல் சொல்லப் போறீங்க. அதனால் என்ன இப்போ?
    உங்க வரிகள்..

    ****இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. ****

    எனக்கெல்லாம் அப்படி நிழலாடாது. துரோகம் செய்தது, அவமானப்படுத்தியது, ஏமாற்றியது எல்லாம் இன்னொருவ்ர்தானே? நான் இல்லையே? நான் எதுக்காக கவலைப்படனும்? அது அவருடைய பிரச்சினை..


    OK Sir, I am glad I could get to know you from this "argument" or "debate" or whatever you wish to call. My time well spent as I know about you bit more now and I promise I would carefully keep away from you and let you live happily in the blog world! Thanks :)

    ReplyDelete
  47. மறுமொழி > வருண் said... ( 3 )

    சகோதரர் வருண் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    // மாணிக்கவாசகர்னா என்ன சார், இல்லைனா இறையனார்னா என்ன சார்? தான் ஆத்திகனாக இருக்கும்போது நாத்திகர்களை தேவையே இல்லாமல் இகழ்வது தவறு. மாணிக்கவாசகர், இல்லைனா பகவான் கிருஷ்ண பரமாத்மாவே வந்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லி பின்னூட்டுமிட்டுவிட்டு போவதைவிட்டுவிட்டு இதுபோல் நாத்திகர்களை ஆடு மாடுகளுக்கு சமம்னு சொல்லி இருந்தால், ஜெயதேவை விமர்சித்ததுபோல அவர்களை விமர்சித்துத்தான் இருப்பேன். //

    நீங்கள் ஒரு நல்ல விமர்சகர்தான்! நானும் ஒரு காலத்தில் நாத்திகனாக இருந்தவன்தான்!


    // யாருனா என்ன சார்? அடுத்துவர்களை இறக்கி தன்னை உயர்வாக சொல்லிக்கொள்பவன் அனாகரிகமானவன். அவர்களை எனக்குப் பிடிக்காது.//

    உங்கள் பதிவுகளின் தலைப்புகளிலேயே பார்த்தேன்!

    // நீங்க சொல்றதைப் பார்த்தால் தமிழனை திட்டினால் உனக்கென்ன? இந்தியனை திட்டினால் உனக்கென்ன?
    தமிழைத் இகழ்ந்தால் உனக்கென்ன?னு உங்களையும், தமிழனையும் பிரித்து, உங்களையும் இந்தியனையும் பிரித்து, உங்களையும் தமிழையும் பிரித்து, நீங்க பாட்டுக்குப் போயிடுவீங்க போல. :) //

    என்னுடைய வேலை அதுவல்ல! அதற்கென்று பதில் கூற நிறைய பேர் இருப்பதால், நான் அந்த வேலையை எடுத்துக் கொள்வதில்லை.

    // எல்லாருக்கும் உங்களைப் போல் பக்குவமோ, வயதோ, அனுபவமோ அடைய வில்லை பாருங்க. அதான் ... //

    பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்த கதைதான்.

    // சரி விடுங்க. நீங்க தொடர்ந்து என்னை முட்டாள் னு சொல்லாமல் சொல்லப் போறீங்க. அதனால் என்ன இப்போ?
    உங்க வரிகள்..//

    நிச்சயம் உங்களைப் போல எடுத்தெறிந்து பேச மாட்டேன்!

    // ****இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. ****

    எனக்கெல்லாம் அப்படி நிழலாடாது. துரோகம் செய்தது, அவமானப்படுத்தியது, ஏமாற்றியது எல்லாம் இன்னொருவ்ர்தானே? நான் இல்லையே? நான் எதுக்காக கவலைப்படனும்? அது அவருடைய பிரச்சினை.. //

    நல்ல விமர்சனம்!

    // OK Sir, I am glad I could get to know you from this "argument" or "debate" or whatever you wish to call. My time well spent as I know about you bit more now and I promise I would carefully keep away from you and let you live happily in the blog world! Thanks :) //

    நன்றி! உங்களுடைய பயணம் வெல்லட்டும்!


    ReplyDelete
  48. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. //தான்தான் நல்லவன் என்றால்கெட்டவர் எவருமே இல்லை!//

    உண்மையிலும் உண்மை!

    ReplyDelete
  50. மறுமொழி > மாதேவி said...
    // இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். //

    சகோதரி மாதேவி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  51. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  52. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  53. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!

    ReplyDelete