Thursday 19 September 2013

” தி இந்து “ – ஒரு பார்வை



ஆங்கில நாளிதழ்களில் “ THE HINDU  விற்கு என்றுமே தனி இடம் உண்டு. அரசு அலுவலகமாக இருந்தாலும் தனியார் நிறுவனம் என்றாலும் நூலகங்களிலும் இன்றும் முதலிடம் வகிப்பது. முதன் முதல் வேலைக்கான நேர்காணலுக்கு (Interview) நான் சென்ற போது எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை இன்றைய ஹிண்டுவை ஒருதடவை பார்த்து விட்டுப் போஎன்பதுதான். நான் வேலைக்குச் சேர்ந்த பிற்குதான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என்னதான் சில அரசியல் கட்சி நண்பர்கள் அதைப் பற்றி விமர்சனம் செய்தாலும் தமிழர்களிடையே “ THE HINDU  விற்கு என்றும் வரவேற்பு உண்டு. எங்கள் வீட்டிலும் தினமும் வாங்கும் பத்திரிகைகளில் ஆங்கிலம் இது மட்டுமே.

இந்துவின் தமிழ் பத்திரிகை முதலில் காமதேனு “ என்ற பெயரில் வருவதாக இருந்தது. அப்படி வைத்து இருந்தால் ஏதோ ஒரு ஆன்மீகப் பத்திரிகை என்றுதான் மக்கள் நினைத்து இருப்பார்கள். “தி இந்து“ என்பதால் “ THE HINDU  என்ற ஆங்கிலப் பத்திரிகையின் வடிவம் மனதில் தாக்கம் ஏற்படுத்துவதை உணர முடிகிறது. ஆங்கில நாளிதழ் வெளியீட்டாளர்கள் தங்கள் பாரம்பரியம் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, தமிழ் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்துஎன்று வைத்தாலும் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.

முதல் நாள் முதல் வெளியீடு:

பேப்பர் போடும் தம்பியிடம் சொல்லி ஆங்கில ஹிண்டுவோடு தமிழ் இந்து நாளிதழையும் போடச் சொல்லி இருந்தேன். இந்துவின் முதல் வெளியீடு (16 செப்டம்பர் 2013 ) வந்ததும் ஆர்வமாகவே வாங்கிப் படித்தேன். முதல் நாள் என்பதால் அன்று வந்த “தி இந்து“ வில் பக்கங்கள் அதிகமாகவும் சில சிறப்பு இணைப்புகளும் இருந்தன. முதல் பதினாறு பக்கங்களில் இனி வரும் நாட்களில் பத்திரிகையின் அமைப்பு இப்படித்தான் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. முதற்பக்கம் முக்கிய செய்தி. ஊர்வலம் என்ற பகுதியில் உள்ளூர் பதிப்பின் செய்திகள். இங்கு திருச்சியில் அவர்களது திருச்சி பதிப்பு செல்லும் இடங்களுக்கான செய்திகளை கவர் செய்து ஊர்வலம் செய்து இருந்தார்கள். மற்றைய ஊர் பதிப்புகளும் இவ்வாறே இருக்கும் என்று நினைக்கிறேன். தலையங்கம், கார்ட்டூன் , கட்டுரைகள் என்று சிறப்பாகவே இருந்தன. ரிலாக்ஸ் என்று முழு பக்கத்தில் தமிழ் மக்களின் விருப்பமான சினிமா செய்திகள்..BUSINESS LINE  பக்கம்வரும் செய்திகளை அனைத்து தரப்பினரும் விரும்புவர். இன்னும் ஜோதிடம், விளையாட்டு இவைகள். 

  
இலவச இணைப்பாக முதல் நாள் முதலிடம் நோக்கி என்று தமிழகம் பற்றிய கட்டுரைகள் மற்றும் மண் மணக்குது என்ற தலைப்பில் உள்ளூர் பற்றியவை.

அடுத்தடுத்த நாட்கள்:

அடுத்தடுத்த நாட்களிலும் எதிர்பார்த்தபடியே சிறப்பாக இருந்தது.
முதல்நாள் பத்திரிகை என்பதால் “தி இந்து“ முழுக்க முழுக்க கட்டுரைகளின் ஆதிக்கமாகவே இருந்தது. செய்தித் தாளாக இல்லை. வாரப் பத்திரிகை செய்தித்தாள் வடிவில் வந்தது போல் இருந்தது. அடுத்த நாட்களில் இந்த குறையை நீக்கி இருந்தார்கள். ஆனாலும் செய்திகள்,  கட்டுரைகள் படிப்பது போன்ற உணர்வையே பிரதிபலிக்கின்றன. சாதாரண வாசகனுக்கு சலிப்பு தரும் விஷயம். இனி வரும் நாட்களில் இந்த குறையை நீக்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். நேற்று (புதன்கிழமை) மாயா பஜார் என்று குழந்தைகளுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக வாசகர் விரும்பும்  எல்லா அம்சங்களும் வந்து விடும்.

கட்டுரைகள் அனைத்தையும் வந்தவுடனேயே படிக்க நேரமில்லை. அப்புறம் சாவகாசமாகத்தான் உட்கார்ந்து படிக்க முடிந்தது.

 
விளம்பரங்கள்: 

விளம்பரங்களும் நன்றாகவே வடிவமைக்கப்பட்டு தெளிவாக இருந்தன. தமிழ் வெளியீடு வருவது பற்றிய விளம்பரத்தினை நன்றாகவே மக்களிடம் ஒருவித எதிர்ப்பார்ப்பு உண்டாகும் விதமாக  செய்து இருந்தார்கள். இனி வரும் நாட்களில் திருமண தகவல் (MATRIMONIAL) விளம்பரங்களை நிச்சயம் பார்க்கலாம்.

தமிழ் பத்திரிகை உலகில் “தி இந்து“ ஒரு மைல்கல். இதுவரை மெத்தப் படித்த மக்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்த விஷயங்கள் இனி எல்லோரையும் சென்று சேரும் என்பது வாசகர் மத்தியில் நல்ல விஷயம்தான். இனி தமிழில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகளை புத்தகவடிவில் எதிர்பார்க்கலாம்.  

“தி இந்து“ விற்கு எனது வாழ்த்துக்கள்!


  







46 comments:

  1. இன்னும் நிறைய நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்... தி இந்து-விற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எனக்கும் அதன் வடிமமைப்பும்
    உள்ளடக்கமும் பிடித்திருக்கிறது
    இன்னும் ஒரு வாரம் போனால்தான் மிகச்
    சரியாக சிறப்பு மலர்கள் எது எதற்கு எனப் புரியும்
    என நினைக்கிறேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிறைய மாற்றங்களுடன் இன்னும் சிறப்பாக வெளிவரும் அனைவரையும் கவரும் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. நல்லதொரு விமர்சன அலசல், ஐயா.

    நன்றிகள்.

    நானும் முதல்நாள் வெளியான ஏட்டினை வாங்கிப்படித்தேன்.

    தினமலர் தினசரி போல பேப்பரின் தரம் அமையவில்லை என்பது என் அபிப்ராயம்.

    நான் சொல்வது அதில் உள்ள செய்திகளின் தரத்தைப்பற்றி அல்ல.

    The Quality of Paper ஐப் பற்றி மட்டுமே.

    வழவழப்பாகவும் மிகவும் THIN ஆகவும் உள்ளது. உறுதியாக இல்லை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  5. நானும் ஹிந்துவை பல வருடங்களாக படிக்கும் வாசகர்களில் ஒருவன். இந்தியாவில் பல பகுதிகளில் வேலை செய்த நான் தமிழகத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ள நாடிய பத்திரிகை ஹிந்து. இன்று தமிழகத்தில் தினமணியை தவிர்த்தால் தரமான தமிழ் பத்திரிகை இல்லை என்ற குறையை ஹிந்துவின் தமிழ் பதிப்பு போக்கிவிடும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  6. தமிழ் நாளேடு என்று சொல்லிக்கொண்டு தமிழ்ப் பெயரை தாங்கி வராதது ஏன் என்பது தான் எல்லோருடைய கேள்வியும். தமிழ் பெயருக்கு அத்தனை பஞ்சமா?

    ReplyDelete
  7. மறுமொழி> Ramani S said... (1, 2 )

    // இன்னும் ஒரு வாரம் போனால்தான் மிகச்
    சரியாக சிறப்பு மலர்கள் எது எதற்கு எனப் புரியும்
    என நினைக்கிறேன் //

    கவிஞர் அய்யா சொல்லியபடி ஒரு வாரம் போனால்தான் மிகச்சரியாக சிறப்பு மலர்கள் எது எதற்கு எனப் புரியும். அதுவரை காத்திருப்போம். கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி> Sasi Kala said...

    // நிறைய மாற்றங்களுடன் இன்னும் சிறப்பாக வெளிவரும் அனைவரையும் கவரும் பகிர்வுக்கு நன்றிங்க. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
    // நல்லதொரு விமர்சன அலசல், ஐயா. நன்றிகள்.//
    அன்பு VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  10. மறுமொழி> டிபிஆர்.ஜோசப் said...

    // நானும் ஹிந்துவை பல வருடங்களாக படிக்கும் வாசகர்களில் ஒருவன். இந்தியாவில் பல பகுதிகளில் வேலை செய்த நான் தமிழகத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ள நாடிய பத்திரிகை ஹிந்து. இன்று தமிழகத்தில் தினமணியை தவிர்த்தால் தரமான தமிழ் பத்திரிகை இல்லை என்ற குறையை ஹிந்துவின் தமிழ் பதிப்பு போக்கிவிடும் என்று நம்புகிறேன். //

    வங்கி அதிகாரி அவர்களின் அனுபவக் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி> வே.நடனசபாபதி said...
    // தமிழ் நாளேடு என்று சொல்லிக்கொண்டு தமிழ்ப் பெயரை தாங்கி வராதது ஏன் என்பது தான் எல்லோருடைய கேள்வியும். தமிழ் பெயருக்கு அத்தனை பஞ்சமா? //

    எல்லோருடைய கேள்வியும். அதுதான். “ THE HINDU “ என்ற தங்கள் பாரம்பரியப் பெயர் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, தமிழ் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கலாம்.
    தங்கள் மேலான கேள்விக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // இன்னும் நிறைய நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர் பார்க்கிறேன்... தி இந்து-விற்கு வாழ்த்துக்கள்... //

    மாற்றங்களை வரவேற்போம். சகோதரர் திண்டுக்கல் தனபாலன்
    அவஎகளின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. இந்த புதிய த ஹிந்து ஆங்கில ஹிந்துவின் தமிழாக்கம் ஆக இருக்குமென நினைத்திருந்தேன்.

    அது அப்படி இல்லை, இருக்கவும் இருக்காது என்று எனக்கு புரிந்தது.

    இதன் எடிட்டோரியல் கொள்கை என்யா னவாக இருக்கும் என்ற தெளிவு
    இல்லை. 4
    ஆங்கில ஹிந்து பேப்பரின் எடிட்டோரியல் பாலிசியே கடந்த பத்து ஆண்டுகளில், மாறிக்கொண்டு வரும் நிலையில்,

    ஒரு
    பத்திரிகையின் குறிக்கோள் செய்திகளை சொல்வது மட்டுமன்றி, செய்திகளின் பின்னணியில் இருக்கும் சங்கதிகளை விசாரித்து, அதையும் பத்திரிக்கை சொந்தக்காரர்கள், தமது அரசியல், சமூக கண்ணோட்டத்திற்கு ஏற்ப வெளியிடும் நிலை நமது நாட்டில் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில்,

    தமிழ் ஹிந்து பத்திரிக்கை ஒரு நடு நிலை பத்திரிகை யா அல்லது
    ஏதேனும் அரசியல் பின்னணியில் செயல் படப்போகிறதா என்பதை
    அடுத்து ஓர் இரு மாதங்களில் தான் தெளிவுறத்தெரியும்.
    தமிழகத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே போகஸ் செய்து கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் போல் இருக்கிறது.

    நான் ஒரு அறுபது ஆண்டுகட்கு மேல் தொடர்ந்து ஹிந்து படிப்பவன் என்ற முறையிலே துவக்கத்திலேயே தமிழ் ஹிந்து இதற்கான ஆறு மாத சந்தா கட்டி விட்டேன்.

    இருந்தாலும், தமிழ் ஹிந்துவை தொடர்ந்து படிப்பேனா அல்லது பேப்பரை வந்த உடனேயே, படித்த பேப்பர்களுடன் சேர்த்து விடுவேனா என்பதை இப்பொழுதைக்கு சொல்ல இயலவில்லை.

    உங்கள் எடிட்டோரியல் பாலிசி தெளிவு என்ன என்று கேட்கலாம் என்று ரீடர்ஸ் எடிடருக்கு போன் செய்தேன். இரண்டு நாட்களாக, அந்த தொலை பேசியை யாரும் எடுக்க வில்லை. இது ஹிந்து ஆபிசில் நான் கண்டிராத ஒன்று.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. தி.தமிழ் இளங்கோ சார்,

    தி இந்து(தமிழ்) பத்திரிக்கையின் எடிட்டோரியல் பாலிசியை அதன் உள்ளடக்கம் படிச்சே இன்னேரம் கண்டுப்பிடிச்சு இருக்கலாமே, அப்படி புரிஞ்சுக்க முடியாத பாஷையிலா தமில் பேப்பரிலும் தி இந்து எழுதுறாங்க( நாம எழுத்துப்பிழையோட தப்பா எழுதினா மட்டும் கேட்க வருவாய்ங்க)

    தினமணியின் இன்னொரு பதிப்பு போல வரும் , வழக்கம் போல தினமணி தரமான தமிழ் நாளிதழ் என படிக்கும் சொற்ப மக்களே படிக்க போறாங்க :-))

    இந்து ஆங்கில நாளிதழின் " சர்க்குலேஷன் கூட குறைஞ்சு போச்சு" டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழ்நாட்டுக்கு வந்து பங்கு போட்டுக்கிச்சு, ஏற்கனவே தமிழகம் தாண்டி இந்துக்கு பெரிய மார்க்கெட் கிடையாது.

    தி இந்து படிக்கிறோமேனு படிக்கிறவங்களுக்கு இந்துவுக்கும் மற்ற ஆங்கில செய்திதாளுக்கும் வித்தியாசம் புரியாது, இந்துவில் "செய்தி நிறுவனங்கள்" செய்திகளை தவிர மற்ற செய்திகள் தாமதமாக வரும். யாராவது நேற்றைய சம்பவம் இன்றைய இந்துவில் வந்திருக்கானு தேடினால் கிடைக்காது ,அதுக்கு அடுத்த நாள் இந்து பார்த்தால் செய்தி இருக்கும் :-))

    இப்போலாம் மத்திய அரசு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமாக வாங்கும் செய்தி தாளாக இந்து இல்லை,அந்த இடத்தினை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிடிச்சிக்கிச்சு.( ஒரு மத்திய அரசு ஊழியரிடம் பேசும் போது இதனை சொன்னார்)

    ReplyDelete
  15. இன்னும் சிலநாட்கள் போகட்டும் ! பார்க்கலாம் இளங்கோ!

    ReplyDelete
  16. தமிழில் வருவது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete

  17. தி இந்து தமிழ் ஏடு இந்தப் பக்கம் காணோம்

    ReplyDelete
  18. உங்கள் கருத்துக்களைப் படித்து மனது ஆறுதல் பெற்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம். பிறகு குறை சொல்லலாமே.

    ReplyDelete
  19. மறுமொழி> sury Siva said...

    // இந்த புதிய த ஹிந்து ஆங்கில ஹிந்துவின் தமிழாக்கம் ஆக இருக்குமென நினைத்திருந்தேன். அது அப்படி இல்லை, இருக்கவும் இருக்காது என்று எனக்கு புரிந்தது. //

    நல்லவேளை ஹிந்துவின் தமிழாக்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் வாசகர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒன்றைத்தான் வாங்குவார்கள். அப்புறம் அவர்கள் சர்க்குலேஷன் கணக்கு என்ன ஆவது?

    // இதன் எடிட்டோரியல் கொள்கை என்னவாக இருக்கும் என்ற தெளிவு இல்லை //

    போகப் போக படிக்கப் படிக்க தெரிந்து விடும்.
    அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில்,

    // தமிழ் ஹிந்து பத்திரிக்கை ஒரு நடு நிலை பத்திரிகை யா அல்லது ஏதேனும் அரசியல் பின்னணியில் செயல் படப்போகிறதா என்பதை அடுத்து ஓர் இரு மாதங்களில் தான் தெளிவுறத் தெரியும். தமிழகத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே போகஸ் செய்து கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் போல் இருக்கிறது. //

    சரியாகச் சொன்னீர்கள். தங்களைப் போன்ற மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்.

    // உங்கள் எடிட்டோரியல் பாலிசி தெளிவு என்ன என்று கேட்கலாம் என்று ரீடர்ஸ் எடிடருக்கு போன் செய்தேன். இரண்டு நாட்களாக, அந்த தொலை பேசியை யாரும் எடுக்க வில்லை. இது ஹிந்து ஆபிசில் நான் கண்டிராத ஒன்று. //

    நீங்கள் எப்படியும் விட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் பதிலைப் பெற்றதும் எனக்கும் தெரிவிக்கவும்.

    பல்வேறு அலுவல்களுக்கு இடையிலும், எனது பதிவிற்கு கருத்துரை தந்த சுப்பு தாத்தாவின் அன்புக்கு நன்றி!


    ReplyDelete
  20. மறுமொழி> வவ்வால் said...

    வவ்வால் சாருக்கு வணக்கம்!

    // இந்துவில் "செய்தி நிறுவனங்கள்" செய்திகளை தவிர மற்ற செய்திகள் தாமதமாக வரும். யாராவது நேற்றைய சம்பவம் இன்றைய இந்துவில் வந்திருக்கானு தேடினால் கிடைக்காது ,அதுக்கு அடுத்த நாள் இந்து பார்த்தால் செய்தி இருக்கும் :-)) //

    இன்றைய செய்தி நாளை வராது. இரண்டு நாள் கழித்துதான் வரும். ரொம்ப காலமாக இந்த குற்றசாட்டு இருந்து வருகிறது. அவர்களும் கண்டு கொள்வதில்லை.

    // இப்போலாம் மத்திய அரசு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமாக வாங்கும் செய்தி தாளாக இந்து இல்லை,அந்த இடத்தினை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிடிச்சிக்கிச்சு.( ஒரு மத்திய அரசு ஊழியரிடம் பேசும் போது இதனை சொன்னார்) //

    காலம் மாறுது.
    வவ்வால் அவர்களின் கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...

    // இன்னும் சிலநாட்கள் போகட்டும் ! பார்க்கலாம் இளங்கோ! //

    ஆமாம் அய்யா! சில நாட்கள் சென்றதும்! பார்க்கலாம்

    ReplyDelete
  22. மறுமொழி> மாதேவி said...
    // தமிழில் வருவது மகிழ்ச்சி. வாழ்த்துகள். //

    சகோதரியின் மகிழ்ச்சிக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி> G.M Balasubramaniam said...
    // தி இந்து தமிழ் ஏடு இந்தப் பக்கம் காணோம் //

    GMB அவர்களுக்கு வணக்கம்! ” வருவான் வடிவேலன் ” என்பது போல் உங்கள் பக்கமும் வந்துவிடும்.

    ReplyDelete
  24. மறுமொழி> Ranjani Narayanan said...
    // உங்கள் கருத்துக்களைப் படித்து மனது ஆறுதல் பெற்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம். பிறகு குறை சொல்லலாமே. //

    சகோதரியின் கருத்துரையை நானும் ஆமோதிக்கிறேன். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம்.

    ReplyDelete
  25. நீங்க நினைப்பது மாதிரி தான் தமிழ் இந்து மூலம் நல்ல விஷயங்கள் இனி பலருக்கு சேரும் என்று நானும் நினைக்கிறேன். ஆனா தமிழ் பத்திரிக்கைக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏற்று கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  26. //....நீங்க நினைப்பது மாதிரி தான் தமிழ் இந்து மூலம் நல்ல விஷயங்கள் இனி பலருக்கு சேரும் என்று நானும் நினைக்கிறேன். ...//

    ஆங்கில இந்துவில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனின் கருத்தைத் திரித்து வெளியிட்டவர்கள் (மீரா சீனிவாசன்) தமிழில் இன்னும் அட்டகாசமாய் திரிக்கப்போகிறார். அப்படியான நல்ல விசயங்கள் போய்ச் சேரும் என வேகநரிபோல் நாமும் எதிர்பார்க்கலாம்!

    https://soundcloud.com/tweetstrove/cvw_clarifies_hindu_0915

    ReplyDelete
  27. தி இந்து பத்திரிக்கை மீது ஆயிரம் அரசியல் விமர்சனங்கள் வைத்தாலும், தமிழ்நாட்டு செய்தி தாள்கள், ஏன் இந்திய அளவிலே தரமான உண்மையான தகவல்கள் மற்றும் மொழி ஆளுமை குற்றமின்றி இருக்கும். தமிழ் தி இந்துவிலும் இதனையே எதிர்ப்பார்க்கலாம் என நினைக்கின்றேன், நான் சிறுவயது முதலே பல அரிய தகவல்களையும், கல்வி அறிவியல் விசயங்களையும், ஆங்கில் அறிவையும் தி இந்து மூலமாய் தான் பெற்றேன். இப்போது தமிழிலும், மிக மிக நன்று. தமிழ் மொழி ஆளுமையில் குற்றங்கள் பல உண்டு, திருத்தி கொண்டால் பொறுப்புடன், தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றலாம்.

    ReplyDelete
  28. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...
    // நல்ல அலசல்..... //

    சகோதரரின் ஒற்றை வரிக்கு நன்றி

    ReplyDelete
  29. போட்டிகள் அதிகமான உலகில் தரம் சற்று தள்ளித்தான் நிற்கும்.

    ReplyDelete
  30. மறுமொழி> வேகநரி said...
    // நீங்க நினைப்பது மாதிரி தான் தமிழ் இந்து மூலம் நல்ல விஷயங்கள் இனி பலருக்கு சேரும் என்று நானும் நினைக்கிறேன்.//

    நல்லதையே எதிர்பார்ப்போம்.

    //ஆனா தமிழ் பத்திரிக்கைக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏற்று கொள்ள முடியவில்லை. //
    பெயர் வைத்து வெலியிட்டாகி விட்டது. இனி இதனைச் சொல்லி ஒன்றும் ஆகப் போவது இல்லை.எனது பதிவின்ஆரம்பத்திலேயே //“தி இந்து“ என்பதால் “ THE HINDU “ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் வடிவம் மனதில் தாக்கம் ஏற்படுத்துவதை உணர முடிகிறது. ஆங்கில நாளிதழ் வெளியீட்டாளர்கள் தங்கள் பாரம்பரியம் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, தமிழ் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ”இந்து” என்று வைத்தாலும் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.//
    என்று இதைப் பற்றி சொல்லி இருக்கிறேன். சன் டீவி, மெகா டீவி, ரிப்போர்ட்டர் – போல இதனையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    வேகநரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  31. நல்லதொரு விமர்சன அலசல்,

    ReplyDelete
  32. மறுமொழி> ஊர்சுற்றி said...
    ஊர்சுற்றியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி> விவரணன் said...
    விவரமாகச் சொல்லிய விவரணன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. தமிழ் தி இந்து இன்னும் படிக்கவில்லை சார்.. தரம் எல்லாம் ஓகே .. ஆனால் நல்ல தமிழில் இவர்களுக்கு ஒரு பெயர் கூடவா கிடைக்கவில்லை என்பது தான் என்னுடைய சிறு ஆதங்கம்...

    கட்டுரை வடிவம் கொஞ்சம் சலிப்பு தருகிறது என்று நீங்கள் கூறிய அதே கருத்தை பலரும் கூறியுள்ளது இந்து கவனிக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  35. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...
    // போட்டிகள் அதிகமான உலகில் தரம் சற்று தள்ளித்தான் நிற்கும். //

    அவர்களின் போட்டி யாருடன் என்பதனைப் பொருத்து தரம் அமையும். ஜோதிஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி> indrayavanam.blogspot.com said...
    தங்களின் நல்லதொரு கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி> சீனு said...
    சகோதரர் திடங் கொண்டு போராடு சீனு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. “தி இந்து“ விற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  40. தி இந்துவிற்கு வாழ்த்துக்கள். தாமத வருகைக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  41. நானும் வாங்கிப் பார்க்கிறேன். ஆங்கில இந்துவை நிறுத்திவிட்டேன். தமிழ் வாங்கலாம் என்று தோன்றுகிறது. மிக நன்றி திரு . இளங்கோ.

    ReplyDelete
  42. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...
    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி> வல்லிசிம்ஹன் said...

    சகோதரி “ நாச்சியார் “ வல்லிசிம்ஹன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  44. தி ஹிந்து பெயர் அது Hindu group பத்திரிக்கை என்பதை உறுதிப் படுத்தவே. நீங்கள் சொல்வது போல சன் டிவி இன பெயர் போல இதையும் எடயுத்துக் கொள்ளவேண்டியதுதான். செய்திகளின் தரமே பத்திர்கையின் தரத்தை முடிவு செய்யும். எல்லோருக்கும் பிடிக்கும் பத்திரிக்கை எந்த காலத்திலும் வர முடியாது.

    ReplyDelete
  45. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    //செய்திகளின் தரமே பத்திர்கையின் தரத்தை முடிவு செய்யும். எல்லோருக்கும் பிடிக்கும் பத்திரிக்கை எந்த காலத்திலும் வர முடியாது.//

    தாங்கள் சொல்வது சரியே! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete