Tuesday 17 September 2013

கோழிக்கறியும் கோபால்சாமியும்



எனது பணிக்காலத்தின் போது நகர்ப்புறத்தில் இருந்த கிளையில் பணி புரிந்தேன். அது ஒரு நடுத்தரமான கிளை. (Medium size Branch). எனவே அதில் ஓரளவு அதிக ஊழியர்கள் இருந்தார்கள். வங்கியின் பின்புறம் தனிக் கட்டிடத்தில் உணவு அறை. அங்குதான் எல்லோரும் மதிய உணவு சாப்பிடுவோம். மகளிர்க்கு தனியே வேறு ஒரு இடம் இருந்தது. மதிய உணவின் போது பெரும்பாலும் அரட்டைக் கச்சேரியாகவே இருக்கும். நானும் அந்த கிளைக்கு வந்த புதிதில் வீட்டிலிருந்து எடுத்து வந்த மதிய சாப்பாட்டை அங்குதான் சாப்பிட்டேன்.

ஒருநாள் வழக்கம் போல மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது ஒருவருக்கொருவர் ஜாலியாக பேச்சு களை கட்டியது. அப்போது ஒரு நண்பருக்கு கோழிக்கறியும் குருமாவும் வீட்டிலிருந்து வந்து இருந்தது. அவர் சில நண்பர்களோடு குருமாவையும் சிக்கனையும் பகிர்ந்து கொண்டார். அப்போது நான் அசைவம். என்றாலும் சிக்கன் சாப்பிட மாட்டேன். வீட்டிலிருந்து எடுத்து வருவது பெரும்பாலும் தயிர் சாதம்தான். அப்போது  ஒரு நண்பர், தான் கேள்விப்பட்ட அரசியல் ஜோக்கை சொன்னார். அது இதுதான்.

ஒரு VIP வீட்டில் விசேஷம். சர்வகட்சி நண்பர் அவர்.. சைவம் தனியே, அசைவம் தனியே என்று விருந்து அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. பெரும்பாலும் அசைவம் என்றால் மட்டன் பிரியாணி கோழிக்கறியுடன் மசாலா கிரேவியை வைப்பார்கள்.மற்றும் கூடவே ஒரு முட்டை.அரசிய்ல்வாதிகள் பலரும் அந்த அசைவ விருந்தின் பக்கம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் கோபால்சாமியும், துரைமுருகனும் இருந்தனர். இருவரும் இருவேறு மூலைகளில். துரைமுருகன் எப்போதும் யாரையும் தனக்கே உரிய முகம் மற்றும் உடற் பாவனையில் (Body Language ) அடுத்தவர்களை கிண்டல் செய்வார். அங்கேயும் ஒரு அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. கோபால்சாமி கோழிக்கறியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த  ஒருவர் துரைமுருகனைப் பார்த்து அண்ணே! போன தடவை கோபால்சாமியை ஒரு விருந்தில் கோழிக்கறி சாப்பிடச் சொன்னபோது ஈழம் கிடைக்கும் வரை கோழிக்கறி சாப்பிட மாட்டேன் என்று சொன்னார். இப்போது இந்த வெட்டு வெட்டுகிறாரே? ‘ என்று கேட்டார். அதற்கு துரைமுருகன் தனக்கே உரிய ஸ்டைலில் சொன்ன பதில் அவர் அப்படி சொன்னபோது அது புரட்டாசி மாதமாக இருந்து இருக்கும். அதனால்தான் அவர் அன்று சாப்பிடவில்லை  என்பதுதான். அந்த உணவுக் கூடத்தில் மட்டுமல்ல எங்கள் மதிய உணவு அறையிலும் ஒரே சிரிப்பலைகள்.



( நண்பர்களே! இந்த ஜோக், சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சக ஊழியர் ஒருவர் சொன்னது.  இதனை நகைச் சுவையாகவே எடுத்துக் கொள்ளவும். இங்கு குறிப்பிடப்பட்ட  பெயர்கள் நிகழ்வுகள் யாரையும் எதனையும் குறிப்பவை அல்ல. )
 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

35 comments:

  1. எத்தனையாண்டு ஆனாலும்
    ரசித்து மகிழத் தக்க நகைச்சுவைதான்
    இல்லையானால் இத்தனை ஆண்டு காலம்
    உங்களுக்குள் இதுபசுமையாய் இருந்திருக்குமா
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மறுமொழி> Ramani S said... (1, 2 )
    // எத்தனையாண்டு ஆனாலும் ரசித்து மகிழத் தக்க நகைச்சுவைதான் இல்லையானால் இத்தனை ஆண்டு காலம் உங்களுக்குள் இது பசுமையாய் இருந்திருக்குமா பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள் //

    பதிவினுள் இருந்த நகைச்சுவையை ரசித்த கவிஞருக்கு நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம்
    தி.தமிழ் இளங்கோ(சார்)

    பழைய நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவு வைத்து பதிவு எழுதிய விதம் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நன்று! பின் குறிப்பும் நன்று!

    ReplyDelete
  5. மறுமொழி> 2008rupan said...
    //பழைய நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவு வைத்து பதிவு எழுதிய விதம் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரூபன் அவர்களது பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
    // நன்று! பின் குறிப்பும் நன்று! //
    புலவர் அய்யாவின் ந்ன்று என்ற பாராட்டு மொழிக்கு நன்றி!

    ReplyDelete

  7. //குறிப்பிடப்பட்ட பெயர்கள் நிகழ்வுகள் யாரையும் எதனையும் குறிப்பவை அல்ல.//
    பெயர்கள் வேண்டுமானால் யாரையும் குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வு நிச்சயம் நடந்திருக்கவேண்டும். நல்ல நகைச்சுவை! இரசித்தேன்!

    ReplyDelete
  8. இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கி சந்திச்சிக்கிட்டாலும் இதையேத்தான் சொல்லியிருப்பாங்க... அதனால இதுல தவறா நினைச்சிக்க ஒன்னுமில்லை...

    ReplyDelete
  9. ரசித்தேன்.

    இப்படி கோழிக்கறியை நினைப்பூட்டீட்டீங்களே, இப்பவே சாப்பிடோணும் போல இருக்கே, கோழிக்கறிக்கு எங்க போவேன்?

    ReplyDelete
  10. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
    // ஹா.... ஹா.... ரசித்தேன்.... //
    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் ஹா ஹா என்று ரசித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி> வே.நடனசபாபதி said...
    // பெயர்கள் வேண்டுமானால் யாரையும் குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வு நிச்சயம் நடந்திருக்கவேண்டும். நல்ல நகைச்சுவை! இரசித்தேன்! //

    வங்கி வேளாண் அதிகாரி அவர்களது கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> டிபிஆர்.ஜோசப் said...
    // இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கி சந்திச்சிக்கிட்டாலும் இதையேத்தான் சொல்லியிருப்பாங்க... அதனால இதுல தவறா நினைச்சிக்க ஒன்னுமில்லை... //

    வங்கி அதிகாரி அவர்களின் இயல்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> பழனி. கந்தசாமி said...
    // ரசித்தேன். இப்படி கோழிக்கறியை நினைப்பூட்டீட்டீங்களே, இப்பவே சாப்பிடோணும் போல இருக்கே, கோழிக்கறிக்கு எங்க போவேன்? //

    அய்யாவின் நகைச்சுவையான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. ரசித்தேன்.குறிப்பு நன்றாகவே சொன்னீர்கள்.

    ReplyDelete
  15. மறுமொழி> Sasi Kala said...

    சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete

  16. நகைச்சுவை ரசித்தேன்.நன்றி.

    ReplyDelete
  17. நகைச்சுவையை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. மறுமொழி> G.M Balasubramaniam said...
    // நகைச்சுவை ரசித்தேன்.நன்றி. //
    தங்கள் ரசனைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...
    // நகைச்சுவையை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. //
    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  20. நல்ல நகைச்சுவை உணர்வு

    ReplyDelete
  21. மறுமொழி> கும்மாச்சி said...
    உங்களைப் போல நகைச்சுவையாக எழுத என்னால் முடியாது. எனக்குத் தெரிந்ததை எழுதினேன். கும்மாச்சியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  22. //அப்போது நான் அசைவம். என்றாலும் சிக்கன் சாப்பிட மாட்டேன்.//

    தாங்களுக்கு சிக்கன் சாப்பிட மட்டுமல்லாது, பார்க்கவே பிடிக்காது போலிருக்கே?

    மட்டன் பிரியாணி & கோழிக்கறி மசாலா கிரேவி- என்று கட்டுரையில் எழுதிவிட்டு இறால் பிரியாணி & செட்டிநாட்டு மீன் குழம்பு படம் போட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  23. மறுமொழி> நந்தவனத்தான் said...
    // தாங்களுக்கு சிக்கன் சாப்பிட மட்டுமல்லாது, பார்க்கவே பிடிக்காது போலிருக்கே? //

    பள்ளி மாணவனாக இருந்தபோது சிக்கன் சமாச்சாரம் எனக்கு பிடித்த விஷயம். கோழியின் தலையை மட்டும் ருசித்த காலம் அது. சிக்கனை நிறுத்தியதற்கு காரணம் என்ன என்பதற்கு மட்டும் தனியாகவே ஒரு பதிவே போடலாம். இப்போது மட்டன், சிக்கன் எதுவும் சாப்பிடுவதில்லை. மீன், ஆம்லேட் மட்டும்தான். இவைகளையும் நிறுத்திவிட்டு முழுக்க சைவமாகவே ஆகிவிடலாம் என்று இருக்கிறேன்.

    //மட்டன் பிரியாணி & கோழிக்கறி மசாலா கிரேவி- என்று கட்டுரையில் எழுதிவிட்டு இறால் பிரியாணி & செட்டிநாட்டு மீன் குழம்பு படம் போட்டிருக்கிறீர்கள்? //

    படத்தில் உள்ளவை என்ன வகைகள் (ITEMS) என்று எனக்குத் தெரியாது. கூகிளில் இந்த படங்கள் பார்க்க எடுப்பாக இருந்தன.
    அவ்வளவுதான்.
    சகோதரர் நந்தவனத்தான் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!



    ReplyDelete
  24. நான் பிறவியிலேயே சைவம்.
    ஆயினும் தங்கள் பதிவை ரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. மறுமொழி> kovaikkavi said...
    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  26. நானும் உங்க பதிவை இரசித்தேன்.கோபால்சாமியின் றியலிசத்தையும் இரசித்தேன்.

    ReplyDelete
  27. தி.தமிழ் இளங்கோ சார்,

    நீங்க கூட "கருப்பு காமெடி" செய்யுறிங்களே, ஹி...ஹி சொல்லுறதெல்லாம் சொல்லிட்டு சம்பந்தமில்லைனா எப்பூடி?

    "யாரோ" ஒரு தமிழக அரசியல் தலைவர் அடிக்கடி நடைப்பயணம் கிளம்பிடுவார், அதுக்கு டாக்டர் நடக்க சொல்லி இருப்பார் ,அதான் நடைப்பயணம் போறார்னு "இன்னொரு யாரோ" ஒரு தமிழக அரசியல்தலைவர் உண்மையிலே கமெண்ட் அடிச்சார்னு செய்தி கேள்விப்பட்டது ஏனோ எனக்கு நினைவுக்கு வருது!

    ReplyDelete
  28. T.N.MURALIDHARAN said...

    நல்ல நகைச்சுவை.கோபால்சாமி என்றதும் யாரோ என்று நினைத்தேன். வை.கோ என்பது படித்தபின்தான் அறிந்தேன்.
    ரசித்தேன் சிரித்தேன். ஐயா!
    18 September 2013 06:09

    ReplyDelete
  29. மறுமொழி> T.N.MURALIDHARAN said...

    // நல்ல நகைச்சுவை.கோபால்சாமி என்றதும் யாரோ என்று நினைத்தேன். வை.கோ என்பது படித்தபின்தான் அறிந்தேன்.ரசித்தேன் சிரித்தேன். ஐயா! //

    நீங்களாகவே அவ்வாறு நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்வது.? தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி> வேகநரி said...

    // நானும் உங்க பதிவை இரசித்தேன்.கோபால்சாமியின் றியலிசத்தையும் இரசித்தேன். //

    எனது பதிவை ரசித்த வேகநரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி> வவ்வால் said...
    // தி.தமிழ் இளங்கோ சார், நீங்க கூட "கருப்பு காமெடி" செய்யுறிங்களே, ஹி...ஹி சொல்லுறதெல்லாம் சொல்லிட்டு சம்பந்தமில்லைனா எப்பூடி? //

    வவ்வால் சார்! சீரியசாகத் தொடங்கி சிரிப்பில் முடித்து விட்டதால் "கருப்பு காமெடி" (BLACK COMEDY) என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. எப்படி இருந்த போதிலும் நீங்கள் ரசித்து எழுதிய ஒன்றே, எனக்கும் நகைச்சுவையாக எழுதவரும் என்ற நம்பிக்கையை தந்துவிட்டது. எழுதிப் பார்ப்போம். நன்றி!



    ReplyDelete
  32. மறுமொழி> மாதேவி said...
    நகைச்சுவையென பாராட்டிய சகோதரி மாதேவிக்கு நன்றி!

    ReplyDelete