திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில், மெயின்கார்டு கேட் (MAINGUARD GATE) அருகே அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church ). இந்த ஆலயமும் இதன் வரலாறும் புனித ஜோசப்
கல்லூரி (St.
Josephs College ) வரலாறும் வளாகங்களும்
இணைநதே உள்ளன. இந்த ஆலயத்தின் எதிரே
திருச்சி மலைக் கோட்டையும் தெப்பகுளமும் அமைந்துள்ளன. தெப்பகுளத்தின் கிழக்குக்
கரையில், கிளைவ்ஸ் கட்டடம் (CLIVES BUILDING ) இருக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள
மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம்.
புனித லூர்து அன்னை என்ற பெயர்:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னதெத் சூபிரூஸ் ( Bernadette Soubirous ) என்ற சிறுமி தனது சகோதரி மற்றும்
தோழியுடன் அருகில் உள்ள காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மசபியேல்
என்ற கெபி (குகை) அருகே சென்றபோது அன்னை மேரி காட்சி தந்தார். இந்த காட்சியானது
பெர்னதெத்திற்கு மட்டுமே தெரிந்தது. அவளோடு சென்ற மற்ற இருவருக்கும் தெரியவில்லை.
அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் அன்னை மேரி அந்த சிறுமியை அந்த இடத்திற்கு வரச்
சொன்னார். அங்கு தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று அன்னை மேரி சொல்கிறார். ஒருதடவை
அன்னை மேரியின் கட்டளையை ஏற்று அந்த இடத்தில் பெர்னதெத் மண்ணைத் தோண்டுகிறாள்.
அந்த இடத்தில் ஓர் நீருற்று உண்டானது. பின்னர் அது ஒரு ஓடையாக மாறிவிட்டது. இந்த
அற்புதத்தைக் கேட்ட திருச்சபையினர் உண்மையைக் கண்டறிய விசாரணை செய்தனர். முடிவில்
அங்கு பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சி அளித்து அற்புதம் நிகழ்த்தியது
உண்மையே என்று அறிவித்தனர். அதன் பிறகு மசபியேல் என்ற குகை அருகே ஒரு தேவாலயம்
கட்டப்பட்டது. அந்த ஓடைநீர் புனித நீராக கருதப்பட்டது. ஆலயம் அமைந்த இடம் லூர்து
நகர் என்று அழைக்கப்பட்டது. அன்னை மேரி சிறுமிக்கு முதன் முதல் காட்சி அளித்த நாள்
1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந்தேதி ஆகும். ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத்
தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்ச்சு நாட்டைச் சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர்.
அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த
தேவாலயத்திற்கும் சூட்டினார்கள். “ CHURCH OF OUR
LADY OF LOURDES “
தேவாலயத்தின் வரலாறு:
இப்போது திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியானது ஆரம்பத்தில்
நாகப்பட்டணத்தில் இருந்தது. பின்னர் அங்கிருந்து 1883 ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப் பட்டது. ஆரம்பத்தில் கல்லூரியானது
கிளைவ்ஸ் கட்டடத்தில் இயங்கியது. அப்போது திருச்சியில் கோட்டைப் பகுதியில் இருந்த
பெல்லார்மின் ஹால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக
இருந்திருக்கிறது.. அருள் தந்தை ஜோசப் பெய் என்பவர் 1884 ஆம் ஆண்டு முதல் 1893 வரை கல்லூரி முதல்வராக
இருந்தார். அவர் இந்த ஆலயம் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவர்
காலத்தில் தேவாலயம் கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அவர் திருநெல்வேலியைச்
சேர்ந்த தனம் சவரிமுத்து மேஸ்திரியார் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். அப்போது திருச்சி ஆயராக
இருந்த ஜான் மேரி பார்த் என்பவர் 1890 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி , தேவாலயத்தின்
அஸ்திவாரத்திற்கான முதல் கல்லை ஆசீர்வாதம் செய்து எடுத்து வைத்து தேவாலயம் கட்டும்
பணியை தொடங்கி வைத்தார். 1893 முதல் 1903 வரை ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த
அருள் திரு லியோ பார்பியர் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியில் முழுமையாக
ஈடுபட்டார். 1890 இல் தொடங்கப்பட்ட தேவாலய பணியானது 1898-
ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுரவேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைபட்டு,
பின்னர் 1903 – ஜனவரி
தொடங்கி 1910- டிசம்பரில் முடிந்தது.
தேவாலயத்தின் அமைப்பு:
தேவாலயம் கோதிக் கட்டடக்கலை (Gothic
architecture) அமைப்பில் உருவானது. ( கோதிக் கட்டடக்கலை என்பது 12-ஆம்
நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் உருவானது. பெரும்பாலும் தேவாலயங்கள், கல்லறைகள், கோட்டைகள், அரண்மனைகள
இந்த அமைப்பு முறையினால் கட்டப்பட்டன.) இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள் , ஆலயத்தை
கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும்
சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக்
கொண்டார். தேவாலயம் கட்டுவதற்கு தேவையான
கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன.
சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில்
பிரான்ஸ்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்தன்னை தேவாலயமும்
கட்டப்பட்டது என்பது சிறப்புச் செய்தியாகும்.
தேவாலயத்தின் உள்ளே நுழையும் போதே நம்மை அந்த பிருமாண்டமான வாயில் சிலுசிலுவென்று
வீசும் காற்றோடு வரவேற்கும். கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து
பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை
கண்ணாடி ஓவியங்கள். வெளிநாட்டிலிருந்து வரும் மேல்நாட்டவர்கள் இந்த ஆலயத்தின்
அழகினை ரசித்து ரசித்து படம் எடுப்பதைக் காணலாம். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 –1998) இன்றைக்கு 14
ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்போது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் (St. lourdes
church) இருந்து
வருகிறது.
வழிபாட்டு நேரம்:
வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m
மாலை: 6.30 p.m
ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m
மாலை: 6.30 p.m
குறிப்பு: மேலே உள்ள அன்னை மரியாள் படம் தவிர , மற்ற தேவாலயப் புகைப் படங்கள் யாவும் என்னால் இன்று (09.09.12) காலை " Canon Power Shot A800 " என்ற Digital Camera மூலம் எடுக்கப்பட்டவை.
நன்றியுடன் (கட்டுரை எழுத உதவியவை) :
1.புனித லூர்தன்னை ஆலயம் நூற்றாண்டு விழா மலர்
(1896 – 1998)
3. Wikipedia, the free encyclopedia - English
4. Wikipedia, the
free encyclopedia - Tamil
5. பாரம்பரியம்: நூற்றாண்டைக் கடந்த ஆலயம்! – . அ.
சத்தியமூர்த்தி - 29 May 2011 DINAMANI e-paper
இணைப்பு:
( PHOTO THANKS TO Glyn John Willett ( http://members.virtualtourist.com )
இணைப்பு:
( PHOTO THANKS TO Glyn John Willett ( http://members.virtualtourist.com )
மத நல்லிணக்கத்தோடு தரிசிக்கவைத்த சிறப்பான பகிர்வுகள். மற்றும் படங்களுக்கு நல்வாழ்த்துகள் !
ReplyDeleteபடங்களும் சர்ச் குறித்த விரிவான
ReplyDeleteதகவல்களும் அருமை
திருச்சியில் ஒரு மூன்றுஆண்டு காலம் இருந்தபோது
அதிகமாக உலவிய பகுதிகள் இவையெல்லாம் என்பதால்
மனக்கண் முன் விரிந்து காட்சியளித்துப்போனது
(அப்படியே ஹோட்டல் பத்மா காபியும் )
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை.
ReplyDeleteசிறப்பான பகிர்வு ...படங்களும் செய்திகளும் அருமை ..
ReplyDeleteREPLY TO….. ….. இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteதங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி!
REPLY TO….. ….. Ramani said...
ReplyDelete// (அப்படியே ஹோட்டல் பத்மா காபியும் ) //
கவிஞர் ரமணியின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி! திருச்சியில் கால்பந்து போட்டியும் பத்மா காபியும் மறக்க முடியுமா?
REPLY TO….. ….. கே. பி. ஜனா... said...
ReplyDeleteஎழுத்தாளர் கே.பி.ஜனாவின் அன்பிற்கு நன்றி! உங்கள் பதிவின் பக்கம் கொஞ்ச நாட்களாக நான் வர இயலவில்லை. மன்னிக்கவும். விரைவில் வருகிறேன்.
REPLY TO….. ….. Kalidoss Murugaiya said...
ReplyDeleteஉங்கள் அன்பிற்கும் மனமுவந்த பாராட்டிற்கும் நன்றி !
அருமையான படங்கள். அற்புதமான செய்திகள்.
ReplyDelete//இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் (St. lourdes church) இருந்து வருகிறது.//
ஆம் .... மிக உயரமான அந்த ஆலயம், அமைந்துள்ள இடம் Heart of the City அல்லவா!
பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
REPLY TO….. ….. வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதிரு VGK அவர்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி1
அறிந்து கொண்டேன்... வழிபாட்டு நேரமும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்...
ReplyDeleteREPLY TO….. ….. திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஎல்லோருக்கும் நல்லவராக இருக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கு நன்றி!
அழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteபடங்களுடன் விவரங்கள் கூடிய நற்பகிர்வு... நானும் இந்த சர்ச்சினை படம் எடுத்திருக்கிறேன்....
ReplyDeleteஇனிய பகிர்வுக்கு நன்றி ஜி!
இன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.
நட்புடன்
வெங்கட்.
REPLY TO … … மாதேவி said
ReplyDeleteசகோதரி sinnutasty.blogspot மாதேவியின் பாராட்டிற்கு நன்றி!
REPLY TO … … வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// நானும் இந்த சர்ச்சினை படம் எடுத்திருக்கிறேன்....//
உங்களுக்கு போட்டோகிராபியில் உள்ள ஆர்வம் பாராட்டத்தக்கது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
தேவாலயம் பற்றி அழகான படங்களும் சுவாரசியமான தகவல்களும்.. நன்றி
ReplyDeleteREPLY TO ….. ரிஷபன் said...
ReplyDeleteஎழுத்தாளர் ரிஷபன் அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!