Friday 18 May 2012

கோடை மழை!



சாலை முழுதும் அனல் காற்று !
முந்தானை கழுத்தில் சரிய சுற்றிய
முக்காடும், முழு கையுறையும் போட்ட
ஸ்கூட்டி பெண்கள் முழு வேகத்தில்!

கடும் வெய்யிலிலும் பென்சன் வாங்க
கறுப்புக் குடையோடு செல்லும் பெரியவர்!
கிடைத்த இடத்தில் கிரிக்கெட் விளையாடும்
சாலை ஓர சச்சின்கள்!  மட்டையும் கையுமாய்!

இரு சக்கர வாகனத்தில் நான்!
மெதுவாகவே சாலையில் சென்றபோது
மெல்லிய காற்று வருடியது
மண் வாசனையோடு - திடுமென வந்தன
வெட்டவெளி வானில் கரு மேகங்கள்!
முட்டிக் கொண்டன மூர்க்கமாய்!
பூமியில் வெட்டி வெட்டி
வீசப்பட்டன மின்னல் வீச்சுக்கள்!
கொட்டிக் கொட்டி முழங்கிய இடிமுழக்கம்!
காற்றும் மழையுமாய் கொட்டியது வானம்!
சாலை முழுதும் சலசலக்கும் மழைநீர்!

ஒதுங்க நேரமில்லை!
மழைக் குளியல் போட்டேன்!
அந்தநாள் ஞாபகம் வந்திட
ஆனந்தம்! ஆனந்தமே!
கோடை மழையே!
வருகவே! வருகவே!







14 comments:

  1. ஆனந்தம்! ஆனந்தமே!
    கோடை மழையே!
    வருகவே! வருகவே!

    ReplyDelete
  2. கோடைக்கு இதமான யதார்த்தமான கவிதை!
    மகிழ்ச்சி.. குளிர்ச்சி.!
    நன்றி

    ReplyDelete
  3. ஒதுங்க நேரமில்லை!
    மழைக் குளியல் போட்டேன்!
    அந்தநாள் ஞாபகம் வந்திட
    ஆனந்தம்! ஆனந்தமே!
    கோடை மழையே!
    வருகவே! வருகவே//

    வியாவைக் குளியலில் குளித்துக் கொண்டிருக்கிற
    நானும் இந்தக் கோடை மழையை ஆவலுடன் வரவேற்கிறேன்
    மனதிற்கு குளிர்ச்சியூட்டிப் போகும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மழை முன் தூறலின் மண்வாசனை மிகவும் ரசிப்பேன் . வருக வருக ...

    ReplyDelete
  5. Reply to …. // இராஜராஜேஸ்வரி said...//

    வணக்கம்! என்னோடு கோடை மழையை வரவேற்ற சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  6. Reply to …. // தமிழ் மீரான் said... //

    வணக்கம்! கவிஞர் தமிழ் மீரான் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. Reply to …… // Ramani said... //

    வணக்கம்! கோடை மழையை வரவேற்றும் என்னுடைய கவிதையைப் பாராட்டியும் கருத்துரை தந்த கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  8. Reply to …. // சசிகலா said... //

    வணக்கம்! மண்வாசனையை ரசிக்கும் சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. கொட்டித் தீர்க்கும் கோடை மழை எப்பவுமே உற்சாகம்தான்!

    ReplyDelete
  10. Reply to …… //கே. பி. ஜனா... said... //
    எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் வருகைக்கும், கோடைமழை உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!

    ReplyDelete
  11. நல்ல கோடை மழை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Reply to … // sathish prabu said... //
    கன்னம் கவிதைத் தளம் – கவிஞர் சதீஷ் பிரபுவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. சென்னையில கோடை தான் வந்தது. மழை இன்னும் வரல.

    ReplyDelete
  14. Reply to ……. // T.N.MURALIDHARAN said... சென்னையில கோடை தான் வந்தது. மழை இன்னும் வரல. //

    எங்கள் பக்கம் கோடைமழை நன்றாக வெளுத்து வாங்கியது. கத்திரி வெயில் தெரியவில்லை. தருமமிகு சென்னைக்கு ஏன் வரவில்லை என்று ரமணன் சாரிடம் தான் கேட்க வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete