வலைப்பதிவர் அல்லாத பலரிடம், குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம்,
வலைப்பதிவு என்றால் என்ன என்று புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.
பலரும் கேட்கும் கேள்வி “பேஸ்புக் (facebook) மாதிரியா?” என்பதுதான். இன்னும் சிலர்
இதில் எழுதுவதால் வருமானம் கிடைக்குமா? இதனால் என்ன பலன்?” என்பதுதான். நம்மில் வலைப்பதிவரில்
நிறையபேருக்கே ” இதனால் என்ன பலன்?” என்ற எண்ணம் இருப்பதைக் காண முடிகிறது.
சன்மானம் உண்டா?
வலைப்பதிவர் ஒருவர், தனக்குப் பழக்கமான ஒரு எழுத்தாளரிடம், தான் எழுதும் வலைப்பதிவுகளைப் பற்றி சொல்லி நீங்களும் வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி , வலைப்பதிவராக எழுதலாம் என்று சொல்லி இருக்கிறார். அவரோ எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு “ இண்டர்நெட், அது இது என்று செலவுசெய்து பதிவு எழுதுவதற்கு, பத்திரிகையில் தருவது போல சன்மானம் தருவார்களா?” என்று கேட்டு இருக்கிறார். நமது வலைப்பதிவர் “பணமெல்லாம் கிடைக்காது; எழுதுவதில் ஒரு ஆத்ம திருப்திதான்” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த எழுத்தாளரோ “ அப்படியானால் எதற்கு எழுத வேண்டும்? எல்லாம் வேஸ்ட்” என்று சொல்லி விட்டார்.
வலைப்பதிவு எழுதுவதால்
வலைப்பதிவு
எழுதுவதால் ஏதாவது பயன் உண்டா என்று கேட்டுக்
கொண்டே, இன்னும் எழுதிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. ”விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே”
என்று எழுதியது போதும் என்று விலகியவர்களும் உண்டு. நண்பர் டி.என்.முரளிதரன் – மூங்கில் காற்று அவர்கள் சொல்லும் கருத்துக்கள் இவை.
உண்மையில் பார்த்தால் வலைப் பதிவு
எழுதுவதால் பொருளாதாரப் பயன்கள் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பின் ஏன் எழுதிக்
கொண்டிருக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் சின்ன எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணையம். கொஞ்சம் பேராவது நமது படைப்புகளை ரசிக்கிறார்கள்.
ஒரு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. திறமையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களும் நம்மை அறிந்து கொள்ள
வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நமது திறனை வளர்த்துக் கொள்ளும் மேடையாக வலைப்பூக்கள்
அமைகின்றன. உடனடியாக நமது படைப்பின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது. எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது . நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. பலரையும் ஊக்கிவிக்க முடிகிறது.
நமது எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது. பத்திரிகையில் எழுதியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது . பிரபல பத்திரிகைகளின் பார்வையில் படுவதற்கு ஒரு வாய்ப்பாக
அமைகிறது . போட்டிகளில் கலந்து கொள்ளவும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கிறது.
வலை உலகம் பல பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறது. தொடக்கத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை
உணர முடிகிறது. (நன்றி: http://www.tnmurali.com/2014/04/benefits-of-writing-blogposts.html )
ரெஜி ஸ்டீபன்சன் - என்னும் ஆங்கில
வலைப்பதிவர், வலைப் பதிவினால் கிடைக்கும் 25 பயன்பாடுகளை, தனது வலைத்தளத்தில் சொல்லி
இருக்கிறார். (இயல்பான தமிழில் நான் இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்)
#1.
Networking with various people worldwide.
(உலகில் உள்ள பல்வேறு மக்களிடம் வலைத் தொடர்பு
கொள்ளலாம்)
#2.
Blogs help you to improve your writing skills.
(வலைப்பதிவுகள் உங்களது எழுத்துத் திறமையை அதிகரிக்கச்
செய்கின்றன)
#3.
Mastering a subject.
(குறிப்பிட்ட துறையில் வல்லுநர் ஆகலாம்)
#4.
Flexibility of working hours.
(பணி செய்யும் போது பிறரிடம் அனுசரித்து செல்லும்
மனப்பக்குவம்
தரும்)
#5.
Your photographic skills may improve.
(உங்களிடம் இருக்கும் போட்டோகிராபி திறமைகள் மேம்படலாம்)
#6.
Your videography skills may improve.
(உங்களிடம் இருக்கும் வீடியோகிராபி திறமைகள் மேம்படலாம்)
#7.
Your presentation skills may improve.
(இன்று உங்களிடம் இருக்கும் திறமைகள் இன்னும் மேம்படலாம்.)
#8.
Blogging as a source of income.
(வலைப்பதிவு எழுதுவதிலும் வருமானம் உண்டு)
#9.
Blogs promote small scale business.
(உங்களது சிறுவணிகத்தினை மேம்படுத்தலாம்)
#10.
Blogs promote large scale business.
(உங்களது பெரும் வணிகத்தினை மேம்படுத்தலாம்)
#11.
Blogs make it easy to connect with social media.
(வலைப்பதிவினை சமூக ஊடகங்களோடு எளிதில் இணைக்கலாம் )
#12.
Blog as a source of information
(தகவல் பரிமாற்றத்திற்கு உதவும்)
#13.
Blog as a helping tool for carrying out certain day-to-day activities.
(அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவும்)
#14.
Blogs may act as a portfolio.
(உங்களுக்கென்று ஒரு போர்ட்ஃபோலியோ உருவாகும்)
#15.
Blogs may help you to become a professional writer or blogger.
(தொழில்முறை
வலைப்பதிவாளர் அல்லது எழுத்தாளர் ஆகலாம்)
#16.
Blogs may lead you to start a new career.
(ஒரு புதிய தொழிலை தொடங்க உதவலாம்)
#17.
Blogs are very easy to set up.
(வலைப்பதிவை தொடங்குவது எளிமையானதே)
#18.
Blogs help you to increase your knowledge in different fields.
(வெவ்வேறு வகைகளில் உங்கள் அறிவை மேம்படுத்திக்
கொள்ள
உதவும்)
#19.
Gaining popularity and respect from others.
(மற்றவர்களிடம் நீங்கள் பிரபலமும் மதிப்பும் பெறலாம்)
#20.
Blogging as a hobby.
(வலைப்பதிவை ஒரு பொழுது போக்கிற்காகவும் வைத்துக்
கொள்ளலாம்)
#21. Blogs are easy to update.
(அன்றாட மேம்பாடு செய்து
கொள்ளலாம்)
#22.
Blogging may change your attitude towards life.
(வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறைகளில் மாற்றம்
உண்டாகலாம்)
#23.Good
exercise for your mind
(வலைப்பதிவு மனதிற்கு நல்ல பயிற்சியாகும்)
#24.It
is possible to become a successful blogger without higher education.
(அதிக மேற் படிப்பு இல்லாமலேயே ஒரு நல்ல வலைப்பதிவராக
விளங்கலாம்)
#25.Location
is not a problem for blogging as a career.
(வலைப்பதிவிற்கு நாம் இருக்குமிடம் முக்கியமல்ல)
எனது அனுபவம்:
மாருதி கார் புதிதாக வந்த புதிதில், அவர்கள் “மாருதியின் உரிமையாளர்களே
அதன் ஓட்டுநர்களாகவும் இருக்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னார்கள். அதைப்போல வலையுலகில்
பெரும்பாலும் வாசகர்களே பதிவர்களாகவும், பதிவர்களே வாசகர்களாகவும் இருக்கக் காணலாம்.
நான் பணியில் (வங்கி) இருந்தபோது, எனக்கு முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில்தான்
வேலை. வீட்டிற்கு வந்தால் படிக்கவே நேரம் இருக்காது. இருந்தாலும் ஒருமணி நேரமாவது படித்தால்தான்
அன்றைய தினம் நிறைந்ததாகவே இருக்கும். எனவே நானும் தமிழ்மணம் போன்றவற்றில், முதலில்
ஒரு வாசகனாக மட்டுமே இருந்து பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டு இருந்தேன். வங்கியிலிருந்து
ஓய்வு பெற்றவுடன் பொழுது போக்காக எழுதத் தொடங்கி ஒரு வலைப்பதிவர் ஆனேன். இன்றும் என்
விரல்களும், மனமும் நான் இன்னும் பணியிலிருப்பது போன்றே உணர்கின்றன. வலைப்பதிவர்கள்
வட்டத்தில் எழுதுவது, அவர்களைப் பாராட்டுவது என்பது மனம் மகிழ்வான செயலாகவே இருக்கிறது.
தனிமை உணர்வை விரட்டுகிறது. பல்வேறு பிரச்சினைகளில் மனம் தத்தளித்த போது, மனம் தடுமாறாமல்
ஒருமுகப்படுத்த உதவியது. வலைப் பதிவர்கள் பலர் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும்
பயணக் கட்டுரைகள், பல்வேறு அனுபவங்கள் யாவும் வழிகாட்டிகளாய் இருக்கின்றன. எனது அம்மா
இறந்த மீளாத்துயரத்தில் நான் இருந்தபோது, வலைப்பதிவு நண்பர்கள் தந்த ஆறுதல் வார்த்தைகள்,
மற்றும் காலில் காயம் ஏற்பட்டு முடங்கியபோது அவர்கள் தந்த நம்பிக்கை மொழிகள் யாவும்,
என்னை நானே மீட்டெடுக்க உதவின. சுருக்கமாகச் சொல்வதென்றால் வலைப்பக்கம் வாராது இருந்திருந்தால்,
என்றோ தொலைந்து இருப்பேன்.
நூல் வெளியீட்டு விழா மற்றும் வலைப்பதிவர்கள் சந்திப்பு போன்ற சந்திப்புகளில்,
முகமறியாமல் இருந்த பல நண்பர்களை முதன்முதல் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வை (ஏதோ
போன ஜென்ம பந்தம் என்பார்களே) விளக்க இயலாது.
Image courtesy - jannoon028/FreeDigitalPhotos.net