Sunday, 5 August 2012

எனக்கு கிடைத்த ” சன்சைன் ப்ளாக்கர் விருது (SUNSHINE BLOGGER AWARD) “


சன்சைன் ப்ளாக்கர் விருது   (SUNSHINE BLOGGER AWARD) “ என்ற இந்த விருதினை எனக்குத் தந்த திரு. VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களுக்கு நன்றி! வலைப் பதிவர் திருமதி R.புனிதா அவர்கள் இந்த விருதினை
(www.southindiafoodrecipes.blogspot.in)  அவருக்குத் தந்துள்ளார். திருமதி R.புனிதா அவர்களுக்கும் எனது நன்றி. திரு VGK  அவர்கள் தனக்குக் கிடைத்த இந்த விருதினை 108 வலைப் பதிவர்களுக்கு பகிர்ந்து தந்துள்ளார். விருதினைப் பெற்ற மற்ற வலைப் பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த விருதினைப் பற்றிய விவரத்தினை வழக்கம் போல கூகிள் (GOOGLE) உதவியுடன் தேடினேன். . இந்த விருதினைப் பெற்றவர்கள் யாரும் முழுதாக விருதின் விவரம் பற்றி ஏதும் சொல்லவில்லை.  தனது எழுத்துக்களில் உறுதியும்,  படைப்புத் திறனும் கொண்ட வலைப் பதிவர்களுக்கு இந்த விருதினைத் தர வேண்டும். ( This prize is awarded to “ bloggers who positively and creatively inspire others in the blogosphere” ) என்பதுதான் இந்த விருதின் அடிப்படை . கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். 

ஒவ்வொரு விருதும் பெறும் போது  நாம் நம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும். என்பார்கள். அதிக விருதுகள் பெற்ற திரு. VGK அவர்கள் ஏற்கனவே தன்னைப் பற்றிய விவரங்களை அதிகமாகவே சொல்லிவிட்டார்.  சன்சைன் ப்ளாக்கர் விருது   (SUNSHINE BLOGGER AWARD) “ பெற்றவர் தன்னைப் பற்றிய பத்து விஷயங்களைச் சொல்ல வேண்டும். எனவே நான் இந்த விருதினைப்  பெற்றமைக்காக எனக்குப் பிடித்த  பத்து விஷயங்களைத் தந்துள்ளேன். இதில் முதல் ஏழும் VERSATILE BLOGGER AWARD பெற்றபோது தெரிவிக்கப் பட்டவை.  (அப்போது இவற்றின் அதிகமான விவரத்தினை நான் சொல்லவில்லை)

எனக்குப் பிடித்த பத்து:

1.புத்தகம் படித்தல்:
 சின்ன வயதிலிருதே இந்த பழக்கம். மனம் ஒன்றி, அதிலேயே லயித்து புத்தகம் படித்தலும் ஒருவிதமான யோக நிலைதான்.

2.காபி (COFFEE )
வங்கி பணிக்கு சென்றவுடன் அடிக்கடி காபி அருந்தும் பழக்கம் வந்து விட்டது.

3.பழைய தமிழ் சினிமா பாடல்கள்.
 கல்லூரி படிப்பின் போது இலங்கை வானொலி ஒலிபரப்பிய பழைய தமிழ் சினிமாப் பாடல்களை அடிக்கடி கேட்பேன். நானும் பாடுவேன்.

4.பயணம் செய்தல்
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லும் பயணம் உண்மையிலேயே ஆனந்தமான விஷயம்தான்.

5.போட்டோகிராபி
ஆரம்பத்தில் NATIONAL-35, YASHICA  FX-3 SUPER (பெரியது)  ஆகிய காமிராக்களை பயன்படுத்தினேன். போட்டோகிராபி சம்பந்தப்பட்ட நூலகளையும்  வாங்கினேன். படித்தேன். பெரிய காமிரா யாசிகா பழுதடைந்து விட்டது. இப்போது CANON – Power Shot A100  என்ற சிறிய டிஜிடல் காமிராவைப் பயன்படுத்துகிறேன். வலைப் பதிவிற்கு இது போதும்.

6.கூகிள் ( GOOGLE )
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று பாடினார் கண்ணதாசன். எந்த விஷயமானாலும் கேட்டதும் கொடுக்கும் இந்த தேடுபொறி ( SEARCH ENGINE ) இண்டர்நெட்டைப் பயன் படுத்தும் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.       

7.வலைப் பதிவு
என்னுடைய ஆத்ம திருப்தி தரும் விஷயம்.

8.எங்கள் வீட்டு நாய் “ஜாக்கி
நல்ல நண்பன். நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எனது கால் வலி, ஜாக்கியை நடைப் பயிற்சிக்கு தினமும் அழைத்துச் சென்றதாலேயே குணமாகிவிட்டது.

9.மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி.
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் உள்ள மகிழ்ச்சியை சொன்னால் தெரியாது.

10.பிடித்த திரைப்பட கதாநாயகன் எம்.ஜி.ஆர்
பழைய தமிழ் திரைப் படங்களில் எப்போதும் மகிழ்ச்சியாகவே வலம் வரும் எம்.ஜி.ஆர் தான் எனக்குப் பிடித்த திரைப்பட கதாநாயகன்.
 
விருதினைப் பெற்ற வலைப் பதிவர்கள் (BLOGGERS) செய்ய வேண்டியது.

1.சன்சைன் ப்ளாக்கர் விருது   (SUNSHINE BLOGGER AWARD) “ என்ற இந்த விருதின் அடையாளத்தினை (LOGO) உங்கள் வலைப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

2 உங்களைப் பற்றிய பத்து விவரங்களைச் சொல்லவும்..

3. இந்த விருதினை 10 அல்லது 12 பேருக்கு ( மற்ற பதிவர்களுக்கு)  பகிர்ந்தளியுங்கள்.

4. இந்த விருது கொடுக்கப் பட்ட  செய்தியினை அவர்களது பதிவில் சென்று தெரியப் படுத்தவும்.

5. உங்களால் தெரிவு செய்யபட்டவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள நட்பைப் பற்றி தெரியப் படுத்தவும்.

6. உங்கள் வலைப் பதிவில் இது பற்றிய மற்றவர்களது கருத்துரைகளை வெளியிடுங்கள்.





தகுதி வாய்ந்த நிறைய பதிவர்களுக்கு திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் இந்த விருதினை பகிர்ந்து தந்துவிட்டார். எனவே எனக்கு இந்த வேலை இல்லாமல் போய்விடடது.. எனவே கருத்துரைகளை மட்டும் வரவேற்கிறேன்.
   
                      ( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )