புதுக்கோட்டைக்கு எத்தனையோ முறை சென்று வந்து இருக்கிறேன்; பணியில்
இருந்தபோது, டெபுடேஷன் பணிக்காக, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஒருமாதம் சென்று
வந்தும் இருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து புதுக்கோட்டையில் பெரிதாக புத்தகத் திருவிழா
ஏதும் நடந்ததாக நினைவில் இல்லை. இத்தனைக்கும் இங்கு நூல்வாசிக்கும் ஆர்வலர்கள் அதிகம்
என்பதனை, இங்கு சொல்ல வேண்டியதில்லை. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பாக வழக்கம்
போல அவர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மட்டும் அடிக்கடி நடைபெறும்.
ஆண்டுதோறும் சென்னையிலும் நெய்வேலியிலும் நடக்கும் பிரமாண்டமான புத்தகத் திருவிழாவை
புதுக்கோட்டையிலும் நடத்த முயற்சி செய்யுங்கள் என்று, ஆசிரியர் முத்துநிலவன் அய்யாவிடம்
நான் சொல்லியதாக நினைவு. இப்போது புதுக்கோட்டை புத்தக வாசிப்பு ஆர்வலர்கள் கனவை நிறைவேற்றும்
வண்ணம், சென்ற சனிக்கிழமை (26.11.16) முதல் 04.12.16 முடிய, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
நடத்தும் புத்தகத் திருவிழா, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் விழாக்குழு
சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் வரச் சொல்லி குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தார்.
சென்று வந்தேன்:
எனவே நேற்று (29.11.16 – செவ்வாய்) மாலை திருச்சியிலிருந்து இந்த
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்தேன். பஸ்சில் செல்லும்போது, வறட்சியான
காட்சிகளையே (இந்த வருட மழை பொய்த்து விட்டதால்) பார்க்க முடிந்தது. இரவு திரும்பி
வரும்போது நல்ல குளிர். நேற்று அங்கே
எடுத்த
படங்கள்
இவை
(கீழே)
(படம்
மேலே) புதுக்கோட்டை நகர்மன்ற நுழைவு வாயிலில் அழைப்பு.
(படம்
மேலே) நேற்றைய நிகழ்ச்சிக்கான ப்ளக்ஸ் பேனர்.
(படம்
மேலே) பங்கேற்ற ஸ்டால்கள் விவரம்
(படம்
மேலே) புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள் பற்றிய குறிப்புரைகள் அடங்கிய ப்ளக்ஸ்
பேனர்கள்.
(படம்
மேலே) புதுக்கோட்டை நகர்மன்றம் நூறாண்டு பாரம்பரிய பெருமை உடையது. இந்த மன்றத்தையே
முழுமையாக மறைத்த வண்ணம் ப்ளக்ஸ் பேனர்கள். இதனை தவிர்த்து இருக்கலாம்.
(படம்
மேலே) ஒரு புத்தக ஸ்டாலில் எடுத்த படம்
புதுக்கோட்டைக்கு தனி ஸ்டால்:
புதுக்கோட்டை
மாவட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கென்று தனியாக ஒரு ஸ்டால் வைத்து இருந்தார்கள்.
நான் போனபோது, தம்பி மாணவக்கவிஞர் நடராஜ் என்பவர் ஸ்டால் பொறுப்பாளராக இருந்தார்.
(படங்கள்
மேலே) மாணவக்கவிஞர் நடராஜ்
(படம்
மேலே) புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்ததன் அடையாளமாக நானும் ஒரு போட்டோ
எடுத்துக் கொண்டேன்.
(படம்
மேலே) அப்போது அங்கே வந்த கவிஞர் சோலச்சி மற்றும் எழுத்தாளர் அண்டனூர் சுரா.
இருவரும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்: வலைப்பதிவாளர்களும் கூட.
மாலை
நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், வீடு திரும்ப நள்ளிரவு ஆகி
விடும் என்பதால் உடனே திரும்பி விட்டேன்.
வாங்கிய நூல்கள்:
’ஆடிய
காலும் பாடிய வாயும் சும்மா இராது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நூல்கள் வாசிக்கும்
வழக்கம் உள்ள, என்னைப் போன்ற புத்தக ஆர்வலர்களுக்கு, புத்தகம் வாங்காமல்,
படிக்காமல் இருக்க இயலாது. அந்த வகையில் எங்கள் வீட்டு நூலகத்திற்கு என்று வாங்கிய
நூல்கள் இவை.
1.வீடில்லாப் புத்தகங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து)
2.மகாத்மா காந்தி கொலை வழக்கு – என்.சொக்கன் (கிழக்கு பதிப்பகம்)
3.சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் (அகரம்)
4.சாதிகளின் உடலரசியல் – உதயசங்கர் (நூல் வளம்)
5.என்கதை - சார்லி சாப்ளின் – தமிழில்: யூமா வாசுகி (NCBH)
6.சாதியும் நானும் – பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன்
(காலச்சுவடு)
7.எது நிற்கும்? – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
8.சுவிசேஷங்களின் சுருக்கம் – லியோ டால்ஸ்டாய் – தமிழில்:
வழிப்போக்கன் (பாரதி புத்தகாலயம்)
9.சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை – வெ.பெருமாள் சாமி (பாரதி
புத்தகாலயம்)
10.சாதி, வர்க்கம், மரபணு – ப.கு.ராஜன் (பாரதி புத்தகாலயம்)
11.ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை – அண்டனூர் சுரா (இருவாட்சி)