பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். எனவே பழைய
பாடல்களை அடிக்கடி கேட்பதற்கு வசதியாக, கம்ப்யூட்டரில் MP3 வடிவில் ஒரு போல்டரில் (FOLDER) போட்டு வைத்துள்ளேன். இவற்றை அப்படியே எனது செல்போனுக்கும் மாற்ற்ம் செய்து
கொண்டேன். அதேபோல சில பாடல்களின் வரிகளையும் இணையம் வழியே சேமித்து வைத்துள்ளேன்.
அவற்றில் பாடல் முதல் வரி, படத்தின் பெயர், படம் வெளி வந்த ஆண்டு, பாடலாசிரியர்,
பாடியவர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் – ஆகிய
விவரங்கள் இருக்கும். கிடைக்காத சில பாடல்களுக்கு பாடலைக் கேட்டுக் கொண்டே ஒவ்வொரு
வரியாக டைப் செய்து வைத்துள்ளேன்.
அவ்வாறு அடிக்கடி நான் கேட்கும் தததுவப் பாடல்களில் ஒன்று, ” எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர்
கூட்டம்” என்று துவங்கும்
பாடல். படத்தின் பெயர் “பாசமும் நேசமும்”. 1964 இல் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, M.R.ராதா நடித்து வெளிவந்த படம். பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ். இசையமைப்பாளர் வேதா. (இணையத்தில் சிலர் தவறாக வேறு
ஒரு இசையமைப்பாளர் பெயரைச் சொல்லுகின்றனர். வேதா
என்பதே சரி)
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துள்ளவை. இசையமைப்பும் அருமை. இந்த
காட்சியில் நடனமாடும் பெண்களின் அசைவுகளும் இசையும் கைகோர்த்து செல்வதை உணரலாம்.
நான் எவ்வளவோ முயற்சித்தும் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் கண்டுபிடிக்க
இயலவில்லை. எனவே உறுதியாகத் தெரிந்தவர்கள் இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று சொல்லும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த பாடலின் இறுதி வரிக்கு முதலில் வரும்
வரியில் “ போய்விடு தாயே “ என்பதா அல்லது “போய்விடுவாயே” என்பதா என்று சரியாக
விளங்கவில்லை.
இந்த படம் (பாசமும் நேசமும்) ராஜ்கபூர் (RAJKAPOOR) - நர்கிஸ் (NARGIS) நடித்த
அனாரி (ANARI) என்ற இந்தி (1959) திரைப்படத்தின் தமிழாக்கம் என்பார்கள். இந்தியில்
இசை அமைத்தவர் சங்கர் ஜெய்கிஷன். அறுபதுகளில் வெளியான சில தமிழ் படங்கள் மற்றும்
பாடல்கள் இந்தி படங்களின் தழுவல்களே. பாடல்களின் மெட்டும் அப்படியே காப்பி
செய்யப்பட்டு இருக்கும்.
இந்த பாடலை தமிழில் கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள
யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)
இந்த பாடலை இந்தியில் கண்டு கேட்டு களித்திட கீழே
உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)
தமிழ் பாடலின் வரிகள்:
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
பார்ப்பதை அறிவேன் பார்த்தவை தானே
பால்போல் மனதை கெடுத்தவள் நீயே
பாடுவதறியேன் பாட வைத்தாயே
பாடலை பாதியில் நீ முடித்தாயே
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
வேடிககை உலகம் செல்வர்கள் இல்லம்
வேடிககை உலகம் செல்வர்கள் இல்லம்
வேதனை உலகம் ஏழைகள் உள்ளம்
வேதனை உலகம் ஏழைகள் உள்ளம்
தெரியா நிலையில் தோழியும் ராணி
தெரியா நிலையில் தோழியும் ராணி
தெரிந்து விட்டால் அவள் ராணியின் தோழி
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உண்மையில் ஒருநாள் பொய்மையில் பலநாள்
ஒவ்வொரு நாளும் உங்களின் திருநாள்
எங்களின் இதயம் சிறியது தாயே
இதையும் ஏனோ உடைத்து விட்டாயே
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
புரியா மனிதன் எதையோ சொன்னால்
புரியா மனிதன் எதையோ சொன்னால்
பொறுத்தருள்வாயே போய்விடு தாயே
பொறுத்தருள்வாயே போய்விடு தாயே
நடந்ததையெல்லாம் மறந்திடுவாயே
நடந்ததையெல்லாம் மறந்திடுவாயே
மாளிகை கிளியே வாழிய நீயே
பாடல் முதல் வரி: எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
படம்: பாசமும் நேசமும் ( 1964 )
பாடல்:
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
இசை: S. வேதா
நடிகர்கள்: ஜெமினி கணேசன், சரோஜாதேவி, M.R.ராதா
டைரக்ஷன்: D.யோகானந்த் Dasari Yoganand shorty D. Yoganand
மறுபடியும்
நினைவூட்டுகிறேன் – உறுதியாகத்
தெரிந்தவர்கள் இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று சொல்லும்படி அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.