யாரும் பயப்பட வேண்டாம் இது 35 ஆண்டுகளுக்கு முன்பு (1978 - இல்) நடந்தது.
அப்போது மணப்பாறையில் (வங்கியில்) பணிபுரிந்த நேரம். தினமும்
திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு சென்று வந்தேன். (காலையில் செல்லும்போது பஸ். மாலையில் திரும்பி வரும்போது ரெயில்). என்னைப்போல் அந்த
ஊரில் வெவ்வேறு அலுவலங்களில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி
ஊழியர்கள் இவ்வாறே சென்று வந்தோம். எல்லோருமே நண்பர்கள். காலையில் பஸ்சில் பேச
நேரம் இருக்காது. மாலை திரும்பும்போது ரெயிலில் பேச நேரம் இருக்கும். அப்போது
எல்லா விவரங்களும் அலசப்படும்.
உண்மையா அல்லது வதந்தியா:
ஒருநாள் ரெயிலில் திரும்பும்போது, நண்பர்களிடையே ஒரு செய்தி சொல்லப்பட்டது.
ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அரசாங்கம் அறிவிக்கும் என்பதுதான்.
அந்தநாளில் இப்போது இருப்பதுபோல் இண்டர்நெட் (INTERNET), செல்போன், குறுஞ்செய்திகள் (SMS) மின்னஞ்சல் (email) வசதிகள் இல்லாத நேரம். அந்த
செய்தி உண்மையா அல்லது வதந்தியா என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அந்த செய்தி நன்றாக உலாவியது. அடுத்தநாள்
வாடிக்கையாளர்கள் சிலரும், உள்ளூர் நண்பர்களும் இதுபற்றி என்னை கேட்டனர். யாருக்கு
தெரியும்? ” .
கறுப்பு பணக்காரர்கள்:
பொதுவாக கறுப்பு பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை வெவ்வேறு முறைகளில் வைத்து இருப்பார்கள். முதலாவது: அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையாக வங்கிக் கணக்குகளில், லாக்கர்களில், சொத்து பத்திரங்களில் வைத்து இருப்பார்கள். சிலர்
ரொக்கமாக வைத்து இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு பயம்.. அதாவது தாங்கள் வைத்து இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவலைதான். அவ்வாறு அறிவிக்கும் முன்னர் ஒரே சமயத்தில் எல்லா பணத்தையும் வங்கியில் கட்டவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றவும் முடியாது.
மத்திய அரசு அறிவிப்பு:
எங்கள் வங்கியில், எனக்கு எழுத்தர் - காசாளர் (Clerk
– cum – Cashier ) என்று இரண்டு வேலைகள். அப்போது காசாளராக கௌண்டரில் இருந்த நேரம். ஒருநாள்
சிலர் கௌண்டரில் ஆயிரம் ரூபாய்களைக் கட்டினர். அதிகம் இல்லை. பக்கத்து
கவுண்டர்களிலும் இதே போல் கட்டினர். அன்று மாலை பணிமுடிந்து ரெயிலில் திரும்பும்
போது, இதேபோல் மற்ற வங்கிகளிலும் ஆயிரம் ரூபாய் வந்ததாக வங்கி நண்பர்கள்
சொன்னார்கள். அடுத்து சிலநாட்களில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட செய்தி “ ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இனி
செல்லாது. மத்திய அரசு அறிவிப்பு “ – என்பதுதான். ( அறிவிக்கப்பட்ட
நாள் - ஜனவரி 16, 1978 , அன்றைய பிரதமர்
திரு.மொரார்ஜி தேசாய் அவர்கள் )
அரசாங்கம் வெளியிடப் போகும் ஒரு அறிவிப்பு, தகவல் தொடர்பு அதிகம் இல்லாத
அந்தநாளில், சாதாரணமான ஒரு ஊரிலேயே முன்னதாகவே சிலருக்கு மட்டும் தெரிந்து விடுகிறது
என்றால் மற்ற பெரிய ஊர்களில் என்ன நடந்து இருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். மூட்டை
கட்டி வைத்து இருந்த, விஷயம் தெரியாதவர்கள் என்ன செய்து இருப்பார்கள்? கர்மயோகி
அவர்கள் (www.karmayogi.net/?q=abarimidamaanaselvam1) தனது இணைய தளத்தில் ” அபரிதமான செல்வம்” என்ற தனது கட்டுரையில்
எழுதியது இது.
// ரூ.1000 நோட்டு இனி செல்லாது என 40 வருஷத்திற்கு முன் ஒரு சட்டம் வந்தது. அன்று ஒரு
பெட்டிக் கடைக்காரன் 1000 ரூபாய்
நோட்டில் பாக்கு மடித்துக் கொடுத்தான். 40 ஆண்டுக்கு முன்னும் பம்பாய் பெட்டிக் கடையில் 1000
ரூபாய் நோட்டு புழங்கியது. //
நேரம் இருக்கும்போது கர்மயோகியின் இந்த கட்டுரையை நண்பர்கள் அவசியம் படிக்கவும்.
முடிவு:
இப்போது 24 மணி நேர ATM CARD வசதி இருப்பதால், அவசர
செலவுகளுக்கு மட்டும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு மீதியை வங்கிக் கணக்கில்
வைத்துக் கொள்வதுதான் நல்லது. எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்.
( குறிப்பு: ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை
மட்டுமன்றி மற்ற 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என்று
அரசாங்கம் அறிவித்தது. The Indian 1000-rupee
banknote (1000) is a denomination of Indian
currency. It was first introduced by the Reserve Bank of India in 1954. In January
1978, all high-denomination banknotes (1000, 5000, and 10,000) were demonetised to curb )
My thanks to:
Google