Monday, 15 September 2014

தமிழ் வலையுலகில் விருதுகள்



நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் இப்போது வலைப் பதிவில் விருதுச் செய்திகள். சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள்  http://ranjaninarayanan.wordpress.com/2014/09/08  தொடங்கி வைத்த  THE VERSATILE BLOGGER AWARD இப்போது பதிவர்கள் மத்தியில் சங்கிலித் தொடராக பரிமாறலில் இருக்கிறது. (இதே விருது எனக்கு இப்போது மூன்றாம் முறையாக கிடைத்துள்ளது ) வலைப் பதிவர்கள் சந்திப்பு மதுரையில் நடக்க இருக்கும் இந்தசமயம் அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் விருது என்னும் விருந்து பரிமாறலைத் தொடங்கி வைத்த சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றி! 

விருதுகள் பலவிதம்:

வலைப்பதிவு எழுதுவது என்பது தமிழில் அதிகம் புழக்கம் ஆனவுடன் மேனாட்டாரின் ஆங்கில வலைப்பதிவர்கள் தந்த  விருதுகள் இங்கும் வந்துவிட்டன்.. நான் வலைப் பதிவில் வந்தநேரம் அய்யா திரு V.G.K அவர்கள் தான் வாங்கும் விருதுகளை (வை கோபாலகிருஷ்ணன்) மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வலையுலகை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். அவர் தான் வாங்கிய மற்றும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்த விருதுகளின் பட்டியலை மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களது பதிவின் பின்னூட்டதில் குறிப்பிட்டுள்ளார். அவை:

FABULOUS BLOG RIBBON AWARD
SUNSHINE BLOGGER AWARD
THE BEST ENCOURAGER AWARD
AWESOME BLOGGER AWARD
LIEBSTER BLOG AWARD [GERMAN]
THE VERSATILE BLOGGER AWARD

இவையல்லாது இன்னும் நிறைய விருதுகளைப் பற்றியும் இண்டர்நெட்டில் காணலாம்.

நான் பெற்ற விருதுகள்:

முதன் முதல் வலைப்பதிவை எழுதத் தொடங்கிய நேரம் சீனியர் பதிவர்கள் ( வலைப்பதிவு சர்வீஸில்தான்) பலர் பெற்ற விருதுகளின் படங்களையும் விவரங்களையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். நமக்கெல்லாம் எங்கே கிடைக்கும் யார் கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்ததுண்டு. அதனால் நான உண்டு என் வலை (வளை) உண்டு என்று எழுதி வந்தேன். எனக்கு முதன்முதலாக சகோதரி கவிஞர் சசிகலா (தென்றல்) அவர்கள் VERSATILE BLOGGER AWARD (நாள் 21.02.12) கொடுத்து வலைப்பதிவில் இன்னும் நன்றாக எழு எனக்கு ஊக்கம் தந்தார்கள். இதே விருதினை சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களும் (கிறுக்கல்கள் 10.06.12 ) இரண்டாம் முறையாகத் தந்தார். அப்புறம் அய்யா திரு V.G.K அவர்கள் (வை கோபாலகிருஷ்ணன்)  Sunshine Blogger Award,  Liebster Blog Award, Fabulous Blog Ribbon Award  என்று எனக்கு அளித்து ஊக்கம் தந்தார்.  எனக்கு கிடைத்த விருதுகளைப் ( விருதின் வரலாறு, வழங்கும் முறைமை) பற்றி நான் எழுதிய பதிவுகள் இவை.

எனக்குக் கிடைத்த “FABULOUS BLOG RIBBON AWARD “

எனக்குக் கிடைத்த லிப்ஸ்டர் விருது (LIEBSTER AWARD)

எனக்கு கிடைத்த சன்சைன் ப்ளாக்கர் விருது (SUNSHINE BLOGGER AWARD) “

வலைப்பதிவும் விருதும்


ஒரு வேண்டுகோள்:

பல வலைப்பதிவர்கள் தாங்கள் பகிர்ந்தளிக்கும் அதே விருது மற்றவருக்கு ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கவனிப்பதில்லை. ஆர்வக் கோளாறு அல்லது அன்பின் மிகுதியால் அதே விருதினை திரும்பவும் அவருக்கு வழங்கி விடுகின்றனர். இதனை தவிர்த்தால் இன்னொருவருக்கு அதே விருது கிடைக்க வாய்ப்பு வரும்.  

 ( PICTURES THANKS TO "GOOGLE")
.  

34 comments:

  1. இந்த நேரத்தில் சற்றே உரிமையுடன் நான் ஒரு விஷயத்தைப்பகிர விரும்புகிறேன். இந்த மாதிரி ஒரு விருது ஒரு நண்பரால் இன்னொரு நண்பருக்கு வழங்கப் பட்டபோது அதை அவர் நிராகரித்தார். வழங்கும் தகுதி அவருக்கு இருக்கிறதா என்னும் தொனியில் இருந்தது அவர் நிராகரிப்பு. versatality என்பது பன்முகத் திறமை கொடுப்பவருக்கும் இருக்க வேண்டும் வாங்குபவருக்கும் இருக்க வேண்டும். ஒருவர் நமக்கு தெரிந்தவர் நம் வலைப்பதிவுக்குவருகை தருபவர் என்னும் ஒரே காரணத்தால் விருதுகள் வழங்கப் பட்டால் விருதின் மதிப்பு குறைகிறது. இந்த என் வெளிப்படையான கருத்தில் பலரும் வேறு படலாம் இருந்தாலும் நினைப்பதைச் சொல்வது தவறல்ல என்று எண்ணுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதியதல்ல.

    ReplyDelete
  2. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மேல் நாட்டவர் ஆரம்பித்து வைத்தது என்பதை - தங்களின் பதிவின் மூலமாகத் தெரிந்து கொண்டேன். விரிவான தகவல்கள் என்றும் பயனுள்ளவை.

    ஐயா GMB அவர்களின் கருத்தும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.

    ReplyDelete
  4. மூன்றாம் முறையாக THE VERSATILE BLOGGER AWARD பெற்றுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள், ஐயா. அன்புடன் VGK

    ReplyDelete
  5. மறுமொழி> G.M Balasubramaniam said...

    // இந்த நேரத்தில் சற்றே உரிமையுடன் நான் ஒரு விஷயத்தைப்பகிர விரும்புகிறேன். //

    அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் தங்கள் வலைத் தளத்தில் பல சமயம் மாற்றுச் சிந்தனை கருத்துக்களை ( அது சமய நம்பிக்கை சார்ந்ததாக இருந்தாலும் கூட ) வெளிப்படையாக விவாதித்து இருக்கிறீர்கள். எனவே மூத்த வலைப்பதிவரான உங்களுக்கு இல்லாத உரிமையா?

    // இந்த மாதிரி ஒரு விருது ஒரு நண்பரால் இன்னொரு நண்பருக்கு வழங்கப் பட்டபோது அதை அவர் நிராகரித்தார். வழங்கும் தகுதி அவருக்கு இருக்கிறதா என்னும் தொனியில் இருந்தது அவர் நிராகரிப்பு. versatality என்பது பன்முகத் திறமை கொடுப்பவருக்கும் இருக்க வேண்டும் வாங்குபவருக்கும் இருக்க வேண்டும்.//

    தமிழ்ப் புலவர் அவ்வையாருக்கு அதியமான் என்ற மன்னன் நீண்ட நாள் (நூறு ஆண்டுகள்) வாழ வைக்கும் நெல்லிக்கனி ஒன்றை அன்பாக பரிசாக அளித்த போது, அவ்வையார் அன்புடனேயே ஏறுக் கொண்டார். அவர் நெல்லிக்கனி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.

    இங்கு வலைப்பதிவில் ஒருவருக்கொருவர், அன்பின் காரணமாகவே விருதுகளை பரிமாறிக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். விருதினை நிராகரித்த நண்பர் தனது நண்பரின் அன்பை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.

    Versatile / வ(ர்)ஸடைல் / (adj) (1) capable of turning easily from one thing or subject to another ஒரு விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்குச் சுலபமாக மாறுகிற (கவனிக்கிற) (2) applying oneself readily to any task , many – sided எந்த வேலையையும் செய்யும் திறமை வாய்ந்த ,
    பலவிதத் திறமைகளுள்ள, பல கலைகளில் வல்லமையுள், (eg) versatile author; (adv)vers’atilely

    - MEGA LIFCO DICTIONARY (ENGLISH – ENGLISH – TAMIL) தரும் விளக்கம் இது

    பன்முகத் திறமை என்பதற்கு புராணத்தில் வரும் மயன் என்பவனை மட்டுமே உதாரணம் காட்ட இயலும். கற்பனை என்ற நோக்கில் அதுவும் முழுதும் ஒப்புக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அஷ்டாவதனம் என்று ஒரே சமயத்தில் எட்டு செயல்களைச் செய்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். வலைப்பதிவரும் அந்த வகையினில் எழுதுதல், போட்டோகிராபி, ஓவியம் வரைதல், ஒலி-ஒளி (வீடியோ) இணைத்தல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தனது கருத்துகளைத் தெரிவித்தல் (மின்னஞ்சல்) என்று பன்முகம் கொண்டவராக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டுயதுதான்.

    // ஒருவர் நமக்கு தெரிந்தவர் நம் வலைப்பதிவுக்குவருகை தருபவர் என்னும் ஒரே காரணத்தால் விருதுகள் வழங்கப் பட்டால் விருதின் மதிப்பு குறைகிறது. இந்த என் வெளிப்படையான கருத்தில் பலரும் வேறு படலாம் இருந்தாலும் நினைப்பதைச் சொல்வது தவறல்ல என்று எண்ணுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதியதல்ல. //

    நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். காரணம் இப்போது நிறைய பதிவர்கள் வலைப்பக்கம் நிறைய எழுதுவதில்லை. புதிதாக வருபவர்களும் FACE BOOK இன் மயக்கத்தில் எளிமையாக LIKE போடுவதை LIKE பண்ணுபவர்களாகவே இருக்கிறார்கள். வலைப் பதிவினில் இருப்பவர்களுக்கு விருதுகள் தந்து ஊக்குவிப்போம். புதிதாக வருபவர்களை வரவேற்போம்.

    (அபிமன்யு சக்கர வியூகத்தில் மாட்டியது போல், தங்கள் கேள்வி வியூகத்தில் சிக்கிக் கொண்டு சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். நீஙகளதான் சொல்ல வேண்டும், இன்று விஜய் டீவியில் இப்போது ( 7 P.M to 7.30 P.M ) மகாபாரதம் – தமிழ் தொடரில் அபிமன்யு வதம்.)

    தங்களின் நீண்ட கருத்துரைக்கு எனது நீண்ட பதிலை அளிக்க வாய்ப்பளித்த G.M.B அவர்களுக்கு நன்றி!



    ReplyDelete
  6. விருதுகளுக்கு வாழ்த்துகள். :)

    ReplyDelete
  7. என் பதிவுகளில் நான் எழுதுவது வேறு, பிறதளங்களுக்குச் சென்று என் கருத்தை கூறுவது வேறு. சமய சிந்தனையாயிருந்தால்கூட என்று அடைப்புக் குறிகளில் எழுதியுள்ளீர்கள். மாற்றுச்சிந்தனைகளின் பிறப்பிடமே அங்குதான் துவங்குகிறது. அபிமன்யு சக்கர வியூகத்தில் மாட்டியதைக்காட்டும் விதம் ஒரு dramatic effect-க்காக என்று தோன்றுகிறது. நான் வகுத்தது சக்கர வியூகமுமல்ல. உங்களை அதில்மாட்டும் நோக்கமும் இல்லை. நீண்ட மறு மொழிக்கு நன்றி.

    ReplyDelete

  8. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. விருது சம்பந்தமாய் தங்களின் கருத்து சரியானதே !
    நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே இந்த விருது பெற்றவர்கள் யார் என்று தெரியாத காரணத்தால் ,புதியவர்களை ஊக்குவிக்கும் விதமாக என் தளத்தில்,விண்ணப்பிக்கும் படி கோரியுள்ளேன் ,சரிதானே ?
    link.... .http://www.jokkaali.in/2014/09/blog-post_16.html
    த ம +1

    ReplyDelete
  10. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!

    // ஐயா GMB அவர்களின் கருத்தும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கது. //

    அனுபவம் வாய்ந்த மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்களின் ஆலோசனைகள் என்றும் பயன்படும்.

    ReplyDelete
  13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    வலைப்பதிவினில் “V.G.K சிறுகதை விமர்சனப் போட்டி” – பணிகளுக்கு இடையிலும் எனக்கு பாராட்டு சொன்ன V.G.K அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.

    ReplyDelete
  14. மறுமொழி > Thenammai Lakshmanan said...

    சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // அபிமன்யு சக்கர வியூகத்தில் மாட்டியதைக்காட்டும் விதம் ஒரு dramatic effect-க்காக என்று தோன்றுகிறது. //

    பாரதக் கதையை படிக்கவும் செய்தார்கள். நடிக்கவும் செய்தார்கள் அந்த வகையில் அபிமன்யு பாத்திரப் படைப்பு ஒரு நாடகத் திருப்பம்தான் என்பதில் ஐயமில்லை.

    // நான் வகுத்தது சக்கர வியூகமுமல்ல. உங்களை அதில்மாட்டும் நோக்கமும் இல்லை. நீண்ட மறு மொழிக்கு நன்றி. //

    அய்யா G.M.B அவர்களுக்கு மீண்டும் நன்றி!


    ReplyDelete
  16. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரருக்கு நன்றி!

    // விருது சம்பந்தமாய் தங்களின் கருத்து சரியானதே !
    நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே இந்த விருது பெற்றவர்கள் யார் என்று தெரியாத காரணத்தால் ,புதியவர்களை ஊக்குவிக்கும் விதமாக என் தளத்தில்,விண்ணப்பிக்கும் படி கோரியுள்ளேன் ,சரிதானே ?//

    யாரும் விருது தாருங்கள் என்று விண்ணப்பம் போட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். உங்களுக்கு எப்படி எந்த வேண்டுகோளுமின்றி விருதினைத் தந்தார்களோ, அவ்வாறே நீங்களும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதுதான் முறை.

    ReplyDelete
  18. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  19. வணக்கம்
    ஐயா.

    விருதுபெற்றமைக்கு பாராட்டுக்கள் ஐயா. மேலும் எழுத்துலகில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. பல வலைப்பதிவர்கள் தாங்கள் பகிர்ந்தளிக்கும் அதே விருது மற்றவருக்கு ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கவனிப்பதில்லை. ஆர்வக் கோளாறு அல்லது அன்பின் மிகுதியால் அதே விருதினை திரும்பவும் அவருக்கு வழங்கி விடுகின்றனர். இதனை தவிர்த்தால் இன்னொருவருக்கு அதே விருது கிடைக்க வாய்ப்பு வரும்.

    இது 100க்கு100 உண்மை நண்பரே,,,, விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  22. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்......

    ReplyDelete
  23. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
  24. பல விருதுகள் பெற்ற
    தங்களுக்கு வாழ்த்துகள்!
    விருது என்னும் விருந்து பரிமாறலைத் தொடங்கி வைத்த சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  25. பல வலைப்பதிவர்கள் தாங்கள் பகிர்ந்தளிக்கும் அதே விருது மற்றவருக்கு ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கவனிப்பதில்லை. ** நான் நெனச்சேன். நீங்க சொல்லிடீங்க அண்ணா! இத்தனை விருதுகள் உங்களுக்கு கிடைத்தது ஞாயம்தானே:)) பதிவின் சாரமாய் அந்த படப்பகிர்வு அருமை!!

    ReplyDelete
  26. மறுமொழி > ரூபன் said...
    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்!

    ReplyDelete
  27. மறுமொழி > KILLERGEE Devakottai said..
    சகோதரர் தேவகோட்டையாருக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > அருணா செல்வம் said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > King Raj said...
    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    // பல விருதுகள் பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள்! விருது என்னும் விருந்து பரிமாறலைத் தொடங்கி வைத்த சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றி! //

    ஆம் அய்யா! இந்த ஆண்டு விருது என்னும் விருந்து பரிமாறலைத் தொடங்கி வைத்த சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  32. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    கரந்தை ஆசிரியருக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    // பல வலைப்பதிவர்கள் தாங்கள் பகிர்ந்தளிக்கும் அதே விருது மற்றவருக்கு ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கவனிப்பதில்லை. ** நான் நெனச்சேன். நீங்க சொல்லிடீங்க அண்ணா! இத்தனை விருதுகள் உங்களுக்கு கிடைத்தது ஞாயம்தானே:)) பதிவின் சாரமாய் அந்த படப்பகிர்வு அருமை!! //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பல பின்னூட்டங்கள் மூலம் நிறையபேர் இவ்வாறே நினைத்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. எப்படியோ, இப்போது வலையுலகம் மீண்டும் பழைய கலகலப்பிற்கு திரும்பிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ReplyDelete