சென்ற மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தின்போது,
திரு.வெங்கட் நாகராஜ் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, நியூஸிலாந்திலிருந்து வலைப்பதிவர்
துளசி டீச்சர் (துளசி கோபால்) அவர்கள், அடுத்த மாதம் ஸ்ரீரங்கம் வர இருப்பதாகவும்,
ஸ்ரீரங்கத்தில் வலைப்பதிவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், எனக்கு தகவல் சொல்வதாகவும்
சொல்லி இருந்தார்.
அதேபோல, சென்ற வாரம், ஞாயிறு (07.02.16)
அன்று
மாலை
நான்கு
மணிக்கு ஶ்ரீரங்கம்,
அம்மாமண்டபம்
சாலையில்,
திருமதி கீதா
சாம்பசிவம்
அவர்களின் இல்லத்தில், வலைப்பதிவர்கள் சந்திப்பு நடக்க இருப்பதாக எனக்கு
மின்னஞ்சல் வந்தது. வெங்கட் நாகராஜ் மற்றும் கீதா சாம்பசிவம் ஆகியோர் அழைத்து
இருந்தனர். இதுபற்றி மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) பேசியதில்
அவரும் அந்த கூட்டத்திற்கு வருவதாக சொல்லி இருந்தார்.
’கோஸி நெஸ்ட்’
நானும்
நேற்று மாலை நாங்கள் குடியிருக்கும் K.K.நகர் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு
பஸ்ஸில் புறப்பட்டு சென்றேன். தை அமாவாசையை (இன்று) முன்னிட்டு நேற்று கோயில்களுக்குச்
செல்லும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. எனவே சரியான
நேரத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வதில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. எனவே
V.G.K. மற்றும் வெங்கட் நாகராஜ் இருவரும் செல்போனில் நான் எங்கு வந்து கொண்டு இருக்கிறேன்
என்று கேட்டனர். நான் இப்படியே பஸ்ஸில் போனால், இருக்கும் நெரிசலில், இன்னும் நேரம்
ஆகும் என்பதால், காவிரிப் பாலம் தாண்டியதும், மாம்பழச் சாலையில் இறங்கி, ஒரு ஆட்டோவைப்
பிடித்து கூட்டம் நடக்கும் ’கோஸி நெஸ்ட்’ (COZY NEST) அபார்ட்மெண்ட் (அம்மாமண்டபம் சாலை) சென்று
விட்டேன். (4.15 p.m.). மேடம் கீதா சாம்பசிவம் அவர்களது ப்ளாட்டில் எனக்கு முன்னரே
எல்லோரும் அங்கு விஜயம்.
வலைப்பதிவர்கள் :
அங்கு வந்திருந்த வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததில்
மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணமான துளசி டீச்சரும்
, அவரது கணவர் திரு.கோபால் அவர்களும் நியூஸிலாந்திலிருந்து வந்து இருந்தனர். திரு வெங்கட்
நாகராஜ் அவர்கள் தனது மனைவி திருமதி. ஆதி வெங்கட் மற்றும் மகள் ரோஷிணி (இருவரும் வலைப்பதிவர்கள்)
ஆகியோருடன் வந்து இருந்தார். எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தனது மனைவியுடன் (பெயர் கேட்க
மறந்து விட்டேன்) வந்து இருந்தார். இன்னும் மூத்த வலைப்பதிவர்கள் திருமதி ருக்மணி சேஷசாயி,
திரு. வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோரும் (மூவருமே
எழுத்தாளார்கள்) வந்து இருந்தனர்.
(படம் – மேலே) துளசி கோபால் தம்பதியினர்
(படம் – மேலே) கீதா சாம்பசிவம் மற்றும் துளசி கோபால் தம்பதியினர்
(படம் – மேலே) துளசி டீச்சர் அவர்களிடம் நான் புத்தகம் கொடுத்தபோது
அன்பான உபசரிப்பும் கலந்துரையாடலும்:
தங்கள் இல்லத்திற்கு வந்து இருந்தவர்களை கீதா சாம்பசிவம் தம்பதியினர்,
சூடான ரவாகேசரி, சூடான போண்டாக்கள் (சட்னியுடன்), சுவையான சூடான காபி தந்து அன்புடன்
வரவேற்று உபசரித்தனர்.
ரவாகேசரியைப் பார்த்தவுடன் எழுத்துலக நண்பர்களுக்கு தாங்கள் பெண்
பார்க்கப் போனபோது, பெண் வீட்டார் கொடுத்த ரவாகேசரியை ‘இனிமையாக’ நினைவு கூர்ந்தனர்.
எழுத்தாளர்கள் திரு. ரிஷபன், திரு. V.G.K மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி மூவருமே
BHEL இல் பணி புரிந்த நாளிலிருந்து நண்பர்கள்; (திரு V.G.K பணி ஓய்வு பெற்று விட்டார்).
மூவரும் நகைச்சுவையாக நிறைய ஜோக்குகளையும் எழுத்துலக அனுபவங்களையும் சொன்னார்கள். வெங்கட்
கேமராவும் கையுமாக இருந்தார். எல்லோரையும் தனது கேமராவினால் சுட்டார். விரைவில் அவரிடமிருந்து
அதிக படங்களுடன் பதிவு ஒன்றை எதிர்பார்க்கலாம். துளசி டீச்சரும், அவரது கணவர் கோபால்
சாரும் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
(படம் – மேலே) வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
ஆகியோருடன் நான்
(படம் – மேலே) ரிஷபனின் மனைவி, ருக்மணி சேஷசாயி, ரோஷிணி, கீதா சாம்பசிவம், ஆதி வெங்கட் மற்றும் துளசி கோபால்
(படம் மேலே) திரு (கீதா) சாம்பசிவம் அவர்களுடன் வை.கோபாலகிருஷ்ணன்
(படம் மேலே) துளசி கோபால், ருக்மணி சேஷசாயி மற்றும் வெங்கட் நாகராஜ்
எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தான் எழுதிய ‘முற்று பெறாத ஓவியம்’ என்ற நுலினை எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினார். ‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ என்ற நூலினை டீச்சர் துளசி கோபால் அவர்களிடம் கொடுத்தேன். ( இந்த கையேடு வலைப்பதிவர் திருவிழா – 2015 வில், கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை வெளியிட்டது ஆகும்). டீச்சர் ருக்மணி சேஷசாயி அவர்கள் தனது கையினால் செய்ஆ மணிமாலைகளை, அன்று அங்கு வந்திருந்த பெண்களுக்கு அன்புப் பரிசாக வழங்கினார்; மேலும் மறுபடியும் அவர்கள் சென்னைக்கே சென்று குடிபோகப் போவதாகவும் சொன்னார்.
(படம் மேலே) துளசி கோபால், ருக்மணி சேஷசாயி மற்றும் வெங்கட் நாகராஜ்
எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தான் எழுதிய ‘முற்று பெறாத ஓவியம்’ என்ற நுலினை எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினார். ‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ என்ற நூலினை டீச்சர் துளசி கோபால் அவர்களிடம் கொடுத்தேன். ( இந்த கையேடு வலைப்பதிவர் திருவிழா – 2015 வில், கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை வெளியிட்டது ஆகும்). டீச்சர் ருக்மணி சேஷசாயி அவர்கள் தனது கையினால் செய்ஆ மணிமாலைகளை, அன்று அங்கு வந்திருந்த பெண்களுக்கு அன்புப் பரிசாக வழங்கினார்; மேலும் மறுபடியும் அவர்கள் சென்னைக்கே சென்று குடிபோகப் போவதாகவும் சொன்னார்.
(மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் சோர்வாக இருந்தார். அவரது பதிவைப்
பார்த்த பிறகுதான், அவருக்கு அன்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட விஷயம் தெரிய
வந்தது)
மாடியிலே:
எல்லோரும் ஓரளவுக்கு பேசி ஓய்ந்ததும், திரு. சாம்பசிவம் அவர்கள்
எல்லோரையும் தாங்கள் இருக்கும் அபார்ட்மெண்ட் மாடிக்கு அழைத்துச் சென்றார். (மேடம்
கீதா சாம்பசிவம் அவர்கள் மட்டும் வீட்டிலேயே இருந்து கொண்டார்), மாடியிலிருந்து காவிரியைக்
கண்டதும் ’நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடத் தோன்றிற்று.
(படம் மேலே) மேற்குச் சூரியன்
(படம் மேலே) தென்னைகள் நடுவினில் தெரியும் மலைக்கோட்டை
(படம் மேலே) கம்பீரமான
ராஜகோபுரம் –
V.G.K. அனுப்பி வைத்த படங்கள்:
கூட்டம் தொடங்கியதிலிருந்து திரு.V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களும்
மற்றவர்களும் நிறைய படங்கள் எடுத்து இருந்தனர். நானே அவரிடம், அவர் எடுத்த போட்டோக்களை
கேட்டுப் பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நான் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை
மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி! அவற்றிலிருந்து சில படங்கள் (கீழே).
– x – x – x –
இந்த பதிவர் சந்திப்பு பற்றிய மற்றைய நண்பர்களது
பதிவுகள்:
திருச்சி, ஶ்ரீரங்கத்தில் பதிவர்கள் மாநாடு!
http://sivamgss.blogspot.in/2016/02/blog-post_7.html
திருவரங்கத்தில்
பதிவர் சந்திப்பு – ஃபிப்ரவரி 2016 http://venkatnagaraj.blogspot.com/2016/02/2016.html
வணக்கம்
ReplyDeleteஐயா
நிகழ்வை மிக அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களின் வாழ்த்தினுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஇனிய சந்திப்பு ஐயா... படங்கள் அனைத்தும் அருமை....
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
Deleteமகிழ்வான சந்திப்பு!!!
ReplyDeleteமயிலாடுதுறை சகோதரர் அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதாங்கள் ஸ்ரீரங்கத்தில் வலைப்பதிவர்களைச் சந்தி்த்து மகிழ்ந்ததை அருமையான படங்களுடன் நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம்.
நன்றி.
த.ம.2
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete//எழுத்தாளர்கள் திரு. ரிஷபன், திரு. V.G.K மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி மூவருமே BHEL இல் பணி புரிந்த நாளிலிருந்து நண்பர்கள்; (திரு V.G.K பணி ஓய்வு பெற்று விட்டார்). மூவரும் நகைச்சுவையாக நிறைய ஜோக்குகளையும் எழுத்துலக அனுபவங்களையும் சொன்னார்கள். //
ReplyDeleteநான் பேரெழுச்சியுடன் புறப்பட்டு வந்ததே இதுபோன்ற நம் வலையுலக அனைத்து நண்பர்களையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்தித்து ஜாலியாகப் பேசி மகிழ ஒரு வாய்ப்பாக அமையுமே என்பதற்காக மட்டுமே.
>>>>>
திரு V.G.K. அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் உள்ள சந்தோஷம் அளவிட முடியாததுதான். அதிலும் நீங்கள் மூவருமே வலைப்பதிவர்கள். வாழ்த்துக்கள்.
Delete//எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தான் எழுதிய ‘முற்று பெறாத ஓவியம்’ என்ற நுலினை எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினார். //
ReplyDeleteஇதனை நான் சற்றும் எதிர்பாராமல் எனக்குக் கிடைத்ததோர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்ந்தேன்.
>>>>>
நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.
Delete
ReplyDelete// டீச்சர் ருக்மணி சேஷசாயி அவர்கள் மறுபடியும் சென்னைக்கே சென்று குடிபோகப் போவதாகவும் சொன்னார். //
இது திருச்சி பதிவர்களுக்கும், குறிப்பாக எனக்கும் ஓர் வருத்தம் தரும் செய்தியாக நான் உணர்ந்தேன். இருப்பினும் பதிவுலகம் மூலம் நம் தொடர்பில்தான் இனியும் இருக்கப்போகிறார்கள் என்பதில் மனதுக்கு ஓர் சின்ன ஆறுதலாக இருக்கிறது.
>>>>>
அய்யா உண்மையிலேயே அவர்கள் திருச்சியை விட்டு செல்வது என்பது, நம்மைப் போன்றவர்களுக்கு நெருடலான விஷயம்தான்.
Deleteபடங்களும், தங்களின் இந்தப்பதிவும், அதில் தாங்கள், தங்கள் பாணியில் எழுதியுள்ள அனைத்தும் அருமையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅவ்வப்போது இதுபோன்ற இனிய சந்திப்புகள் பேட்டரி ரீ-சார்ஜ் செய்வதுபோல, நம் மனதுக்கு இதமாகவும், உற்சாகம் அளிப்பதாகவும்தான் உள்ளன.
சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
நான் இதுரை நேரில் சந்தித்துள்ள பதிவர்களில் திருமதி. துளசி கோபால் அவர்கள் நாற்பதாவது பதிவர் ஆகிறார். ஏற்கனவே நான் சந்தித்துள்ள 1 to 39 பதிவர்கள் பற்றிய படங்களுடன் கூடிய செய்திகள் 2015 பிப்ரவரி மாதம் நான் கொடுத்துள்ள 6+7=13 தொடர் பதிவுகளில் உள்ளன. அதற்கான ஆரம்ப முதல் பதிவின் இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html நிறைவுப் பகுதியின் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/02/7.html
அன்புடன் VGK
இதுரை = இதுவரை
Deleteதிரு V.G.K.அவர்களுக்கு மீண்டும் வணக்கமும்.
Deleteநன்றியும்.
அய்யா
அருமையான அழகான சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் சகோ என் மகனின் திருமணத்திற்கும் வந்து சிறப்பித்திருந்தார். நன்றி அவருக்கும் :) பகிர்வுக்கு நன்றி இளங்கோ சார். தனிப் புகைப்படத்தில் இருக்கும் விஜிகே சார் உங்களை மிக அழகா எடுத்திருக்காங்க. :)
ReplyDeleteThenammai Lakshmanan Monday, February 08, 2016 11:56:00 pm
Deleteவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//வெங்கட் சகோ என் மகனின் திருமணத்திற்கும் வந்து சிறப்பித்திருந்தார். //
அதுபற்றி அவர் என்னிடமும் சொன்னார், சற்றே தாமதமாகத்தான் போக முடிந்தது என்றும் சொன்னார். அவராவது கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி, எனக்கும். :)
//தனிப் புகைப்படத்தில் இருக்கும் விஜிகே சார் உங்களை மிக அழகா எடுத்திருக்காங்க. :)//
மிக்க மகிழ்ச்சி மேடம். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் தெரியுமாறு நான் என் மொபைல் போனில் எடுக்கச் சொன்னேன். எடுத்தவர் நம் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள். தங்களின் பாராட்டுக்கு என் இனிய நன்றிகள், ஹனி மேடம்.
அன்புடன் கோபால்
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தங்கள் இல்ல திருமண நிகழ்விற்கு வாழ்த்துக்கள்.
Deleteமிக நன்றி தமிழ் இளங்கோ ஜி.
ReplyDeleteமிக அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள்.
படங்களை திரு கோபால கிருஷ்ணன் அளித்திருந்தார். இப்போது நீங்கள்
பதிவைப் பற்றி விவரமாக எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம்.
நன்னாள் நீங்கள் சந்தித்த நாள்.
எங்களுக்கெல்லாம் ஆனந்தம்.இந்த மகிழ்ச்சி வளரட்டும்.
கருத்துரையும் பாராட்டும் சொன்ன மேடம் அவர்களுக்கு நன்றி.
Deleteரசித்தேன்.
ReplyDeleteமுனைவர் அய்யாவிற்கு நன்றி.
Deleteசுவாரஸ்யமான, இனிமையான சந்திப்பு. படங்கள் சிறப்பு. கீதா சாம்பசிவம் அவர்களின் வீட்டு மொட்டை மாடி ஒரு தனி சுவாரஸ்யம். அங்கு ஆங்காங்கே இரண்டு பெஞ்ச்வேறு போட்டிருப்பார்கள். மாலை வேலைகளை அமர்ந்து பேசலாம், புத்தகம் படிக்கலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ள அந்த மொட்டை மாடியை இரண்டு அல்லது மூன்று முறம் சுற்றி நடந்தால் போதும்!
ReplyDelete'எங்கள் ப்ளாக்' ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அன்று கீதா சாம்பசிவம் அவர்கள் அபார்மெண்ட் மாடிக்கு சென்றபோது நீங்கள் எழுதிய பதிவும், காவிரி படங்களும் நினைவுக்கு வந்தன.
Deleteஆகா
ReplyDeleteபடங்களைப் பார்க்கவே மனம் மகிழ்கிறது ஐயா
சிறப்பான சாந்திப்பு
இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் ஐயா
நன்றி
தம+1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. பதிவர் சந்திப்பினால் ஏற்படும் மனமகிழ்வையும், இன்னும் எழுதவேண்டும் என்ற உற்சாகத்தையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.
Deleteதிருவரங்கத்தில் ஒரு புதுக்கோட்டையைக் கண்டேன். திருவரங்கச் சந்திப்பு கில்லர்ஜி புதுக்கோட்டைக்கு வந்த நாள்களை நினைவுபடுத்தின. நண்பர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கண்டதில் மகிழ்ச்சி. அதிகமான செய்திகளுடனும், புகைப்படங்களுடனும் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஆமாம் அய்யா! திருவரங்கத்தில் ஒரு புதுக்கோட்டைதான். எனக்கும் புதுக்கோட்டைக்கு அன்று கில்லர்ஜி அவர்கள் வந்தபோது, ஆசிரியர் முத்துநிலவன் அய்யா இல்லத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பை இந்த திருவரங்கம் சந்திப்பு நினைவூட்டியது. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையான சந்திப்பு. எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன். அழகான ஒரு நிகழ்வை தவற விட்டுவிட்டேன். சந்திப்பை விவரித்து எழுதிய விதம் அருமை. படங்களும் அழகு.
ReplyDeleteத ம 6
பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ். அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையான சந்திப்பு. படங்களுடன் விவரித்திருந்த விதம் அருமை.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteஅன்பான முகங்கள்.. அசத்தலான - எழுத்து நடை.. அருமையான புகைப்படங்கள்..
ReplyDeleteநிறைவான மகிழ்ச்சி.. வாழ்க நலம்..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வாழ்த்தினுக்கு நன்றி.
Deleteஇளங்கோ:
ReplyDeleteபழைய நினைவுகள் ஞாபகப்படுதியதித்ற்க்கு மிக்க நன்றி!
ஸ்ரீரங்கம் அழகு தான்!
கல்லூரியில் படிக்கும் போது ஒவ்வொரு கோடைக்கும் மற்றும் எப்ப திருச்சி சென்றாலும் திருச்சியில் ஒரு இரண்டு நாள் என் நண்பனின் வீட்டில் தங்கி விட்டுத்தான் செல்வேன். சாலை ரோடில் அவன் வசித்தான். காவிரிக் கரையோரம் என்று நினைக்கிறேன். மேலும் தில்லை நகரில் (பெயர் தப்பாக இருக்கலாம்) ஒரு நண்பன். செயின்ட் ஜோசப் கல்லூரியும் தான் படித்தார்கள், என் நண்பர்கள். ஏன் ஏன் அப்பா படித்த கல்லூரியும் அதான்!பல நண்பரகள்!
மெயின் கார்ட் கேட்டு, கிரான்ட் அணைக்கட்டு, முக்கொம்பு, ஹோலி க்ராஸ் கல்லூரி இதையெல்லாம் மறக்கமுடியுமா...!
நம்பள்கி அவர்களுக்கு வணக்கம். காவிரி சூழ் பொழில் ஸ்ரீரங்கம் என்றுமே அழகுதான். தங்களது கல்லூரி நாட்களின் மலரும் நினைவுகளாக திருச்சியைப் பற்றி ரத்னச் சுருக்கமாக சொன்னதற்கு நன்றி. (சாலைரோடு, தில்லைநகர் இரண்டும் அருகருகே ஒரே ஏரியாவில் இருப்பவை.இரண்டுமே காவிரிக் கரையிலிருந்து கொஞ்சம் விலகிதான் இருக்கின்றன.)
Deleteநல்லவர்கள் சந்தித்தால் நாலு விஷயம் பேசலாம்தான். குறுகிய காலத்தில் நிறைவான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதுபோலும். மகிழ்ச்சி. படங்கள் நாமும் அங்கிருந்ததுபோன்ற நினைவைத் தருகின்றன.
ReplyDeleteஎழுத்தாளர் ஏகாந்தன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteஅருமை சார்...அசத்தி விட்டீர்கள்!
ReplyDeleteநன்றி அய்யா!
Delete
ReplyDeleteமகிழ்வான சந்திப்பு.............
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஆஹா அருமையான மகிழ்வான சந்திப்பு ,,, தொடருங்கள்,
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையான தொகுப்பு இளங்கோ சார் இவர்களில் வெங்கட் நாகராஜ் குடும்பத்தாரை நான் இன்னும் சந்திக்கவில்லை. படங்கள் எல்லாமே அழகு. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅய்யா G.M.B. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமகிழ்வான சந்திப்பு ஐயா, படங்கள் அழகு!
ReplyDeleteசகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteஅருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். படங்களும் அருமையாக வந்துள்ளன! எனக்கு அன்று உடம்பு கொஞ்சம் பரவாயில்லை ரகம்! :) ஏனெனில் கடந்த ஒரு மாதமாக நான் ஆஸ்த்மா தொந்திரவால் அவதிப்பட்டுக்கொண்டு, இந்தச் சந்திப்புக்குள் சரியாக வேண்டும் என்று பிள்ளையாரை வேண்டிக் கொண்டு நெபுலைசர் தொடர்ந்து எடுத்துக் கொண்டேன். அதனால் அன்று கொஞ்சம் உட்கார முடிந்தது. :)))) இல்லை எனில் வெளியே போண்டோ வாங்கியிருக்க மாட்டோம். வீட்டிலேயே ஏதேனும் புதுமையான உணவாகச் செய்வதாக யோசித்திருந்தோம்! அதற்கு முடியாமல் போய்விட்டது! :(
ReplyDeleteமேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உடல்நலக் குறைவாக இருந்தபோதும், விருந்தினர் மீது நீங்களும் உங்கள் வீட்டுக்காரரும் காட்டிய அன்பு மிக்க விருந்தோம்பலுக்கு நன்றி.
Deleteசுமார் 15 வருடங்களுக்கு முன்னர் எனக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மழைக்காலம், பனிக்காலம் வந்தால் ரொம்பவும் கஷ்டம். ஆஸ்துமாவின் அறிகுறி என்றார்கள். ஒரு டாக்டர் யோகா செய்யுங்கள் என்றார். அடிக்கடி டாக்டர்களை மாற்றியதுதான் மிச்சம். ஒரு தடவை ஒவ்வாமை (allergy) என்ற நூலினைப் படித்தேன். எனக்கு என்ன அலர்ஜி என்று (எனது மீசைக்கு மட்டும் டை போடும் வழக்கம்) நானே கண்டறிந்து கண்டறிந்து அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டேன். இப்போது மூச்சுத்திணறல் இல்லை. இதுபற்றி ஒரு பதிவு கூட எழுதி இருக்கிறேன்.
அன்புள்ள தமிழ் இளங்கோ ஐயா, இந்த நூல் எங்கு கிடைக்கும்?
Deleteநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு வணக்கம். நான் படித்த நூலின் பெயர், டாக்டர் கே.ஏ.மோகனதாஸ் என்பவர் எழுதிய ”ஒவ்வாமை (அலர்ஜி)” – இந்த நூலினைப் பற்றியும், எனக்கு மூச்சுத் திணறல் குணமானது பற்றியும், ” மூச்சுத் திணறல் குணமானது எப்படி? http://tthamizhelango.blogspot.com/2012/05/blog-post_23.html என்ற எனது பதிவினில் குறிப்பிட்டுள்ளேன். அந்த நூலின் விவரம். (இப்போது இந்த நூல் புத்தக கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை)
Deleteநூலின் பெயர் : ஒவ்வாமை (அலர்ஜி)
பக்கங்கள் : 176 விலை ரூ 120/=
ஆசிரியர்: டாக்டர் கே.ஏ.மோகனதாஸ், 919, பெரியார் ஈ.வெ.ரா.சாலை, சென்னை – 600 084
பதிப்பகம்: ஸ்ரீவாரு பதிப்பகம், 919, பெரியார் ஈ.வெ.ரா.சாலை, சென்னை – 600 084 தொலைபேசி: 044 6411794 / 044 6431537
சந்திப்பின் இனிய தருணங்களை மீண்டும் அசை போட வைத்த பகிர்வு..... இனிமையாகக் கழிந்த மூன்று மணி நேரம்.....
ReplyDeleteசந்திப்பினை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் - புகைப்படங்களும் அழகு....
அடுத்த சந்திப்பிற்காக இப்போதே மனம் ஏங்குகிறது!
சகோதரர் வெங்கட் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteசகோதரர் வெங்கட் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅழகான நட்பின் தருணங்கள்.. என் பிறந்த ஊரின் பதிவர்களை படங்களில் பார்க்க மிகவும் மகிழ்வாக உள்ளது. கீதா மேடம் வீட்டு மொட்டைமாடி பல பதிவுகளிலும் படங்களிலும் இடம்பெற்று அங்கு வரவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சுவையான தருணங்களை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி ஐயா.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கும் ஊர்ப் பாசத்திற்கும் நன்றி. எனக்கும் திருச்சி என்றாலே தனி அபிமானம் உண்டு.
Deleteசுடசுடப் படங்களைப் போட்டு அசத்தி இருக்கிறீர்கள். இன்றுதான் நிதானமாக வந்து பார்க்கின்றேன். வீடு திரும்பி 5 நாட்கள் ஆகின்றன. இந்த முறை அசதி அதிகம். வயதேறி வருவதின் அறிகுறியாக இருக்க வேணும்:-)
ReplyDeleteஉங்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. புத்தக அன்பளிப்புக்கு நன்றிகள்.
துளசி டீச்சர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. பயணக் களைப்பு நீங்கியதும், மீண்டும் தொடர்ந்து நீங்கள் எழுதப் போகும் பயணக் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Deleteஇப்போதுதான் கவனித்தேன். மேலிருந்து கீழ் ஆறாவது படத்தில் திரு. சாம்பசிவம் மாமா திருமதி. கீதா மாமியைத் தலையில் குட்டுவது போலவோ அல்லது தலையில் தட்டுவது போலவோத் தெரிகிறது :)
ReplyDeleteஅருமையான பதிவர் சந்திப்பு பகிர்வு.
ReplyDeleteதுளசி கோபால் மாயவரத்தில் இருந்தால் வருவதாய் சொன்னார்கள் அவர்கள் வந்த போது நான் மதுரை வந்து இருந்தேன். ( இந்த முறை சந்திக்க முடியவில்லை)அதனால் அவர்களை சந்திக்க முடியவில்லை.
முன்பு வந்து இருக்கிறார்கள் வீட்டுக்கு.
அழகிய படங்கள்.
ரோஷ்ணி, ஆதியை டெல்லியில் சந்தித்தோம். ரோஷ்ணி வளர்ந்து இருக்கிறாள்.
பகிர்வுக்கு நன்றி.