திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
- பாரதியார்
கூகிள்(GOOGLE) செய்யும் மாயம்தான் என்ன? அதில் எதையோ தேடப் போக எனக்கு அறிமுகவானவர் V.G.K என்று அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். அதேபோல கூகிளில் வேறு ஒரு தேடலைத் தேடிப் போக எதிரில் வந்தவர் ”ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி அவர்கள். அவரது ஆண்டார் வீதியும் நானும்! என்ற பதிவைப் படித்து விட்டு
// .அந்த
சந்தோஷம்..வருமா இனி?
போனது..போனது தான்!! //
அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் எல்லோருக்கும் பெருமூச்சுதான். இத்தனை நாட்கள் எப்படி உங்கள் வலைப் பக்கம் நான் வராமல் போனேன் என்று தெரியவில்லை. இப்போது உங்கள் கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.
போனது..போனது தான்!! //
அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் எல்லோருக்கும் பெருமூச்சுதான். இத்தனை நாட்கள் எப்படி உங்கள் வலைப் பக்கம் நான் வராமல் போனேன் என்று தெரியவில்லை. இப்போது உங்கள் கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.
நூல் வெளியீட்டு விழா:
திரு V.G.K அவர்கள் ஒருநாள் (02.ஆகஸ்ட்.14)
முற்பகல் செல்போனில் அன்று மாலை திருவானைக்கோவிலில் ”ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி அவர்களது
இல்லத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருந்தார். என்னால்
சூழ்நிலையின் காரணமாக அந்த விழாவிற்கு செல்ல இயலாமல் போய் விட்டது. ஆனாலும் அய்யா
வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது வலைதளத்தில் அந்த நிகழ்வை தனக்கே உரிய
நகைச்சுவையோடு படங்களுடன் வெளியிட்டு இருந்ததைப் பார்த்ததும் அந்தக் குறை
நீங்கியது. நான் தஞ்சைக்கு சென்றபோது நந்தி பதிப்பகத்தில் புத்தகம் இல்லை. (அய்யா ஆர்.ராமமூர்த்தி அவர்கள்
நூலை எனக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லி இருந்தும் அவரை நான் தொந்தரவு செய்ய
விரும்பவில்லை) பின்னர் திருச்சி ஆதிகுடியில் கிடைப்பதாக அறிந்து அங்கே போய்
வாங்கினேன்.
நூலைப் பற்றி:
ஆரண்ய நிவாஸ் - என்ற இந்த நூலின் முன்னுரையாக ”உள்ளதைச் சொல்லுகிறேன்” என்ற தலைப்பில்
” எழுத்து
ஒரு வேள்வி. அது ஒரு தவம் என்பதெல்லாம் மெஸ்மெரிச வார்த்திகள் மட்டுமே PEN IS MIGHTER THAN
SWORD என்பதும் சுத்த ஹம்பக்! பிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்ட
வால்டர், ரூஸோ போன்ற எழுத்தாளர்கள் மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் என்ன
நடந்து இருக்கும். ஒன்றும் நடந்து இருக்காது ”
என்று
எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதையைப் பற்றிய தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆசிரியர் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
மோகன்ஜி
(வானவில் மனிதன்) அவர்கள் நூலிலுள்ள சிறுகதைகளின் எதார்த்தத்தை அணிந்துரையாக தந்துள்ளார்.
இந்த நூலில் வரும் கதை மாந்தர்கள் யாவரையும் நாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தவர்களாக
இருக்கக் காணலாம். நூலை முழுதும் படித்து விட்டேன். இருந்தாலும் ஒருசில கதைகளைப்
பற்றி மட்டும் கீழே சொல்லுகிறேன்.
அலுவலகமும் வாழ்க்கையும்:
நான் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற நாளிலிருந்து என்னைப் பார்க்கும்
நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வி “ என்ன? இளங்கோ சார் பொழுது எப்படி போகிறது?” என்பதுதான்.
ஓய்வு பெற்று விட்டால் என்ன? இருக்கவே
இருக்கின்றன நம் வீட்டுத் தோட்டத்தில் ஆசையாய் நாம் வளர்க்கும் மரங்கள் செடிகள்
கொடிகள் ... ... என்று ஆசையாய் குறிப்பால் விளக்குகிறார் நூலின் ஆசிரியர். கதையின்
பெயர் “ஆரண்ய நிவாஸ்”.
நிறுவனத்தில் அதுவும் தனியார் நிறுவனத்தில் பதவி உயர்வு என்பது எட்டாக்கனி.
நாம் என்னதான் கஷ்டப்பட்டு நிறுவனத்திற்காக உழைத்தாலும் நமக்குத்தான் கிடைக்கும் என்று நினைத்து இருந்தாலும் கடைசி நேரத்தில் வேறு ஒருவருக்கு போய்விடுகிறது.
காரணம் தெரியாமல் பதட்டமடையும் சந்தரின் ” பிரமோஷன்” கதை.
ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த கதையை டி.வி.எஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக HOUSE JOURNAL
இல்
மீண்டும் வெளியிட்டது.
ஆபிஸில் சிலபேர் உண்டு. ரூல்ஸ் என்று சொல்லிக் கொண்டு அந்த பதவியில் அவர்கள்
செய்யும் அலம்பல் தாங்க முடியாது. வேண்டுமென்றே மெடிக்கல் க்ளெய்மில் பாதியாகக்
குறைப்பது, ஓய்வுக்குப் பின் கிடைக்கும் பணத்திற்காக ஒருவரை அலைய விட்டு வேடிக்கை
பார்ப்பது என்று மனதில் ஒருவித குரூர புத்தி. இது மாதிரியான ஆசாமிகள் எப்போதுமே
திருந்த மாட்டார்கள் என்பதைச் சொல்லும் ஒரு கதை “மானுடம்’
குடும்ப வாழ்க்கை:
சந்தேகப் பிராணியான ஒரு மனிதனுக்கு அவனது மனைவி எழுதிய உள்ளக் குமுறல்கள் ஒரு
கடிதமாய் வந்தால்?
” புல்லாங்குழல்
எடுத்து வாசிப்பது தேவ குணம் ... வாசிக்கத் தெரியாவிட்டால் பெட்டியில் வைப்பது
மனித குணம். அதை வைத்து அடுப்பு ஊதுவது ... ?”
.
என்று
சொல்லுகிறார் ஆசிரியர் .கதையின் பெயர் - “இழக்கக் கூடாதது”
நாம் சில தம்பதியினரைப் பார்க்கும்போது நமக்கே ஒரு பொறாமை ஏற்படும்.
அவர்களுக்குள் அப்படி ஒரு அன்யோன்யம். உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும்
ஆயிரத்தெட்டு கிழிசல்
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
-
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
(படம்: அன்னை)
என்று சந்திரபாபு ஒரு படத்தில் பாடுவார். அந்த பாடலுக்கு உண்மை வடிவம்
கொடுக்கும் ஒரு கதை “சபாஷ் சரியான ஜோடி”
தெரு மாந்தர்கள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் – இது எழுத்தாளர்
ஜெயகாந்தன் தனது நாவல் ஒன்றினுக்கு வைத்த பெயர். நாமும் இது மாதிரியான சில
மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது.
ஸார்வாள் – மறக்க முடியாத கண்ணீர்
பாத்திரம். நம்மால்தான் சுகர் அது இது என்று சாப்பிட முடியவில்லை; இவராவது நம்
செலவில் சாப்பிடட்டும் என்று ஒருநாள் ஓட்டலுக்கு அழைக்க அதுவே தொட்ர்கதை ஆக ஒரு
முடிவுக்கு வருகிறது. கதையின் பெயர் ” சார்வாள்”
எனக்குத் தெரிந்து சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் நிறைய “ ஸ்டோர்கள்” இருந்தன. இப்போது ஸ்டோர் என்றால் கடைகளை மட்டும் குறிக்கும். அப்போது ஸ்டோர் என்றால் ஒண்டுக் குடித்தனங்கள் வாடகைக்கு இருந்த வரிசையாக இருந்த ஓட்டு வீடுகளைக் குறிக்கும். பொது கிணறு, பொது குடிநீர்க் குழாய் என்று மின்சார மீட்டர் உட்பட எல்லாமே பொதுதான். அந்தக் கால ஸ்டோர் வாழ்க்கை மனிதர்களது மனோபாவம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் அருமையான கதை “பாலகிருஷ்ணன் வீடு”.
பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஒரே நாளில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
வைதீக நிகழ்ச்சிகளுக்கு ஒத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்த இளம்
குருக்களுக்கு என்ன நடந்தது? ”அபரகாரியம்”
விளக்கும்.
சிலர் எதற்கெடுத்தாலும் புகார், ஸ்டேஷன், கோர்ட் என்று ஏறி இறங்குவார்கள்.
பள்ளியில் ஒரு பையன் தனது மகளின் கைகளில் நகக் கீறல்கள் செய்துவிட கற்பனையின்
உச்சத்திற்கே சென்று வரும் ஒருவன்
கடைசியில் அவன் சொல்லும் வார்த்தை “நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்,
‘இனிமேல் நியூஸ் பேப்பரே’ படிக்கக் கூடாது” கதையின் தலைப்பு ”முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ளே”
இன்னும் ராகவபுரம் குழந்தைகள், சாராத்து அம்பி, பயில்வான் உஸ்தாத் ஷாஹூல்
ஹமீது, சாந்தா, அமீர்பாய் என்று பலரும் வருகிறார்கள்.
ஒரு ஆலோசனை:
இனி வரும் நூல்களில் பின் அட்டையில் நூலாசிரியர் பற்றிய குறிப்புகள்
வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆசிரியர் ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
அவர்களது வலைப்பதிவில் நான் இட்ட
கருத்துரை இது – நேற்று
ஆதிகுடியில் வாங்கிய உங்களது ஆரண்ய நிவாஸ் நூலை இப்போதுதான் படித்து முடித்தேன்.
நேற்று அவர்கள் ஓட்டலில் சாப்பிட்ட அசோகா அல்வாவைப் போல உங்கள் சிறுகதைகளும் நல்ல
ருசி.
நூல் விவரம்:
நூலின் பெயர்: ஆரண்ய
நிவாஸ்
நூலாசிரியர்:
ஆர்.ராமமூர்த்தி
பக்கம்: 112 விலை: ரூ.75/=
வெளியீடு: நந்தி பதிப்பகம், முதல் தளம்,
ஜி.டி. காம்பிளஸ், தெற்கு அலங்கம், (திலகர் திடல் எதிரில்), தஞ்சாவூர் - 6
நூல் கிடைக்குமிடம்: ஆதிகுடி காபி கிளப், மேல்
அரண் சாலை, இப்ராஹிம் பார்க் எதிரில்,திருச்சி – 620 008
செல் போன்: 9443399777
த.ம 1
ReplyDeleteஆரண்ய நிவாஸ் புத்தகம் பற்றிய விவரங்கள் காணும் போது படிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அங்கு வரும் போது வாங்க வேன்டும். .
சிறுகதைகளின் தங்கள் சிறுவிமர்சனம் அருமை ஐயா.
அன்புள்ள ஐயா, வணக்கம். அருமையான அழகான விமர்சனம் தந்துள்ளீர்கள். தங்கள் விமர்சனக்குறிப்புகளைப் படிக்கும் போதே அந்த அந்தக்கதைகளை அவரின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்துள்ள ஞாபகம் உடனே எனக்கு மனதில் நிழலாடுகிறது.
ReplyDeleteநேரமின்மையால் இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK
வணக்கம்
ReplyDeleteஐயா
புத்தகம் பற்றி தங்களின் பார்வையில் மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாக்கி படிக்க வேண்டும் என்ற உணர்வு எழுகிறது பகிர்வுக்கு நன்றி ஐயா.ஒவ்வொருவரையும் பற்றி குறிப்பிட்ட விதம் நன்றாக உள்ளது.
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மறுமொழி > R.Umayal Gayathri said...
ReplyDelete// த.ம 1 ஆரண்ய நிவாஸ் புத்தகம் பற்றிய விவரங்கள் காணும் போது படிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அங்கு வரும் போது வாங்க வேன்டும்.
சிறுகதைகளின் தங்கள் சிறுவிமர்சனம் அருமை ஐயா.//
சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! மேலே பதிவில் நூலின் விவரத்தில் சொல்லப்பட்டுள்ள ஆசிரியரின் செல்போனில் தொடர்பு கொள்ளவும்.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!
// அன்புள்ள ஐயா, வணக்கம். அருமையான அழகான விமர்சனம் தந்துள்ளீர்கள். தங்கள் விமர்சனக்குறிப்புகளைப் படிக்கும் போதே அந்த அந்தக்கதைகளை அவரின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்துள்ள ஞாபகம் உடனே எனக்கு மனதில் நிழலாடுகிறது. //
இந்த புத்தகத்தினை வாங்குவதற்கும் இந்த பதிவினல் நான் எழுதியதற்கும் தொடக்க காரணமே நீங்கள்தான். தங்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
// நேரமின்மையால் இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK //
நேரம் கிடைக்கும்போது அவசியம் படிக்கவும்.
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! எப்போதும் போல் தொடர்ந்து எனக்கு ஊக்கம் தந்து கருத்துரையும் தமிழ்மணத்தில் வாக்களிப்பும் நல்கும் உங்களுக்கு நன்றி!
அழகனா நூல் விமர்சனம். உங்கள் ஆலோசனை வரவேற்கத்ததக்கதே! நல்ல ஆலோசனை! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteவாசிக்க வேண்டும் ஐயா!
ReplyDelete‘ஆரண்ய நிவாஸ்’ நூல் பற்றி அருமையாய் திறனாய்வு செய்திருக்கிறீர்கள். தங்களின் திறனாய்வே அந்த நூலை உடனே வாசிக்கத் தூண்டுகிறது. அதை நிச்சயம் படிப்பேன். வாழ்த்துக்கள் உங்களுடைய திறனாய்வுக்கு!
நல்ல ஒரு பகிர்வு. நானும் புத்தகம் வாங்க வேண்டும். சில கதைகளை அவர் தளத்தில் படித்திருக்கிறேன். சிலவற்றை அவர் முக நூலில் பகிர்ந்தார்.
ReplyDeleteசிறப்பான நூல் விமர்சனம். மீண்டும் புத்தகத்தினை படித்த உணர்வு....
ReplyDeleteஅழகான விமர்சனம் ரசித்து ருசித்து எழுதி சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்.!
ReplyDeleteமறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteசகோதரர் துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ஸ்ரீராம். said...
ReplyDeleteசகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஒரே சமயத்தில் உங்கள் பதிவில் “ஆரண்யநிவாஸ்” பற்றிய விமரிசனம் வந்து ஒரு வாரம் ஆவதற்குள்ளாகவே நானும் எனது பதிவைப் போட்டது தவறோ என்று யோசிக்க வைத்து விட்டது.
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// அழகான விமர்சனம் ரசித்து ருசித்து எழுதி சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்.! //
ஆமாம் சகோதரி! நான் ஆதிகுடி என்ற அந்த ஓட்டலுக்கு அடிக்கடி சென்று இருக்கிறேன். நான் அங்கு போன நேரத்தில் சூடான பட்டணம் பக்கோடாவும் சூடான அசோகா அல்வாவும் இருந்தன. அவற்றை ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டுத்தான் “ஆரண்ய நிவாஸ்” வாங்கினேன். இப்பொழுது அந்த புத்தகத்தை கையில் எடுக்கும் போதெல்லாம் அவற்றின் ருசியும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றன. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
சார், தங்கள் திறனாய்வு அருமை.அதுவும் அந்த 'உள்ளே போய் பார்த்தால் தானே தெரியும் ஆயிரத்தெட்டு கிழிசல்' என்கிற வார்த்தை விளையாடல் அதி அற்புதம்.ஒரு மலருக்கு colour என்பதே இயற்கை அளித்த ஒரு சின்ன அறிமுகம். அந்த அறிமுகத்தை நம் வெங்கட் நாகராஜ் தம் பிளாக்கில் அழகாக எழுதிய ஒரு வாரத்திற்குள் தாங்கள் எழுதியதில் என்ன தவறு இருக்க முடியும்? அறிமுகம் செய்பவர்களின் எழுத்தாற்றலில் அல்லவா இருக்கிறது அந்த அறிமுகம், படிப்பவரின் மனதில் அதனை அப்படியே உள் வாங்கி 'ஜிங்' கென்று ஒரு நெடிய நேரம் உட்கார்ந்து கொள்வது?
ReplyDeleteஒரு in between interval என்பது அதற்கு தடையாக இருக்க முடியுமா என்ன?
நூலின் பின் அட்டையில் ஆசிரியரின் படம் மட்டும்தான் உள்ளதா?
ReplyDeleteஆச்சரியமாக இருக்கிறது ஐயா
ஒன்றுமே சாதிக்காதவர்கள் கூட, தங்கள் பிறந்த நாளுக்குத், தாங்களே
போஸ்டர் அடித்து, ஊர் முழுக்க விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்நாளில்
இப்படியும் ஒரு மனிதர்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது ஐயா
நூல் விமர்சனம் அருமை
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றி
நூல் விமர்சனம் அருமை.படிக்கத் தூண்டுகிறது
ReplyDeleteமறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!.உங்களுடைய எழுத்துக்களோடும் உங்களோடும் ஒப்பிடுகையில் நான் மிகமிகச் சாதாரணமானவன். எனவேதான் உங்கள் நூலை ஒரு இலக்கிய அனுபவம் என்றே குறிப்பிட்டேன்.
// சார், தங்கள் திறனாய்வு அருமை.அதுவும் அந்த 'உள்ளே போய் பார்த்தால் தானே தெரியும் ஆயிரத்தெட்டு கிழிசல்' என்கிற வார்த்தை விளையாடல் அதி அற்புதம் //
இந்த கட்டுரையில் இந்த வார்த்தை எப்படி வந்து விழுந்தது என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உங்கள் கதையில் நான் லயித்து விட்டதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
// ஒரு மலருக்கு colour என்பதே இயற்கை அளித்த ஒரு சின்ன அறிமுகம். அந்த அறிமுகத்தை நம் வெங்கட் நாகராஜ் தம் பிளாக்கில் அழகாக எழுதிய ஒரு வாரத்திற்குள் தாங்கள் எழுதியதில் என்ன தவறு இருக்க முடியும்? அறிமுகம் செய்பவர்களின் எழுத்தாற்றலில் அல்லவா இருக்கிறது அந்த அறிமுகம், படிப்பவரின் மனதில் அதனை அப்படியே உள் வாங்கி 'ஜிங்' கென்று ஒரு நெடிய நேரம் உட்கார்ந்து கொள்வது? ஒரு in between interval என்பது அதற்கு தடையாக இருக்க முடியுமா என்ன? //
உங்களின் பாராட்டுரை என்னை இன்னும் நிறைய எழுதச் சொல்கிறது. நன்றி!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// நூலின் பின் அட்டையில் ஆசிரியரின் படம் மட்டும்தான் உள்ளதா? ஆச்சரியமாக இருக்கிறது ஐயா ஒன்றுமே சாதிக்காதவர்கள் கூட, தங்கள் பிறந்த நாளுக்குத், தாங்களே
போஸ்டர் அடித்து, ஊர் முழுக்க விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்நாளில் இப்படியும் ஒரு மனிதர் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது ஐயா //
எனக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. பொதுவாக இப்போது வரும் எல்லா நூல்களிலும், பின் அட்டையில், ஆசிரியரின் படம் மற்றும் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் இருப்பதைக் காணலாம்.
// நூல் விமர்சனம் அருமை அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா நன்றி //
அவசியம் படியுங்கள். தங்களது கருத்துக்களை ஒரு பதிவாக எழுதுங்கள். நன்றி!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete// நூல் விமர்சனம் அருமை.படிக்கத் தூண்டுகிறது //
கவிஞர் கவியாழிக்கு நன்றி. நீங்கள் மீண்டும் வலைப்பதிவில் எழுத வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதவும்.
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் படிப்பதற்கும், படித்ததை திறானய்வு செய்வதற்கும் நேரம் கிடைப்பதற்கு...
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteஅழகான மதிப்புரை. வாசிக்கத் தூண்டும் வரிகள்.
ReplyDeleteவணக்கம் ஐயா !
ReplyDeleteஎவ்வளவு பொறுமையாகவும் நுட்பமாகவும் ரசித்துப் படித்து நாமும்
ரசிக்கும்படியாகவும் மிகவும் சிறப்பாக மதிப்புரையைத் தந்துள்ளீர்கள் !
எழுதுவது ஒரு கலை என்றால் எழுதுபவர்களையும் வாசிப்பவர்களையும் கூட
இவ்வாறு ஊக்குவிப்பதும் மிகச் சிறந்த கலையே !தங்களுக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .
மறுமொழி > வலிப் போக்கன் said...
ReplyDelete// கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் படிப்பதற்கும், படித்ததை திறானய்வு செய்வதற்கும் நேரம் கிடைப்பதற்கு... //
சகோதரர் வலிப்போக்கனின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > கே. பி. ஜனா... said...
ReplyDelete// அருமையான பதிவு! //
எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > ரிஷபன் said...
ReplyDelete// அழகான மதிப்புரை. வாசிக்கத் தூண்டும் வரிகள். //
எழுத்தாளர் ரிஷபன் அவர்களின் பாராட்டு வசிஷ்டரின் பாராட்டைப் பெற்றது போல் இருந்தது. நன்றி!
மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said..
ReplyDeleteசகோதரியின் நீண்ட பாராட்டுரைக்கு நன்றி!
நூலைப் பார்க்கவும், படிக்கவும் தூண்டிய அளவு உள்ளது தங்களின் நூல் மதிப்பீடு. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் வாங்கிப்படிப்பேன். நன்றி.
ReplyDeleteமறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அவசியம் படியுங்கள். தங்களது கருத்துக்களை ஒரு பதிவாக எழுதுங்கள். நன்றி!
நல்ல விமர்சனம். ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கட்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல நூலுக்கு தங்கள் விமர்சனமானது விளக்க உரையாக உள்ளது! அருமை!
ReplyDeleteமறுமொழி > மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!