விக்கிரமாதித்தன் கதைகள் படிப்பது என்றால் நேரம் போவதே தெரியாது. பள்ளிக்கூட
விடுமுறையில் எங்கள் அம்மாவின் கிராமம் சென்று இருந்தபோது அங்கு கிடைத்த பெரிய
எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் படித்தேன். அன்றிலிருந்து விக்கிரமாதித்தன்
என்றால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பின்னாளில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மாகாளிக்குடியில் உள்ள காளி
கோயில் சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்று ஒருகதை சொன்னார்கள். அன்றிலிருந்து
அங்கு போய்வர எண்ணி, இப்போதுதான் முடிந்தது.
கடந்த திங்கட் கிழமை (19.08.2013) சமயபுரத்தில் நண்பர்கள்
நடத்திய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானம் முடிந்ததும் நண்பர்களிடம்
விடைபெற்றுக் கொண்டு,
அருகில் மாகாளிக்குடி என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன்
கோயில் சென்று வந்தேன். சமயபுரத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். எனவே
அங்கிருந்து நடந்தே சென்று வந்தேன்.
மாகாளிக்குடியும் விக்கிரமாதித்தனும்.
உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத
நெருங்கிய நண்பர்கள்.. ஒருமுறை தேவலோகத்தில்
நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும்
தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும்
விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். சரியான தீர்ப்பைச் சொன்ன
விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு, முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம்
ஒன்றையும் தந்து ”ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்க” என்று வரம் தந்து அனுப்பி
வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான்.
இதைக் கேட்ட பட்டி தனது புத்திக் கூர்மையினால் காளியின் அருளால், தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வாங்கி விடுகிறான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து
போகும்படி வரங்கள் அமைந்து விடுகின்றன.. இதனால் இருவரும் கவலை அடைகின்றனர். தீவிர
யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ”ஆறு மாதம் சிம்மாசனத்தில்
அமர்ந்து நாட்டை ஆள்வது.. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி காடாள்வது” என்ற யோசனை சொல்கிறான். இதனால் இரண்டாயிரம் வயது விக்கிரமாதித்தனுக்கும் வந்து விடும்.
இந்த “காடாறு மாதம்; நாடாறு மாதம் “ முறைப்படி வருகையில் ஒருதடவை இந்த
மாகாளிக்குடி என்ற இடத்திற்கு விக்கிரமாதித்தன் வருகிறான். கூடவே அவனுடைய நண்பனும்
மந்திரியுமான பட்டி மற்றும் வேதாளம்.கூடவே தான் எப்போதும் வணங்கும் உஜ்ஜயினி
காளியின் விக்கிரகம். இங்கு தங்கி காடு ஆறுமாதம் முடிந்து நாடு திரும்பும் போது
விக்கிரகத்தை எடுக்கும்போது எடுக்க முடியவில்லை. விக்கிரமாதித்தன் கனவில் வந்த
காளி, தான் இந்த ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்ல, அவனும்
அப்படியே ஒரு கோயில் ஒன்றைக் கட்டி விட்டுச் செல்கிறான்.
இதுதான் இந்த கோயிலுக்காகச் சொல்லப்படும் கதை. நமது நாட்டில் ராமாயணம்,
மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றில் வரும் கதை மாந்தர்களை பல
கோயில்களின் தல புராணத்தோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த உஜ்ஜயினி மாகாளியை இங்குள்ளவர்கள், உச்சி
மாகாளி என்றும் உச்சினி மாகாளி என்றும் அழைக்கின்றனர்.
மாகாளிக்குடி கோயில் படங்கள்:
கோயிலுக்குள் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இங்கே
தருகின்றேன்.
படம் (மேலே) சம்யபுரம் கோயில் அருகே உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் தோரண வாயில்.
படம் (மேலே) சம்யபுரம் கோயில் அருகே உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் தோரண வாயில்.
படம் (மேலே) காளியம்மன் கோயில் வாயில் அருகே உள்ள அறிவிப்புப் பலகை
.படம் (இடது) காளியம்மன் கோயில் நுழைவு வாயில்
.படம் (இடது) காளியம்மன் கோயில் நுழைவு வாயில்
படம் (மேலே) நுழைவு வாயில்
மேலே உள்ள காளியின் உருவச் சிலை
படம் (மேலே) நுழைவு வாயில்
இடப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.
படம் (மேலே) நுழைவு வாயில்
வலப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.
படம் (மேலே) நுழைவு வாயில் உட்பக்கம்
படம் (இடது) மந்திரி பட்டி (ஸ்ரீ களுவன்) மற்றும் ஸ்ரீ வேதாளம் சன்னதி
படம் (மேலே) ஸ்ரீ மதுரை வீரன் சன்னதி
படம் (மேலே) கோயிலின் ஒரு மூலை
படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி சன்னதி
படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி சன்னதி மேல் உள்ள சிலை
படம் (மேலே) கோயிலின் இன்னொரு மூலை
நான் மாகாளிக்குடியில் உள்ள காளி சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்பதால், காளி கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று என்ணினேன். ஆனால் அதற்கு மாறாக சிறிய கோயிலாகத்தான் உள்ளது.
படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி சன்னதி
படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி சன்னதி மேல் உள்ள சிலை
படம் (மேலே) கோயிலின் இன்னொரு மூலை
நான் மாகாளிக்குடியில் உள்ள காளி சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்பதால், காளி கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று என்ணினேன். ஆனால் அதற்கு மாறாக சிறிய கோயிலாகத்தான் உள்ளது.
வணக்கம்
ReplyDeleteதி.தமிழ்இளங்கோ(சார்)
கதையும் அருமை படங்களும் அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சிறப்புகளும் படங்களும் அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteஇதுபோன்ற பழமை மாறாத கோவில்களைப் பார்ப்பதே
ReplyDeleteஅபூர்வமாகிவிட்டது
படங்களுடன் பகிர்வும் மனம் மிகக் கவர்ந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteசிறுவயதில் விக்கிரமாதித்தன் கதை நானும் விரும்பி படித்திருக்கின்றேன்.
ReplyDeleteஉஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலும் தலவரலாறும் கண்டுகொண்டோம்.
மறுமொழி> 2008rupan said...
ReplyDelete// வணக்கம் தி.தமிழ்இளங்கோ(சார்) கதையும் அருமை படங்களும் அழகு வாழ்த்துக்கள் //
சகோதரர் கவிஞர் ரூபனுக்கு வணக்கம்! வாழ்த்துக்களுக்கு நன்றி! எனது பிறிதொரு பதிவில், சகோதரி அகிலா ” வலைச்சரம்” ஆசிரியை அவர்கள் எனது பதிவுகளை அறிமுகப்படுத்திய தகவலை (கோவையிலிருந்து அகிலா – 4 ) தெரியப்படுத்தியமைக்கு நன்றி! இனிமேல்தான் வலைச்சரம் சென்று பார்க்க வேண்டும்.
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said... ( 1 )
ReplyDelete// அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சிறப்புகளும் படங்களும் அருமை ஐயா... நன்றி... //
சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/4_22.html) சென்று பார்க்கவும்... நன்றி... //
வலைச்சரம் (ஆசிரியை சகோதரி அகிலா) பற்றிய தகவலுக்கு நன்றி! இனிமேல்தான் சென்று பார்க்க வேண்டும்.
மறுமொழி> Ramani S said... ( 1, 2 )
ReplyDelete// இதுபோன்ற பழமை மாறாத கோவில்களைப் பார்ப்பதே
அபூர்வமாகிவிட்டது படங்களுடன் பகிர்வும் மனம் மிகக் கவர்ந்தது பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //
இளம் வயதிலேயே இதுமாதிரி பல இடங்களுக்கு செல்லாமல் பார்க்காமல் இருந்து விட்டோமே என்று இப்போது தோன்றுகிறது. கவிஞரின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி> மாதேவி said...
ReplyDelete// சிறுவயதில் விக்கிரமாதித்தன் கதை நானும் விரும்பி படித்திருக்கின்றேன். //
விக்கிரமாதித்தன் கதைகளை விரும்பாதவர் இல்லை.
//உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலும் தலவரலாறும் கண்டுகொண்டோம். //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
அருமையான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள். பல புதிய விஷயங்கள் அறியப்பெற்றேன். பாராட்டுக்கள், ஐயா.
ReplyDeleteஉஜ்ஜயினில் காளி கோவில் இருப்பது தெரியும். சமயபுரம் அருகே விக்கிரமாதித்தன் வைத்து சென்ற காளி பற்றியும், காளி கோவில் பற்றியும் தங்கள் பதிவின் மூலம் தான் அறிந்துகொண்டேன். பதிவிற்கும் அழகிய படங்களை பகிர்ந்தமைக்கும் நன்றி!
ReplyDelete
ReplyDeleteசமயபுரம் அருகே உள்ள உஜ்ஜயினி காளி கோயிலுக்கு ஒரு முறை சென்றோம். கோயில் மூடியிருந்தது. வெளியில் காரிலிருந்தபடியே எடுத்துச் சென்றிருந்த உணவுகளை உண்டோம். தினசரி பூஜைகள் நடக்கிறதா தெரியவில்லை. திருச்சியில் இருப்போர் பலருக்குமே இக்கோயில் பற்றித் தெரிவதில்லை. நான் அங்கு இருந்தவரை எனக்கு இக்கோயில் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஒரு முறை இங்கிருந்து ஆலய தரிசனம்செய்யப் போனபோது காளி கோயில் சென்றோம். பகிர்வுக்கு நன்றி.
மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கதை சுவாரஸ்யமாக இருந்தது. படங்களும் அருமை. வாழ்த்துகள் சார்!
ReplyDeleteபுதிய தகவ்ல் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteமறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//அருமையான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள். பல புதிய விஷயங்கள் அறியப்பெற்றேன். பாராட்டுக்கள், ஐயா. //
திரு VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி> வே.நடனசபாபதி said...
ReplyDelete// உஜ்ஜயினில் காளி கோவில் இருப்பது தெரியும். சமயபுரம் அருகே விக்கிரமாதித்தன் வைத்து சென்ற காளி பற்றியும், காளி கோவில் பற்றியும் தங்கள் பதிவின் மூலம் தான் அறிந்துகொண்டேன். பதிவிற்கும் அழகிய படங்களை பகிர்ந்தமைக்கும் நன்றி! //
எனக்கும் சமயபுரம் பக்கம் இருக்கும் எங்கள் உறவினர் சொல்லித்தான் இப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியும். தங்கள் கருத்துரைக்கு நன்றி!
G.M Balasubramaniam said...
ReplyDelete//சமயபுரம் அருகே உள்ள உஜ்ஜயினி காளி கோயிலுக்கு ஒரு முறை சென்றோம். கோயில் மூடியிருந்தது. வெளியில் காரிலிருந்தபடியே எடுத்துச் சென்றிருந்த உணவுகளை உண்டோம். தினசரி பூஜைகள் நடக்கிறதா தெரியவில்லை. திருச்சியில் இருப்போர் பலருக்குமே இக்கோயில் பற்றித் தெரிவதில்லை. நான் அங்கு இருந்தவரை எனக்கு இக்கோயில் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஒரு முறை இங்கிருந்து ஆலய தரிசனம்செய்யப் போனபோது காளி கோயில் சென்றோம். பகிர்வுக்கு நன்றி. //
நான் சென்ற போதும் பூசாரி வெளியில் சென்று இருந்தார். கோயில் திறந்து இருந்தது. கருவறை கம்பிகதவுகள் மட்டும் பூட்டப்பட்டு இருந்தன. அவர் வரும்வரை காத்திருந்தேன்.
பலருக்கு இப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியவில்லை. இது பிரபலம் ஆகாததற்கு அருகில் உள்ள ஒரு பெரிய அம்மன் தலமான சமயபுரமும் காரணமாக இருக்கலாம்.
மறுமொழி> -தோழன் மபா, தமிழன் வீதி said...
ReplyDelete//மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கதை சுவாரஸ்யமாக இருந்தது. படங்களும் அருமை. வாழ்த்துகள் சார்! //
விக்கிரமாதித்தன் கதை என்றாலே சுவாரஸ்யம்தானே! தோழனின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி> குட்டன் said...
ReplyDelete// புதிய தகவ்ல் தெரிந்து கொண்டேன் //
சகோதரர் குட்டன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
கதையும் படங்களும் அருமை ஐயா. நன்றி
ReplyDeleteவிக்கிரமாதித்தன் கதையை படிக்கத் தூண்டுகிறது உங்களது படமும் பதிவும்.
ReplyDeleteஇந்தக் கோவில் பற்றிய ஸ்தல புராணம் அறிந்தேன். அடுத்தமுறை திருச்சி வரும் பொது இந்தக் கோவில் கண்டிப்பாக செல்ல வேண்டும்.
விக்கிரமாதித்தன் கதைகளையே நீங்கள் பதிவாக்குங்களேன். என்னைப் போல் நிறைய பேர் விரும்பிப் படிப்பார்கள்.
நன்றி பகிர்விற்கு....
மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// கதையும் படங்களும் அருமை ஐயா. நன்றி //
கருத்துரை தந்த கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி> rajalakshmi paramasivam said...
ReplyDelete//விக்கிரமாதித்தன் கதையை படிக்கத் தூண்டுகிறது உங்களது படமும் பதிவும்.//
நான் கேட்ட, படித்த கதையை இயல்பான நடையில் சொன்னேன். அவ்வளவுதான். சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
// இந்தக் கோவில் பற்றிய ஸ்தல புராணம் அறிந்தேன். அடுத்தமுறை திருச்சி வரும் பொது இந்தக் கோவில் கண்டிப்பாக செல்ல வேண்டும்.//
கோயிலுக்குச் செல்லும் போது கார் அல்லது ஆட்டோவிலேயே சென்று வரவும். சமயபுரம் கோயில் வாசலில் ஆட்டோ வசதி உண்டு.
// விக்கிரமாதித்தன் கதைகளையே நீங்கள் பதிவாக்குங்களேன். என்னைப் போல் நிறைய பேர் விரும்பிப் படிப்பார்கள்.
நன்றி பகிர்விற்கு //
பெரிய எழுத்து முதல், சிறுவர்களுக்கான விக்கிரமாதித்தன் கதைகள் வரை நிறைய நூல்கள் வந்துவிட்டன. என்வே அந்தக் கதைகளை மறுபடியும் பதிவாக எழுதுவது என்பது காலவிரயம். தங்கள் அனபான யோசனைக்கு நன்றி!
மாகாளிக்குடியில் உள்ள காளி சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்பதால், காளி கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று என்ணினேன். ஆனால் அதற்கு மாறாக சிறிய கோயிலாகத்தான் உள்ளது.
ReplyDeleteஅருமையான கோவில் பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
சமயபுரம் செல்பவர்கள் சிரத்தை எடுத்து சென்று
தரிசிக்க பயன்படும்..
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
இக்கதைகள் (விக்கிரமாதித்தன்) சிறு வயதில் வாசித்துள்ளேன்.
ReplyDelete(அப்பா வாசிப்புப் பிரியர் அந்த ஜீன்ஸ் ஓடுகிறது. புலி பிரச்சனையால் கோப்பாய் ஊர் விட்டு அப்பா அம்மா விலகிய போது அத்தனை புத்தகப் பொக்கிசமும். கைவிடப் பட்டது. இது வேறு கதை) உஜ்ஜைனி - நல்ல ஞாபகமாக உள்ளது.
நல்ல பதிவு. மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
எனக்கு விக்கிரமாதித்தன் கதைகள் பிடிக்கும். காடாறு மாதம் நாடாறு மாதம் வரை தெரியும். ஆனால், அவனால அமைக்கப்பட்ட கோவில் தமிழகத்தில் இருக்கு என்பது புது தகவல். முடிந்தால் சென்று பார்த்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதுளசி டீச்சர் போல படம் கலக்கல். கைபேசியில் எடுத்த படங்களா?
ReplyDeleteமறுமொழி > kovaikkavi said...
ReplyDelete// இக்கதைகள் (விக்கிரமாதித்தன்) சிறு வயதில் வாசித்துள்ளேன்.
(அப்பா வாசிப்புப் பிரியர் அந்த ஜீன்ஸ் ஓடுகிறது.//
// நல்ல பதிவு. மிக்க நன்றி. //
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ராஜி said...
ReplyDelete// எனக்கு விக்கிரமாதித்தன் கதைகள் பிடிக்கும். காடாறு மாதம் நாடாறு மாதம் வரை தெரியும். ஆனால், அவனால அமைக்கப்பட்ட கோவில் தமிழகத்தில் இருக்கு என்பது புது தகவல்.//
அந்த கோயிலில் உள்ள காளி விக்கிரகம் விக்கிரமாதித்தனால் வைத்து பூசிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அந்த காலத்தில் வனாந்திரக் கோயில்கள் வெட்டவெளியில்தான் இருந்திருக்கும். பிற்பாடு ஊர் தோன்றியதும் கோயில் கட்டி இருப்பார்கள்.
//முடிந்தால் சென்று பார்த்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி! //
சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// துளசி டீச்சர் போல படம் கலக்கல். கைபேசியில் எடுத்த படங்களா? //
துளசி டீச்சரைப் போல, பயணக் கட்டுரைகளை என்னால் சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்ல இயலவில்லை.
கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள், CANON POWERSHOT A800 என்ற கேமராவினால் எடுக்கப்பட்டவை. ‘’ நானும் ஒரு போட்டோகிராபர் ஆனேன்.” http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post_23.html என்ற எனது பதிவை நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.
அம்புலி மாமாவில் விக்கிரமாதித்தன் வேதாளம் கேட்கும் பதில் சொல்லும் கதைகளை நினைவுபடுத்தி விட்டீர்கள்.
ReplyDeleteஅழகான புகைப் படங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
மறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDelete// அம்புலி மாமாவில் விக்கிரமாதித்தன் வேதாளம் கேட்கும் பதில் சொல்லும் கதைகளை நினைவுபடுத்தி விட்டீர்கள்.அழகான புகைப் படங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. //
பட்டி, வேதாளம் இல்லாத விக்கிரமாதித்தன் கதைகளை நினத்துப் பார்க்க இயலாது. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
அம்புலிமாமா'வில் விக்கிரமாதித்தன் கதைகள் சிலவற்றைப் படித்து மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை. சுவாரசியமான பதிவு. கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteமறுமொழி> கே. பி. ஜனா... said...
ReplyDelete// அம்புலிமாமா'வில் விக்கிரமாதித்தன் கதைகள் சிலவற்றைப் படித்து மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை //
எழுத்தாளரான நீங்கள் விக்கிரமாதித்தன் கதைகள் சிலவற்றை மட்டும்தானா படித்தீர்கள்? முழு புத்தகத்தையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?showComment=1381805945354#c5883931640388978152
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!!
ReplyDeleteஅன்புடையீர்!.. வணக்கம் .
ReplyDeleteஇன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.
வாழ்த்துக்கள்!
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?
மறுமொழி > 2008rupan said...
ReplyDelete// வணக்கம்! இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள்//
சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களின் முதல் தகவலுக்கு நன்றி! வெளியில் சென்று இருந்தேன். இனிமேல்தான் வலைச்சரம் சென்று காணவேண்டும்!
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!! //
சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// அன்புடையீர்!.. வணக்கம் . இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்! //
சகோதரரின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
வணக்கம் ஐயா,
ReplyDeleteஇன்றைய [15.10.2013] வலைச்சர அறிமுகத்தில் தங்கள் தளத்தினைக்கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான வாழ்த்துகள், ஐயா.
அன்புடன் VGK
வலைச்சரம் மூலம் வந்து இந்தப் பதிவை இப்போது படித்தேன். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இங்கு போனதில்லை. நிறைய தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்பு VGK அவர்களின் அன்புக்கு நன்றி! என்மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை!
மறுமொழி > Ranjani Narayanan said...
ReplyDelete// வலைச்சரம் மூலம் வந்து இந்தப் பதிவை இப்போது படித்தேன். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இங்கு போனதில்லை. நிறைய தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்! //
சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
மறுமொழி > கலையன்பன் said...
ReplyDelete// வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். //
சகோதரரின் அன்புக்கு நன்றி!