Tuesday, 21 August 2012

எனக்குக் கிடைத்த “FABULOUS BLOG RIBBON AWARD “

சென்ற பதிவில் (வை.கோபாலகிருஷ்ணன்) திரு VGK அவர்கள் எனக்கு வலைப்பதிவருக்கான லிப்ஸ்டர் விருதினை (LIEBSTAR AWARD) தந்தபோது எனக்கு எழுதுவதற்கு ஒரு தலைப்பு கிடைத்து விட்டது “ என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு மறுமொழி சொன்ன திரு VGK  ஆஹா! அந்தக் கவலையே தங்களுக்கு வேண்டாம். வெகு விரைவில் என்னிடமிருந்து தங்களுக்கு மேலும் ஓர் விருது கிடைக்க உள்ளது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் வந்து சேரும் .என்று சொன்னார். சொன்னது போலவே “FABULOUS BLOG RIBBON AWARD “ என்ற இந்த விருதினை எனக்கு (நாள்:16.08.12) அளித்துள்ளார்.http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html இந்த விருதினை அவருக்கு தந்தவர் திருமதி லதா அவர்கள்.http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html இருவருக்கும் நன்றி!


விருதின் விதிகள்:

வழக்கம் போல இந்த “FABULOUS BLOG RIBBON AWARD “ விருதிலும் சில விதிகள். அவையும் ஐந்து மட்டுமே!

1.இந்த விருதினை தந்த வலைப் பதிவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவரது பதிவிலும் இணைந்து கொள்ள வேண்டும்.

2.உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நிகழ்ந்த நம்பமுடியாத ( கதைகளில் வருவது போன்று ) நிகழ்ச்சிகள் ஐந்தினைத் தெரிவிக்க வேண்டும்.

3.நீங்கள் நேசிக்கும் ஐந்து - பற்றி தெரிவிக்க வேண்டும்.

4.நீங்கள் விரும்பாத ஐந்து - பற்றி தெரிவிக்க வேண்டும்

5.இந்த விருதினை தெரிந்தெடுத்த ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டும்.

எனது வாழ்க்கையில் (கதைகளில் வருவது போன்று ) நிகழ்ந்த நம்பமுடியாத நிகழ்ச்சி:

எனது வாழ்வில் நடந்த, கதைகளில் வருவது போன்ற நம்ப முடியாத நிகழ்ச்சி ஒன்று. அப்போதுதான் ( இரண்டு ஆண்டுகளுக்கு முன்) எனக்கு மிகு இரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் சொல்லி மருந்து கொடுத்து இருந்தார். அடுத்தநாள் வெளி வேலைகள் காரணமாக மருந்து சாப்பிடாமல் படுத்து விட்டேன்.  அன்று இரவு எனக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டது.. வீட்டில் எல்லோரையும் எழுப்பி விட்டேன். நான் ஏதேதோ பேசுகிறேன் சிறிது நேரத்தில் எனது உடலை விட்டு நான் வெளியேறுகிறேன். மேலே பறப்பது போல் இருக்கிறது.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு நிலை. கீழே எனது உடலையும், சுற்றி இருப்பவர்களையும், சுற்றி இருக்கும் பொருட்களையும் நானே பார்க்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் எனது உடலுக்குள் நான் வந்து விட்டது போன்று உணர்வு. உடம்பு முழுக்க வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. சாப்பிட வேண்டிய மாத்திரையை சாப்பிட்டதும் சரியாகி விட்டது. அப்புறம் தூக்கம் வந்து விட்டது. இதைச் சொன்னபோது யாரும் நம்பவில்லை. இங்கும் யாரும் நம்ப மாட்டார்கள்.   

நான் விரும்பும் ஐந்து:

ஏற்கனவே நான் விரும்பும் பதினொன்றை லிப்ஸ்டர் விருதினை பெற்ற  போது எழுதிய பதிவில் சொல்லி விட்டேன்.எனவே மீண்டும் வரிசைப் படுத்தி  பட்டியல் போடவில்லை ( மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா? என்று வவ்வால் சார் கிசுகிசுப்பது காதில் கேட்கிறது)


நான் விரும்பாத ஐந்து:

சிறு துரும்பும் பல் குத்த உதவும்என்பார்கள். எனவே விரும்பாத ஒன்று என்று எதனையும் குறிப்பிட விரும்பவில்லை.


விருதினைப் பகிர்ந்தளித்தல்:

நமது VGK  அவர்கள் (வை.கோபாலகிருஷ்ணன்) கையில் ஒரு அட்சய பாத்திரம். வாசகர்களின் அன்பினால் கிடைத்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தனக்கு கிடைத்த விருதுகளை மற்ற வலைப் பதிவர்களுக்கு அவர் பகிர்ந்து அளிக்கிறார். ஏற்கனவே நிறைய பேருக்கு அவர் வழங்கியுள்ளார். அண்மையில் கூட 108 பேருக்கு இரண்டு தடவை இரண்டு விருதுகளை பகிர்ந்துள்ளார். இந்த விருதினையும் 108 பேருக்கு அவரவர் ( Profile ) படங்களுடன் பகிர்ந்துள்ளார். வித்தியாசமாக இருந்தது. ஈதல் இசைபட வாழ்தல் குணம் கொண்ட திரு VGK (வை. கோபால கிருஷ்ணன்) அவர்களுக்கு மீண்டும் நன்றி! சங்க இலக்கியத்தில், செல்வத்துப் பயன் ஈதல் என்ற கருத்தினை வலியுறுத்தும் ஒரு பாடல்........



தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.          -  புறநானூறு 189


( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )





14 comments:

  1. விருதினைத் தாங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டு, வழக்கம்போல் அதற்கு விளக்க உரையும் கொடுத்து, சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அன்புள்ள தங்கள்,
    VGK

    ReplyDelete
  2. விருதினை பெற்றுக் கொண்டு சரியான விளக்கத்துடன் பதிவிட்டமை கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயாவுக்கும் தங்களுக்கும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார்...

    விளக்கம் அருமை... நன்றி... (TM 1)

    ReplyDelete
  4. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  5. REPLY TO ….. ……வை.கோபாலகிருஷ்ணன் said...
    108 வலைப் பதிவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமான உங்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  6. REPLY TO ….. …… Sasi Kala said...

    இந்த விருதினைப் பெற்ற அந்த 108 பேரில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  7. REPLY TO ….. …… திண்டுக்கல் தனபாலன் said...

    திரு VGK அவர்களின் விருது அறிவிப்பில் உங்கள் பெயரையும், பதிவின் கருத்துரை பகுதியில் உங்கள் ஆனந்தமான பதிலையும் கண்டேன். வாழ்த்துக்கள்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete

  8. REPLY TO ….. …… வரலாற்று சுவடுகள் said...

    விருது பெற்ற உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  10. REPLY TO ….. .. வல்லத்தான் said...

    வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. விருது பெற்ற தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    சங்க இலக்கியத்தில், செல்வத்துப் பயன் ஈதல் என்ற கருத்தினை வலியுறுத்தும் பாடல் பகிர்வு அருமை... பாராட்டுக்கள் ஐயா......

    ReplyDelete
  12. REPLY TO …… இராஜராஜேஸ்வரி said...
    சங்க இலக்கிய பாடலின் மேற்கோளை பாராட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. விருதுகளுக்கு வாழ்த்துகள்..புறநானூற்றுப் பாடலுடன் முடித்திருப்பது அருமை.

    ReplyDelete
  14. REPLY TO ….சென்னை பித்தன் said...
    மூத்த பதிவர் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete