![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7JGVmmS_W7YD3PCB2Kl8Bx2yJlL8dT39NwABwShz0Cfybk7gNXUsVISWsSLibUWrdivHF2bGgtYe9PreN8NzJy2ZuqgQfai0_Nn9gDPFCSH5Wmi5A5mEJy29_U34eC2LXfXagoXz3GTSR/s320/IMG_0246.jpg)
சித்திரைப் பெண்ணே! – உன்
முத்திரையை மறைக்க முடியுமா?
இளவேனில் தாலாட்டில்!
இளஞ் சோலைகள் எங்கும்
இயற்கை இன்பம் பொங்கும்!
தேரோடும் வீதிகளில் மக்கள்
ஊர் கூடி தேர் இழுப்பர்!
பதமாய்ப் பருகிட பதநீர்!
இனிப்பும் கரிப்புமாய் இளநீர்!
சுவைத்து மகிழ்ந்திட
சுவையான பழங்கள்!
பள்ளிக்கு கோடை விடுமுறை
சுவையான பழங்கள்!
பள்ளிக்கு கோடை விடுமுறை
துள்ளிக் குதித்திடும் பிள்ளைகள்!
மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு!
உன்னை ஒளித்து வைக்க
யாரால் முடியும்!
முகத்திரை போட்டிடும்
அரசியல் இங்கு வேண்டாம்!
அனைவருக்கும்
எனது உளங் கனிந்த
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(படம்: திருமழபாடி சிவன் கோயில்)
(படம்: திருமழபாடி சிவன் கோயில்)
முத்திரைக் கவிதை நன்று!
ReplyDeleteமுக்கனி தனிலே ஒன்று!
சா இராமாநுசம்
கவிஞர் தமிழ் இளங்கோ...! சித்திரையை வரவேற்ற கவிதை நன்று. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல வரவேற்பு
ReplyDeleteஇன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
சித்திரையில் யாத்திரை செழிக்கட்டும் . அருமையான பதிவு .
ReplyDeleteReply to…. // புலவர் சா இராமாநுசம் said... //
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களின் பாராட்டுக்கு நன்றி!
Reply to …. // கணேஷ் said... //
ReplyDeleteமின்னல் வரிகள் கணேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அருமையான வருடப் பிறப்புக் கவிதை
ReplyDeleteமனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா. நல்ல பாடல். நல்ல தலைப்பு.
ReplyDeleteகோபுர தரிஸனத்தால் இன்று கோடி புண்ணியம் கிடைத்தது.
தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Reply to….. //Vairai Sathish said...//
ReplyDeleteவைரை சதீஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது பதிவில் இணைந்தமைக்கும் நன்றி!
Reply to … // சசிகலா said... //
ReplyDeleteஅருமையான பதிவு என பாராட்டு தெரிவித்த சகோதரி கவிஞர் சசிகலா அவர்களுக்கு நன்றி!
Reply to ….// Ramani said... //
ReplyDeleteஅன்றும் இன்றும் என்றும் எனது ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து வரும் கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டுக்கும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி!
Reply to … // வை.கோபாலகிருஷ்ணன் said... //
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட VGK அவர்களின் பாராட்டுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி!
கொஞ்சம் லேட் ஆகிடிச்சு இருந்தாலும் உங்களுக்கும் இந்த அன்புவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎத் திரை போட்டாலும்
ReplyDeleteசித்திரைப் பெண்ணே! – உன்
முத்திரையை மறைக்க முடியுமா?
அத் திரை விலக்கி இனிமையாய் மலர்ந்த
சித்திரைப் பெண்ணுக்கு வாழ்த்துகள்..
Reply to // அன்பை தேடி,,,அன்பு said. //
ReplyDeleteஅன்பைத் தேடும்.... தம்பி.. அன்புவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம்!
Reply to … // இராஜராஜேஸ்வரி said...//
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!