ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள், ’ புதுக்கோட்டை மாவட்டப்
பாறை ஓவியங்கள்’ (ஆசிரியர்: நா.அருள்முருகன்) என்ற நூலின் பிரதிகள் வந்து விட்டதாகவும்
தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி இருந்தார்.
நானும் புதுக்கோட்டை செல்ல, யோசித்துக் கொண்டிருந்த வேளையில் வீதி இலக்கியச் சந்திப்பிற்கான
அறிவிப்பு வந்தது நல்லதாகப் போயிற்று. எனவே இந்த கூட்டத்தின் போது ‘பாறை ஓவியங்களைப்
பெற்றுக் கொள்வதாக அவருக்கு செய்தி அனுப்பினேன். எனவே எப்போதும் போல இலக்கிய ஆர்வம்
காரணமாக நேற்று (28.08..16 –ஞாயிறு) முற்பகல் புதுக்கோட்டையில் நடந்த ’வீதி கலை இலக்கியக்
களம் – 30 ஆவது இலக்கியச் சந்திப்பு சென்று வந்தேன்.
கூட்டம் தொடங்கும் முன்:
கூட்டம் நடக்கும் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜிற்கு காலை 9.30 அளவில்
சென்றேன்.. இந்த மாத கூட்ட அமைப்பாளர்கள் ஓவிய ஆசிரியர் திரு பவல்ராஜ், ஆசிரியை செல்வி.
த.ரேவதி இருவரும் அன்புடன் வரவேற்றனர். சற்று நேரத்தில், கூட்டத்தின் சிறப்பு விருந்தினரான,
தஞ்சை எழுத்தாளர் நா.விச்வநாதன் அவர்கள் வந்து இருந்தார். எங்கள் இருவருக்குமே ஒருவரைப்
பற்றி ஒருவருக்கு தெரியாது. எனவே நானே அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். மற்றவர்கள்
வரும் வரை அவரிடம் பேசிக் கொண்டு இருந்ததில், அவர் செய்துள்ள தமிழ் இலக்கியப் பணிகளைத்
தெரிந்து கொள்ள முடிந்தது.
நிகழ்ச்சிகள்:
(படம் மேலே) த.ரேவதி, மூட்டாம்பட்டி ராஜூ, நா.விச்வநாதன் மற்றும்
பவல்ராஜ்
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை செல்வி த.ரேவதி அவர்கள் வரவேற்றுப்
பேசினார். கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ அவர்கள் தலைமை தாங்கி அருமையான உரை நிகழ்த்தினார்:
இடையிடையே இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கு விமர்சனமும் தந்தார். கூட்டத்திற்கு
வந்திருந்த அன்பர்களும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்தார்.
(வந்தவுடன் நான் முன்பதிவு செய்து வைத்து இருந்த பாறை ஓவியங்கள்’ நூலின் இரண்டு பிரதிகளை
என்னிடம் தந்தார். அவருக்கு நன்றி)
கவிஞர்கள் மா.ஸ்ரீ.மலையப்பன், மீரா.செல்வகுமார், இ.மீனாட்சி சுந்தரம்,
ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆசிரியர் கு.ம.திருப்பதி கட்டுரை ஒன்றை வாசித்தார்.
(படம் மேலே) தமிழாசிரியர் குருநாத சுந்தரம் அவர்கள் எழுத்தாளர்
பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நூலினைப் பற்றிய தனது பார்வையைச் சொன்னார்.
(படம் – மேலேஆசிரியர் மகாசுந்தர் அவர்கள் ’வழக்குரை காதை – மீள்பார்வை’
என்ற தலைப்பில் உடல்மொழிகளோடு ஒரு பிரசங்கம் தந்தார். (படம் -நன்றி ஆசிரியை கீதா)
(படங்கள் - மேலே கடைசியில் உள்ள இரண்டு படங்களும் – வீதி வாட்ஸ்அப் குழுவில் மாலதி அவர்கள் பகிர்ந்தது
– நன்றி) கவிஞர் ஆசிரியை தா.மாலதி அவர்கள் ‘’கருகித் தளிர்த்த துளிர்’ என்ற தலைப்பில்
தான் எழுதிய சிறுகதை ஒன்றைச் சொன்னார்.
(படம் மேலே) வீதிக்குப் புதுமுகமாக வந்த கவிஞர் இந்துமதி பாரதியாரின்
‘காக்கைச் சிறகினிலே’ பாடலை வாசித்தார்.
(படம் மேலே) பெரியவர் தோழர் செம்பை மணவாளன் அவர்கள் தன்னுடைய அனுபவங்களைச் சொன்னதோடு, எல்லோரும் தமிழில் கையெழுத்து
போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர்:
நேற்றைய இலக்கிய சந்திப்பில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட
தஞ்சை திரு நா.விச்வநாதன் அவர்கள், இந்திய அஞ்சல் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர்.
கவிஞர் மற்றும் எழுத்தாளர். தஞ்சையின் ஐநூறு ஆண்டு கால வரலாற்றை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’
என்ற நாவலொன்றை எழுதி வருகிறார். தனது சிறப்புரையில், வீதி – இலக்கியக் களத்தினைப்
பாராட்டிய அவர் ” சிறப்பு விருந்தினர்களை காக்க வைக்காமல், முன்னதாகவே பேச அழைக்க வேண்டும்
” என்று ஒரு கருத்தைச் சொன்னார். யோசிக்க வேண்டிய ஒன்று.
( கீழே உள்ள படம் -நன்றி ஆசிரியை கீதா)
( கீழே உள்ள படம் -நன்றி ஆசிரியை கீதா)
இந்த மாத கூட்டத்தின் அமைப்பாளர்களுள் ஒருவராகிய ஆசிரியர் திரு
பவல்ராஜ் அவர்கள் நன்றி கூறினார்.