அன்பார்ந்த திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களுக்கு வணக்கம்! ஒரு மாவட்டத்தில் எத்தனை வலைப் பதிவர்கள்
இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது சிரமமான விஷயம்தான். ஏனெனில் பல
வலைப் பதிவர்கள் தன்விவரம் (PROFILE ) தருவதில்லை. அதிலும் சூடான
கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதுபவர்களும், முகமூடி வலைப் பதிவாகளும் எழுதும்
பதிவுகளில் அவர்களைப் பற்றிய விவரம் ஏதும் கிடைப்பதில்லை. இங்கு நான் பல நாட்களாக
குறித்து வைத்திருந்த மற்றும் அண்மையில் அறிந்த திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களை
மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்! எனக்குத் தெரியாத விடுபட்டவர்கள் பெயரைச்
சொன்னால் இணைத்து விடுகிறேன்.
திரு வை கோபாலகிருஷ்ணன்:
திரு V.G.K என்றும் கோபு அண்ணா என்றும் அன்பாக அழைக்கப்படும், திரு வை
கோபாலகிருஷ்ணன் அவர்கள், திருச்சி பெல் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் ஆக (ACCOUNTS OFFICER/CASH,
BHEL, TIRUCHI) இருந்து ஓய்வு பெற்றவர். தனது பெயரிலேயே “வை.கோபாலகிருஷ்ணன்” என்ற
வலைப் பதிவினை ( http://gopu1949.blogspot.in ) எழுதிவரும்
திருச்சியில் உள்ள மூத்த வலைப் பதிவாளர். நகைச்சுவையாக எழுதுவார். தனது
பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களுக்கு இன்னும் எழுத உற்சாகம் தருபவர். பல
விருதுகள் பெற்று அவற்றை மற்ற வலைப் பதிவர்களுக்கு பகிர்ந்தளிப்பவர். இந்த ஆண்டு
(2014) தொடக்கம் முதல் V.G.K சிறுகதை விமர்சனப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி
வருகிறார். பத்திரிகைகளிலும் எழுதி பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றிற்கு
பரிசுகளும் வென்றுள்ளார்.
திரு ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி:
திருச்சி திருவானைக் கோவிலில் வசித்துவரும் திரு ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்கள் தனது பெயரிலேயே ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி” ( http://aaranyanivasrramamurthy.blogspot.in )
என்ற வலைப்பதிவினில் எழுதி வருகிறார். ”ஆரண்ய நிவாஸ்” என்ற பெயரிலேயே தனது படைப்புகள் அடங்கிய நூலினை வெளியிட்டுள்ளார். நகைச்சுவையாக எழுதுவதில்
வல்லவர்.
திரு ரிஷபன்:
பட்டுக்கோட்டையைச்
சேர்ந்தவர் திரு ரிஷபன் அவர்கள். திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறந்த எழுத்தாளரான
இவரது படைப்புகள் கல்கி, விகடன் முதலான பத்திரிககளில்
வெளிவந்துள்ளன. திரு வை
கோபாலகிருஷ்ணன் அவர்கள் இவரை தனது மானசீக குரு என்று சொல்லுவார். இருவரும்
நெருங்கிய நண்பர்கள். இவர் ரிஷபன் (http://rishaban57.blogspot.com
) என்ற பதிவினில் வலம் வருகிறார்.
திரு இரா.எட்வின்:
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி” ( www.eraaedwin.com ) என்ற வலைப்பதிவினை எழுதி
வரும் திரு இரா.எட்வின் அவர்கள் SMHSS எனப்படும் பள்ளியில்
(திருச்சி மாவட்டம்) ஆசிரியர். ” இவனுக்கு அப்போது மனு என்று பேர்” , ” எப்படியும் சொல்லலாம்” மற்றும்
” என் கல்வி என் உரிமை “ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
திருமதி கீதா சாம்பசிவம்:
மூத்த வலைப்பதிவர் திருமதி கீதா சாம்பசிவம்: அவர்கள்
“எண்ணங்கள்’ என்ற
தலைப்பினில் (http://sivamgss.blogspot.in) வலைப்
பதிவினை எழுதி வருகிறார். சென்னை, மதுரை, ராஜஸ்தான், குஜராத், செகந்திராபாத்,
அரவன் காடு, ஊட்டி மற்றும் அமெரிக்கா முதலான இடங்களில் வசித்தவர். தற்சமயம் திருவரங்கத்தில் வசித்து வருகிறார். இன்னும் கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும்பொற்சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீக பயணம் என்ற பதிவுகளையும் எழுதி வருகிறார்.
திருமதி ராதாபாலு:
“எண்ணத்தின் வண்ணங்கள்” ( http://radhabaloo.blogspot.com )
மற்றும் ”அறுசுவைக் களஞ்சியம்” http://arusuvaikkalanjiyam.blogspot.com
இரண்டு பதிவுகளையும் எழுதி வருபவர்
திருச்சியைச் சேர்ந்த திருமதி ராதாபாலு அவர்கள். திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள்
நடத்தி வரும் போட்டிகளில் பரிசுகளை வென்றவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ்
இதழ்களில் வெளிவந்துள்ளன.
திரு ஆ.ஞானசேகரன்:
திரு
ஆ.ஞானசேகரன் அவர்கள் ” அம்மா அப்பா” என்ற
( http://aammaappa.blogspot.in ) வலைப்பதிவினை எழுதி
வருகிறார். அவர் வலைப்பதிவில்
தன்விவரம் (PROFILE ) பற்றி
பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை
பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு
நடிகர்கள்
வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.” இவருடைய
மற்றொரு வலைப் பூ “கண்டதும் சுட்டதும்” ( http://kandathumsuddathum.blogspot.in )
டாக்டர் பாலசுப்ரமணியன்:
”அர்த்தமுள்ள இனியமனம்” ( http://dbs1205.blogspot.in & http://arthamullainiyamanam.wordpress.com ) என்ற
வலைப் பதிவுகளில் மனநல மருத்துவர் பாலசுப்ரமணியன் (CONSULTANT PSYCHIATRIST TRICHY) அவர்கள் மனநலம் சம்பந்தமான
கட்டுரைகளை எழுதி வருகிறார்.
பேராசிரியர் B மதிவாணன்:
“இனிது இனிது” ( http://inithuinithu.blogspot.in ) என்ற
வலைப் பதிவினை எழுதி வரும் பேராசிரியர் B மதிவாணன் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகம்,
திருச்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ”அடிவானம் நோக்கிச் சில அடிகள்” மற்றும் ”தொல்காப்பியம்
பால.பாடம்”- ஆகிய நூல்களை
எழுதியுள்ளார். இவரது
தந்தை மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பாலசுந்தரம் ஆவார்.
திரு ம ஞானகுரு:
மற்றும் “தொழிற்களம்” ( www.thozhirkalam.com ) என்ற
பதிவினை எழுதி வருபவர் ம ஞானகுரு அவர்கள் தனது வலைப்பதிவில் தன்விவரம் (PROFILE ) பற்றி
சொல்லும்போது திருச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
வலைப்பதிவர் குடும்பம்:
திருவரங்கத்தைச் சேர்ந்த திரு
வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது பெயரினிலேயே http://venkatnagaraj.blogspot.com என்ற
வலைப் பதிவினை எழுதி வருகிறார். வெங்கட் நாகராஜ் பிறந்ததும் வளர்ந்ததும் நெய்வேலியில். தற்பொழுது இருப்பது தலைநகர் தில்லியில். சிறந்த
போட்டோகிராபர். சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பினை பற்ரிய
நிறைய வண்ணப்படங்களை தனது பதிவினில் சிறப்பாக வெளியிட்டவர்.
இவரது மனைவி திருமதி ஆதி வெங்கட். பிறந்தது சிவகங்கைச்
சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது மகளின் படிப்பிற்காக வசிப்பது திருவரங்கத்தில்... இவர்
கோவை 2 தில்லி ( http://kovai2delhi.blogspot.in) என்ற
வலைப் பதிவினை எழுதி வருகிறார்.
வெங்கட் நாகராஜ் - ஆதி வெங்கட் தம்பதியினரின் மகள் செல்வி ரோஷிணி வெங்கட் http://roshnivenkat2.blogspot.in
”வெளிச்சக் கீற்றுகள்” என்ற பதிவினை எழுதி வருகிறார்.
திரு ஜோசப் விஜி :
” ஊமைக்கனவுகள் ( http://oomaikkanavugal.blogspot.in ) ” மற்றும் “மனம்கொண்டபுரம்” (
http://manamkondapuram.blogspot.in ) என்ற
இரண்டு
வலைப் பதிவுகளை எழுதும் ஜோசப் விஜி அவர்கள் திருச்சியைச்
சேர்ந்தவர், நல்ல தமிழறிஞர் என்பது
மட்டும் எனக்குத் தெரியும். மற்ற விவரங்களை அறியக் கூடவில்லை.
திரு அ பாண்டியன்:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருக்கும் திரு அ பாண்டியன்
அவர்கள் “அரும்புகள் மலரட்டும்” (http://pandianpandi.blogspot.com ) என்ற
வலைப் பதிவினை
எழுதி வருகிறார். இவர் தமிழ்நாடு அரசுப் பள்ளியில்
தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திரு ராஜகோபாலன் நாகநாதன்:
“சாய்
மந்திரம்” (http://saimantram.blogspot.in) என்னும் பதிவினைத் தொடங்கி
எழுதி வரும் திரு ராஜகோபாலன் நாகநாதன் அவர்கள் திருச்சி திருவானைக் கோவிலைச்
சேர்ந்தவர். High Energy Batteries (India) Limited,
திருச்சியில் பணிபுரிந்து வருபவர்.
திரு ஸ்ரீரங்கம் ஸ்ரீதர் :
என்ற பெயரில் வலைப்பதிவினை எழுதி வரும் திரு ஸ்ரீரங்கம் ஸ்ரீதர்
அவர்கள் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் படித்தவர். பஹ்ரைனில் ட்ராப்கோ குழுமத்தில்
பணிசெய்து வருகிறார்.
திரு T ராமகிருஷ்ணன்
திருச்சியைச் சேர்ந்த திரு T ராமகிருஷ்ணன் அவர்கள் “நம் ஊர்” ( http://numvoor.blogspot.in ) என்ற
வலைப் பதிவினை எழுதி வருகிறார். இவர் IT துறையைச்
சேர்ந்தவர். Technology, Research &
Innovation இல் DIRECTOR பதவியில்
இருக்கிறார்.
திரு ராஜா ராமதாஸ்:
“பத்த
வச்சிட்டியே பரட்டை” ( http://parattai.blogspot.in ) என்ற வலைப் பதிவினை எழுதி
வருபவர் திரு ராஜா ராமதாஸ்
அவர்கள்
திரு சத்யபிரியன்:
“பதிவுகள்” என்ற வலைப் பதிவினை (http://sathyapriyan.blogspot.in) எழுதி
வரும் திரு சத்யபிரியன் அவர்கள் தன்னைப் பற்றி ” I was born and brought up in Trichy
a beautiful town in Tamil Nadu, India.” என்று
சொல்லிக் கொள்கிறார்.
திரு பழூர் கார்த்தி:
“பழூரானின்
பக்கங்கள்” (http://lazyguy2005.blogspot.in ) என்று எழுதி வரும் திரு பழூர் கார்த்தி அவர்கள் ” நம்ம ஊர் திருச்சி” என்றே
ஒரு பதிவினை எழுதியுள்ளார்.
திருச்சி சந்தானம்:
“ TRICHY
SANTHANAM” ( http://gsanthanam1610.blogspot.in ) என்று தனது
பெயரிலேயே வலைப்பதிவை எழுதிவரும் திருச்சி சந்தானம் அவர்கள் வங்கியில்
கும்பகோணத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திரு ரவி :
” வசந்தமுல்லை ரவி” ( http://vasanthamullairravi.blogspot.in
) என்ற வலைப் பதிவினை எழுதி வரும் திரு ரவி அவர்கள், திருச்சி BHEL நிறுவனத்தில்
சீனியர் அடிஷனல் என்ஜீனியர் ஆவார்.
தி தமிழ் இளங்கோ :
என்னைப் பற்றி. நானே என்ன சொல்வது? வலைப் பதிவினில் “எனது
எண்ணங்கள்” ( http://tthamizhelango.blogspot.com) என்ற
தலைப்பினில் வலைப்பதிவை எழுதி வருகிறேன். 29 ஆண்டுகள் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்.
அன்பார்ந்த திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! தாங்கள் அனைவரும் மதுரையில்
வரும் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில்
கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.!
திருச்சியில் இத்தனை வலைப் பதிவர்களா.? குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இவர்களில் பலரையும் அறிமுகமே கிடையாது. நான் எல்லாப் பதிவர்களின் வலைப்பக்கம் போகாத காரணமாயிருக்கும். அவர்களும் என் வலைப் பக்கம் வந்ததில்லை. இத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து எழுதியதற்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ?????????
ReplyDeleteஅதை 26ம் தேதி என மாற்றுங்கள் ஐயா ! இதை வெளியிட வேண்டாம்.
THIS NEED NOT BE PUBLISHED: [for information only]
ReplyDeleteண்மையில் அறிந்த திருச்சி மாவட்ட வ்லைப் பதிவர்களை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்!
வலைப் என்பது வ்லைப் என உள்ளது. தயவுசெய்து மாற்றுங்கள் ஐயா.
for information & correction only - need not be published
ReplyDeleteஅக்கவுண்ட்ஸ் ஆபிசராக = அக்கவுண்ட்ஸ் ஆ பீ ஸ ர் ஆக
for information only & this need not be published.
ReplyDelete(RETIRED ACCOUNTS OFFICER/CASH, BHEL, TIRUCHI) இருந்து ஓய்வு பெற்றவர்.
இதில் ஆங்கிலத்தில் ப்ராக்கெட்டில் உள்ள RETIRED என்ற வார்த்தையை மட்டும் எடுத்து விட வேண்டும். அப்போது தான் சரியாக பொருள் கொடுக்கும்.
அன்புள்ள ஐயா,
ReplyDeleteவணக்கம். ஐயா. நம் திருச்சி மாவட்டத்தில் இத்தனைப்பதிவர்களா ?
அனைத்தையும் பொறுமையாகத் தொகுத்துக்கொடுத்துள்ளது மிக அருமை ஐயா.
>>>>>
அய்யா வணக்கம். நல்ல முயற்சி. இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுத்தால் ஒரு சரியான மாநில அமைப்பையே உருவாக்கலாம். சரியான நேரத்தில் சரியான முயற்சி. தொடருங்கள், விடுபட்டுப் போனவர்களை இவர்கள் வழியாக அறிந்து வலைநட்பு வட்டத்தில் சேருங்கள்.. நாங்களும் -புதுக்கோடடை்யில்- முயற்சிசெய்கிறோம். தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் அய்யா
ReplyDeleteதங்கள் பதிவின் இறுதியில் வலைபபதிவர் விழா “அக்டோபர் 20 ஆம் தேதி “ என்று இருக்கிறது அதை அக்டோபர் 26என்று மாற்றிவிட வேண்டுகிறேன். நன்றி
இதில் முதலிடம் பெற்றுள்ள VGK யாகிய எனக்குத் தெரிந்தவர்கள்:
ReplyDeleteதிருவாளர்கள்:
1. ரிஷபன்,
2. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி,
3. வெங்கட் நாகராஜ்
4. திருச்சி சந்தானம்
5. வஸந்தமுல்லை ரவி
6. தமிழ் இளங்கோ [தாங்கள் :)]
திருமதிகள்:
7. கீதா சாம்பசிவம்,
8. ராதாபாலு,
9. ஆதி வெங்கட்
செல்வி:
10. ரோஷ்ணி
மட்டுமே.
பதிவுகளின் மூலம் ஓரளவு பழக்கமானவர்கள்:
1. திரு. அ. பாண்டியன் - மணப்பாறை
2. திரு. ஆ. ஞானசேகரன்
>>>>>
இந்தப்பட்டியலில் தாங்கள் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். அவர்கள் அடிக்கடி பயணம் மேற்கொண்டு இங்குமங்கும் சென்று வந்தாலும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தான் இருக்கிறார்கள் என்று கேள்வி.
ReplyDeleteஇதோ இந்த என் பதிவினில் அவர்களைப்பற்றிய விபரங்கள் படத்துடன் கொடுத்துள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-1-of-3.html
>>>>>
ஐயா தங்களின் இந்த முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை... வாழ்த்துக்கள் ஐயா... சிறப்பான அழைப்பிதழ்... மிக்க நன்றி...
ReplyDeleteஇன்னொரு பிரபலமான பெண் பதிவர் நம் ஊரான திருச்சியில் தான் உள்ளார்கள்.
ReplyDelete_ _ _ / _ _ _ / _ _ _ என்ற மூன்று மூன்று தமிழ் எழுத்துக்களாக உள்ள மூன்று வார்த்தைகளும் கொண்ட புனைப்பெயரில் வலைத்தளம் வைத்துள்ளார்கள்.
வலையுலகில் முன்பெல்லாம் அனைவரிடத்திலும் மிகப் பிரபலமானவர்களே தான்.
இவர்கள் வேலைக்குச்செல்லும் அரசுத்துறையைச் சார்ந்த பெண்மணி. இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வும் பெறப்போகிறவர்கள்.
இன்றுவரை தன்னை யார் என்று யாரிடமும் [என்னிடமேகூட] வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவராக இருக்கிறார்கள். என்னிடம் மட்டும் மரியாதையும், அன்பும், மெயில் தொடர்புகளும் உண்டு. எனக்கே அவர்கள் இன்றுவரை பெரும் புதிராகத்தான் உள்ளார்கள். இதுவரை நாங்கள் நேரில் சந்தித்ததும் இல்லை.
முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி பின்னூட்டம் கொடுத்திருப்பவர்களே. இப்போதும் எப்போதாவது என் பதிவுகள் பக்கம் வருகைதந்துச் செல்கிறார்கள்.
இவர்களின் புனைப்பெயரில் உள்ள முதல் இரண்டு வார்த்தைகள் மட்டும் ஆங்கில வார்த்தைகள் ஆகும். தமிழில் எழுதும்போது அவை மூன்று மூன்று எழுத்துகளாக அமைந்துள்ளன. மூன்றாவது வார்த்தை மட்டும் ஒருவேளை அவர்களின் பெயராக இருக்கலாம்.
தமிழில் எழுதப்பட்ட அந்த முதல் இரண்டு, மூன்றெழுத்து வார்த்தைகளை ஆங்கிலத்தில் அப்படியே எழுதும்போது 6+5 = 11 Letters வருகிறது.
முடிந்தால் யூகித்துக்கொள்ளுங்கள், ஐயா. :)
>>>>>
தங்களின் இந்தத்தகவல்கள் எனக்குப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளன. கஷ்டப்பட்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteஇந்த அனைத்து பதிவர்கள் சார்பிலும், மற்ற விட்டுப்போன திருச்சி மாவட்டப்பதிவர்கள் சார்பிலும், மதுரை மாநாட்டுக்குச் செல்லப்போவது தாங்கள் மட்டுமே என எனக்குத் தெளிவாகத்தோன்றுகிறது.
மற்றவர்கள் எல்லோரும் மிகவும் விபரமானவர்களாக்கும் ! :)))))))))))))))))))
[சும்மா ஒரு ஜாலிக்காக எழுதியுள்ளேன் - தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.]
அன்புடன் தங்கள் VGK
முதல் பாரா
ReplyDeleteஏழாவது வரி
கடைசியிலிருந்து இரண்டாம் வார்த்தை
வலை என்பதில் ‘வ’ வுக்கு மேல் புள்ளி உள்ளது அது ‘வ்’ என்று உள்ளது. அந்தப்புள்ளியையும் நீக்கி விடுங்கள் ஐயா.
நான் சுட்டிக்காட்டிய சில எழுத்துப்பிழைகளை சரிசெய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
இவை போன்ற சில எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய என் அனைத்து பின்னூட்டங்களையும் தாங்கள் வெளியிடாமல் இருந்திருக்கலாமே ஐயா !
[இப்போதும் கூட அவற்றை தாங்கள் தயவுசெய்து DELETE செய்துவிடலாமே ஐயா.]
அன்புடன் VGK
சிறப்பான தகவல் பகிர்வுகள்.
ReplyDeleteபிரமித்து விட்டேன்.அனைவருக்கும் வாழ்த்துகள்.இயன்றவர்கள் மதுரை சென்று கலக்குங்கள்
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html
ReplyDeleteஇந்த என் மேற்படி பதிவினில் பின்னூட்டம் கொடுத்துள்ள பதிவர் திரு. நாகராஜன் நாராயணன் அவர்களும் நம் திருச்சி மாவட்டம் பிக்ஷாண்டார்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் மட்டுமே.
இரயில்வே பணி மாற்றத்தினால் திருச்சியிலிருந்து மதுரைக்கு சமீபத்தில் மாறிச்சென்றுள்ளார்கள். இவரது வலைத்தள முகவரி: premanagarajan.blogspot.com
>>>>>
அட... திருச்சியில் இவ்வளவு பேர் இருக்கிறார்களா.....?
ReplyDeleteஇது மிக நல்ல முயற்சி ஐயா.
அருமையாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!!
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html
ReplyDeleteஇந்த என் மேற்படி பதிவினில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ள பதிவர் திரு. G. கணேஷ் நம் திருச்சியைச் சேர்ந்தவரே. தற்சமயம் பணி நிமித்தமாக செளதி அரேபியாவில் உள்ளார். அவரின் வலைத்தள முகவரி: http://mathiyosi-ganesh.blogspot.in
இதுவும் தங்களின் தகவலுக்காக. இன்னும் யோசிக்கிறேன். எழுதுகிறேன். - VGK
இன்றைய வலைச்சர ஆசிரியரும், கடந்த 7-8 வருடங்களாக மட்டும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான பிரபல பதிவர் ‘கீதமஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் பிறந்த வீடு, நம் திருச்சி கல்கண்டார் கோட்டைதான். இன்னும் இவர்களின் பெற்றோர்கள் அங்கு தான் உள்ளனர்.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2013/06/8.html
ReplyDeleteஇந்த என் பதிவினில் என் இல்லத்திற்கு வருகை தந்து சிறப்பித்துள்ள நம் அன்புச்சகோதரியும் பிரபல பதிவருமான ‘மஞ்சு’ ஹாஸ்டலில் தங்கி டிப்ளோமா படித்தது நம் ஊர் திருச்சி SRC யில் மட்டுமே.
அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா மதுரையில் சந்திப்போம்.
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
அபுதாபி.
வணக்கம்
ReplyDeleteஐயா.
சிறப்பாக தகவலை தொகுத்து வழக்கியமைக்கு பாராட்டுக்கள் ஐயா... யார் யார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பதிவர்கள் என்பதை அறியக்கூடியவகையில் உள்ளது... பகிர்வுக்கு நன்றி நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மறுமொழி> G.M Balasubramaniam said...
ReplyDelete// திருச்சியில் இத்தனை வலைப் பதிவர்களா.? குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இவர்களில் பலரையும் அறிமுகமே கிடையாது. நான் எல்லாப் பதிவர்களின் வலைப்பக்கம் போகாத காரணமாயிருக்கும். அவர்களும் என் வலைப் பக்கம் வந்ததில்லை. இத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து எழுதியதற்கு பாராட்டுக்கள். //
அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பாராட்டிற்கு நன்றி! திருச்சியைச் சேர்ந்த வலைப் பதிவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள். நான் வலைப் பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில் திருச்சி பதிவர்களின் வலைத்தள முகவரிகளை தனியே ஒரு பைலில் சேமித்து வைத்து இருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டு கம்ப்யூட்டர் செயலிழந்தபோது மற்ற பைல்களோடு இதுவும் காணாமல் போய்விட்டது. நினைவில் நின்ற மற்றும் கூகிளில் கிடைதத தகவல்களை மட்டும் இங்கு தந்துள்ளேன். இனி மறுபடியும் சேமித்து பென் ட்ரைவ்வில் ஏற்ற வேண்டும்.
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3, 4 )
ReplyDeleteஅய்யா V.G.K அவர்களுக்கு வணக்கம்!
// அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ?????????
அதை 26ம் தேதி என மாற்றுங்கள் ஐயா ! இதை வெளியிட வேண்டாம். //
எனது பிழையை நீங்கள் சுட்டிக் காட்டியவுடன் உடன் திருத்தி விட்டேன். பின்னர் கவிஞர் முத்துநிலவன் அவர்களும் சுட்டிக் காட்டி இருந்தார். மற்ற எழுத்துப் பிழைகளையும் சரி செய்து விட்டேன். தவறுதலாக பிழையாக டைப் செய்தமைக்கு மன்னிக்கவும்.!
திருச்சி பதிவர்கள் என்றவுடன் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் அன்பு ஆகியவை நீங்கள் எழுதிய பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 5 )
ReplyDelete// அன்புள்ள ஐயா, வணக்கம். ஐயா. நம் திருச்சி மாவட்டத்தில் இத்தனைப்பதிவர்களா ? அனைத்தையும் பொறுமையாகத் தொகுத்துக்கொடுத்துள்ளது மிக அருமை ஐயா.//
திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! அய்யா G.M.B அவர்களுக்கு கொடுத்த விளக்கத்தையே இங்கும் ஏற்றுக் கொள்ளவும்.
உங்கள் ஊரில் இருந்து இத்தனை பதிவர்களா ?அடுத்த பதிவர் சந்திப்பை திருச்சியில் நடத்தலாம் போலிருக்கே !மதுரைக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் !
ReplyDeleteத ம 4
சரியான நேரத்தில் மிக அருமையான பதிவு
ReplyDeleteசிரமம்தான் ஆயினும் பிற மாவட்டத்தினரும்
இதுபோல் ஒரு பதிவை
வெளியிட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்
வாழ்த்துக்களுடன்....
மறுமொழி> நா.முத்துநிலவன் said...
ReplyDelete// அய்யா வணக்கம். நல்ல முயற்சி. இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுத்தால் ஒரு சரியான மாநில அமைப்பையே உருவாக்கலாம். சரியான நேரத்தில் சரியான முயற்சி. தொடருங்கள், விடுபட்டுப் போனவர்களை இவர்கள் வழியாக அறிந்து வலைநட்பு வட்டத்தில் சேருங்கள்.. நாங்களும் -புதுக்கோடடை்யில்- முயற்சிசெய்கிறோம். தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் அய்யா//
கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி! ”திருச்சி வலைப் பதிவர்கள்“ என்ற தலைப்பில் முன்பே நான் எழுதி இருக்க வேண்டிய பதிவு இது. பின்னாளில் மாவட்ட வலைப் பதிவர்கள் கூட்டம் நடத்தும்போது இந்த பதிவு உதவும்.
//தங்கள் பதிவின் இறுதியில் வலைபபதிவர் விழா “அக்டோபர் 20 ஆம் தேதி “ என்று இருக்கிறது அதை அக்டோபர் 26என்று மாற்றிவிட வேண்டுகிறேன். நன்றி //
எனது பிழையை அய்யா V.G.K அவர்களும் முன்பே சுட்டிக் காட்டி இருந்தார். உடன் திருத்தி விட்டேன். தவறுதலாக பிழையாக டைப் செய்தமைக்கு மன்னிக்கவும்.! நன்றி!
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கலின் பாராட்டுக்கு நன்றி!
மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// சிறப்பான தகவல் பகிர்வுகள். //
ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!
மறுமொழி> குட்டன் said...
ReplyDelete// பிரமித்து விட்டேன்.அனைவருக்கும் வாழ்த்துகள். இயன்றவர்கள் மதுரை சென்று கலக்குங்கள் //
ரொம்ப நாளைக்குப் பிறகு வந்த அன்பு சகோதரர் குட்டன் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 6, 7, 8 மற்றும் 11 , 12 , 13, 14 )
ReplyDeleteதங்களது தன்விவரம் (PROFILE) அல்லது கட்டுரையில் தங்களது ஊர் திருச்சி என்று தெரிவித்து இருந்தவர்களை மட்டுமே இந்த கட்டுரையில் தெரிவித்து இருந்தேன். நீங்கள் குறிப்பிட்டு இருப்பவர்களின் பெயர்களை இதிலேயே மெற்கொண்டு சேர்ப்பதா அல்லது தனியே ஒரு பதிவாக எழுதுவதா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். தங்களின் ஆலோசனைக்கு நன்றி!
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 9 )
ReplyDelete// தங்களின் இந்தத்தகவல்கள் எனக்குப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளன. கஷ்டப்பட்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள், நன்றிகள். //
திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! தங்களின் பாராட்டுரைக்கு நன்றி!
// இந்த அனைத்து பதிவர்கள் சார்பிலும், மற்ற விட்டுப்போன திருச்சி மாவட்டப்பதிவர்கள் சார்பிலும், மதுரை மாநாட்டுக்குச் செல்லப் போவது தாங்கள் மட்டுமே என எனக்குத் தெளிவாகத் தோன்றுகிறது. மற்றவர்கள் எல்லோரும் மிகவும் விபரமானவர்களாக்கும் ! :)))))))))))))))))))
[சும்மா ஒரு ஜாலிக்காக எழுதியுள்ளேன் - தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.] //
உண்மையில் இந்த தலைப்பில் நீங்கள் எழுதி இருந்தால் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்து இருக்கும்.
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 10 )
ReplyDelete// முதல் பாரா ஏழாவது வரி கடைசியிலிருந்து இரண்டாம் வார்த்தை வலை என்பதில் ‘வ’ வுக்கு மேல் புள்ளி உள்ளது அது ‘வ்’ என்று உள்ளது. அந்தப்புள்ளியையும் நீக்கி விடுங்கள் ஐயா.
நான் சுட்டிக்காட்டிய சில எழுத்துப்பிழைகளை சரிசெய்துள்ளீர்கள். மிக்க நன்றி. //
திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! நல்லவேளை பதிவினை வெளியிட்டுவிட்டு வேறு எங்கும் செல்லாத படியினால் நான் செய்த பிழைகளை உடனுக்குடன் திருத்த முடிந்தது.
// இவை போன்ற சில எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய என் அனைத்து பின்னூட்டங்களையும் தாங்கள் வெளியிடாமல் இருந்திருக்கலாமே ஐயா ! [இப்போதும் கூட அவற்றை தாங்கள் தயவுசெய்து DELETE செய்துவிடலாமே ஐயா.] //
எனது பிழைகளைச் சுட்டிக் காட்டிய தங்களுக்கு நன்றி! இவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்வதும் நல்லதுதான். வரும் நாட்களில் பதிவினை நான் எழுதும்போது நினைவுக்கு வரும்.
திருச்சியில் இத்தனை வலைப்பதிவர்களா? ஒரு சிலரை மட்டுமே நான் அறிவேன்....
ReplyDeleteநல்ல தொகுப்பு. திருச்சியிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாம் போல! :)))
திருச்சி பதிவர்கள் பற்றிய பதிவில் எனக்குப் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநல்ல தொகுப்பு. திருச்சியில் இத்தனை பேரா என்று பிரமிப்பாக இருக்கிறது.
ஆஹா ..!மிக அருமையாக ஒவ்வொருத்தரைப் பற்றிய
ReplyDeleteதகவலையும் சேமித்து நுட்பமாகத் தகவலை வெளியிட்டும்
உள்ளீர்கள் ஐயா !வாழ்த்துக்கள் மனதிற்கு இப் பகிர்வு
மகிழ்வையும் தந்துள்ளது .மேலும் மேலும் தங்கள் தேடல்
வெற்றிகரமாகத் தொடரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞருக்கு வணக்கம்! தங்கள் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > Bagawanjee KA said..
ReplyDelete// உங்கள் ஊரில் இருந்து இத்தனை பதிவர்களா ?அடுத்த பதிவர் சந்திப்பை திருச்சியில் நடத்தலாம் போலிருக்கே !மதுரைக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் !த ம 4 //
முதலில் திருச்சி வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அப்புறம்தான் மற்றதெல்லாம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > Ramani S said...
ReplyDeleteகவிஞர் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.
// சரியான நேரத்தில் மிக அருமையான பதிவு
சிரமம்தான் ஆயினும் பிற மாவட்டத்தினரும் இதுபோல் ஒரு பதிவை வெளியிட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்
வாழ்த்துக்களுடன்.... //
ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது போல் ஒவ்வோரு மாவட்டத்திலும் வலைப் பதிவாளர்களின் பெயர்களை தொகுக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தின் வலைப் பதிவர்களைத் தேடித் தொகுத்து வழங்கிய தங்கள் அரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
ReplyDeleteஎன்றும் இணைந்திருக்க வேண்டும் - இந்த சொந்தம்!..
நல்ல தொகுப்பு! அரிய பணி! தேவையானது! நன்றி இளங்கோ!
ReplyDeleteஎன்னையும் ஒரு பொருட்டாக மதித்து....
ReplyDeleteமிக்க நன்றி இளங்கோ ஸார்!
இத்தனை பேர் இருக்கிறாங்களா.. ஆஹா.. நன்றி ஸார் !
ReplyDeleteவணக்கம் அய்யா
ReplyDeleteதங்களின் இந்த முயற்சிக்கு முதலில் கை கொடுங்கள் அய்யா. தங்களின் தேடலும் உழைப்பும் பதிவில் பிரதிபலிக்கிறது. பதிவர் சந்திப்பில் அனைவரையும் சந்திக்கவிருப்பது எண்ணி இப்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறப்பான முயற்சிக்கு நன்றிகள் அய்யா..
மிக நல்ல தொகுப்பு, இளங்கோ ஸார். எல்லோரையும் மதுரையில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். நானும் திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவள்தான். இப்போது இருப்பது பெங்களூரில்.
ReplyDeleteசிறந்த தொகுப்பு
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்
ஐயா தங்களின் முயற்சி அற்புத முயற்சி
ReplyDeleteதிருச்சியில் இத்துனை பேர் இருக்கிறார்களா
வியப்பு மேலிடுகிறது ஐயா
தம 10
ReplyDeleteதிருச்சி மாவட்ட வலைப்பதிவர்கள் விபரம் தொகுத்து அளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅவர்களின் விபரங்களை அழகாய் அளித்து இருக்கிறீர்கள்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
மதுரையில் வலைப் பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteமறுமொழி> வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// திருச்சியில் இத்தனை வலைப்பதிவர்களா? ஒரு சிலரை மட்டுமே நான் அறிவேன்....நல்ல தொகுப்பு. திருச்சியிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாம் போல! :))) //
இன்னும் இருக்கின்றனர். அவர்கள் பெயரையும் கொண்டு வர வேண்டும். நீங்கள் சொல்வது போல திருச்சியிலும் நடத்தலாம். அதற்கு முன்னர் திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
மறுமொழி> rajalakshmi paramasivam said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்களுடைய ஊர் லால்குடிப் பக்கம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
மறுமொழி> அம்பாளடியாள் வலைத்தளம் said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி> துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரரின் கருத்துரைக்கு நன்றி! உண்மையில் சோழ மண்டல வலைப்பதிவர்கள் என்று பழைய ஒன்றுபட்ட திருச்சி,தஞ்சையின் மாவட்டங்களைச் சார்ந்தவர்களை பற்றி எழுதுவதாகத்தான் இருந்தேன். குறுகிய காலம் என்பதால் இந்த அளவோடு நின்று கொண்டேன்.
மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யாவின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி> ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDelete// என்னையும் ஒரு பொருட்டாக மதித்து.... மிக்க நன்றி இளங்கோ ஸார்! //
உங்கள் தன்னடக்கத்திற்கு தலை வணங்குகிறேன் அய்யா!
மறுமொழி> ரிஷபன் said...
ReplyDelete// இத்தனை பேர் இருக்கிறாங்களா.. ஆஹா.. நன்றி ஸார் ! //
ஆமாம் அய்யா! எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் நம மாவட்டத்து பதிவர்கள் நிறையபேரை அறிய வேண்டும். தங்களின் அன்பான வருகைக்கு நன்றி!
மறுமொழி> அ. பாண்டியன் said...
ReplyDeleteதம்பி மணவை அ பாண்டியனுக்கு நன்றி! மதுரைக்கு எத்தனைபேர் வருவார்கள் என்று தெரியவில்லை.
மறுமொழி> Ranjani Narayanan said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் ஸ்ரீரங்கம் என்று ஏற்கனவே எனக்கு தெரியும். உங்கள் பெயர் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது திருக்கண்ணபுரம் தான். மதுரைக்கு சிலர்தான் வருவார்கள் போலிருக்கிறது.
மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசகோதரருக்கு நன்றி!
மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
ReplyDelete// ஐயா தங்களின் முயற்சி அற்புத முயற்சி
திருச்சியில் இத்துனை பேர் இருக்கிறார்களா
வியப்பு மேலிடுகிறது ஐயா ம்//
ஆமாம் அய்யா! தஞ்சை மாவட்டத்து வலைப் பதிவர்களும் நிறையபேர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நீங்கள் அறிமுகப் படுத்தலாமே!
வணக்கம் தமிழ் இளங்கோ ஐயா....திருச்சி பதிவர்களைப் பற்றிய தொகுப்பு மிக அருமையாக உள்ளது.பதிவுலகுக்கு புதியவளான என்னைப் பற்றியும் தாங்கள் எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
ReplyDelete// இன்னொரு பிரபலமான பெண் பதிவர் நம் ஊரான திருச்சியில் தான் உள்ளார்கள்.
_ _ _ / _ _ _ / _ _ _ என்ற மூன்று மூன்று தமிழ் எழுத்துக்களாக உள்ள மூன்று வார்த்தைகளும் கொண்ட புனைப்பெயரில் வலைத்தளம் வைத்துள்ளார்கள்.
வலையுலகில் முன்பெல்லாம் அனைவரிடத்திலும் மிகப் பிரபலமானவர்களே தான்.//
திரு வை.கோபு சார் குறிப்பிட்டுள்ள பதிவர் மிடில் கிளாஸ் மாதவி என்று நினைக்கிறேன். சரியா கோபு சார்?
மதுரை பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
Radha Balu said...
ReplyDelete***** இன்னொரு பிரபலமான பெண் பதிவர் நம் ஊரான திருச்சியில் தான் உள்ளார்கள்.
_ _ _ / _ _ _ / _ _ _ என்ற மூன்று மூன்று தமிழ் எழுத்துக்களாக உள்ள மூன்று வார்த்தைகளும் கொண்ட புனைப்பெயரில் வலைத்தளம் வைத்துள்ளார்கள்.
வலையுலகில் முன்பெல்லாம் அனைவரிடத்திலும் மிகப் பிரபலமானவர்களே தான்.
இவர்கள் வேலைக்குச்செல்லும் அரசுத்துறையைச் சார்ந்த பெண்மணி. இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வும் பெறப்போகிறவர்கள்.
இன்றுவரை தன்னை யார் என்று யாரிடமும் [என்னிடமேகூட] வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவராக இருக்கிறார்கள். என்னிடம் மட்டும் மரியாதையும், அன்பும், மெயில் தொடர்புகளும் உண்டு. எனக்கே அவர்கள் இன்றுவரை பெரும் புதிராகத்தான் உள்ளார்கள். இதுவரை நாங்கள் நேரில் சந்தித்ததும் இல்லை.
முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி பின்னூட்டம் கொடுத்திருப்பவர்களே. இப்போதும் எப்போதாவது என் பதிவுகள் பக்கம் வருகைதந்துச் செல்கிறார்கள்.
இவர்களின் புனைப்பெயரில் உள்ள முதல் இரண்டு வார்த்தைகள் மட்டும் ஆங்கில வார்த்தைகள் ஆகும். தமிழில் எழுதும்போது அவை மூன்று மூன்று எழுத்துகளாக அமைந்துள்ளன. மூன்றாவது வார்த்தை மட்டும் ஒருவேளை அவர்களின் பெயராக இருக்கலாம்.
தமிழில் எழுதப்பட்ட அந்த முதல் இரண்டு, மூன்றெழுத்து வார்த்தைகளை ஆங்கிலத்தில் அப்படியே எழுதும்போது 6+5 = 11 Letters வருகிறது.
முடிந்தால் யூகித்துக்கொள்ளுங்கள், ஐயா. :)*****
//திரு வை.கோபு சார் குறிப்பிட்டுள்ள பதிவர் மிடில் கிளாஸ் மாதவி என்று நினைக்கிறேன். சரியா கோபு சார்?//
என் மதிப்பிற்குரிய + பிரியமுள்ள ராதாபாலு அவர்களே !
வாங்கோ, வணக்கம்.
நான் சொல்லியுள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் மிகப்பொருத்தமாகவே தாங்கள் சொல்லியுள்ள பதிவரின் பெயரும் அமைந்துள்ளது.
தங்களின் இந்த யூகத்தில் உள்ள, தங்களின் அதி புத்திசாலித்தனத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்.
இருப்பினும் நான் நினைத்து எழுதியுள்ள பதிவரும் தாங்கள் யூகித்துச் சொல்லியுள்ள இந்தப் பதிவரும் ஒருவரேவா அல்லது அவர் வேறு ... இவர் வேறா ... என என்னால் சொல்ல முடியாத நிலைமையில் நான் அவரின் பேரன்புக்குக் கட்டுப்பட்டுள்ளேன் என்பதை மட்டும் இப்போதைக்கு இங்கு சொல்லிக்கொள்கிறேன். வேறு எதுவும் என்னிடம் கேட்காதீங்கோ, ப்ளீஸ்.
பிரியமுள்ள கோபு [VGK]
மறுமொழி> Radha Balu said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! வலைப் பதிவினில் அல்லது பதிவுகளில் தனது ஊர் திருச்சி என்று எங்கேனும் ஒரு இடத்தில் பதிவர் குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே இங்குள்ள ப்ட்டியலில் இணைத்துள்ளேன்.
// திரு வை.கோபு சார் குறிப்பிட்டுள்ள பதிவர் மிடில் கிளாஸ் மாதவி என்று நினைக்கிறேன். சரியா கோபு சார்? //
திரு வை.கோபு சார் குறிப்பிட்டுள்ள பதிவர் யார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள மிடில் கிளாஸ் மாதவி அவர்களின் வலைத்தளம் http://middleclassmadhavi.blogspot.in - இதுவென்று நினைக்கிறேன். இதில் இவர் தனது ஊர் திருச்சி என்று குறிப்பிடவில்லை.
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (15)
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! எவ்வளவோ முயன்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர் யார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. மூளையை கசக்கிக் கொண்டதுதான் பாக்கி. அடியேனின் சாதாரணமான இந்த பதிவை உங்கள் யூகமான கேள்வியால் சஸ்பென்ஸ் வைத்து ரசனை மிகுந்ததாக மாற்றி விட்டீர்கள்.
நான் படும் கஷ்டத்தை பார்த்து அந்த பதிவரே இங்கு வந்து நாந்தான் அது என்று சொல்லிக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறாகத் தொகுப்பது என்பது சற்றே சிரமம்தான். நல்ல முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். நன்றி. தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.
ReplyDeleteதிரு தமிழ் இளங்கோ அவர்களே, உங்களுடைய இந்த வலை பதிவர் ஒருங்கிணைப்பு முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல முயற்சி. ராதா பாலு அவர்களை வைகோ அவர்கள் மூலமாகவே அறிமுகம். மற்றபடி ரிஷபன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, சத்யப்ரியன், வெங்கட் குடும்பம், உங்கள் பதிவு தவிர மற்றவர்கள் எவரையும் எனக்குத் தெரியாது. ருக்மிணி சேஷசாயி குறித்தும் வெங்கட் மூலமும், வைகோ மூலமுமே கேள்விப் பட்டிருக்கிறேன். வைகோ அவர்களையும், வெங்கட் குடும்பம், ரிஷபன் ஆகியோரைத் தவிர யாரையும் பார்த்ததும் இல்லை. அறிமுகங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல முயற்சி .... பாராட்டுகளும் மகிழ்ச்சியும், திருச்சியில் இத்துனை பதிவர்களா? ஆனாலும் மனதில் ஓடிக்கொண்டுள்ள ஒரு நெருடல் இளஞர்கள் அதிகம் இதில் ஈடுபாடு இல்லை என்பது.... திருச்சியி ஒரு சிறு ஒன்று கூடல் நடந்தால் மகிழ்ச்சி
ReplyDeleteதிருச்சியில் பதிவர் மாநாடா....
ReplyDeleteகேட்கவே சந்தோஷமாக இருக்கிறது....
மறுமொழி> சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...
ReplyDelete// இவ்வாறாகத் தொகுப்பது என்பது சற்றே சிரமம்தான். நல்ல முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். நன்றி. தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன்.//
முனைவர் B ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க. //
எனக்கும் விக்கிபீடியாவில் எழுதுவதற்கு ஆசைதான். இருந்தாலும் நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி என்று ஒரு கட்டுரை அல்லது தொடர் கட்டுரை தாங்கள் எழுதினால் எல்லோருக்கும் பயன்படும்.
மறுமொழி> Ramakrishnan T said...
ReplyDeleteசகோதரரின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி> Geetha Sambasivam said...
ReplyDeleteஅம்மாவுக்கு நன்றி!
மறுமொழி> ஆ.ஞானசேகரன் said...
ReplyDelete// நல்ல முயற்சி .... பாராட்டுகளும் மகிழ்ச்சியும், திருச்சியில் இத்துனை பதிவர்களா? ஆனாலும் மனதில் ஓடிக்கொண்டுள்ள ஒரு நெருடல் இளஞர்கள் அதிகம் இதில் ஈடுபாடு இல்லை என்பது.... திருச்சியி ஒரு சிறு ஒன்று கூடல் நடந்தால் மகிழ்ச்சி //
சகோதரரின் கருத்துரை சரியானதுதான். வயதானவர்கள் வலைப் பக்கமும் இளைஞர்கள் பேஸ்புக் பக்கமும் என்று ஒதுங்கி விட்டனர். நன்றி!
மறுமொழி> ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDelete// திருச்சியில் பதிவர் மாநாடா....கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.... //
ஆம் அய்யா! கேட்கவே சந்தொஷம்தான்! மதுரை மாநாட்டிற்குப் பின் திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும். தங்கள் அன்பான வருகைக்கு நன்றி!
அன்புள்ள அய்யா திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
அய்யா அவர்கள் வங்கியில் பணியாற்றி ஒய்வுபெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். திருச்சி மாவட்டத்தில் இருபத்து இரண்டு வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பத்தோடு பதின்னொன்று போல இத்தோடு இது ஒன்றாக என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மணப்பாறையில் நான் வசித்து வருகிறேன். திருச்சி, ஆர்.சி.மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மறுமொழி > manavai james said...
ReplyDelete// அன்புள்ள அய்யா திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
வணக்கம்! அய்யா அவர்கள் வங்கியில் பணியாற்றி ஒய்வுபெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். //
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! நான் முதன் முதல் பணியில் (1977) சேர்ந்த ஊர் உங்கள் மணப்பாறைதான். மறக்க முடியாத ஊர்
// திருச்சி மாவட்டத்தில் இருபத்து இரண்டு வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பத்தோடு பதின்னொன்று போல இத்தோடு இது ஒன்றாக என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//
நீங்கள் பத்தோடு பதினொன்று அல்ல! மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர் பணியில் இருப்பவர். சிறந்த பதிவர்.
// மணப்பாறையில் நான் வசித்து வருகிறேன். திருச்சி, ஆர்.சி.மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.//
அவசியம் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். தங்களைக் கண்டறிந்ததில் மிக்க மகிழ்ச்சி! நேரம் கிடைக்கும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன்.
நன்றி ஐயா!
ReplyDeleteதிருச்சியில் இத்தனை வலைப்பதிவர்களா!!!
ReplyDeleteஎங்களையும் இந்த குழுவில் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.
சில மாதங்களாக வலைப்பக்கமே வர முடியவில்லை. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
88 blogs found.
ReplyDeletehttps://www.indiblogger.in/search/?q=TRICHY
FROM DR Balasubramanian..arthamulla iniyamanam
எண்ணப்பூக்களை நுகர, காணச்செய்த தங்களுக்கு நன்றி. தங்களின் கடும் உழைப்புத் தெரிகிறது. அறியாமையிருளை போக்க ஞானஒளி ஏற்றும் தங்கள் முயற்சி வெல்க. இன்றையை தகவல் தொழில் நுட்பம் உலகை ஒரு கிராமமாக்கிவிட்டது.,
ReplyDeleteValuable in formation. Thanks for sharing the article
ReplyDeleteVillas in Trivandrum
Villas for sale in Trivandrum
Builders in Trivandrum
flats in Trivandrum
apartments in Trivandrum
Villas in Trivandrum near me