Tuesday, 13 May 2014

தமிழ்மணம் சேவை - வலையுலகிற்கு தேவை


அண்மையில் “கோடங்கி வலைத்தளத்தில் சகோதரர் கோடங்கி செல்வன் அவர்கள் “தமிழ்மணமே! தயவுடன் புதியவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ( http://www.kodangi.net/2014/05/tamilmanam-please-add-new-tamil-bloggers-.html ) என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் பல நல்ல விஷயங்களை தெளிவுபடுத்தி இருந்தார்.

அதில் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

// நன்றி... வாரம் 4 அல்லது 5 புதிய பதிவர்களுக்கு இணைத்து தருகிறேன்... ஆனால் கடந்த ஏழெட்டு மாதமாகவே புதிய தளத்தை தமிழ்மணம் (http://tamilmanam.net/user_blog_submission.php) எற்றுக் கொள்வதில்லை... காரணம் என்னவென்றும் தெரியவில்லை... அதனால் அடுத்த பகிர்வு திரட்டியை உருவாக்குவோம்...! திண்டுக்கல் தனபாலன்11 May 2014 09:57 //

என்று கருத்துரை தந்து இருந்தார்.

மேலும் இதே பதிவில் மூத்த பதிவர் டி.பி.ஆர். ஜோசப் அவர்களும் அடுத்த பகிர்வு திரட்டி என்ற கருத்தினையே சொல்லி இருந்தார்.

// ஒரு வேளை தமிழ்மணத்தின் வழங்கியின் (server) வேகம் பதிவுகளின் அதிக எண்ணிக்கையால் குறைந்துவிடும் என்று கருதுகிறார்களோ என்னவோ? மேலும் இது ஒரு அதிக லாபமில்லாத பணியாயிற்றே. இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் அதிக விளம்பரங்களையும் காண முடிவதில்லை. அவர்களுக்கு பொருளாதார ரீதியில் என்ன சிக்கலோ. இதற்கு தீர்வு ஒரு புதிய திரட்டியை உருவாக்குவதுதான் ( டிபிஆர்.ஜோசப்12 May 2014 10:16 ) //

ஏற்கனவே இருந்த சில தமிழ் திரட்டிகள் (சங்கமம், ஹாரம் போன்றவை) நின்று விட்டன. INDI BLOGGER – இல் ஆங்கில வலைப்பதிவுகளுக்கு இருக்கும் தனி செல்வாக்கு தமிழ் வலைப்பதிவுகளுக்கு இருப்பது போல் தெரியவில்லை. தமிழ் திரட்டிகளில் முதன்மை இடம் பெற்றுள்ள  தமிழ்மணத்தின் சேவை தொடர வேண்டும் என்பதே பலருடைய விருப்பம் ஆகும். அடுத்த திரட்டி பற்றி இப்போதே ஏன் நினைக்க வேண்டு.ம்? தமிழ்மணம் செய்து வரும் சேவையை மறந்துவிடக் கூடாது. தமிழ்மணம் இல்லாத திரட்டி உலகை நினைத்துப் பார்க்கவே மனதில் சங்கடமாக இருக்கிறது..

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக சகோதரர் அவர்கள் உண்மைகள் “ மதுரைத் தமிழன் எழுதிய

// எந்தவித லாப நோக்கு இல்லாமல் செயல்படுவது தமிழ்மணம். ஆரம்ப காலத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்ட அவர்கள் இப்போது சொந்த வேலை மற்றும் குடும்பகாரணங்களால் செயல்பட முடியாமல் இருக்கலாம். சொந்த காசைப் போட்டு இலவசமாக செய்வதில் ஆர்வம் குறைந்து போய்தான் இருக்கும் என்பது இயற்கையே. நம்மில் பலர் அவர்கள் திரட்டி நடத்த உங்களால் முடிந்த டோனேசன் தாருங்கள் என்று சொன்ன போது எத்தனை பேர் தந்தார்கள் என்று சற்று யோசிக்கவும்.

தமிழ்மணத்தில் எனக்கு ஏதும் சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு இமெயில் அனுப்புவேன் அவர்களும் நேரம் கிடைக்கும் போது பதில் தருவார்கள். எனவே முடிந்தால் அவர்களுக்கு இமெயில் அனுப்பவும் (Avargal Unmaigal12 May 2014 19:15) //

என்ற கருத்துரை ஆறுதலாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது.

முன்பு தமிழ்மணத்திற்கு நன்கொடை அனுப்புவது சம்பந்தமாக சிறிய குறிப்பாக வெளியிட்டு இருந்தார்கள். நானும் அவர்கள் கணக்கிற்கோ அல்லது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கோ என்னால் இயன்ற நன்கொடையை அனுப்ப முய்ன்றேன். ஆனால் சரியான விவரம் இல்லாததாலும், அவர்கள் சொன்ன “PayPal முறையில் பணம் அனுப்ப எனக்கு நெட் பாங்கிங் கணக்கு இல்லாத்தாலும் அனுப்ப இயலாமல் போய் விட்டது. ( நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங் போன்ற கணக்குகளை வைத்துக் கொள்ள எனக்கு ஆர்வமில்லை) இப்போதைய சூழ்நிலையில் தமிழ்மணத்திற்கு நன்கொடை தர நிறைபேர் ஆர்வமாக இருப்பார்கள்.

எனவே தமிழ்மணம் நன்கொடை விஷயமாக அவர்களே மீண்டும் அறிவிப்பு செய்தால் நல்லது. பணம் அனுப்ப வேண்டிய வழிமுறை எளிதாக இருந்தால் நல்லது. அல்லது அவர்களின் ஒப்புதலோடு தமிழ்மணம் சார்பாக யாரேனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இந்த காரியத்தை எடுத்து செய்தாலும் நல்லது. இது ஒரு ஆலோசனை மட்டுமே. சென்ற முறை சென்னையில் நடந்த பதிவர்கள் மாநாட்டிற்கு நல்ல எண்ணத்தோடு பதிவர்கள் நன்கொடை திரட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

கோடங்கி - கட்டுரையின் தாக்கம் தமிழ்மணம் பற்றிய இந்த கட்டுரையை இங்கு எழுதி இருக்கிறேன். எனவே அந்த கட்டுரைக்கு வந்த சில கருத்துரைகளை மேற்கோளாகக் காட்டியுள்ளேன். தவறாக ஏதும் யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

   --------------------------------------------------------------

                                                       (Picture thanks to :  www.techlila.com )

புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!


--------------- அழைப்பிதழ் ------------------- 
இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை
 புதுக்கோட்டை- அழைப்பிதழ்
நாள்  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி --- மாலை5மணி)
இடம்-புதுக்கோட்டைகைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.
தலைமை 
       முனைவர் நா.அருள்முருகன்                        
முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,  
       தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமி, திரு பி.கருப்பையா                   முதல்வர் எஸ்.கலியபெருமாள்
 ------------------------------------------------   
    பயிற்சியளிக்கும் வல்லுநர்கள்
அறிஞர் பொ.வேல்சாமி, நாமக்கல்
முனைவர் பா.மதிவாணன், திருச்சி
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி - 
http://muelangovan.blogspot.in/
முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை - 
http://manidal.blogspot.in/
திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
தி.ந.முரளிதரன், சென்னை
http://tnmurali.blogspot.com/
பிரின்சுஎன்னாரெசுப்பெரியார்-விக்கி-தமிழ் 
http://princenrsama.blogspot.in/  
இரண்டேநாளில்தமிழ்த்தட்டச்சுசர்மா,புதுக்கோட்டை  
sarmapress123@gmail.com
பட்டறையில் என்ன செய்யப் போகிறோம்?
மின்னஞ்சல் தொடங்க / கடவுச்சொல் மாற்றல்
வலைப்பக்கம், முகநூல், ட்விட்டர் தொடங்கும்-தொடரும் வழிமுறைகள், 
விக்கிப்பீடியாவில் தமிழில் பதிவேற்ற-திருத்தக் கற்றல்,
தமிழ்த்தட்டச்சை ஓரிரு நாளில் கற்றுக் கொள்ளும் எளியமுறைகள், 
வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகரை ஈர்ப்பது, 
புகழ்பெற்ற இணைய இதழ்கள்,வலைப்பக்கங்கள் அறிமுகம், 
வலையுலகில் எதைச் செய்யலாம் செய்யக் கூடாது?
தமிழ்வளர, நல்ல கலை-இலக்கியம் வளர, கணினித் தமிழ்வழி முன்னேற இணையத்தில் எவற்றை எழுதலாம்?  நேரடிவிளக்கம் ஐயம் களைதல்  
-அமைப்புக்குழு 
  நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, இரா.ஜெயலட்சுமி, ச.கஸ்தூரிரெங்கன், 
சி.குருநாதசுந்தரம், மகா.சுந்தர்,  முனைவர் சு.துரைக்குமரன்,  ராசி.பன்னீர்செல்வன்  
மு.கீதா, செ.சுவாதி,  ஸ்டாலின் சரவணன், அ.பாண்டியன்
தொடர்பிற்கு 
 மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com     அலைபேசி- 94431 93293
--------------------------------------------- 
ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
-------------------------------

அழைப்பிதழுக்கு நன்றி! மேலும் விவரங்களுக்கு :

28 comments:

  1. அன்புடையீர்..
    தமிழ் மணம் பற்றிய தங்களின் மேலான கருத்துக்கள் நியாமானவைகளே..
    தமிழ் மணம் நன்கொடை விஷயமாக - பணம் அனுப்ப வேண்டிய வழிமுறை எளிதாக இருந்தால் நல்லது.

    ReplyDelete
  2. எனது வலைப்பூவை தமிழ்மணத்தில் இனைக்க முயற்ச்சி செய்தேன். இயலவில்லை.

    ReplyDelete
  3. தமிழ்மணத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் புதியதளமான “பூவையின் எண்ணங்கள் “ இணைத்தேன். ஆனால் இந்து ஓட்டு போடும் விஷயம் தெரியவில்லை. பல நல்ல விஷயங்களுக்கு நன்கொடை தரத் தயார் என்று சொல்பவர்கள் அணுகும்போது மூச் விடுவதில்லை. நடைமுறை இது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // அன்புடையீர்.. தமிழ் மணம் பற்றிய தங்களின் மேலான கருத்துக்கள் நியாமானவைகளே.. தமிழ் மணம் நன்கொடை விஷயமாக - பணம் அனுப்ப வேண்டிய வழிமுறை எளிதாக இருந்தால் நல்லது. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. மறுமொழி > இல. விக்னேஷ் said...

    // எனது வலைப்பூவை தமிழ்மணத்தில் இனைக்க முயற்ச்சி செய்தேன். இயலவில்லை. //

    தம்பி இல.கணேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தம்பியின் ”சுயம்பு” - புதிய வலைத் தளத்திற்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க http://indianreflects.blogspot.in
    என்ற உங்கள் தளத்தின் முகவரியினை
    http://indianreflects.blogspot.com
    என்ற முகவரிக்கு மாற்ற வேண்டும். இது சம்பந்தமாக சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களோடு தொடர்பு கொள்ளவும். அவர் உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் செய்வார்

    ReplyDelete
  6. ஒரு வேண்டுகோள்...
    இதைப் படிக்கும் நண்பர்கள்.
    தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    ஜி+ பகிர்ந்திருக்கிறேன்.....

    ReplyDelete
  7. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // தமிழ்மணத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் புதியதளமான “பூவையின் எண்ணங்கள் “ இணைத்தேன். ஆனால் இந்து ஓட்டு போடும் விஷயம் தெரியவில்லை.//

    ஓட்டு போடும் விஷயத்தில் தெரியாமல் இருப்பதும் ஒரு விதத்தில் நல்லதுதான். நான் முதன் முதல் தொடங்கிய வலைப்பதிவை இந்த ஓட்டு போடும் விஷயத்திற்காக இழந்து விட்டேன்.

    // பல நல்ல விஷயங்களுக்கு நன்கொடை தரத் தயார் என்று சொல்பவர்கள் அணுகும்போது மூச் விடுவதில்லை. நடைமுறை இது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. வாழ்த்துகள் //

    நீங்கள் சொல்வது உண்மைதான் சொல்லுதல் யார்க்கும் எளிய! அரியவாம் சொல்லிய வண்ணம் செய்தல்! நான் சொன்னபடி செய்வேன் அய்யா! முடியாத வாக்குறுதிகளை தருவது கிடையாது. நீங்கள் எப்போதும் யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டீர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே ஆகும்.




    ReplyDelete
  8. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    - - - - -
    // ஒரு வேண்டுகோள்... இதைப் படிக்கும் நண்பர்கள்.
    தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//
    - - - - -
    // ஜி+ பகிர்ந்திருக்கிறேன்..... //

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

    // வணக்கம், நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். www.Nikandu.com நிகண்டு.காம் //

    அன்புடையீர் வணக்கம்! நான் எனது வலைப்பதிவு நண்பர்களிடம் கேட்டுக் கொண்டு உங்கள் தளத்தில் இணையலாம் என்று இருக்கிறேன். நன்றி!



    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. தமிழ்மணம் நிறைய உழைப்பை தானமாகக் கொடுத்திருக்கிறது. நன்றி மறக்க நான் விரும்பவில்லை.

    ReplyDelete
  11. மிகச்சுலபமாக இருப்பதால் இதனை நானும் G+ இல் பகிர்ந்துள்ளேன், ஐயா.

    ReplyDelete
  12. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். தமிழ் மணம் நன்கொடையை சென்னை வலைப்பதிவர் குழுமமே வசூலித்து அனுப்பலாம். பதிவர்கள்( நான் உட்பட) நிச்சயம் நன்கொடை தரத் தயாராக இருப்பார்கள்.

    ReplyDelete
  13. திரட்டிகள் நடத்துவது அவளவு எளிதன்று திரட்டிகளில் தமிழ்மணம்,தமிழ் 10, இன்ட்லி ஆகியவை குரஈப்பிடத் தக்கவை, இவற்றில் தமிழ் மணம் மட்டுமே பல்வேறு சிறப்பு அம்சங்களை உடையதாக இருக்கிறது. அதன் தரவரிசைப் பட்டியலும் வாக்குகளும் மட்டும் அடிக்கடி விமரசனத்துக்கு உள்ளானாலும். . பதிவுகளை பல்வேறு வகைகளில் காட்டுவது தமிழ் மணம் மட்டுமே. இதைப் பற்றிய ஒரு பதிவு ஒன்றையும் எழுதி இருந்தேன்.
    தமிழ்மணத்தில் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
    தமிழ் மணம் புதிய பதிவர்களை கடந்த அக்டோபருக்குப் பிறகு இணைக்கவில்லை.
    அதற்கு முன்னரும் 6 மாதங்கள் ஆனது. என்ன காரணம் என்று தெரியவில்லை

    ReplyDelete
  14. உங்களின் எண்ணங்கள் வேறு...

    சுருக்கமாக : நமக்காக தான் அனைத்து திரட்டியும்... திரட்டிகளுக்காக நாம் அல்ல...எனது எண்ணங்கள் - விரைவில்...

    ReplyDelete
  15. மறுமொழி > வல்லிசிம்ஹன் said...

    // நல்ல பகிர்வு. தமிழ்மணம் நிறைய உழைப்பை தானமாகக் கொடுத்திருக்கிறது. நன்றி மறக்க நான் விரும்பவில்லை. //

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // மிகச்சுலபமாக இருப்பதால் இதனை நானும் G+ இல் பகிர்ந்துள்ளேன், ஐயா. //

    திரு V.G.K அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். தமிழ் மணம் நன்கொடையை சென்னை வலைப்பதிவர் குழுமமே வசூலித்து அனுப்பலாம். பதிவர்கள்( நான் உட்பட) நிச்சயம் நன்கொடை தரத் தயாராக இருப்பார்கள். //

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // திரட்டிகள் நடத்துவது அவளவு எளிதன்று திரட்டிகளில் தமிழ்மணம்,தமிழ் 10, இன்ட்லி ஆகியவை குரஈப்பிடத் தக்கவை, இவற்றில் தமிழ் மணம் மட்டுமே பல்வேறு சிறப்பு அம்சங்களை உடையதாக இருக்கிறது. அதன் தரவரிசைப் பட்டியலும் வாக்குகளும் மட்டும் அடிக்கடி விமரசனத்துக்கு உள்ளானாலும். . பதிவுகளை பல்வேறு வகைகளில் காட்டுவது தமிழ் மணம் மட்டுமே. இதைப் பற்றிய ஒரு பதிவு ஒன்றையும் எழுதி இருந்தேன்.தமிழ்மணத்தில் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா? தமிழ் மணம் புதிய பதிவர்களை கடந்த அக்டோபருக்குப் பிறகு இணைக்கவில்லை. அதற்கு முன்னரும் 6 மாதங்கள் ஆனது. என்ன காரணம் என்று தெரியவில்லை //

    நீண்ட கருத்துரை தந்த சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // உங்களின் எண்ணங்கள் வேறு...சுருக்கமாக : நமக்காக தான் அனைத்து திரட்டியும்... திரட்டிகளுக்காக நாம் அல்ல...எனது எண்ணங்கள் - விரைவில்... //

    உங்களது கருத்துரையை எதிர்பார்த்து இருந்தேன். சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  20. வயிற்றுப் பிள்ளையை நம்பி கை பிள்ளையை விட முடியாது தமிழ் மணத்தின் சேவை தொடர வேண்டும் என்பதே என் அவாவும் !
    தமிழ் மண குழுமத்தில் இருந்து கோரிக்கை வருமானால் உதவத் தயாராய் இருக்கிறேன் !
    த ம 3

    ReplyDelete
  21. சகோதரர் பகவான்ஜீ..K.A அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. பதிவர்களின் கருத்துரைகளை மேற்கோள் காட்டி எழுதுவதில் தவறேதும் இல்லை. தமிழ்மணம் இதுபோன்ற பல சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இப்போதும் அதையே செய்யும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  23. தமிழ்மணம் வேகம் குறைந்ததற்கு பொருளாதார ரீதியாக அது லாபம் ஈட்டாமையாக இருக்கலாம். நமக்கான தளம் என்பதால் நமது உதவி அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழ்மணத்தை மேம்படுத்த அவர்களோடு கை கோர்த்து நாமும் செயல்பட்டால்தான் இத்தகைய வலைத் திரட்டிகள் புத்துயிர் பெறும்.

    ReplyDelete
  24. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // பதிவர்களின் கருத்துரைகளை மேற்கோள் காட்டி எழுதுவதில் தவறேதும் இல்லை. தமிழ்மணம் இதுபோன்ற பல சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இப்போதும் அதையே செய்யும் என்று நம்புவோம். //

    அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்களிடமிருந்து ஒரு பெரிய டோஸ் விழும் என்று பயந்தேன். நல்லவேளை தப்பித்தேன்.

    ReplyDelete
  25. மறுமொழி > -தோழன் மபா, தமிழன் வீதி said...

    // தமிழ்மணம் வேகம் குறைந்ததற்கு பொருளாதார ரீதியாக அது லாபம் ஈட்டாமையாக இருக்கலாம். நமக்கான தளம் என்பதால் நமது உதவி அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழ்மணத்தை மேம்படுத்த அவர்களோடு கை கோர்த்து நாமும் செயல்பட்டால்தான் இத்தகைய வலைத் திரட்டிகள் புத்துயிர் பெறும். //

    நிங்கள் சொல்வது சரிதான் பத்திரிகைதுறை சகோதரர் தோழன் மபா.தமிழன் வீதி அவர்களே!

    கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  26. தமிழ் மணமே இதைப் பற்றி தன், நிலையை விளக்கி அறிக்கை தருமானல் , பதிவர் குழுமத்தில் நானும் ஒருவன் என்ற முறையில் குழும நண்பர்களோடு கலந்து ஆவன செய்ய முயற்சிக்கிறேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் நோய் என்ன
    என்று தெரிந்தால் தானே தீர்வு காண முடியும்! நன்றி இளங்கோ!

    ReplyDelete
  27. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // தமிழ் மணமே இதைப் பற்றி தன், நிலையை விளக்கி அறிக்கை தருமானல் , பதிவர் குழுமத்தில் நானும் ஒருவன் என்ற முறையில் குழும நண்பர்களோடு கலந்து ஆவன செய்ய முயற்சிக்கிறேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் //

    புலவர் அய்யாவின் ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றி!

    // நோய் என்ன என்று தெரிந்தால் தானே தீர்வு காண முடியும்! நன்றி இளங்கோ! //

    நோய் என்று ஏதுமில்லை. பதிவர்கள் அனுமானத்தில் சொன்னதுதான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  28. தமிழ்மணத்திற்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை. விரைவில் அவர்களே விளக்கம் தருவார்கள் என நம்புவோம்...

    ReplyDelete