Tuesday, 10 September 2013

எங்கெங்கும் எப்போதும் என்னோடு - வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)



VGK மற்றும் கோபு அல்லது கோபு அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர், மூத்த வலைப்பதிவர் திரு  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய வயது, அனுபவம், மற்றும் எழுத்துக்களோடு ஒப்பிடுகையில் நான் ஒன்றுமே இல்லை. நான் அவருடைய நூலை விமர்சனம் செய்கிறேன் என்று சொல்வதே தப்பு. இருந்தாலும் எல்லோருக்கும் புரிந்த சொற்றொடர் என்பதால் இந்த தலைப்பு. 

மீண்டும் படித்தேன்:

சென்ற ஜூலை மாதம் (03.07.2013 புதன்) மூதத பதிவர் திரு GMB அவர்களை திருச்சியில் அவர் தங்கியிருந்த விடுதியில் சந்தித்தேன். எனக்கு முன் திரு VGK அவர்கள் வந்து இருந்தார். அப்போது அவர் GMB அவர்களுக்கும் எனக்கும் சில பரிசுகளைத் தந்தார். அவற்றுள் ஒன்று,அவர் எழுதிய “எங்கெங்கும் எப்போதும் என்னோடு என்ற நூலாகும். வீட்டிற்கு வந்தவுடன் நூலை பிரித்துப் பார்த்தேன். ஏற்கனவே அவரது வலைப்பதிவில் நான் படித்தவைகள்தான். எனவே அப்புறம் பார்க்கலாம் என்று வைத்து விட்டேன். இப்போது நேரம் கிடைத்ததால் மீண்டும் அந்த நூலில் உள்ள கதைகளை, ஏற்கனவே படித்தது போன்ற எண்ணமே இல்லாமல் ரசித்துப் படித்தேன். அதுதான் திரு VGK அவர்கள் எழுத்துக்களின் வெற்றி!

நூலினைப் படிக்கும்போது அவரிடம் மின்னஞசலில் தொடர்பு கொண்டபோது அவர் சொன்ன விவரம்.

// அன்புள்ள ஐயா, வணக்கம். அதில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை என்னால் என் வலைப்பதிவில் வெளியிடப்பட்டவைகளாகளாகவே இருக்கும். ஆனால் அதில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை பத்திரிகைகளில் வெளிவந்தபோது பத்திரிகை ஆசிரியர்களால் நன்கு சுருக்கப்பட்டவைகளாக இருக்கும்.  அவையே என் பதிவுகளில் நான் தந்தபோது சற்றே வித்யாசமாகவும், விபரமாகவும் Edit செய்யப்படாமலும், ஒருசில கதைகளின் தலைப்பு மாற்றப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.  //

நூலில் சொல்லப்பட்ட கதைகள்:

வழக்கம் போல இதிலுள்ள சிறுகதைகளில் VGK  அவர்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும்  நடுத்தர மக்களைப் பற்றிய சிந்தனைகள் இவற்றினைக் காணலாம். கதாபாத்திரங்கள் யாவும் நமது பக்கத்து வீட்டில், நாம் வசிக்கும் தெருவில் அல்லது அடுத்த தெருவில், பயணங்களின் போது சந்தித்தவர்களாகவே இருப்பார்கள். கற்பனையா அல்லது உண்மையிலேயே நடந்ததா என்று சொல்ல இயலாத அளவிற்கு யதார்த்தம் இருக்கும்.

எங்கெங்கும் எப்போதும் என்னோடு  என்ற முதல் கதையில் வாக்கிங் (Walking) சென்றபோது பெரியவர் ஒருவரை ஒரு வீட்டுத் திண்ணையில் சந்திக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வாக்கிங் செலலும்போது அந்த திண்ணையில் பெரியவரை எதிர்பார்த்து உட்கார்ந்து இருக்கிறார். பெரியவர் வருகிறார். அந்த காட்சியை

// சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.   ஆனால் அவர் தானே நடந்து வரவில்லை.   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில்.  சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.  //  (பக்கம் 8)  

என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார்.

இலவுகாத்த கிளிகள் என்ற தலைப்பில் 40  ஆண்டுகளுக்கு முந்திய சொந்தக் கதை  என்று நிறைவேறாத காதல்கதை ஒன்றை கற்பனையாகச் சொல்லுகிறார். (பக்கம் 10 19)
கிராமத்தை விட்டு டவுனில் இருக்கும் நகைக் கடைக்கு சென்றுவர எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதனை “மூக்குத்தி என்ற கதையில் தெரிவிக்கிறார். மேலும் க்டைக்காரர்கள் நகை வாங்கும்போது கையாளும் உத்திகளையும் நகைச்சுவையோடு சொல்லுகிறார். (பக்கம் 20 30)


மனிதன் ஒரு சமுதாய விலங்கு” ( MAN IS A SOCIAL ANIMAL) என்றார் அறிஞர் அரிஸ்டாடில். இதற்கு முக்கிய காரணியாய் விளங்குவது அவன் பேசும் மொழிதான். சிலர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் அதிகம்பேசவே மாட்டார்கள். மனிதன் தனது மனதில் உள்ள பாரத்தினை அடுத்தவர்களிடம் சொல்லி ஆற்றிக் கொள்கின்றனர். ஒரு பெரியவர் பேச ஆளில்லாமல் படும் துன்பத்தை  .வடிகால்என்ற கதையில் விவரிக்கிறார்.
 
//வீட்டில் இவரின் பையன்களோ, மருமகள்களோ, மாப்பிள்ளைகளோ,  இவர் பெற்ற பெண்களோ, பேரன்களோ, பேத்திகளோ பலரும் இருக்கலாம். இவரும் பேசலாம் அல்லது பேச நினைக்கலாம். அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே! அதற்கு அவர்களுக்கு விருப்பமும், பொறுமையும், நேர அவகாசமும் இருக்க வேண்டுமே! அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலைகள். களைப்புடன் வீட்டுக்கு வந்தால் சமையல், சாப்பாடு, ஷாப்பிங் போவது, டி.வி. நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர், செய்தித்தாள், வார மாத இதழ்கள் படிப்பது, மறுநாள் சீக்கரம் எழுந்து ஆபீஸ் செல்ல வேண்டி, சீக்கரமாக படுக்கப்போவது என்று ஒவ்வொரு நாளும் கழியும். யாருக்கும் மற்ற யாரிடமும் எதுவும் பேச நேரமிருக்காது. குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போவது, ட்யூஷன் போவது, வீட்டுப்பாடம் செய்வது, நடுநடுவே டி.வி. நிகழ்ச்சிகள், கார்டூன் நெட்வொர்க், வீடியோ கேம்ஸ் என்று அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கும். தாத்தாவைப் பார்க்கவோ அவருடன் பேசவோ விரும்ப மாட்டார்கள்.

அந்தப் பெரியவருக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையென்று அவர் புலம்பினாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவர்களின் எரிச்சலும் கோபமும் அதிகமாகும். இத்தகைய சூழ்நிலைகளில் அந்தப்பெரியவர் யாருடன் மனம் விட்டுப்பேச முடியும்?  வந்த பெரியவரின் பேச்சுக்களிலிருந்து என்னால் இவற்றையெல்லாம் அனுமானிக்க முடிந்தது.  ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ!  அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன். // (பக்கம் 36-37)

எம்ஜிஆர் கலங்கரை விளக்கம்என்ற படத்தில் “நான் காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன் “ என்று பாடுவார். எல்லோரும் காற்று வாங்க கடற்கரை, பூங்கா என்று செல்வார்கள். ஆனால் இவரோ காற்று வாங்க ஒரு டவுன் பஸ்ஸில் சென்று அதே பஸ்ஸில் திரும்பும்போது ஒரு கதையோடு வருகிறார். கதையின் பெயர்  அமுதைப் பொழியும் நிலவே ! (பக்கம் 56 - 61)

நாம் நமது வீட்டு நிகழ்ச்சிகளுக்காக அழைப்பிதழ் கொடுக்க செல்கின்றோம். அப்போது நமக்கு எத்தனையோ அனுபவங்கள். அந்த அனுபவங்களை நகைச்சுவையோடு அடடே என்று ரசிக்கும்படி எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பு “அழைப்பு. 
   
// ஒரே பெயரில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். உதாரணமாக பாரத் வில்லா”,  ”பாரத் எம்பயர்”, ”பாரத் வெஸ்ட் அவென்யூ”, ”பாரத் ஈஸ்ட் அவென்யூ”, “பாரத் கார்டன்ஸ்என்று பலவிதமான கட்டடப் பெயர்களால் வந்திடும் குழப்பங்கள் சுப்ரமணியன் என்றாலோ பாலசுப்ரமணியன் என்றாலோ எல்லா அடுக்கு மாடிகளிலும் யாராவது ஒருத்தர் அதே பெயரில் ஆனால் ஆள் மாறாட்டமாக இருந்து வரும் துரதிஷ்டம்ஆங்காங்கே உள்ள வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள், திறந்திருந்தாலும் உள்ளே தாளிட்டு லேசில் வந்து கதவைத் திறக்காத நபர்கள், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றோ அல்லது ஷாப்பிங் போயோ வீடு திரும்பாமல் இருத்தல் என பல்வேறு சோதனைகள் // (பக்கம் 64)


முடிவுரை:

இதுபோன்று சுவையான கதைகள் பதினைந்து இந்த நூலில் உள்ளன. நண்பர்களுக்கு பரிசாக அளிக்க சிறந்த நூல். வாங்கிப் படியுங்கள். பிறருக்கும் அனபளிப்பாக தாருங்கள்.





நூலின் பெயர்: எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...

ஆசிரியர்: வை. கோபாலகிருஷ்ணன்

பக்கங்கள்: 124 அப்போதைய விலை ரூ55/=

வெளியிட்டவர்கள்; மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்:1447, 7 (ப.எண் 4),தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017

44 comments:

  1. அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,

    வணக்கம் ஐயா.

    ”எங்கெங்கும் எப்போதும் என்னோடு - வை. கோபாலகிருஷ்ணன் (நூல் ”விமர்சனம்)” என்ற தலைப்பில் அழகாக ஓர் தனிப் பதிவே வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி + நன்றிகள், ஐயா.

    >>>>>

    ReplyDelete
  2. அதில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை என்னால் என் வலைப்பதிவில் வெளியிடப்பட்டவைகளாகளாகவே இருக்கும், ஐயா.

    ஆனால் அதில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை பத்திரிகைகளில் வெளிவந்தபோது பத்திரிகை ஆசிரியர்களால் நன்கு சுருக்கப்பட்டவைகளாக இருக்கும்.

    அவையே என் பதிவுகளில் நான் தந்தபோது சற்றே வித்யாசமாகவும், விபரமாகவும் Edit செய்யப்படாமலும், ஒருசில கதைகளின் தலைப்பு மாற்றப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.

    இதோ எல்லாவற்றின் இணைப்புக்களும் கொடுத்துள்ளேன்.

    அந்தப்புத்தகத்தில் உள்ளதை விட பதிவினில் படித்தால் மட்டுமே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    பெரும்பாலான கதைகளில் ஆங்காங்கே பல்வேறு மாற்றங்கள் செய்து பதிவினில் நான் மேலும் சுவை சேர்த்துக் கொடுத்திருப்பேன்.
    .

    1] எங்கெங்கும் எப்போதும் என்னோடு
    http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html
    எங்கெங்கும் எப்போதும் என்னோடு

    2] இலவு காத்த கிளிகள்
    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
    மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1/4

    3] மூக்குத்தி
    http://gopu1949.blogspot.in/2011/05/1-of-7.html
    மூக்குத்தி பகுதி 1 / 7

    4] வடிகால்
    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4.html
    வடிகால் பகுதி 1 / 4

    5] உண்மை சற்றே வெண்மை
    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_6.html
    உண்மை சற்றே வெண்மை பகுதி 1 / 2

    6] காதல் ஓவியம்
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_08.html
    ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

    7] அமுதைப்பொழியும் நிலவே
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html
    அமுதைப்பொழியும் நிலவே !

    -=-=-=-=-=-

    8] அழைப்பு
    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html
    அழைப்பு பகுதி 1 / 2

    இந்த ’அழைப்பு’ என்ற சிறுகதை அந்த புத்தகத்தில் சோக முடிவாக இருக்கும்.

    பதிவினில் கொடுத்தபோது முடிவை சுபமாக / சுகமாக மாற்றி வெளியிட்டுள்ளேன்.

    சோகமான முடிவை சுபமான முடிவாக மாற்றிக்கொடுத்துள்ளேன்.

    பதிவினில் சுபமாக மாற்றியது பெரும் வரவேற்பினைப்பெற்றுள்ளது.

    -=-=-=-=-=-


    9] முதிர்ந்த பார்வை
    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2.html
    முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2

    10] மலரே ... குறிஞ்சி மலரே !
    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_19.html
    மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3

    11] பஜ்ஜின்னா பஜ்ஜிதான்
    http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
    பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் பகுதி 1 / 2

    12. ’நா’ வினால் சுட்ட வடு
    http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html
    நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2

    13. அவன் போட்ட கணக்கு
    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html
    அவன் போட்ட கணக்கு

    14] மடிசார் புடவை
    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html
    மடிசார் புடவை பகுதி 1 / 2

    15] யாதும் ஊரே யாவையும் கேளிர் !
    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-3.html
    யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

    >>>>>

    ReplyDelete
  3. //நூலின் பெயர்: எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...

    ஆசிரியர்: வை. கோபாலகிருஷ்ணன்

    பக்கங்கள்: 124 அப்போதைய விலை ரூ55/=

    வெளியிட்டவர்கள்; மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்:1447, 7 (ப.எண் 4),தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017//

    யாரும் புத்தகத்தைத்தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.

    பணம் செலவழித்து வாங்க வேண்டியதும் இல்லை.

    மேற்படி இணைப்புகளுக்குப் போய் படித்தாலே போதும்.

    தங்களின் மேலான கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதினாலே போதும்.

    அன்புடன் VGK [கோபு]

    >>>>>

    ReplyDelete
  4. அருமையான விரிவான விமர்சனத்திற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதுபோன்ற பல சிறுகதைகள் நான் 2011ல் என் வலைத்தளத்தின் வெளியிட்டுள்ளேன்.

    அப்போதெல்லாம் எனக்கு ரஸிகர்கள் [FOLLOWERS] அதிகம் கிடையாது.

    பின்னூட்டங்களும் மிகவும் குறைவாகவே வந்தன.

    இப்போது நிலைமை அப்படி இல்லாமல் சற்றே முன்னேற்றமாக உள்ளது.

    300க்கும் அதிகமான FOLLOWERS உள்ளனர். ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வருகின்றன.

    அதனால் என் சிறுகதைகள் எல்லாவற்றையும் வரும் 2014ம் ஆண்டில் மீள் பதிவாக வெளியிட திட்டமிட்டுள்ளேன்.

    மேலும் இதுவரை வெளியிடப்படாத என் சிறுகதைகளும் புதிதாக வெளியிடப்படும்.

    நான் இப்போது எழுதிவரும் தொடர் முடிந்தபின் [அதற்கே இந்த 2013ம் ஆண்டு முழுவதும் சரியாகப்போகும் போலத்தெரிகிறது] என் சிறுகதைகள் வழக்கம்போல தொடரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  6. அழகான அருமையான விமர்சனம்... நன்றி ஐயா...

    ஐயாவின் அறிவிப்பு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. திரு வை.கோபாலகிருஷ்ணன்அவர்களின் “எங்கெங்கும் எப்போதும் என்னோடு” என்ற நூலைப்பற்றிய தங்களது திறனாய்வு, நூலை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது.வாழ்த்துக்கள் அருமையான நூலை அறிமுகப்படுத்தியதற்கு!

    ReplyDelete
  8. வைகோ சாரின் புத்தகத்தின் சிறப்பை அழகாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.மணிமேகலைப் பிரசுரத்தில் பார்க்கிறேன்!

    ReplyDelete
  9. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
    திரு VGK அவர்களுக்கு முதற்கண் எனது வணக்கமும் நன்றியும்!

    ReplyDelete
  10. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (2)
    தங்களின் விரிவான கருத்துரைக்கும், நூலில் உள்ள கதைகளுக்கான இணைப்புகளை தந்ததற்கும் நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (3 )
    // யாரும் புத்தகத்தைத்தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. பணம் செலவழித்து வாங்க வேண்டியதும் இல்லை. மேற்படி இணைப்புகளுக்குப் போய் படித்தாலே போதும். //

    // தங்களின் மேலான கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதினாலே போதும்.//

    நல்ல யோசனை. எளிமையான வழி ஒன்றைச் சொன்னதற்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> Ramani S said... ( 1, 2)
    // அருமையான விரிவான விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )
    // இதுபோன்ற பல சிறுகதைகள் நான் 2011ல் என் வலைத்தளத்தின் வெளியிட்டுள்ளேன். அப்போதெல்லாம் எனக்கு ரஸிகர்கள் [FOLLOWERS] அதிகம் கிடையாது. பின்னூட்டங்களும் மிகவும் குறைவாகவே வந்தன. இப்போது நிலைமை அப்படி இல்லாமல் சற்றே முன்னேற்றமாக உள்ளது. 300க்கும் அதிகமான FOLLOWERS உள்ளனர். ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வருகின்றன.//

    உண்மையிலேயே உங்களுக்கு வரும் அதிக அளவிலான பின்னூட்டங்களைப் பார்க்கும் போது, இதற்கு நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்து இருக்க வேண்டும்?

    // அதனால் என் சிறுகதைகள் எல்லாவற்றையும் வரும் 2014ம் ஆண்டில் மீள் பதிவாக வெளியிட திட்டமிட்டுள்ளேன். மேலும் இதுவரை வெளியிடப்படாத என் சிறுகதைகளும் புதிதாக வெளியிடப்படும். //

    நல்ல யோசனை. நீங்கள் இப்போது எழுதிவரும் தொடர் ஒருபுறம் இருந்தாலும், இடையிடையே மீள்பதிவாக உங்கள் கதைகளை வெளியிடலாம்.

    ReplyDelete
  14. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
    // அழகான அருமையான விமர்சனம்... நன்றி ஐயா...//

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    //ஐயாவின் அறிவிப்பு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது... நன்றி... வாழ்த்துக்கள்... //

    எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ReplyDelete
  15. மறுமொழி> வே.நடனசபாபதி said...
    வங்கி வேளாண் அதிகாரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி> குட்டன் said...
    // வைகோ சாரின் புத்தகத்தின் சிறப்பை அழகாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.மணிமேகலைப் பிரசுரத்தில் பார்க்கிறேன்! //

    புத்தகம் ஸ்டாக் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் எனக்கும் தெரியப்படுத்தவும். சகோதரர் குட்டன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  17. தி தமிழ் இளங்கோ அவர்களுக்கு, எனக்குத் தோன்றவில்லையே ...!நான் இக்கதைகளை ஏற்கனவே வலைத்தளத்தில் படித்திருக்கிறேன்.புத்தகத்தை மீண்டும் படித்தேன். என் மனைவியும் மிகவும் ரசித்தாள். ஆரம்பகால
    பதிவுகளில் கோபு சாரின் நகைச்சுவை நடையை மிகவும் ரசித்தேன். ஒரு பதிவில் எலியைப் பிடிக்க எளிப் பொறி ஒன்று வாங்கி அதன் விளைவுகளை அருமையாக விவரித்திருப்பார். எனக்கு அம்மாதிரி நகைச் சுவை நடை கிஞ்சித்தும் கிடையாது. நான் பொறாமைப் படும் மனிதர்களில் அவரும் ஒருவர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. // 11] பஜ்ஜின்னா பஜ்ஜிதான்
    http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html//

    தங்களின் பதிவு வழியாக இப்ப தான் சுவைதேன். தங்களுக்கும், அருமையாகவும், சுவையாகவும் பதிவிடும் வைகோ ஐயாவுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  19. படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். இலவுகாத்த கிளிகள் மட்டும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்கள் நல்ல கருத்தான கதைகளை நல்ல நடையினில் எழுதுபவர் ஆயிற்றே? அவர் புத்தகம் பிரமாதமாக வந்திருப்பதில் ஆச்சரியமில்லை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. மறுமொழி> G.M Balasubramaniam said...

    // எனக்கு அம்மாதிரி நகைச் சுவை நடை கிஞ்சித்தும் கிடையாது. நான் பொறாமைப் படும் மனிதர்களில் அவரும் ஒருவர். வாழ்த்துக்கள். //

    GMB அவர்களின் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி> வேல் said...
    // 11] பஜ்ஜின்னா பஜ்ஜிதான்
    http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html//

    //தங்களின் பதிவு வழியாக இப்ப தான் சுவைதேன். தங்களுக்கும், அருமையாகவும், சுவையாகவும் பதிவிடும் வைகோ ஐயாவுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.//

    பஜ்ஜியை மட்டும்தான் சுவைத்தீர்களா? அவருடைய மற்ற பதிவுகளையும் பாருங்கள்!
    வேல் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி> T.N.MURALIDHARAN said...
    // படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். இலவுகாத்த கிளிகள் மட்டும் ஏற்கனவே படித்திருக்கிறேன். //

    மேலும் படியுங்கள்! சுவையுங்கள்!

    ReplyDelete
  24. மறுமொழி> கே. பி. ஜனா... said...

    //திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்கள் நல்ல கருத்தான கதைகளை நல்ல நடையினில் எழுதுபவர் ஆயிற்றே? அவர் புத்தகம் பிரமாதமாக வந்திருப்பதில் ஆச்சரியமில்லை! வாழ்த்துக்கள்! //

    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  25. சிறப்பானதொரு அறிவிப்பும் விமர்சனமும் .. ஐயாவின் கதைகள் பிரமாதமாக இருக்கும் அவசியம் படிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  26. எழுதுபவர்களை விடவும் அவற்றை படித்து அனுபவித்து அதை பிறரும் படிக்க தூண்டும் வகையில் விமர்சனம் எழுதுவதும் ஒரு சிறந்த கலை. அந்த கலை உங்களுக்கு அருமையாக கைவந்துள்ளது. இதை படிக்கும் பலருக்கும் அந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் வரும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  27. திருமிகு , வை கோ அவர்களின் பரம இரசிகன் நான் அவர் எழுத்துக்களை விடாமல் படித்தவன் நான் என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்
    அவர் முன்போல் எழுத வில்லையே என்ற ஏக்கமும்
    எனக்குண்டு! அவரைப் பற்றி எழுதிய தங்களைப் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  28. ஐயா, வணக்கம்.

    தங்களால் கடைசியாகக் காட்டப்பட்டுள்ள பின்பக்க அட்டைப்பட விளக்கம் என் கீழ்க்கண்ட பதிவினில் விபரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஐயா.

    http://gopu1949.blogspot.in/2011/07/4.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  29. மறுமொழி> Sasi Kala said...
    // சிறப்பானதொரு அறிவிப்பும் விமர்சனமும் .. ஐயாவின் கதைகள் பிரமாதமாக இருக்கும் அவசியம் படிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க. //

    அன்புள்ள சகோதரிக்கு நீங்கள் எழுதிய “தென்றலின் கனவு” என்ற கவிதை நூலுக்கு விமர்சனம் எழுத குறிப்புகள் எடுத்து பலநாட்கள் ஆகிவிட்டன. தொகுத்து எழுத வேண்டும் விரைவில் வெளியிட வேண்டும். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி> டிபிஆர்.ஜோசப் said...
    // எழுதுபவர்களை விடவும் அவற்றை படித்து அனுபவித்து அதை பிறரும் படிக்க தூண்டும் வகையில் விமர்சனம் எழுதுவதும் ஒரு சிறந்த கலை. அந்த கலை உங்களுக்கு அருமையாக கைவந்துள்ளது. இதை படிக்கும் பலருக்கும் அந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் வரும். பகிர்ந்தமைக்கு நன்றி. //

    வங்கி உயர் அதிகாரியின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
    // திருமிகு , வை கோ அவர்களின் பரம இரசிகன் நான் அவர் எழுத்துக்களை விடாமல் படித்தவன் நான் என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன் அவர் முன்போல் எழுத வில்லையே என்ற ஏக்கமும் எனக்குண்டு! அவரைப் பற்றி எழுதிய தங்களை வாழ்த்துகிறேன் //

    எனக்கும் அவர் முன்புபோல் நகைச் சுவையாக எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. மீள்பதிவாக அவைகளை வெளியிட இருக்கிறார். புலவர் அய்யாவின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புள்ள அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சுட்டிக் காட்டிய பதிவினை ஏற்கனவே படித்துள்ளேன். அதனை சுட்டிக் காட்ட மறந்து விட்டேன். தங்களின் நினைவூட்டலுக்கு நன்றி!

    ReplyDelete
  33. மிகவும் சுவையாக இருக்கிறது உங்களின் விமரிசனம். வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்களின் லிஸ்டில் சேர்த்திருக்கிறேன்.
    இவரது வலைப்பதிவில் பல கதைகளையும் படித்து வந்தாலும் இதுபோல புத்தகமாக படிப்பது நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    புத்தக அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி> Ranjani Narayanan said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  35. எங்கெங்கும் ... எப்போதும் ...நினைவில் நிற்கும் விமர்சனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  36. மிக அருமையான விமர்சனம்!

    ReplyDelete
  37. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...

    // எங்கெங்கும் ... எப்போதும் ...நினைவில் நிற்கும் விமர்சனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..! //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி> மனோ சாமிநாதன் said...
    // மிக அருமையான விமர்சனம்! //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  39. விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுகள்.

    திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. மாதேவி said...

    //விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுகள்.

    திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

    தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    என் தொடரின் பகுதி 49 முதல் 52 வரை தாங்கள் வருகை தரவில்லையே என என் கணக்குப்பிள்ளை “கிளி” கவலைப்பட ஆரம்பித்து விட்டது.

    நிச்சயமாக, பொறுமையாக, தாமதம் ஆனாலும் அழகாக ரம்யமாக வந்து விடுவார்கள் என நான் அதை சமாதானம் செய்துள்ளேன். ;)

    அன்புடன் VGK

    ReplyDelete
  41. என் சிறுகதைத் தொகுப்பினை விமர்சனம் செய்து திரு. தமிழ் இளங்கோ அவர்கள் எழுதியுள்ள இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள

    திருவாளர்கள்:

    01] S. ரமணி அவர்கள்
    02] திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
    03] வே. நடனசபாபதி அவர்கள்
    04] குட்டன் அவர்கள்
    05] GMB ஐயா அவர்கள்
    06] வேல் அவர்கள்
    07] T N முரளிதரன் அவர்கள்
    08] கே.பி. ஜனா அவர்கள்
    09] டி பி ஆர் ஜோஸப் அவர்கள்
    10] புலவர் இராமாநுசம் ஐயா அவர்கள்

    திருமதிகள்:

    11] தென்றல் சசிகலா அவர்கள்
    12] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
    13] இராஜராஜேஸ்வரி அவர்கள்
    14] மனோ சுவாமிநாதன் அவர்கள்
    15] மாதேவி அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  42. மறுமொழி> மாதேவி said...
    // விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுகள்.திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். //

    சகோதரியின் கருத்துரைக்கும், நூலாசிரியருக்கு சொன்ன வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! மாதேவி அவர்களுக்கு மறுமொழி தந்ததற்கும் இந்த பதிவிற்கு வந்தவர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி நன்றி சொனமைக்கும், உங்களுக்கு எனது நன்றிகள்!

    ReplyDelete