(Egmore - Photo thanks to Wikipedia)
எழும்பூர் ரெயில் நிலையம் என்பது ஆங்கிலேயர் காலத்து பழமையான ஒன்று. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chis Holm) என்ற ஆங்கிலேயர் கட்டிட
வரைபடத்தை அமைத்துக் கொடுக்க, சாமிநாதப் பிள்ளை என்ற தமிழர் கட்டினார். எழும்பூர் ரெயில் நிலையமானது, சென்னையின் எல்லா பகுதி மக்களும் வந்து செல்ல சாலைப் போக்குவரத்து கொண்டது. தமிழ் நாட்டின் தென் மாவட்ட அனைத்து ரெயில்களும் வந்து போகின்றன.
ஆனால் இப்போது இனிமேல் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்கள் அனைத்தும் எழும்பூருக்குப் பதில் தாம்பரத்திலிருந்து கிளம்பும் என்றும், அதற்கான மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாம்பரத்திற்கு பதில் தங்கள் பகுதியில் உள்ள ராயபுரத்திற்கு கோரிக்கை வைக்கிறார்கள். இரண்டுமே வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே இன்னும் அகலப்படுத்தி மாற்றம் செயதால் போதும்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில், இப்போதுதான் சில வருடங்களுக்கு
முன்னர் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்தார்கள். பராமரிப்பு நடந்த சமயம் எழும்பூர் ரெயில் நிலையம் பல நாட்கள் பூட்டியே இருந்தது. அப்போது எழும்பூர் இல்லாமல் பொதுமக்கள் எத்தனை கஷ்டம் அடைந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், துறைமுகம் இவற்றை மையப்படுத்தியே சென்னை நகர் வளர்ந்தது. பல அலுவலகங்கள், சென்னை உயர்நீதி மன்றம், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்தன.. எல்லா தரப்பு மக்களும் வந்து போகவும், தங்கவும் வசதியான நிலையம் எழும்பூர் ரெயில் நிலையம் ஆகும்.

தாம்பரம் நிலையத்தில் எல்லா ரெயில்களையும் நிறுத்துவது என்பது சென்னை பயணத்தின் பாதியிலேயே பொது மக்களை இறக்கிவிடுவது போலாகும். ”கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை” என்பது போல சிலர், ராயபுரத்திலிருந்து ரெயில்களை இயக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ராயபுரம் என்பது எவ்வளவு நெருக்கடியான பகுதி என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் புயல், மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம். ராயபுரம் கொண்டு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இதனால் எழும்பூர் நெரிசல் ஒன்றும் தீரப் போவது இல்லை. மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ராயபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்தச் சொல்லி போராடலாம். அதனை விடுத்து, அனைத்து ரெயில் பயணிகள் நலன் என்ற பெயரில் அனைத்து ரெயில்களையும் தங்கள் பகுதியிலிருந்து தான் இயக்க வேண்டும் என்பது சரியா?. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள். மற்ற பகுதி மக்களும் சும்மா இருப்பார்களா? அவர்கள் பங்கிற்கு ஆங்காங்கே போராட்டம்தான்.
எனவே தாம்பரமும் வேண்டாம், ராயபுரமும் வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே மேம்பாடு செய்தாலே போதும். எல்லோருக்கும் நல்லது. எழும்பூரே இருக்கட்டும். இதில் அரசியல் வேண்டாம்.